Tamil News | Online Tamil News |
- மீண்டும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்களை நிறைவேற்ற அரசு அதிரடி
- கருணாநிதி உதவியாளர் சண்முகநாதனுக்கு சி.பி.ஐ., சம்மன்: '2ஜி' ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிப்பு
- மருத்துவ துறையில் 4 'அம்மா' திட்டங்கள்
- மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு
- மந்த அமைச்சர்களுக்கு மோடி கிடுக்கிப்பிடி
- தமிழக மக்களின் தலைவிதி: கருணாநிதி
- இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை
- வெங்காயம் விலை ரூ.50 ஆக சரிவு
- பணத்தாசை, கூட்டுச்சதி, விதிமீறலால் 61 உயிர்கள் பலி: மவுலிவாக்கம் விபத்து குறித்து நீதிபதி ரகுபதி அறிக்கை
- மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
- 'டோல் பிளாசா'வில் குறைகிறது வாகன கட்டணம்
| மீண்டும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்களை நிறைவேற்ற அரசு அதிரடி Posted: புதுடில்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, பார்லி., மழைக்கால கூட்டத்தொடரை, மீண்டும் கூட்ட, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 21ல் துவங்கியது. காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., மசோதா உள்ளிட்ட, முக்கிய மசோதாக்களை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, கடந்த 13ம் தேதி, மறு தேதி குறிப்பிடப்படாமல், கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பார்லி., விவகாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வெங்கையா நாயுடு, லோக்சபா ... |
| Posted: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, '2ஜி' ஊழல் வழக்கு விசாரணை, மீண்டும் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு, சி.பி.ஐ., விரைவில் சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கலைஞர், 'டிவி' முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், தொழிலதிபர் சாஹித் பல்வா உட்பட, பலர் மீது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ... |
| மருத்துவ துறையில் 4 'அம்மா' திட்டங்கள் Posted: சென்னை : தமிழக சுகாதாரத் துறை சார்பில், 'அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்; அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்; அம்மா ஆரோக்கிய திட்டம்; அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்' ஆகியவை செயல்படுத்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று அறிவித்த திட்டங்கள்:*தனியார் மருத்துவமனைகள், முழு உடல் பரிசோதனைக்கு, 5,000 - 12 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கின்றன. அனைவராலும், அதிக கட்டணம் செலுத்தி, முழு உடல் பரிசோதனை செய்ய முடியாது. இப்போது, முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி, எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ... |
| மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு Posted: அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது. |
| மந்த அமைச்சர்களுக்கு மோடி கிடுக்கிப்பிடி Posted: 'மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், உள்கட்டமைப்பு திட்டங்களை, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்; அதற்கான கால நிர்ணயத்தை முடிவு செய்து, அதற்குள் நிறைவேற்ற, அமைச்சர்கள் பாடுபட வேண்டும்' என, பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.பிரதமர் மோடி நேற்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து, நாடு முழுவதும் செயல்படுத்தப்படும், மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரயில்வே, சாலை போக்குவரத்து, மின் துறை, நிலக்கரித் துறை, பெட்ரோலியத் துறை ஆகியவற்றுக்கு பொறுப்பான, மத்திய அமைச்சர்கள், திட்டக்கமிஷனுக்கு ... |
| தமிழக மக்களின் தலைவிதி: கருணாநிதி Posted: சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபை கூட்டம் துவங்கி விட்டது; இனி, ஒவ்வொரு நாளும், முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110வது விதியின் கீழ், அறிக்கைகளை படிக்க துவங்கி விடுவார். கடந்த நான்கு ஆண்டுகளாக, முதல்வர், 110 விதியின் கீழ் படித்த அறிவிப்புகளுக்கான, மொத்த மதிப்பீட்டுத் தொகை, 84,374 கோடி ரூபாய்; இதில் செலவு செய்யப்பட்டதோ, 12, 733 கோடி ரூபாய். முதல்வர் சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான்; இதுதான் அறிக்கைகளின் கதி. இதையெல்லாம், தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்; அதுதான், அவர்களின் தலைவிதி.இவ்வாறு, கருணாநிதி ... |
| இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை Posted: புதுடில்லி: இந்தியாவில், இந்து மதத்தின் மக்கள் தொகை இறங்குமுகத்தில் உள்ளது.மத அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டுமென, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து, மத அடிப்படையிலான மக்கள் தொகை விவரத்தை, மத்திய அரசு வெளியிட்டது. கடந்த 2011ல் இந்தியாவின் மக்கள் தொகை, 121.09 கோடி. இதில் இந்துக்கள், 96.63 கோடியும்; முஸ்லிம்கள், 17.22 கோடியும்; கிறிஸ்தவர்கள், 2.78 கோடியும்; சீக்கியர்கள், 2.08 கோடியும்; புத்த மதத்தினர், 84 லட்சமும்; ஜெயின் மதத்தினர், 45 லட்சமும்; மற்ற ... |
| Posted: புதுடில்லி: ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, வெங்காயம் விலை, கிலோ, 50 ரூபாய்க்கு கீழே சரிந்தது.வெங்காயம் விளைச்சல் குறைவாலும், இந்தாண்டு,சராசரிக்கு குறைவாக மழை பெய்யும் என, கணிக்கப்பட்டதாலும், இதன் விலை, கடந்த சில வாரங்களாக, கிலோ 80 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தவிர, ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை இருக்கும் மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ., அரசை, பதுக்கல்காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு, ... |
| Posted: சென்னை: 'மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு, தனியார் கட்டுமான நிறுவன நிர்வாகிகளின் பணத்தாசை, கூட்டுச்சதி, விதிமீறல்களே காரணம்' என, நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட, 11 மாடி கட்டடம், 2014 ஜூன், 28ம் தேதி இடிந்து விழுந்தது; 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணங்கள், பொறுப்பானவர்கள், தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, நீதிபதி ரகுபதி கமிஷனை, தமிழக அரசு அமைத்தது. இக்கமிஷன் விசாரணையை முடித்து, 2014 ஆக., 25ல், அரசுக்கு அறிக்கை அளித்தது; இந்த அறிக்கை, ... |
| மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் Posted: புதுடில்லி:குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதை தடுக்கும் விஷயத்தில், மாநில அரசுகள் அக்கறையின்றி செயல்படுவது குறித்து, சுப்ரீம் கோர்ட், நேற்று, கண்டனம் தெரிவித்தது. குழந்தைகள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்பாக, 2004ல், 'பிரஜ்வாலா' என்ற, அரசு சாரா அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மர்ம நபர்களால் கடத்தப்படும், ஏராளமான குழந்தைகள், பெண்கள், பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். கடைசியில், வேறு வழியின்றி, விபசாரம்தான் தங்கள் தொழில் என்ற ... |
| 'டோல் பிளாசா'வில் குறைகிறது வாகன கட்டணம் Posted: நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன கட்டண வசூல் மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளன. பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் குறைப்பு, உள்ளூர் மக்களுக்கு கட்டணம் கிடையாது போன்ற அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி தலைமையிலான, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், பல புதிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் முதல், நாடு முழுவதும், 50க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைகளில், எலக்ட்ரானிக் வாகன கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்பட்டன. இதனால், வாகன கட்டணங்களை செலுத்த, நீண்ட நேரம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 26,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |