மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிரதமர் மோடி 16, 17–ந்தேதி அபுதாபி பயணம்: இளவரசரை சந்தித்து பேச்சு
- காஷ்மீரில் 300 அடி பள்ளத்திற்குள் டாட்டா சுமோ விழுந்த விபத்தில் 11 பேர் பலி
- ஆந்திராவில் தீக்குளித்து பலியான வாலிபர் குடும்பத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்
- எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடி: விடிய விடிய துப்பாக்கிச் சூடு - இந்தியா ஆவேச பதிலடி
- காற்றாலை – சோலார் மூலம் திருப்பதி கோவிலுக்கு தேவையான மின்சாரத்தை தேவஸ்தானம் தயாரிக்கிறது
- ஊழலில் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் இருக்கிறார்: நடிகை ரோஜா தாக்கு
- அமர்நாத் யாத்திரை: 123 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது
- ஏழைகளுக்கு இலவச துணிகள்: பீகார் முதல்–மந்திரி அறிவிப்பு
- சட்ட படிப்புக்கான தேர்வில் கேரள போலீஸ் ஐ.ஜி. காப்பி அடித்தது உண்மை: விசாரணை கமிட்டி அறிக்கையில் தகவல்
- உ.பி. கிராமத்தில் மலிவு விலை சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பெண்கள் சுயஉதவிக் குழு
- 7 மாதங்களில் 41 புலிகளை இழந்தது இந்தியா
- மருதாணியில் தற்கொலை கடிதம்: கோயிலுக்குள் தூக்கிட்டு வாலிபர் சாவு
- பாகிஸ்தானில் தவிக்கும் பெண்ணின் பெற்றோருடைய புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு அகிலேஷுக்கு சுஷ்மா வேண்டுகோள்
- வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில காங்கிரசார், ஜனாதிபதியிடம் மனு
- அன்னா ஹசாரேக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை
- லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர சர்வதேச போலீஸ் உதவி: அமலாக்கத்துறை நடவடிக்கை
- ரூ.640 கோடி நஷ்டஈடு கேட்டு மேகி நூடுல்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு வழக்கு
- ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை: மாநில அரசின் முடிவுக்கு எதிரான உத்தரவை பிறப்பிக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
- கேரளாவில் என்.சி.சி. மாணவர் குண்டு பாய்ந்து சாவு
- சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் கைது: கெஜ்ரிவால் கண்டனம்
| பிரதமர் மோடி 16, 17–ந்தேதி அபுதாபி பயணம்: இளவரசரை சந்தித்து பேச்சு Posted: 11 Aug 2015 11:00 PM PDT பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16, 17–ந்தேதிகளில் 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு செல்ல உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட போதும் சனிக்கிழமைதான் வெளியில் தெரிய வந்தது. இது இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| காஷ்மீரில் 300 அடி பள்ளத்திற்குள் டாட்டா சுமோ விழுந்த விபத்தில் 11 பேர் பலி Posted: 11 Aug 2015 10:42 PM PDT வடக்கு காஷ்மீர் மாநிலத்தில் டாட்டா சுமோ கார் பள்ளத்திற்குள் விழுந்த விபத்தில் அதில் பயணித்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கார்நா பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று மாலை குப்வாரா மாவட்டம் நோக்கி ஒரு டாட்டா சுமோ காரில் சென்று கொண்டிருந்தனர். |
| ஆந்திராவில் தீக்குளித்து பலியான வாலிபர் குடும்பத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல் Posted: 11 Aug 2015 10:34 PM PDT ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி திருப்பதியில் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரியும் நடிகருமான சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் தொண்டர் முனிகாம கோட்டி தீக்குளித்து இறந்தார். |
| எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடி: விடிய விடிய துப்பாக்கிச் சூடு - இந்தியா ஆவேச பதிலடி Posted: 11 Aug 2015 10:31 PM PDT எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அடாவடியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து உள்ளது. காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்தியா–பாகிஸ்தான் இடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி மீறி வருகிறது. |
| காற்றாலை – சோலார் மூலம் திருப்பதி கோவிலுக்கு தேவையான மின்சாரத்தை தேவஸ்தானம் தயாரிக்கிறது Posted: 11 Aug 2015 10:30 PM PDT திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:– திருப்பதி கோவிலுக்கு தேவையான மின்சாரத்தை தேவஸ்தானமே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காற்றாலை மூலம் திருப்பதி கோவிலுக்கு 30 |
| ஊழலில் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் இருக்கிறார்: நடிகை ரோஜா தாக்கு Posted: 11 Aug 2015 10:28 PM PDT ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் பிரிவு தலைவரும், நடிகையுமான ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:– சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் |
| அமர்நாத் யாத்திரை: 123 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது Posted: 11 Aug 2015 10:15 PM PDT அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 123 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் |
| ஏழைகளுக்கு இலவச துணிகள்: பீகார் முதல்–மந்திரி அறிவிப்பு Posted: 11 Aug 2015 10:13 PM PDT பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கும், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். |
| Posted: 11 Aug 2015 09:56 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் சரக போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் டி.ஜே.ஜோஸ். கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் நடத்திய சட்ட மேற்படிப்பு தேர்வில் இவர் பங்கேற்று தேர்வு எழுதினார். |
| உ.பி. கிராமத்தில் மலிவு விலை சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பெண்கள் சுயஉதவிக் குழு Posted: 11 Aug 2015 09:49 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களுக்கு வேலைவாய்பை ஏற்படுத்தித்தரும் வகையில் மலிவு விலையில் 'சானிட்டரி நாப்கின்கள்' தயாரிக்கும் அலகு தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், கல்வியறிவில்லாத பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை அம்மாவட்ட நிர்வாகம் அளித்து |
| 7 மாதங்களில் 41 புலிகளை இழந்தது இந்தியா Posted: 11 Aug 2015 09:16 PM PDT இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் புலிகளை பாதுகாக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி வருகின்றன. இதற்காக பல நூறு ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களை கட்டாயப்படுத்தி அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றுகிறது அரசு. |
| மருதாணியில் தற்கொலை கடிதம்: கோயிலுக்குள் தூக்கிட்டு வாலிபர் சாவு Posted: 11 Aug 2015 09:01 PM PDT மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோயிலுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் தற்கொலைக்கான காரணத்தை மருதாணியால் கடிதமாக எழுதி வைத்துள்ளார். இங்குள்ள இந்தூர் மாவட்டத்தின் மையப்பகுதியான படா கணபதி என்ற இடத்தில் லால் மந்திர் கோயில் அமைந்துள்ளது. நேற்று காலை இந்த கோயிலுக்கு வழிபாடு செய்யவந்த பக்தர்கள், உள்ளே சுமார் 21 வயது |
| Posted: 11 Aug 2015 08:35 PM PDT இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து கடந்த 14 ஆண்டுகளாக கராச்சியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் அனாதையாக வாழ்ந்து வரும் பேச்சுத்திறன் மற்றும் கேட்கும் திறனற்ற 23 வயது பெண் தங்களது மகள்தான் என உரிமைகோரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த |
| வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில காங்கிரசார், ஜனாதிபதியிடம் மனு Posted: 11 Aug 2015 08:23 PM PDT தேடப்படும் குற்றவாளி மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் கமிஷனருமான லலித்மோடிக்கு சட்டவிரோதமாக உதவிய ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும் என்று காங்கிரசார் போராடி வருகிறார்கள். |
| அன்னா ஹசாரேக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை Posted: 11 Aug 2015 08:17 PM PDT காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரேக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது தற்போது வெளியாகி உள்ளது. அதில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடனான உறவை துண்டிக்கவில்லை என்றால் விபரீத |
| லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர சர்வதேச போலீஸ் உதவி: அமலாக்கத்துறை நடவடிக்கை Posted: 11 Aug 2015 08:12 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தலைவராக லலித் மோடி இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு ஒளிபரப்பு உரிமை வழங்குவதில் மோசடி செய்ததுடன், சட்டவிரோத பண பரிவர்த்தனையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2012-ம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. |
| ரூ.640 கோடி நஷ்டஈடு கேட்டு மேகி நூடுல்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு வழக்கு Posted: 11 Aug 2015 08:03 PM PDT நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருள் இருப்பதாக கூறி இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது நுகர்வோர் விவகார அமைச்சகம் நெஸ்லே இந்தியா நிறுவனம் மீது நுகர்வோர் கோர்ட்டான தேசிய நுகர்வோர் விவகார தீர்ப்பு ஆணையத்தில் ரூ.640 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. |
| Posted: 11 Aug 2015 07:56 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. |
| கேரளாவில் என்.சி.சி. மாணவர் குண்டு பாய்ந்து சாவு Posted: 11 Aug 2015 07:52 PM PDT கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மாணவர் தனுஷ் கிருஷ்ணா. இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். என்.சி.சி. படை வீரரான தனுஷ் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். |
| சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் கைது: கெஜ்ரிவால் கண்டனம் Posted: 11 Aug 2015 07:44 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ் 'சுவராஜ் அபியான்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய அமைப்பினருடன் சேர்ந்து டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு நிலத்தை உழவு செய்ய முயன்றார். உடனே யோகேந்திர யாதவ் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |