Tamil News | Online Tamil News |
- 20 பேர் இருந்தால் மட்டுமே, பஸ்சை எடுத்து செல்ல வேண்டும்
- 'நெஸ்லே நிறுவனத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது'
- இந்தியாவில் முதலீடு செய்ய பிரான்ஸ் மறுப்பு
- போதை அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை?
- இலங்கையில் இன்று நடக்கிறது பார்லிமென்ட் தேர்தல்: பிரதமர் பதவியை பிடிப்பாரா 'மாஜி' அதிபர் ராஜபக் ஷே?
- அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
- பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: அமைச்சர் உட்பட 13 பேர் பலி
- திருப்பூரில் பாரில் மது அருந்திய சிறுவர்கள்: விரட்டியடித்த போலீசார்
- ஜெ., அரசின் சாதனைகளை சொல்ல ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் நியமனம்
- காஷ்மீர் எல்லையில் பாக்., படையினரின் அடாவடி தாக்குதல் தொடாகிறது: 30 கிராமங்கள் மீது குண்டுவீச்சு; ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்
- விமானம் வெடித்து சிதறியது: 54 பேரின் கதி என்ன?
| 20 பேர் இருந்தால் மட்டுமே, பஸ்சை எடுத்து செல்ல வேண்டும் Posted: குறைந்தபட்ச வருவாய், 20 பயணிகள் கட்டாயம் உள்ளிட்ட அறிவிப்புகளால், போக்குவரத்து கழக ஊழியர்கள் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. வசதி, பயணத்தில் வேகம் போன்ற காரணங்களால், பெரும்பாலானோர் தனியார் பஸ்களில் பயணிக்கின்றனர். அரசு பஸ்களில் கூட்டம் குறைவாக இருப்பினும், சேவையின் அடிப்படையில், பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கோவை போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட, ஈரோடு மண்டலத்தில், குறைந்தபட்ச வருவாய் நிர்ணயம் செய்திருப்பது, ... |
| 'நெஸ்லே நிறுவனத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது' Posted: புதுடில்லி:''மேகி நுாடுல்ஸ் தயாரிக்கும், 'நெஸ்லே' நிறுவனத்துக்கு எதிராக, 640 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கை, வாபஸ் பெறும் எண்ணம் எதுவுமில்லை,'' என, மத்திய, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சி தலைவருமான, ராம்விலாஸ் பஸ்வான் கூறினார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:மேகி நுாடுல்சில் அளவுக்கு அதிகமாக, காரீயம் மற்றும் ரசாயன உப்பு கலக்கப்பட்டது தெரிய வந்ததால், அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை, மும்பை ஐகோர்ட், சமீபத்தில் நீக்கியது; ஆனாலும், மேகி நுாடுல்ஸ் மாதிரியை, புது சோதனைக்கு ... |
| இந்தியாவில் முதலீடு செய்ய பிரான்ஸ் மறுப்பு Posted: புதுடில்லி:இந்தியாவிற்கு, 'ரபேல்' போர் விமானங்கள் வழங்குவது தொடர்பான முக்கிய நிபந்தனையை ஏற்க, பிரான்ஸ் மறுத்துள்ளது. பிரான்ஸ், இந்தியாவிற்கு, 126 ரபேல் போர் விமானங்களை வழங்க உள்ளது. இதற்கான தொகையில், 50 சதவீதத்தை, பிரான்ஸ், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என, 2005ம் ஆண்டு, ஆயுதக் கொள்முதல் விதிமுறை கூறுகிறது. ஆனால், தற்போது இந்த விதிமுறையை ஏற்க முடியாது என, பிரான்ஸ் மறுத்துள்ளது. அதற்குப் பதிலாக, 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்தின் கீழ், முதலீடு செய்ய தயார் என, பிரான்ஸ் தெரிவித்து உள்ளது. சந்திப்பு: இந்த ... |
| போதை அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை? Posted: லுாதியானா: 'அரசியல்வாதிகளுக்கு, போதை மருந்து சோதனை நடத்துவதை கட்டாயமாக்க வேண்டும். போதை மருந்து உட்கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க முடியாத வகையில், சட்டம் இயற்ற வேண்டும்' என, பஞ்சாப் மாநில விவசாய அமைச்சர் தோடா சிங் கூறியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம் ஆட்சி நடக்கிறது. தோடா சிங் என்பவர், விவசாய அமைச்சராக உள்ளார். இவர் கூறியதாவது:பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்து கடத்தல் அதிகரித்து விட்டது. இளைஞர்கள், போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். ... |
| இலங்கையில் இன்று நடக்கிறது பார்லிமென்ட் தேர்தல்: பிரதமர் பதவியை பிடிப்பாரா 'மாஜி' அதிபர் ராஜபக் ஷே? Posted: கொழும்பு:பரபரப்பான தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், இலங்கை பார்லிமென்டுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. பிரதமராகும் முயற்சியில் களமிறங்கியுள்ள, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக் ஷே, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கடும் சவாலை எழுப்பி உள்ளார். இலங்கையில், 30 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டமாக, கடந்த 2009ல் அரசுப் படைகள், விடுதலைப் புலிகளை அழித்தன. இப்போரை முடிவுக்கு கொண்டு வந்த, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக் ஷே, 69, சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் கதாநாயகனாக திகழ்கிறார். உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின், 2010ல் ... |
| அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு Posted: அபுதாபி:பிரதமர் மோடிக்கு, அபுதாபியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொள்வதற்காக, நேற்று பிற்பகல், 1:30 மணிக்கு, டில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். மாலை 4:30 மணிக்கு, அபுதாபி விமான நிலையம் வந்தடைந்தார்.அவரை, மரபுகளை மீறி, அபுதாபி பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை சுப்ரீம் கமாண்டருமான, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், தன் ஐந்து சகோதரர்களுடன், விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். வழக்கமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் தான், பிரதமரை ... |
| பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: அமைச்சர் உட்பட 13 பேர் பலி Posted: லாகூர்:பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் சுஜா கன்சாடா உள்ளிட்ட, 13 பேர் பலியாயினர். ஒன்பது மாதங்களுக்கு முன், உள்துறை அமைச்சராக பதவியேற்ற, சுஜா கன்சாடா, பயங்கரவாதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கைகளை எடுத்தார். அதனால், அல்-குவைதா, தெஹ்ரீக் - இ -தலிபான் உள்ளிட்ட, பயங்கரவாத அமைப்புகள் அவருக்கு, கொலை மிரட்டல் விடுத்தன. இந்நிலையில், அடாக் மாவட்டம், ஷாதி கல் கிராமத்தில், நேற்று, சுஜா கன்சாடா, மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தினார். அவரது வீட்டில் நடந்த இந்த கூட்டத்திற்கு வந்த பயங்கரவாதி ஒருவன், ... |
| திருப்பூரில் பாரில் மது அருந்திய சிறுவர்கள்: விரட்டியடித்த போலீசார் Posted: திருப்பூர்:'டாஸ்மாக்' மதுக்கடை 'பாரில்', மது அருந்திக் கொண்டிருந்த சிறுவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர். திருப்பூர், ஆலங்காடு பகுதியிலுள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடையில், நேற்று காலை, 15, 17 வயதுடைய சிறுவர்கள் மூவர், மது அருந்த வந்தனர். '21 வயதுக்கு உட்பட்டோருக்கு, மது விற்கக்கூடாது' என்ற விதியை மீறி, அவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட்டுள்ளது. அங்கேயே மூன்று சிறுவர்களும் மது அருந்தினர்; போதை தலைக்கேற, கீழே விழுந்து புரண்டனர்; வாந்தியும் எடுத்தனர்.தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, அச்சிறுவர்களிடம் விசாரித்தனர். பதில் சொல்ல முடியாத நிலையில் ... |
| ஜெ., அரசின் சாதனைகளை சொல்ல ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் நியமனம் Posted: சென்னை:'அ.தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களிடம் தெரிவிக்க, ஓட்டுச்சாவடி வாரியாக, ஜெ., பேரவை சார்பில், ஓட்டுச் சேகரிப்பாளர் நியமிக்கப்படுவார்' என, முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, நேற்று வெளியிட்ட அறிக்கை:ஜனநாயக ஆட்சி முறையில், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் ஓட்டளிக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசுக்கு உறுதியும் பெருமையும் உண்டாகும்.மக்கள் மேம்பாட்டுக்காக, அ.தி.மு.க., அரசு செய்துள்ள சாதனைகள், மேற்கொண்டு வரும் முயற்சிகள் மூலம் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியை, ... |
| Posted: புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில், பாக்., ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது. பாக்., படை தாக்குதலில், இரண்டு நாட்களில், ஆறு பேர் பலியாகியுள்ளனர். எல்லையோர கிராம மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு, பாக்., துாதரை நேற்று நேரில் அழைத்து, கண்டனம் தெரிவித்தது. நாடு முழுவதும், நேற்று முன்தினம், சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அன்று மாலை, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதேநேரத்தில், ஜம்மு - காஷ்மீரில், இந்தியா - பாக்., ... |
| விமானம் வெடித்து சிதறியது: 54 பேரின் கதி என்ன? Posted: ஜகார்தா: இந்தோனேஷியாவில், 54 பேருடன் சென்ற விமானம், மலையில் மோதி வெடித்து சிதறியது. இந்தோனேஷியாவின் கிழக்கே உள்ளது, பப்புவா மாகாணம். இதன் தலைநகர், ஜெயபுரா. நேற்று, இங்குள்ள, சென்தானி விமான நிலையத்தில் இருந்து, 'டிரகானா ஏர்' நிறுவனத்தின், 'ஏ.டி.ஆர்., 42' என்ற விமானம், ஓக்சிபில் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில், ஐந்து விமான சிப்பந்திகள், ஐந்து குழந்தைகள் மற்றும் 44 பயணிகள் என, மொத்தம், 54 பேர் இருந்தனர். அரை மணி நேர பயணத்திற்குப் பின், திடீரென்று விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதே சமயம், ஓக்சிபில் விமான நிலையத்திற்கும் விமானம் வராததால், பயணிகளின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 17,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |