Tamil Star |
- Scugog ஏரியில் படகுகள் விபத்து – ஒன்பது பேர் மருத்துவமனையில்
- எல்லைப் பகுதி காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கனேடிய தீயணைப்புப் படையினர்
- மோசமான வரட்சியால் விவசாயம் பாதிப்பு – அல்பேர்ட்டா அரசாங்கம் அறிவிப்பு
- சிறிய ரக விமானம் விபத்து
- கல்கரியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கோடைகால பனிப்பொழிவு!
- நீரிழிவு நோயாளிகளுக்கான சாலட்!
- ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான எண்ணெய் எவ்வளவு?
| Scugog ஏரியில் படகுகள் விபத்து – ஒன்பது பேர் மருத்துவமனையில் Posted: 23 Aug 2015 08:32 PM PDT
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் 6 மாதக் குழந்தையும் அடங்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஒன்ராறியோவின் வட Oshawaவின் Scugog ஏரியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் அளவில் இந்த விபத்து இடம்பெற்றள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய படகு ஒன்று சிறிய படகை மோதியதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். விபத்தை அடுத்து சம்பவ இடத்தில் இருந்த நீச்சல் தெரிந்த ஒருவர் குழந்தையை பாதுகாப்பாக காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்திருந்தார் என்றும், ஏனையவர்கள் பின்னர் மீட்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் காயங்களுக்கு ஆளான எவரும் உயிராபத்தான பாதிப்பை எதிர்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. The post Scugog ஏரியில் படகுகள் விபத்து – ஒன்பது பேர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எல்லைப் பகுதி காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கனேடிய தீயணைப்புப் படையினர் Posted: 23 Aug 2015 10:55 AM PDT
அமெரிக்க எல்லைப்பரப்பினுள் ஏற்பட்டுள்ள இந்த காட்டுதீயில் இருந்து வெளிவரும் புகை பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியங்களை தொட்டுள்ள நிலையில், கனடா இந்த முடிவினை மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம் வோசிங்டனில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தீயணைப்பு படையினருக்கு உதவுவதற்காக கனேடிய தீயணைப்பு வீரர்களில் ஒரு தொகுதியினர் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கனேடிய எல்லையில் இருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தொலைவில், 168 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எரிந்துவரும் காட்டுத் தீ வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு திசை நோக்கி மேலும் பரவ ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தீயணைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க வீரர்கள் மிகுந்த அனுபவமும் திறமையும் மிக்கவர்கள் என்பதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்த அவர்கள் மிகவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரிடடிஷ் கொலம்பியாவின் தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் தமது தரப்பு உதவியாக தலா இருபது பேரைக் கொண்ட இரண்டு தீயணைப்பு நடவடிக்கை குழுக்களை இன்று ஞாயிற்றுக்கிழமை வோசிங்டனுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா செல்லும் கனேடிய தீயணைப்பு வீரர்கள், அங்கு அந்த நாட்டு வீரர்களால் கவனிக்க முடியாது விடப்பட்டிருக்கும் பகுதிகளில் தீயணைப்பு பணிகணை மேற்கொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். The post எல்லைப் பகுதி காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கனேடிய தீயணைப்புப் படையினர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோசமான வரட்சியால் விவசாயம் பாதிப்பு – அல்பேர்ட்டா அரசாங்கம் அறிவிப்பு Posted: 23 Aug 2015 10:47 AM PDT
மாகாணத்தில் விவசாய பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதனை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அல்பேர்ட்டாவின் விவசாய அமைச்சர் நிறைவேற்றியுள்ளார். மாநிலத்தின் விவசாயத் துறை வரட்சி காரணமாக அழிவினைச் சந்தித்துள்ளதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளமையால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்புறுதி உள்ளிட்ட நிதி உதவிகளை பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளதாக அல்பேர்ட்டாவின் வேளான்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. அல்பேர்ட்டாவின் பல்வேறு மாவட்டங்களும், பிராந்திய, உள்ளூராட்சி மன்றங்களும் ஏற்கனவே வெப்பம் மற்றும் வறட்சித் தாக்கம் தொடர்பிலான நிலையினை பிரகடனப் படுத்தியுள்ளதுடன், மாநில அரசாங்கத்திடம் இருந்து உதவிக்கும் கோரிக்கை விடுத்துள்ளன. The post மோசமான வரட்சியால் விவசாயம் பாதிப்பு – அல்பேர்ட்டா அரசாங்கம் அறிவிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 23 Aug 2015 10:42 AM PDT
Grimsby பகுதியில உள்ள வெற்றுக் காணி ஒன்றில சிறிய ரக விமானம் ஒன்று நேற்று நண்பகல் அளவில் வீழந்து விபத்துக்குள்ளானதை காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். Kemp வீதிப் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த காணியின் உரிமையாளர், அங்கு குறித்த அந்த விமானத்தின் விமான படுகாயமடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து குறித்த அந்த விமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தன்மை தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கனேடிய போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். The post சிறிய ரக விமானம் விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்கரியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கோடைகால பனிப்பொழிவு! Posted: 23 Aug 2015 09:38 AM PDT
கிட்டத்தட்ட 30-சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிபொழிவு வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஆரம்பித்து சனிக்கிழமை வரை தொடர்ந்துள்ளது. இந்த ஆச்சரியமான குளிர் காலநிலை அல்பேர்ட்டா சுற்று வட்டாரங்களில் மட்டுமே உணரப்பட்டுள்ளது. குளிர்கால விளையாட்டு ஆர்வலர்களிற்கும் ஒரு சிறு உற்சாகத்தை கொடுத்தது. இந்த ஆச்சரியமான பனி பொழிவனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. The post கல்கரியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கோடைகால பனிப்பொழிவு! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீரிழிவு நோயாளிகளுக்கான சாலட்! Posted: 23 Aug 2015 07:56 AM PDT
அதன் செய்து பார்த்து பயன்பெறுங்கள், தேவையான பொருட்கள் கத்தரிக்காய், வெண்டைக்காய், குடமிளகாய் தலா 100 கிராம், ஃபார்மேஷன் சீஸ் 20 கிராம், மிளகு 10 கிராம், பூண்டு இரண்டு பல், ஆலிவ் ஆயில், துளசி சிறிது, உப்பு சுவைக்கு ஏற்ப. செய்முறை குடமிளகாயை துண்டுகளாக நறுக்கி, ஓவன் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் நன்கு சுட வேண்டும். பின்னர் அதன் தோலை நீக்கிவிட வேண்டும். பின்னர், இந்த சுட்ட குடமிளகாய், துளசி, ஆலிவ் எண்ணெய், மிளகு, தோல் நீக்கிய பூண்டு, உப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். இது சாஸ் போன்ற கலவையாக இருக்கும். அடுத்தது, கத்தரிக்காயை மிக மெல்லியதாக வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும், இதற்கு ஏற்றார்போல வெண்டைக்காயை நீள்வாக்கில் வெட்டி அடுப்புத் தணலில் காட்டி சுட வேண்டும். க்ரில் வசதி இருந்தால் அதில் போட்டும் சுட்டுக்கொள்ளலாம். கருகவிடாமல் பதமாக இதை சுட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வெண்டைக்காய், கத்தரிக்காயை ஒவ்வொரு லேயராக அடுக்கி அதற்கு மேல் சீஸ் போட்டுக்கொள்ள வேண்டும். இதன் மீது நாம் ஏற்கனவே செய்துவைத்துள்ள சாஸ் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும். பலன்கள் நீரிழவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது வெண்டைக்காய். இதில் விட்டமின் சி மற்றும் பி அதிகமாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சிறுநீரைப் பிரித்து, உடல் சூட்டைக் குறைக்கும். இதில் உள்ள பெக்டின் என்ற நார்ச் சத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். இதயத் துடிப்பைச் சீராக்கும் மெக்னீசியம் இதில் உள்ளது. கத்தரிக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், அது குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உணவு செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் கெட்ட கொழுப்பு மற்றும் சோடியம் மிகக் குறைவாகவே உள்ளது. குடமிளகாயில் விட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைவாக உள்ளது, கொழுப்பு குறைவாக உள்ளது. இதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சீசில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. மேலும் விட்டமின் டியும் இருப்பதால் கால்சியம் உறிஞ்சப்படுவது எளிதாகிறது. The post நீரிழிவு நோயாளிகளுக்கான சாலட்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான எண்ணெய் எவ்வளவு? Posted: 23 Aug 2015 07:53 AM PDT
அப்படிப் பயன்படுத்துவதால், 'டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்' அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்? ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதம் இருப்பது நல்லது. எப்படி உபயோகிக்க வேண்டும்? நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது. எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம். The post ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான எண்ணெய் எவ்வளவு? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Scugog ஏரியில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானத்தில் காயமடைந்த ஒன்பது பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில், கனடாவுடனான எல்லையை ஒட்டு அமெரிக்காவின் வோசிங்டனில் பரவிவரும் காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கனேடிய தீயணைப்புப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த வருடத்தின் மோசமான வரட்சி காரணமாக விவசாயத்தில் தமது மாநிலம் பேரழிவினைச் சந்தித்துள்ளதாக அல்பேர்ட்டா அரசாங்கம் அறிவித்துள்ளது.
நயாகரா பிராந்தியத்தின் Grimsby பகுதியில் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடா- கல்கரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள மக்களிற்கு கோடைகால வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைத்தது போன்று ஆகஸ்ட் மாதத்தில் பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.


நீரிழவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சாலட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது.