Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அப்பளுக்கற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப அணிதிரண்டு வாக்களிப்பீர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அப்பளுக்கற்ற அரசியல் கலாசாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய கடப்பாடு எம் எல்லோருக்கும் எழுந்துள்ளது. ஆகவே, தமிழ் மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

சுமந்திரன்- கஜேந்திரகுமார் போட்டி! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

“தமிழ் மக்கள் மத்தியில் இந்தப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை முன்னிலைப்படுத்துவதைக் காட்டிலும், எம்.ஏ.சுமந்திரன்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் அதிகமாக முன்னிறுத்தியிருக்கின்றது. அதாவது, கட்சி- கொள்கை அரசியலைத் தாண்டி, ‘சுமந்திரன் எதிர் கஜேந்திரகுமார்’ எனும் போக்கினைக் காட்டுகின்றது. இப்படியான நிலை ஏன் ஏற்பட்டிருக்கின்றது. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களா?” என்றொரு கேள்வியை கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 


Read more ...

மைத்திரி எனக்கு பிரதமர் பதவி தருவார்: மஹிந்த நம்பிக்கை!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியை தனக்கு தருவார் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மை அறியப்பட்டாலே நல்லாட்சி ஏற்படும்: இரா.சம்பந்தன்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மை அறியப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதன்மூலமே நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

புலிகளுக்கு நிதி வழங்கிய விவகாரம்; மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்கலாம்: சம்பிக்க ரணவக்க

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்கலாம். அதற்கு சட்டத்தில் இடமுண்டு என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

வசீம் தாஜூதீனை வதைத்து, அவர் கத்துவதை தோழிக்குக் கேட்கச் செய்துள்ளனர்: சுஜீவ சேனசிங்க

Posted:

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனை கொடூரமாக வரைத்து, அவர் கத்தும் சத்தத்தை அவரது தோழிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்தே கொலை செய்திருப்பது தனக்கு தெரிய வந்திருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

நமது பிரபஞ்சம் மெதுவாக மடிந்து கொண்டு வருகிறது!:ஆய்வாளர்கள் துல்லியமாகக் கணிப்பு

Posted:

நாம் வாழும் இந்த பூமி அது அமைந்துள்ள சூரிய குடும்பம் மற்றும் சூரிய குடும்பம் அமைந்துள்ள பால் வெளி அண்டம் மற்றும் பல கோடிக் கணக்கான இதர அண்டங்களைக் கொண்டுள்ள இந்த பிரபஞ்சமானது Big Bang எனப்படும் பெரு வெடிப்பின் மூலம் தோன்றி 15 பில்லியன் வருடங்கள் ஆகி விட்டதாகவும், இந்த பிரபஞ்சம் இன்னமும் விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் அவதான அடிப்படையில் கூறியுள்ள விடயம் நீங்கள் கேள்விப் பட்டதே!


Read more ...

2016 மார்ச், ஏப்பிரலில் நடைபெறும் அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டைத் தலைமை தாங்குகின்றார் ஒபாமா!

Posted:

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் ஏப்பிரல் மாதங்களில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறவுள்ள 4 ஆவது அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தலைமை தாங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Read more ...

டொனி பிளேயர் இலங்கை வருகை!

Posted:

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். 


Read more ...

ஃபுக்குஷிமா அனர்த்தத்துக்குப் பின்னர் தனது முதலாவது அணு உலையை இயக்கத் தொடங்கிய ஜப்பான்!

Posted:

மார்ச் 2011 இல் ஜப்பானைத் தாக்கிய பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளால் ஃபுக்குஷிமா அணு உலை சேதம் அடைந்து மோசமான கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டிருந்தது.


Read more ...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

Posted:

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.


Read more ...

கொல்கத்தா விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு

Posted:

கொல்கத்தா விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Read more ...

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த தமிழர் சுந்தர் பிச்சை நியமனம்

Posted:

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த தமிழர் சுந்தர் பிச்சை என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

ஆபாச இணையத் தளங்களை முடக்குவதாக மத்திய அரசு அறிக்கை விடுத்ததை பெரிது படுத்த வேண்டாம்

Posted:

ஆபாச இணையத் தளங்களை முடக்குவதாக மத்திய அரசு அறிக்கை விடுத்ததை பெரிது படுத்த வேண்டாம் என்று, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


Read more ...

செப்டெம்பர் மாதம் மோடி ஐநாவில் உரையாற்ற உள்ளார்

Posted:

வருகிற செப்டெம்பர் மாதம் மோடி ஐநா சபையில் உரையாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

13 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியதில் 136 கோடி ரூபாய் நஷ்டம்

Posted:

13 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கியதில் மத்திய அரசுக்கு 136 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

கூகுளின் CEO ஆக தமிழ் நாட்டின் சுந்தர் பிச்சை!:உலகளாவிய நிறுவனங்களில் பணி புரியும் 10 இந்தியர்கள்

Posted:

உலகின் முண்ணனி இணையத் தொழிநுட்ப நிறுவனமான கூகுள் பொதுமக்கள் பாவனைக்கான திறந்த முற்றிலும் வேறுபட்ட வணிக ரீதியிலான தேவைகளுக்காக Alphabet Inc என்ற நிறுனத்தை ஆரம்பித்துள்ளது.


Read more ...

பொதுத் தேர்தல் 2015: வெற்றி யாருக்கு? (ஆசனங்களின் பங்கீடு - ஒரு ஒப்புநோக்கு)

Posted:

இலங்கையினை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்யப் போகின்றார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் வரும் திங்கட் கிழமை (ஒகஸ்ட் 17) நடைபெறவிருக்கின்றது. தென்னிலங்கையில் ஆட்சியதிகாரத்துக்கான போட்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியும் (ஐ.தே.க), முன்னாள் ஜனாதிபதியை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டு செயற்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பெரும் போட்டி போடுகின்றன.


Read more ...

லொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)

Posted:

ஆகஸ்ட் 05ந் திகதி முதல் நடைபெற்று வரும் 68வது லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில், 51 நாடுகளின், பல்வேறு வகையிலான 250க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டின் போட்டிக்குத் தெரிவாகியுள்ள படங்களுள், சிறிலங்காவின்  Sulanga Gini Aran (Dark in the White Light / வெள்ளை ஒளியில் இருள்) சிங்களத் திரைப்படமும், இந்தியாவின் Thithi ( திதி) கன்னடப் படமும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.


Read more ...

கயல் ஆனந்தி மாநிறமா? டைரக்டர் பேச்சால் கவலை

Posted:

எந்த கேள்வி கேட்டாலும், ஐயோ என்னைய விட்ருங்களேன்... என்பதை போலவே உட்கார்ந்திருக்கிறார் கயல் ஆனந்தி. ஸ்கூல் கோயிங் காலத்திலேயே பிடித்து வந்துவிட்டார்கள் போலிருக்கிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™