Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் (26-8-1883)

Posted: 25 Aug 2015 01:59 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் விருத்தாசல முதலியார்- சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியர் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது. பச்சையம்மாள் இறந்த பின் சின்னம்மாள் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு ஆண், நான்கு பெண் குழந்தைகள் ...

அன்னை தெரசா பிறந்த நாள் (26-8-1910)

Posted: 25 Aug 2015 01:47 PM PDT

அன்னை தெரசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950-ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர். முதலில் இந்தியா முழுவதும் ...

மலேசிய ரிங்கிட் வரலாற்றில் இல்லாத அளவு கடும் சரிவு!

Posted: 25 Aug 2015 01:33 PM PDT

கோலாலம்பூர் – வரலாற்றில் இல்லாத அளவிற்கு சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலருக்கு, 0.9 சதவிகிதம் வீழ்ச்சியடைந்த மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.24 ஆகப் பதிவானது. 17 வருடங்களுக்குப் பிறகு மலேசிய ரிங்கிட் சந்திக்கும் மிகப் பெரிய வீழ்ச்சி இது எனக் கூறப்படுகின்றது. கடந்த 1997-ம் ஆண்டு மலேசிய ரிங்கிட் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. ...

110 விதியின் கீழ் ஒரே நாளில் 22 முக்கியத் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா!

Posted: 25 Aug 2015 01:31 PM PDT

சொத்துக் குவிப்பு விவகாரங்களுக்குப் பிறகு, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றபின், கூடிய சட்டப்பேரவையின் இரண்டாம் நாளான இன்று, 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் தாய்மார்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜெயலலிதா அறிவித்த மிக முக்கியத் திட்டங்களைக் கீழே காண்க: புதிய ...

உலகச் செய்திகள்!

Posted: 25 Aug 2015 01:28 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!

Posted: 25 Aug 2015 01:27 PM PDT

சென்னை: சென்னை நீலாங்கரையில் காருடன் டிரைவரை கடத்திச் சென்று, டாஸ்மாக் பணம் ரூ.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையை அதிர வைத்துள்ளது. சென்னையை அடுத்த நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கடைகளில் விற்பனையாகும் பணத்தை வசூலித்து வங்கிகளில் செலுத்தும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை ஆகும். இந்நிலையில் மேற்கூறிய தனியார் நிறுவன ...

38000 கம கம பதிவுகள் --கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்துவோம்

Posted: 25 Aug 2015 01:23 PM PDT

38000 கம கம பதிவுகள் --கிருஷ்ணம்மா அவர்களை  வாழ்த்துவோம் மனமார்ந்த வாழ்த்துக்கள்     ரமணியன்

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Posted: 25 Aug 2015 12:48 PM PDT

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Posted: 25 Aug 2015 12:44 PM PDT

உலகின் தலை சிறந்த இலக்கியம் மகாபாரதம். ராமாயணம் கூட அருகே வரமுடியாது. அத்தனை விதமான மனிதர்கள் இதில் வாழ்கின்றனர். மறைந்த மலையாள சினிமா சாதனையாளர் ஏ.கே. லோஹிததாஸ் (லோகி) ஒரு முறை சொன்னாராம் – உலகின் இது வரை எழுதப்பட்ட, எழுதப்படப் போகிற எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம், மகாபாரதத்தில் தேடிப் பார்த்தால் அந்தக் கதைக்கான மூலம் கிடைக்கும் என்று சொன்னாராம். அவரிடம் யாரோ பதிலுக்கு நீங்கள் திரைக்கதை எழுதி பெருவெற்றி பெற்ற "கிரீடம்"(தமிழில் கூட அஜித் நடிப்பில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டதே) திரைப்படத்தின் ...

இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்

Posted: 25 Aug 2015 12:42 PM PDT

கனடா நாட்ட்டை சேர்ந்த பிரபல இணையதளம் ஆஷ்லே மேடிசன்.திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் யாருடனாவது கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ள இந்த இணையதளம் உதவிகரமாக செயல்பட்டு வந்தது. இந்த இணையதளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். இவர்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் பாதுகாத்து வந்தது ஆஷ்லே மேடிசன்.இதற்கென மாத, ஆண்டு சந்தாவும் வசூலித்து வந்த "ஆஷ்லே மேடிஸன்" உயிரே போனாலும் உங்கள் ரகசிய தொடர்புகள் யாருக்கும் தெரியாது என்று ...

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள்- மின்நூல் தொகுப்பு இதுவரை

Posted: 25 Aug 2015 12:37 PM PDT

நண்பர்களே..

இதுவரை பதிவிட்ட இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் தெளிவான மின்நூல்களை இங்கு தொகுத்து
இருக்கிறேன். விடுபட்ட நாவல்களை தரவிறக்கவும் தரவிறக்கம் செய்யாதவர்கள் ஒரு இடத்தில் அனைத்து நாவல்களை பெறவேண்டியும் இந்த பதிவு...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 25 Aug 2015 12:17 PM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!

Posted: 25 Aug 2015 11:16 AM PDT

- தெரிந்த கதைதான்... மீண்டும் படிப்போம்...கோபத்தைக் குறைப்போம்...!! - - - 20 வயது ஆரம்பித்த தனது மகனுக்கு எதற்கெடுத்தாலும் கோபமும், யாரிடம் பேசினாலும் எரிச்சலும் வருவதைக் கண்டு தந்தை கவலை கொண்டார். – தன் மகனிடம் 100 ஆணிகளைக் கொடுத்து எப்போதெல்லாம் உனக்கு அளவுக்கு அதிகமாக கோவமோ அல்லது எரிச்சலோ வருகிறதோ , அப்போது பக்கத்தில் இருக்கும் மரத்தில் கோவம் முழுதும் தீரும் வரும் ஆணியை அடிக்க வேண்டும் என்று சொன்னார். – மகனும் தனக்கு எப்போதெல்லாம் கோவம் வருகிறதோ அப்போதெல்லாம் ஒர் ...

வங்கி மேலாளர் நகைச்சுவை

Posted: 25 Aug 2015 11:11 AM PDT

விவசாயி வங்கி மேலாளரிடம்) ஐயா, கறவை மாடு வாங்க கடன் கிடைக்குமா? – வங்கி மேலாளர்: நிச்சயம் கிடைக்கும் ஆனால் எப்படி கட்டுவீர்கள்? – விவசாயி : கயிற்றால்தான். – வங்கி மேலாளர்: ????? – —————————————– – வாடிக்கையாளர்: (வங்கி மேலாளரிடம்) சார்! சிறுதொழில் ஆரம்பிக்க விரும்புகிறேன். என்ன செய்யவேண்டும்? – வங்கி மேலாளர்: முதலில் பெரிய தொழில் ஒன்று ஆரம்பியுங்கள். பிறகு ஆறு மாதம் காத்திருங்கள். பிறகு தானே அது சிறிய தொழிலாகிவிடும் .- வாடிக்கையாளர்:?????? – ———————————————- – டாக்டர் ...

நித்ய கல்யாணி செடி - பயன்கள்

Posted: 25 Aug 2015 11:10 AM PDT


-

என்னைப்பற்றி--ஜெயஸ்ரீ ஷங்கர்

Posted: 25 Aug 2015 11:00 AM PDT

பெயர்:ஜெயஸ்ரீ ஷங்கர்
சொந்த ஊர்:மதுரை / ஹைதராபாத்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணையத்தில் நூல் தேடும் போது
பொழுதுபோக்கு:எழுதுவது, படிப்பது, வரைவது,. சமையல் செய்வது, சாப்பிடுவது.
தொழில்:எழுதுவது, சமூக சேவை,
மேலும் என்னைப் பற்றி: 2009 லிருந்து இணையத்தில் எழுதி வருகிறேன்.

அறிமுகம் :ஜெயராமன் ராமஸ்வாமி

Posted: 25 Aug 2015 10:46 AM PDT

பெயர்: ஜெயராமன் ராமஸ்வாமி

சொந்த ஊர்:முத்து பேட்டை

ஆண்/பெண்:ஆண்

ஈகரையை அறிந்த விதம்:நெட் மூலமாக

பொழுதுபோக்கு:வேதாந்தம். புத்தகம் படித்தல் ,பேரனுடன் விளையாடுவது
தொழில்:ஓய்வு பெற்றவர்
மேலும் என்னைப் பற்றி:வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். இலக்கியத்தில் அனுபவம் உண்டு

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Posted: 25 Aug 2015 09:30 AM PDT

அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை

1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas

மிக்க நன்றி.

11000 ஆயிரம் பதிவுகள் கடந்த வார்த்தை வித்தகர்

Posted: 25 Aug 2015 09:25 AM PDT

11000 பதிவுகள் கடந்த வார்த்தை வித்தகர் பாலசுப்பிரமணியம் ஐயாவை அன்போடு வாழ்த்தலாம் வாங்க .... மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா .... ஐயாவின் பதிவிலிருந்து சுட்டது .. (பின்னோக்கி சென்றதால் வந்த பின் விளைவுகள் , பின்னுகிறேன் இப்போது .)

அந்த ஒரு சொல்

Posted: 25 Aug 2015 09:20 AM PDT


-

காதல் கவிதைகள் மட்டும் எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே
எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்…
அதை படிக்கும்
பாக்கிய சாலிகளே,
காதலித்து கொண்டு
இருக்கிறார்கள்…..!!


-நா முத்துக்குமார்

தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள்- ஒரு அரிய மின்நூல் பொக்கிஷங்கள்

Posted: 25 Aug 2015 09:13 AM PDT

இந்த திரியில் எனக்கு என் நண்பர் மூலம் கிடைத்த, கல்கண்டு இதழில் தமிழ்வாணன் தொடர்கதையாக எழுதி வெளிவந்த, துப்பறியும் நாவல்களை, பழைய பைண்டிங்கிலிருந்து எடுத்து ஓவியங்களுடன், மின்நூலாக தருகிறேன். ஒரு பழைய சேமிப்பை, பொக்கிஷத்தை தந்து இப்போதுள்ளவர்களும் அப்போது தொடர்கதையாக படித்தவர்களுக்கும் பயனைடைய செய்யும் விதத்தில் , பைண்டிங் நூலை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு என் நன்றிகள் பல.. எனக்கு கிடைத்த அப்பொக்கிஷங்கள் சில இங்கு மின்நூல்களாக இடம் பெறுகிறது. வழக்கம் போல உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன்... ...

க்றீச்..க்றீச்..க்றீச்-ஸ்ரீ வேணுகோபாலன்- (புஷ்பா தங்கதுரை)

Posted: 25 Aug 2015 09:12 AM PDT

நூல் பெயர்- க்றீச்..க்றீச்..க்றீச் எழுத்தாளர்- ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) நன்றி- மூல மின்நூல் பதிவாளருக்கு http://www.mediafire.com/download/6t3z36lc307r3bw/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D...%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D..%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D.pdf

நடந்தது அடி தடி ,போலீஸ் நடத்தியது தடி அடி …!

Posted: 25 Aug 2015 08:06 AM PDT

வரிசையில் நின்றார்கள் வழங்கப்பட்டது வரிசை எண் – ———————– – செய்யும் தொழிலே தெய்வம் செதுக்கினார் வெளிப்பட்டது கடவுள் சிலை – ———————— - நடந்தது அடி தடி போலீஸ் நடத்தியது தடி அடி – ————————— – அபிசேகம் கடவுளுக்கு வேர்வையில் குளித்தார் பூசாரி – ———————– சி.அருள் ஜோசப் ராஜ் நன்றி- பாக்யா

உணவுகளின் போட்டோகள் ! :)

Posted: 25 Aug 2015 06:55 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

கங்கனா ரனாவத்தின் சம்பளம் ரூ.11 கோடி

Posted: 25 Aug 2015 06:54 AM PDT

- முன்னணி 'மாடல்' அழகி என்றவுடன் நம் நினைவிற்கு வருபவர் கங்கனா ரனாவத்தான். அந்தளவிற்கு அவர் 'மாடல்' உலகில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டில் 'பாலிவுட்' திரையுலகில் அவர் அறிமுகமாகி இருந்தபோதிலும் அவரது முழுக்கவனமும் 'மாடல்' துறையிலேயே வியாபித்திருந்தது. தற்போது, அவர் 'மாடல்' உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்கிறார். அவர் தற்பொழுது வாங்கும் சம்பளம் ரூ.11 கோடி என்று ஒத்துக்கொண்டிருப்பது பாலிவுட் திரையுலகையே அதிரச் செய்திருக்கிறது. பாலிவுட் முன்னணி நாயகிகள் பலர் ...

அமெரிக்காவில் பாட்டில் பொறுக்கி விருத்தாசலத்துக்கு உதவுகிறேன்…!

Posted: 25 Aug 2015 06:52 AM PDT

- விருத்தாசலம்: கடலுாரைச் சேர்ந்த ஜெய்சங்கர் – பிரியா தம்பதி, அமெரிக்காவில் உள்ள, டெட்ராய்ட் லிவியோனா பகுதியில் வசிக்கின்றனர். இவர்களது மகன் ஹாரிஸ், 10; மகள் ஓவியா, 7. கோடை விடுமுறைக்கு, கடலுாரில் உள்ள தாத்தா வீட்டிற்கு, இருவரும் வருவது வழக்கம். கடந்தாண்டு வந்தபோது, கடலுார் சிறப்பு குழந்தைகள் பள்ளியை, ஹாரிஸ், தங்கை ஓவியாவுடன் சென்று பார்த்தான். அங்கு, நுாலகம் இல்லாததை அறிந்து கொண்டான். அமெரிக்கா திரும்பியபின், அங்கு சாலைகளில் வீசப்பட்ட, கோக், பெப்சி குளிர்பான டப்பாக்களை சேகரித்து, ...

பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, ….

Posted: 25 Aug 2015 06:47 AM PDT

- -புனே, ஆக. 25- கணவருடன் பைக்கில் செல்லும் போது, துப்பட்டா சக்கரத்தில் சிக்கி 25 வயது தாய் ஒருவர், துடிதுடித்து பலியாகியுள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள ஆலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பாக, பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி தனது பள்ளிப்பருவத்துக் காதலியான பிரணாலி தனுவை(25) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் மற்றும் 10 மாதக் கைக்குழந்தையான மகள் என இரண்டு ...

ஸ்ரீதேவிதான் ரோல் மாடல்!

Posted: 25 Aug 2015 06:44 AM PDT

சின்னத்திரையில் அழகான நாயகியாக நடிபபவர்கள்தான் பேர்வாங்கமுடியும் என்ற கருத்தை மாற்றி பெரும்பாலான டி.வி. ரசிகர்களின் பராட்டைப் பெற்றவர் கிருத்திகா. – இவர் "கேளடி கண்மணி' தொடரில் மூளை வளர்ச்சி இல்லாத பெண்ணாக மாயா கேரக்டரில் நடிக்கிறார். "இந்த துணிச்சல் எப்படி வந்தது?' அவரிடமே கேட்டோம். "வழக்கமான கேரக்டரில்தோன்றுவது பத்தோடு ஒன்று பதினொன்றாகப் போய்விடும். இதுமாதிரி சேலஞ்சிங் கேரக்டரில் நடித்ததால்தான் தனித்துத் தெரிகிறேன். இதில் ஒரு ஆபத்தும் உள்ளது. அடுத்தடுத்து இதேமாதிரி கேரக்டரில் முத்திரை ...

தீபாவளி ரிலீஸ்

Posted: 25 Aug 2015 06:24 AM PDT

6000 பதிவுகள் கடந்த செந்திலுக்கு அன்பு வாழ்த்துகள் !

Posted: 25 Aug 2015 06:24 AM PDT

6000 பதிவுகள் கடந்த செந்திலுக்கு அன்பு வாழ்த்துகள் ! மனமார்ந்த வாழ்த்துகள் செந்தில் ! இன்னும் நிறைய பதிவிடுங்கள் !

கவிதை தூறல்...

Posted: 25 Aug 2015 06:03 AM PDT


விதைகள் இல்லை
உரங்கள் இல்லை
ஆனால் அதிசயம்…
விளைநிலம் எங்கும்
வீடுகள் முளைக்கும்
அதிசயம்

–
கலாப்ரியன்
–
————————–

வட்டமடிக்கிறது கவிதை

Posted: 25 Aug 2015 06:03 AM PDT

- வேலை வெட்டி இல்லை வெட்டி வேலை செய்தான் தையல் கடை! – ————————— – ஆற்றில் நீச்சல் பயிற்சி அழகானது கூழாங்கற்கள் – ————————– – அமைதியான குளம் விழுந்தது கல் வட்டமடிக்கிறது கவிதை – ————————- – காலியானது வீடு கிடைத்தது கள்ளச்சாவியுடன் பூட்டு – ———————- – சி.அருள் ஜோசப் ராஜ் நன்றி- பாக்யா

தாயை பிரிந்த ஏக்கம்…

Posted: 25 Aug 2015 06:02 AM PDT

– ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பொமேரியன் நாய் குட்டிக்கு அந்த பெரிய வீட்டின் வாசலில் கம்பளம் விரிக்கப்பட்ட இடமும் பாலும் ரொட்டி துண்டுகளுமாய் ராஜ உபசாரம் ஆனால் நாய்க்குட்டி கத்தலையும் விசும்பலையும் தொடர்ந்து கொண்டே இருந்தது தாயிடமிருந்து பிரிந்த ஏக்கத்தில் – ——————————- கா.கலாப்ரியா நன்றி- பாக்யா

இரண்டு போன் இருந்தால் சௌகரியம்தான்...!!

Posted: 25 Aug 2015 05:59 AM PDT

- பெரும்பாலும் இரண்டு போன் வச்சிருக்கிறது, ஒரு போனை தெரியாம எங்கேயாவது வச்சுட்டா கால் பண்ணி கண்டு பிடிக்கிறதுக்கே பெரிய அளவுல உதவுது - குமரேஷ் சுப்ரமணியம் - ----------------------------------------------- - தொடரும்...

வசந்தா எனும் தெய்வம்

Posted: 25 Aug 2015 05:47 AM PDT

வசந்தா, ஈரைந்து மாதங்கள் என்னை இருட்டறைக்குள் வைத்து பக்குவமாய் பாதுகாத்தவள்! வசந்தா, இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை ஒருநாள் வரலாம், அந்த நாளில் இருந்து உழைப்பதற்கு திறமிருக்கு என்று நீ நாட்களை தொடங்கு என்று எனக்கு உபதேசித்தவள்!! வசந்தா, புகழ்ச்சிக்கு மயங்கிவிடாதே வாழ்வில் நீ தோற்று விடுவாய், குற்றம் சொன்னால் கோபப்படாதே அப்போதும் தொற்றுவிடுவாய், நீ நீயாக இரு - எப்போதும் ஜெயிக்கலாம் என்று சொன்ன தெய்வமவள்!! கருவாய் இருந்த என்னை உருவாக்கி புவியில் நடமாடவிட்ட ...

பாரத்தை இறக்கி வையுங்கள்

Posted: 25 Aug 2015 05:45 AM PDT

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் அந்த நிகழ்ச்சியை நடத்திய நடுவர் ஒரு கேள்வியைக் கேட்டார். "உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?" பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி ...

பயம் - ஒரு பக்க கதை

Posted: 25 Aug 2015 05:42 AM PDT

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்

Posted: 25 Aug 2015 05:39 AM PDT

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்லாம் ஸ்கூல் first , district first னு வர்றப்போ , நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும். ஆரம்பத்திலே இருந்தே , உங்க குழந்தைங்க , நல்ல புத்திசாலியா வர, சில எளிய டிப்ஸ் இங்கே கொடுக்கிறேன். அக்கறையும், ஆர்வமும் இருந்தா எதிலேயும் ஜெயிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்க.. நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ...

புது சோறா பழைய சோறா?

Posted: 25 Aug 2015 05:34 AM PDT

அமைதியாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் பேசுவதில் வல்லவர்கள் பெண்கள். வாழைப் பழத்தில் ஊசி சொருகுவதை போல, தங்கள் வாக்கு சாதுர்யத்தில், வன்மையாளர்களையும் திருத்தி விடுவர். சிராவஸ்தி எனும் பெருநகரத்தில், செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஊர் முக்கியஸ்தரான அவர், உளுத்துப் போனதைக் கூட யாருக்கும் தர மாட்டார். அவருடைய மருமகளான சுசீலாவுக்கு அது பிடிக்கவில்லை. மாமனாரை எப்படியாவது திருத்த வேண்டும் என, தீர்மானித்தாள். ஒருநாள், சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாமனார். அருகில் நின்று அவருக்கு விசிறிக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™