Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அமர்நாத் யாத்திரை: 64 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டுச் சென்றது

Posted: 23 Aug 2015 10:48 PM PDT

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 64 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது.

வெளிநாடுகளில் இருந்து 10 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

Posted: 23 Aug 2015 10:45 PM PDT

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை திடீரென்று உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்கப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100

டி.வி. கேபிள் வயரில் இருந்து மின்சாரம் தாக்கி முதியவர் பலி: 20 பேர் படுகாயம்

Posted: 23 Aug 2015 10:34 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது கூளப்பம் என்ற குக்கிராமம். இந்த பகுதியில் நேற்று காலை இடி–மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இடி– மின்னல் ஆரம்பித்ததும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் தங்கள் வீட்டில் உள்ள டி.வி.யின் கேபிள் இணைப்பை துண்டித்தனர். மழை விட்டும் அந்த பகுதியில் இடி– மின்னல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ரூ.20–க்கு வெங்காயம் விற்பனை: ஆந்திர அரசு ஏற்பாடு

Posted: 23 Aug 2015 10:02 PM PDT

நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. ஆந்திராவில் ஜூன் மாதம் கிலோ ரூ.23–க்கு விற்கப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.70 முதல் 80–க்கு விற்கப்படுகிறது. நாளுக்கு நாள் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் நண்டு பிடிக்கப்போன வாலிபரை புலி இழுத்துச் சென்றது

Posted: 23 Aug 2015 09:33 PM PDT

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நண்டு பிடிக்கப்போன வாலிபரை புலி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள 24-வது வடக்கு பர்கானா மாவட்டத்தில், சுந்தரவனக் காடுகளை ஒட்டியுள்ள ஒரு ஓடையில் புர்பா குர்குரியா கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருகாமையில்

கேரளாவில் போலி தேன் விற்பனை: பெண்கள் உள்பட 20 தமிழர்கள் கைது

Posted: 23 Aug 2015 09:32 PM PDT

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 38), பாண்டியன் (41) மற்றும் பெண்கள் உள்பட 20 பேர் கேரள மாநிலம் ஆலப்புலா வளர்ச்சேரி என்ற இடத்துக்கு தேன் விற்பனைக்காக சென்றனர். ஒவ்வொருவரும் அகன்ற பாத்திரத்தில் தேனடையை நிறையாக

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 5½ டன் தங்கம் வங்கியில் டெபாசிட்: தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

Posted: 23 Aug 2015 08:46 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2014–ம் ஆண்டு பக்தர்களிடம் இருந்து 722 கிலோ தங்க நகைகள் காணிக்கையாக பெறப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்க

ஆந்திராவில் லாரி - ரெயில் மோதல்: எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் பலி

Posted: 23 Aug 2015 08:26 PM PDT

ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி மீது ரெயில் மோதிய விபத்தில் கர்நாடக மாநில எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா மண்டலத்தில் இருக்கும்

மும்பையில் 700 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல்: காரில் கடத்திய 2 பேர் கைது

Posted: 23 Aug 2015 08:13 PM PDT

மும்பை பரேல் கிட்வாய்மார்க் பகுதியில் காரில் ரேஷன் மண்எண்ணெய் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை வழிமறித்தனர்.

ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் லடாக் சென்றார் - எல்லை பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு

Posted: 23 Aug 2015 08:00 PM PDT

கடந்த சில வாரங்களாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நமது ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்பு

தந்தைக்காக தூங்காமல் விழித்திருக்கும் சிறுமி? - உங்களை தூங்கவிடாமல் செய்யும் வீடியோ

Posted: 23 Aug 2015 05:16 PM PDT

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாடம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.

விமான நிலையங்களில் சிறப்பு சலுகையை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது: ராபர்ட் வதேரா கருத்து

Posted: 23 Aug 2015 05:00 PM PDT

ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், கவர்னர்கள், முதல்-மந்திரிகள் என 33 வகையான வி.ஐ.பி.களுக்கு இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதன்படி அவர்கள் விமான நிலையத்தில் எந்தவித சோதனையும் இன்றி சென்று வரலாம்.

சைக்கிள் தொழிற்சாலை அமைக்க நிலம் ராஜீவ் அறக்கட்டளைக்கு விற்கப்பட்டதாக ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு

Posted: 23 Aug 2015 04:25 PM PDT

அமேதி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு பிரதம மந்திரி இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகை மத்திய மனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி அமேதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார். பின்னர் ஸ்மிரிதி இரானி நிருபர்களிடம் கூறியதாவது:-

சமஸ்கிருதம் அறிவியல், தொழில்நுட்பத்துக்கு மிகவும் உபயோகமான மொழி: ராஜ்நாத் சிங்

Posted: 23 Aug 2015 03:46 PM PDT

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறிவியல், தொழில்நுட்பத்துக்கு மிகவும் உபயோகமான மொழி வடமொழியான சமஸ்கிருதமே என்று கூறியுள்ளார். லக்னோவில் கல்வி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அவர், "சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட புராணங்கள்

பீகாரில் சாலை விபத்தில் 7 பேர் சாவு

Posted: 23 Aug 2015 03:31 PM PDT

பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் இருந்து ஹசான்பூர் பிப்ரா என்ற கிராமத்துக்கு 8 பேர் ஒரு ஆட்டோவில் சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 23 Aug 2015 12:44 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பிரிவினைவாதிகளுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புதல் போன்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்தது.

நேபாளத்தில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 5 புள்ளியாக பதிவு

Posted: 23 Aug 2015 12:00 PM PDT

நேபாளத்தில் நேற்று மதியம் 2.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு

வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்ட பிரிவினைவாத தலைவர் பிலால் லோன் விடுதலை

Posted: 23 Aug 2015 11:54 AM PDT

டெல்லியில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை தொடங்குவதாக இருந்து பின்னர் ரத்தானது. இதில் கலந்து கொள்வதாக இருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிசை சந்திப்பதற்காக ஹூரியத் மாநாட்டு

அசாமில் கனமழைக்கு 13 பேர் பலி: பாதிக்கப்பட்ட பகுதியில் தருண் கோகாய் ஆய்வு

Posted: 23 Aug 2015 07:55 AM PDT

அசாமில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு கோக்ராஜர், சிராங், போங்கைகயோன், கோல்பாரா மற்றும் துப்ரி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுடன் சேர்த்து 18 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதுவரை இந்த மழைக்கு 13 பேர் உயிரழந்துள்ளனர்.

பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை ரத்து விஷயத்தில் பா.ஜனதா எடுத்த முடிவுக்கு சமாஜ்வாடி ஆதரவு

Posted: 23 Aug 2015 07:06 AM PDT

இந்தியா– பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று தொடங்குவதாக இருந்தது. பாகிஸ்தானுடன் தீவிரவாதம் தவிர்த்து வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்த நிலையில் பாகிஸ்தானோ, காஷ்மீர் பிரச்சனையை விலக்கிவிட்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™