Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோவின் Fairbank பகுதியில் இன்று காலையில் கொள்ளைச் சம்பவம்

Posted: 25 Aug 2015 10:22 PM PDT

ரொரன்ரோவின் Fairbank பகுதியில் உள்ள தொடரூந்து நிலைய வர்த்தக மையம் ஒன்றில் இன்று காலையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Dufferin Street ற்கு கிழக்காக, இலக்கம் 1763 Eglinton Avenue Westஇல் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நள்ளிரவுக்கு பின்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரொரன்ரோ காவல்த்துறையினர், இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கொள்ளையர்கள் கத்தி முறையிலேயே இந்த […]

The post ரொரன்ரோவின் Fairbank பகுதியில் இன்று காலையில் கொள்ளைச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Grimsby பகுதியில் விபத்து – ஒருவர் பலி

Posted: 25 Aug 2015 09:17 PM PDT

jk

jkGrimsby குதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 69 வயது ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக நையாகரா காவல்த்தறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேற்குப் பிராமன வீதி மற்றும் Oakesவீதிப் புதியில் பிற்பகல் 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளி ஒன்றை செலுத்திவந்த குறித்த நபர் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், விபத்தின் போது உந்துருளியைச் செலுத்திச் சென்ற நபர் உந்துருளியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் என்றும் காவல்த்தறையினர் விபரித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான நபரை உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்ததாகவும், எனினும் அவர் பின்னர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.jk

இந்த தகவலை செவ்வாய்க்கிழமை இரவு காவல்த்துறையினர் வெளியிடும் போது, உயிரிழந்த நபர் ஹமிட்டனைச் சேர்ந்த Enzo Zona என்பவர் என்றம் அடையாளம் கண்டிருந்தனர்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் காவல்த்துறையினர், யாராவது தகவல் வழங்க விரும்பின் காவல்த்துறையினருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post Grimsby பகுதியில் விபத்து – ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Caledon குடியிருப்பு பகுதி வீட்டில் தீ – யாருக்கும் காயம் இல்லை

Posted: 25 Aug 2015 08:30 PM PDT

u

uCaledon குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திங்கட்கிழமை ஏற்பட்ட தீ சம்பவத்தினால் பெரும் சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் Atchison Drive இல் அமைந்திருந்த குறித்த அந்த வீட்டிற்கு தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டிருந்த போது, வீட்டில் வாகனம் நிறுதிவைக்கப்படும் அறையில் இருந்தும், இரண்டாவது தளத்தின் கூரையில் இருந்தும் பெரும் சுவாலையுடன் தீ எரிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் 30 தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்று அவசர மற்றும் தீயணைப்புப் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா.u

எனினும் வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக விட்டில் இருந்தவர்கள் புகைமணத்தை உணர்ந்ததாகவும், அதனை அடுத்து வீட்டின் பகுதிகளைச் சோதித்த போது, வாகனம் தரித்து வைத்திருக்கும் இடத்தில் இருந்து தீ வெளியேறுவதை கண்டதாகவும் விபரித்துள்ளனர்.

அதனை அடுத்து அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறியதுடன், உடனடியாகவே 9911 இற்கும் அழைப்பு விடுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்த தீ சம்பவத்தினால் அயலில் இருந்த வீட்டிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் எவ்வாறு தீ ஏற்பட்டுது என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, காவல்த்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

The post Caledon குடியிருப்பு பகுதி வீட்டில் தீ – யாருக்கும் காயம் இல்லை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்கள் விவகாரம் தொடர்பான நேரடி விவாத நிகழ்வு இரத்து

Posted: 25 Aug 2015 03:03 PM PDT

g

gநாட்டின் பெண்கள் விவகாரம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் மத்தியில் நடாத்த ஏற்பாடாகியிருந்த நேரடி விவாத நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுளு்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறித்துள்ளனர்.

கனடாவின் ஐந்து பிரதான கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையிலான இந்த நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 திகதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்ததுடன், தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும், புதிய சனநாயக கட்சியத் தலைவர் Tom Mulcair உம் கலந்து கொள்ளமாட்டார்க்ள என்பதனை அடுத்து, ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரகாரம் நிகழ்வினை நாடாத்த முடியாது போயுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விவாத நிகழ்வில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கலந்துகொள்ளவில்லை என முதலில் அறிவிக்கப்பட்டதாகவும், பிரதமர் கலந்து கொள்ளாத காரணத்தினால் தாமும் கலந்து கொள்ள முடியாது என Tom Mulcairஉம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.g

பழமைவாதக் கட்சியின் தலைவர் கலந்து கொள்ளாத, அரசியல் தலைவர்களுக்கான எந்தவொரு நேரடி விவாத நிகழ்விலும் கலந்து கொள்வதில் பயன் இல்லை என புதிய சனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முதன்முதலில் தமது கட்சித் தலைவர் Tom Mulcair ரே இணக்கம் வெளியிட்டதாகவும், அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் அவரும் கலந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் புதிய சனநாயக கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கனடாவின் ஐந்து பிரதான கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளும் பிரஞ்சு மொழியிலான பிறிதொரு நேரடி விவாத நிகழ்வு, மொன்றியலில் உள்ள Radio-Canada கலையகத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாட்டின் வெளி விவகாரங்கள் தொடர்பிலான விவாத அரங்கு ஒன்றும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி கனடாவின் மூன்று பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பெண்கள் விவகாரம் தொடர்பான நேரடி விவாத நிகழ்வு இரத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மூத்த குடிமக்களுக்கான வசதி வாய்ப்புக்களை அதிகரிக்கப்படும்

Posted: 25 Aug 2015 10:06 AM PDT

lk

lkஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி ஆட்சி அமைக்குமாக இருந்தால், நாட்டின் மூத்த குடிமக்களுக்கான வசதி வாய்ப்புக்களை அதிகரிக்கவுள்ளதாக புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ரொரன்ரோ டவுன்ரவுனில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர், தமது அரசாங்கம் வருமான உத்தரவாதத்தினை 400 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வயதான மூத்த குடிமக்கள் அதிக அளவிலான ஆதாயங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தம்மால் வரையப்பட்டுள்ள திட்டத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்புக்கள் ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.lk

இந்த நாட்டை கட்டி வளர்த்த மூத்தோர்கள் வறுமையிலும் வசதிகளற்றும் வாழ்வதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவ்வாறான நிலையை தாம் மாற்றியமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வினைத் தொடர்ந்து மிசிசாகாவில் உள்ள வயோதிபர் இல்லம் ஒன்றுக்கும் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட Tom Mulcair, அங்கிருந்த முதியோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், அவர்களது நலன்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

The post மூத்த குடிமக்களுக்கான வசதி வாய்ப்புக்களை அதிகரிக்கப்படும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய தேசிய கீதத்தை அவமதித்த ரஷ்ய ஹொக்கி வீரர்களுக்கு அபராதம்

Posted: 25 Aug 2015 09:59 AM PDT

ju

juகனேடிய தேசிய கீதத்தை அவமதித்த ரஷ்ய ஹொக்கி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண பனி ஹொக்கி இறுதிப் போட்டியின் போதே ரஷ்ய ஹொக்கி வீரர்கள் கனேடிய தேசிய கீதத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண பனி ஹொக்கி இறுதிப் போட்டியில் ரஷ்யாவை எதிர்கொண்டிருந்த கனடா 6 க்கு 1 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

அப்போது போட்டியின் போது வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த கனடாவின் தேசிய கீதம் ஒலிக்க முன்னர் ரஷ்ய ஹொக்கி வீரர்கள் அரங்கிலிருந்து வெளியேறி கனேடிய தேசிய கீதத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஹொக்கி அணித்தலைவரிடமிருந்து வெளியான ஒரு சமிக்ஞையை தொடர்ந்து வீரர்கள் அனைவரும் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ju

தவறாக கருதமுடியாத ஒரு தலை சைகையை தொடர்ந்து இந்த வெளியேற்றம் ஏற்பட்டதாக வீடியோ சாட்சியம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் விளையாட்டு கட்டுப்பாட்டு அமைப்பு (IIHF), ரஷ்ய வீரர்கள் வேண்டுமென்றே கனடாவின் தேசிய கீதம் ஒலிக்க முன்னர் பனி ஹொக்கி மைதானத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை ரஷ்ய ஹொக்கி கூட்டமைப்பு கனடிய அதிகாரிகளிடம் தங்கள் தவறிற்கு மன்னிப்பு கோரியுள்ளது.

எனினும் கறித்த தவறுக்காக IIHF இனால் 85 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post கனேடிய தேசிய கீதத்தை அவமதித்த ரஷ்ய ஹொக்கி வீரர்களுக்கு அபராதம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Wasaga Beach இல் படகில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

Posted: 25 Aug 2015 09:06 AM PDT

u

uWasaga Beach பகுதியில் படகில் இருந்து விழுந்த ரொரன்ரோவைச் சேர்ந்த 23 வயதுடைய பெண், பின்னர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குளித்த பெண் படகில் இருந்து நீருக்குள் விழுந்த சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருந்தது.

இந்த 23 வயது யுவதியும், அவரின் நண்பியும் கரையில் இருந்து சுமார் 75 மிற்றருக்கும் 100 மீற்றருக்கும் இடைப்பட்ட அளவான தூரத்தில் படகோட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் ஒருவர் மாத்திரம் நீரின் மேற்பரப்பில் தென்பட்டதாகவும், மற்றையவர் காணாமல் போயிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காணாமல் போயிருந்த பெண்ணை தேடும் நடவடிக்கையில் உடனடியாகவே ஈடுபட்ட மீட்புப் படையினர் Nottawasaga Bay பகுதியில் தமது தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

u

பின்னர் காணாமல் போன அந்த பெண் நீரிற்குள் சுமார் 7 அடி ஆளத்தில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 23 வயதான Yelizaveta Pavlyshyn என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த பெண் படகில் இருந்து நீரினுள் விழுந்தமைக்கான காரணத்தை தம்மால் கூற முடியவில்லை என்கின்ற போதிலும், சதிச் செயல் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகிக்கவில்லை என்று காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

The post Wasaga Beach இல் படகில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாகனத்தால் மோதுண்ட முதியவர் மருத்துவமனையில்

Posted: 25 Aug 2015 08:59 AM PDT

u,hyj

u,hyjவாகனம் ஒன்றினால் மோதுண்ட முதியவர் ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newtonbrook nieghbourhood பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Steeles மற்றும் Torresdale பகுதியில் முதியவர் சென்று கொண்டிருந்த போது நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

எனினும் விபத்து நடந்த சமயத்தில் முதியவரின் நிலைமை தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

விபத்தை அடுத்த Thurman வீதியில் இருந்து Torresdale அவனியூ வரையான Steeles அவனியூ பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளது.

The post வாகனத்தால் மோதுண்ட முதியவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடாபில் ஒருவர் கைது

Posted: 25 Aug 2015 08:55 AM PDT

.jh

.jhகத்திக்குத்துக் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், பின்னர் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் அவருக்கு தொடர்பிருப்பதான சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 23 வயதான இந்த இளைஞன் கத்தியால் குத்தப்பட்டிருந்தார்.

பிற்பகல் 9 மணியளவில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போது குறித்த இளைஞன் மோசமான கத்திக்குத்து காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

.jh

பின்னர் காயங்களுக்கு உள்ளாகியிருந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கான சிக்சையின் பின்னர் இளைஞர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே, கடந்த ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி பிரம்டனின் Earnscliffe Circle பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது மற்றும் கொள்ளையிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

The post பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடாபில் ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

Posted: 25 Aug 2015 08:49 AM PDT

hiu

hiuகாலையில் வெறும் வயிற்றில் கொடம்புளி சூப் செய்து குடித்து வந்தால் கொழுப்பு பத்து நாட்களில் குறைந்துவிடும்.

கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?

கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.

கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைக்கவேண்டும்.

காலையில் இந்த நானூறு மில்லியையும் கொதிக்க வைத்து நூறு மில்லியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.

இந்த நூறு மில்லியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.hiu

2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது.

3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விட வேண்டும், பகலில் தூங்கவே கூடாது.

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த அளவு நிறுத்தவேண்டும்.

5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

6 .வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது.

8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிவிட வேண்டும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாப்பிடலாம்.

9 .எண்ணெய்யில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்த வேண்டும்.

The post கொழுப்பை எரிக்கும் கொடம்புளி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™