Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பாலக்காடு: 10–ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பலி

Posted: 01 Aug 2015 11:00 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமுடியூரை சேர்ந்தவர் நவ்சாத். இவரது மகள் நவ்சிகா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆந்திரா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Posted: 01 Aug 2015 10:52 PM PDT

தெலுங்குதேச கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் விஜயவாடாவில் நேற்று நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்று கருதி அவர்களை ஊக்குவித்து வந்தவர் அப்துல்கலாம். அவர் தனது விடாமுயற்சி, உழைப்பினால் மிக உயர்ந்த பதவியை அடைந்தார்.

6 மாதங்களில் மத வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு: 51 பேர் பலி

Posted: 01 Aug 2015 10:41 PM PDT

இந்த ஆண்டின் ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரை வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக ஐம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த (2014) ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 252 மதம் சார்ந்த வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 33 பேர் பலியாகி இருந்தனர். அந்த ஆண்டில் மொத்தம் 95 பேர் மதம் சார்ந்த வன்முறை சம்பவங்களுக்கு

எச்சரிக்கை: அதிகப்படியான ரசாயன உப்பால் மேகியை தொடர்ந்து மேலும் 11 நூடுல்ஸ் தயாரிப்புகளுக்கு தடை

Posted: 01 Aug 2015 10:32 PM PDT

மேகி சர்ச்சை ஏற்படுத்திய பீதி அடங்குவதற்குள், மேகியைப் போலவே ரசாயன உப்பு அதிகமாக இருப்பதாக பல முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸ் பொருட்களுக்கு பீகாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பீகார் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் கிஷோர் கூறுகையில், "கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி பீகார் மாநிலத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டது. மேகி சர்ச்சையை அடுத்து, ஐடிசி நிறுவனத்தின் தயாரிப்பான 'சன்பீஸ்ட் யிப்பீ நூடுல்ஸ்', ஹிந்துஸ்தான் லீவர்

மலையை குடைந்து சாலை அமைத்த தசரத் மான்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு வரிவிலக்கு

Posted: 01 Aug 2015 10:10 PM PDT

பீகார் மாநிலத்தில் ஒற்றை மனிதராக மலையை குடைந்து 80 கி.மீ. தூரத்தை 13 கிலோ மீட்டராக சுருக்கிய அசுர உழைப்பாளி தசரத் மான்ஜியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்துக்கு அம்மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தசரத் மான்ஜி. இந்தியாவின் மலை மனிதர் என்று பீகார் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தனியொரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்

திருந்தாத டெல்லி: தாய்க்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் பெண்ணை கற்பழிக்க முயன்ற ஆஸ்பத்திரி ஊழியர் கைது

Posted: 01 Aug 2015 08:22 PM PDT

நாட்டின் தலைநகரான டெல்லியின் சாலைகளில் மட்டுமல்ல.., ஆஸ்பத்திரி, ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக நோயுற்ற தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவந்த பெண்ணை இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கற்பழிக்க முயன்ற சம்பவம் அமைந்துள்ளது.

மத்திய அரசு அவசர ஆலோசனை: தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க நடவடிக்கை

Posted: 01 Aug 2015 05:26 PM PDT

அமெரிக்க தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா தீவிரவாதிகளை விட பயங்கரமானவர்கள் என கருதப்படுகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அங்கு முக்கிய நகரங்களை அவர்கள் கைப்பற்றி, தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துகிற நாடுகளில் தாக்குதல் நடத்தவும் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூறுகிறார் ராஜ்நாத்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Posted: 01 Aug 2015 05:26 PM PDT

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே 'இந்து பயங்கரவாதம்' தொடர்பான மோதல் அதிகரித்து வருகிறது. ராஜ்நாத் சிங் 'இந்து பயங்கரவாதம்' என்பதன் அர்த்தத்தை மாற்றிக் கூறுகிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

வழிப்பறியில் ஈடுப்பட்டதாக கூறி இளைஞருக்கு பெல்டால் அடி: 5 போலீஸ் இடைநீக்கம்

Posted: 01 Aug 2015 05:14 PM PDT

ஒரு காவலரின் மொபையில் போனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், ஒரு இளைஞர் பெரிய தூனை கட்டிப்பிடித்தப்படி உள்ளார். அவரை சீறுடையில் இல்லாத ஒரு காவலர் பெல்டால் அடிக்கிறார்.

மேகியை திரும்பவும் கடைகளுக்கு கொண்டு வருவதுதான் என் லட்சியம்: இந்தியாவின் புதிய நெஸ்லே இயக்குனர்

Posted: 01 Aug 2015 03:45 PM PDT

இந்தியாவில் ரசாயனக் கலப்பால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி தடை செய்யப்பட்டுள்ள மேகியை திரும்பவும் கடைகளுக்கு கொண்டுவருவதுதான் என் லட்சியம் என இந்தியாவிற்கான புதிய நெஸ்லே இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு ஏற்படுமா? அனைத்துக்கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை

Posted: 01 Aug 2015 03:10 PM PDT

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கப்பிரிவினரால் தேடப்படும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி

Posted: 01 Aug 2015 01:26 PM PDT

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் நடத்தப்பட்ட 18 தாக்குதல்களில், இந்திய வீரர்கள் 3 பேர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்தனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை

Posted: 01 Aug 2015 12:00 PM PDT

லலித்மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, நுழைவுத் தேர்வு ஊழல் பிரச்சினையில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது.

புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஆதரவு

Posted: 01 Aug 2015 10:25 AM PDT

புனேயில் போராட்டம் நடத்தி வரும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர

மவுனேந்திர மோடி ஆக மாறிய பிரதமர்: யெச்சூரி கடும் விமர்சனம்

Posted: 01 Aug 2015 09:35 AM PDT

ஊழல் விவகாரங்களில் பிரதமர் மவுனேந்திர மோடியாக மாறிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் யெச்சூரி பேசியதாவது:-

இந்தியாவின் வலிமையை அதிகரிக்க பாகிஸ்தானுடன் நட்புறவு அவசியம்: முலாயம் சிங் யாதவ்

Posted: 01 Aug 2015 08:57 AM PDT

இந்தியாவின் வலிமையை மேலும் அதிகரிப்பதற்கு பாகிஸ்தானுடனான நட்புறவு அவசியம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்

தூக்கிலிடப்படும் நபர்களின் உடல்களை ஒப்படைப்பதில் ஒரே மாதிரியான கொள்கை தேவை: குலாம் நபி ஆசாத்

Posted: 01 Aug 2015 08:38 AM PDT

மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்று 2013ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலின்

போலி என்கவுன்டர் வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு 3 போலீஸ்காரர்கள் கைது

Posted: 01 Aug 2015 08:26 AM PDT

உத்தரபிரதேசத்தில் போலி என்கவுன்டர் வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உதய்பன் சிங்கின் தம்பி தேவேந்திர பிரதாப் சிங், 1982 ஆம் ஆண்டு போலீசார்

ஜம்முவில் எய்ம்ஸ் போராட்டக்குழு நடத்திய பேரணியில் வன்முறை: 144 தடை உத்தரவு

Posted: 01 Aug 2015 07:32 AM PDT

ஜம்முவில் எய்ம்ஸ் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியதில் 3 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ்

மணிப்பூரில் கனமழையால் நிலச்சரிவு: 21 பேர் பலி

Posted: 01 Aug 2015 06:58 AM PDT

மணிப்பூரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோ- மியான்மர் எல்லைப்பகுதியை ஒட்டிய கென்ஜாய் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™