Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்: பா.ஜ.க. மேலிடத்துக்கு சத்ருகன் சின்கா சவால்

Posted: 25 Aug 2015 11:20 PM PDT

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர் சத்ருகன் சின்கா. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. டெல்லியில் மட்டுமின்றி சொந்த மாநிலமான பீகாரிலும் அவர் ஓரங்கட்டப்பட்டார். இதனால் அத்வானியின் ஆதரவாளரான சத்ருகன் சின்கா கட்சி மேலிடம் மீது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது

Posted: 25 Aug 2015 11:11 PM PDT

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் ஜூலை மாதத்திற்கு உரிய அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கால்வாயில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு

Posted: 25 Aug 2015 10:58 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட 27 வயது பெண்ணின் சடலத்தை போலீசார் இன்று மீட்டுள்ளனர். இங்குள்ள ரோஹானா பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் மிதந்துக் கொண்டிருந்த அந்த சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் சொத்து தகராறில் சுட்டுக்கொலை

Posted: 25 Aug 2015 10:54 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப்(27) என்பவர் ராணுவ வீரராக ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் சொந்த ஊரான போப்பாடா கிராமத்துக்கு விடுமுறையில் வந்திருந்த குல்தீப், நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது மாமாவான நேபால் சிங் என்பவர் அவரை வழிமறித்து, துப்பாக்கியால்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம்

Posted: 25 Aug 2015 10:22 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். கோவில் மற்றும் பூஜை முறையில் தெரிந்தும், தெரியாமலும் சில தவறுகள் நடந்திருந்தால், அதனை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம். இந்தப் பவித்ரோற்சவம் கடந்த 1464–ம் ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. பின்னர் 1562–ம் ஆண்டு பவித்ரோற்சவம் நடத்துவதில் சில தடங்கல்கள் ஏற்பட்டதால், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 1962–ம் ஆண்

ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 3 போலீசார் பலி

Posted: 25 Aug 2015 10:18 PM PDT

ஒடிசா மாநிலத்தில் மல் ஹாங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் அடிக்கடி அட்டூழியத்தில் ஈடுபடுவதுண்டு. அவர்களை ஒடுக்க போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் திடீரென துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.

மெட்ரோ ரெயில் நிலைய வாசலில் காரில் கடத்தப்பட்ட மாணவியை துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்

Posted: 25 Aug 2015 10:14 PM PDT

தெற்கு டெல்லியில் உள்ள படர்பூர் மெட்ரோ ரெயில் நிலைய வாசலில் நேற்று காலை கடத்தப்பட்ட பதினெட்டு வயது கல்லூரி மாணவி, போலீசாரின் துரித நடவடிக்கையால் உடனடியாக மீட்கப்பட்டார். பரிதாபாத் நகரின், பூபானி பகுதியிலிருந்து நேற்று காலை தனது

செம்மரம் கடத்திய 5 பேர் பிடிபட்டனர்: கைதான லாரி டிரைவருக்கு ரூ.150 கோடி சொத்து

Posted: 25 Aug 2015 10:09 PM PDT

ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடப்பா மாவட்டம் சேனூரு பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் மறித்தனர். அப்போது கார் நிற்காமல் வேகமாக சென்றது. எனவே போலீசார் காரை துரத்தி சென்று

பட்டேல்களுக்கு இட ஒதுக்கீடு போராட்டம்: குஜராத்தில் கலவரம், பஸ்கள் எரிப்பு - ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Posted: 25 Aug 2015 10:04 PM PDT

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பட்டேல் சமூகத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவும் நிலையில் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு பட்டேல் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் கலவரமாக திசை திரும்பாமல் இருக்க குஜராத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும்

காளஹஸ்தி அருகே செம்மரங்களை வெட்டிய 7 பேர் கைது

Posted: 25 Aug 2015 09:43 PM PDT

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள தேவரகுண்டா வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக பீளேர் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீராமலு (பாக்ராபேட்டை), ரகிமுல்லா

மாணவர்கள் ஓணம் கொண்டாட தீயணைப்பு வாகனம் வழங்கிய 7 அதிகாரிகள் சஸ்பெண்டு

Posted: 25 Aug 2015 09:27 PM PDT

கேரளாவின் வசந்த கால திருவிழாவான ஓணம் பண்டிகை தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் கொண்டாட்டத்தின்போது சிலர் அத்துமீறி செயல்படுவதால் அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுகிறது. சமீபத்தில் திருவனந்தபுரம்

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்: சித்தராமையா பேட்டி

Posted: 25 Aug 2015 07:58 PM PDT

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தோல்வி குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று

பெண் சாமியார் ராதேமா மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு: போலீசார் பதிலளிக்க உத்தரவு

Posted: 25 Aug 2015 07:37 PM PDT

மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்தவர் பெண் சாமியார் ராதேமா. இவர் குட்டை பாவாடை அணிந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர் மீது 32 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், காந்திவிலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சல்மான்கான் வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்: ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

Posted: 25 Aug 2015 07:14 PM PDT

மும்பை பாந்திராவில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பரில் நடிகர் சல்மான் கான் கார் மோதி ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கடந்த மே மாதம் மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் மீதான தண்டனையை மும்பை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது. அவருக்கு ஜாமீனும் அளித்தது. இதனிடையே, ஜெயில் தண்டனையை எதிர்த்து சல்மான்கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சல்மான்கான் தரப்பு வக்கீல் அமித்

ஆவடியில் கொத்தடிமை தொழிலாளிகள்: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீசு

Posted: 25 Aug 2015 07:01 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் பகுதியை சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு காணாமல் போன ஒரு நபர் பற்றிய தகவலை அறிந்து கொள்ளும் வகையில் சென்னைக்கு வந்து சில இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர்.

செல்போன் அழைப்பு துண்டிப்பு பிரச்சினை: உடனடியாக தீர்க்க பிரதமர் மோடி உத்தரவு

Posted: 25 Aug 2015 05:11 PM PDT

செல்போன் அழைப்புகள், பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் தொடர்பு அறுந்து விடும் பிரச்சினை, கடந்த 3 மாதங்களாக நிலவி வருகிறது. இதனால், செல்போன் சேவை நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம்

எனக்கு எதிரான வழக்கை தூண்டிவிட்டதில் காங்கிரசில் உள்ள ஒருவருக்கு முக்கிய பங்கு: இளங்கோவன் பேட்டி

Posted: 25 Aug 2015 04:58 PM PDT

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் தலைமறைவாக இல்லை. பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம் என்று நினைத்தேன். அதனால்தான் சந்திக்கவில்லை. சில பணிகளை முடிப்பதற்காக, நான் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு

சரக்கு, சேவை வரிகள் மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்ற மழைக்கால சிறப்பு கூட்டத்தொடர்: வெங்கையா நாயுடு தகவல்

Posted: 25 Aug 2015 04:52 PM PDT

சீனாவில், 'யுவான்' நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டு வருவதாலும், அங்கு தொழிற்துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாலும் நேற்று முன்தினம் உலக அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பில் ரூ.7 லட்சம் கோடி வரை சரிவு ஏற்பட்டது.

இஸ்லாமிய இளைஞரை ஈவிரக்கமின்றி தாக்கிய கலாச்சாரக் காவலர்கள்: 13 பேர் கைது

Posted: 25 Aug 2015 04:32 PM PDT

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு இஸ்லாமிய இளைஞர் தன்னுடன் பணிபுரியும் சக இந்து பெண் ஊழியரிடம் பேசியதைப் பார்த்த கலாச்சாரக் காவலர்கள் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அவரை ஈவிரக்கமின்றி தாக்கியுள்ளனர்.

கேரளாவில் வாகன சோதனையின் போது 13 கிலோ தங்கம், ரூ.3 கோடி சிக்கியது

Posted: 25 Aug 2015 04:22 PM PDT

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் தமிழகம், கர்நாடகாவில் இருந்து எரிசாராயம் கடத்தலை தடுக்க போலீசாரும், கலால் துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெருந்தல்மன்னா அருகே கரிங்கரத்தாணி என்ற இடத்தில் நேற்று மதியம் ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™