Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆக.,16 ஆடிப்பூரம் !

Posted: 15 Aug 2015 01:09 PM PDT

ஆக.,16 ஆடிப்பூரம் ! இவ்வுலகில் எவ்வளவோ பேர் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். ஆனால், மனதில் நிற்பவர்கள் சொற்பமே! அத்தகையோரில் ஆண்டாளும் ஒருவள். அன்றும், இன்றும், என்றும் நம் மனதில் நிலைத்திருப்பவள். அவளின், மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்ற பாடலை பாட ஆரம்பித்தால், காதுகளில் தேன் பாயும். மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத என பாடினால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நமக்கு நடந்த திருமணக்காட்சி இன்பமாய் ஊற்றெடுக்கும். கன்னியருக்கோ நாளை நடக்கப் போகும் திருமணக் காட்சி, கண் முன் விரியும். பக்தியால், ...

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..."குருவியும் நெல் மூட்டையும் !

Posted: 15 Aug 2015 12:54 PM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’

Posted: 15 Aug 2015 12:51 PM PDT

- புதுமுக இயக்குநர் சிவகார்த்திக் இயக்கும் படம் 'ரீங்காரம்'. புதுமுகம் பாலா கதாநாயகனாக நடிக்க 'கங்காரு', 'வந்தா மல' படங்களில் நடித்த பிரியங்கா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். - மேலும் கலாபவன்மணி, ஆடுகளம் ஜெயபாலன், சிந்தியா, சிங்கப்பூர் தீபன், தயாரிப்பாளர் ஜின்னா எனப் பலரும் உள்ளனர். - "ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ரீங்காரம் இருக்கிறது. அவரவர்களின் எண்ண அலைகளைத்தான் ரீங்காரம் என்கிறோம். மனசுக்குள்ள சந்தோஷப்படுகிற மாதிரியான நகைச் சுவையும், அடி மனசு வலிக்கின்ற மாதிரியான ...

முதன் முதலில்…

Posted: 15 Aug 2015 12:50 PM PDT

- விவேக் – ரூபலா, பரத் – சுசீலா போன்ற கதாபாத்திரங்கள் முறையே ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களில் வரும் துப்பறியும் வேலையைச் செய்வார்கள். – இது போல தமிழ் நாவல்களில் துப்பறியும் கதாபாத்திரத்தை முதன் முதலில் உருவாக்கியவர் ஆரணி குப்புசாமி முதலியார்தான். இவர் பத்மாசினி ஒரு துப்பறியும் கன்னிகை- எனும் நாவலில் பத்மாசினி என்கிற பெண் கதாபாத்திரத்தை முதன்முதலில் துப்பறிய அறிமுகப் படுத்தினார். – ஆர்.பி.ஜெயச்சந்திரன்

ஒரு நிமிடக் கதை – சுதந்திரம்

Posted: 15 Aug 2015 12:48 PM PDT

- போஸ் ஓய்வு பெற்ற அரசு அலு வலர். வீட்டில் கண்டிப் புக்கு பெயர் போனவர். இன்ஜினீயரிங் படித்து முடித்த ஒரே மகன் வாசுவுக்கு தனது சிபாரிசில் வேலை வாங்கித் தர மறுத்துவிட்டார். "அவனுக்கு திறமை இருந்தால் அவனே வேலை வாங்கி கொள்ளட் டும்" என்று பிடிவாதமாக இருந்து விட்டார். வாசுவும் வேலைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்க வில்லை. தினமும் நண்பர்களோடு வெளியே கிளம்பி விடுவான். தெருவின் எல்லையில் உள்ள ஒரு சிதிலமடைந்த சுவரில் அமர்ந்து இரவு வரை அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வருவான். "தண்டச்சோறு ...

நாணயங்கள்

Posted: 15 Aug 2015 12:25 PM PDT

- இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பதுதெரியும். – இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? – ஒவ்வொரு நாணயத்திலும் தயாரிக்கப்பட்ட ஆண்டின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் சிறு குறி இருக்கும். – ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும் டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பையிலும்- நட்சித்திர வடிவம் இருந்தால் அது ஐஹதராபாத்திலும் – எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் அச்சிடப்பட்டது என்பதைனை அறியலாம். – சரி உங்கள் பையில் ...

‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல்

Posted: 15 Aug 2015 12:12 PM PDT

‛தட்கல்' முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் புதிய முறை வரும் 17-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ‛தட்கல்' முறையில் பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக்கம் போல் ‛ஆன் லைன்' மூலம் நேர்காணலுக்கு அனுமதி பெற்றுவிட்டு பின்னர் வளசரவாக்கம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள ஏதாவது ஒரு பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று ...

செருப்பாட்டம் உழைப்பவர்கள், கழட்டி விடப்படுவார்கள்..!

Posted: 15 Aug 2015 12:12 PM PDT

-- சமைக்கும் உணவுகளில் சில நேரம் வீசுகிறது நினைவுகளின் வாசனை..! - ஐஸ்வர்யா ராகவ் - ------------------------------------------- - இன்னைக்கு மட்டும் பத்து கல்யாணம்... இதுல ரெண்டு பேருக்கு மோதிரம் வேற போடணும்... இந்த மொய் வைக்கிறதுக்கும் லோன் குடுத்தாங்கன்னா தேவலை..! - ரிட்டர்டு ரவுடி - ------------------------------------------------- - செருப்பாட்டம் உழைப்பவர்கள், கழட்டி விடப்படுவார்கள்..! - செல்லி சீனிவாசன் - -------------------------------------------------- -

சீர்காழி அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

Posted: 15 Aug 2015 12:09 PM PDT

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே இளையமதுபுரம் கிராமத்தில் போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்துள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சீர்காழி மதுவிலக்கு போலீசார் சோதனையிட்ட போது இளையமதுபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (45) என்பவர் வீட்டின் பின்புறம் 200 லிட்டர் சாராயம், 10,000 காலி பாட்டில்கள், ஸ்டிக்கர்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் தயார் செய்யப்பட்ட 1500 சிறிய மது பாட்டில்கள், சிக்கின. இவற்றை பறிமுதல் செய்து செந்திலை போலீசார் கைது செய்தனர். - தினமலர்

60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 15 Aug 2015 12:09 PM PDT

50 காமிக்ஸ் ஒரே பதிவில் இலவசமாக ............. 1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. (1987 காமிக்ஸ் வரிசை -2) http://www.mediafire.com/download/92hwnf8g3z8kmab/Poonthalir+comics+1987+-2.pdf 1985 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/32u5bu441nz9890/Poonthalir+1985+comics.pdf 1984 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/gcjlybqpxn4a0dk/Poonthalir+comics+1984.pdf 1987இல் ...

கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Posted: 15 Aug 2015 12:02 PM PDT

அமிர்தசரஸ், - - சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சியின்போது, பஞ்சாப் மாநில மந்திரி பிக்ராம் சிங் மஜித்தியா இன்று கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்தியுள்ளார். குரு நானக் ஆடிட்டோரியத்தில் நடந்த சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது, அவர் கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார். அதன்பின், மஜித்தியாவுடன் சேர்ந்து துணை ஆணையர் ரவி பகத் மற்றும் அமிர்தசரஸ் காவல் ஆணையாளர் ஜதீந்தர் சிங் ஆலக் ஆகியோரும் தலைகீழாக பறந்த கொடி முன் வணக்கம் செலுத்தியுள்ளனர். அதன்பின் ...

இடமும் இருப்பும் - மனுஷ்ய புத்திரன் கவிதைகள் மின்னூல் வடிவில் .

Posted: 15 Aug 2015 10:42 AM PDT

ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள். அவை வன்முறையின் அழகியலை உக்கிரமாக வெளிப்படுத்தியபடி வாழ்வின் நகக் கணுக்களில் கூர்மையாகப் பதியும் குரூரங்களைக் கடந்து செல்லப் போராடுகின்றன. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/hgzw1uerro5pfg7/Idamum+Irupum+Manushya+Puthiran.pdf

பொய்த்தேவு - கா.ந. சுப்ரமண்யனின் நாவல் வரிசை - 4.

Posted: 15 Aug 2015 10:07 AM PDT

சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ...

அவர்கள் சென்ற பாதை - எஸ் .செந்தில்குமார் சிறுகதை டவுன்லோட் செய்ய.

Posted: 15 Aug 2015 08:00 AM PDT

எஸ் .செந்தில்குமார் - அவர்கள் சென்ற பாதை சிறுகதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/e1qxxrs9aaq64bw/Senthilkumar+Short+story%282%29.pdf

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?

Posted: 15 Aug 2015 05:29 AM PDT

இது வரை விண்டோஸ் 10 update கிடைக்க பெறாதவர்கள். பின்வரும் முறைகளின் மூலம் மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து original ISO தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். முதலில் உங்களின் தற்போதைய இயங்குதள எது அதற்கேற்ற இலவச விண்டோஸ் 10 பதிப்பு எது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து , https://www.microsoft.com/en-us/software-download/windows10 இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்   ஒரு ...

இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

Posted: 15 Aug 2015 03:29 AM PDT

- - இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சி. இந்தியா ஒரு குழுவாக செயல்படுகிறது" என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். இந்தியாவின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் பண்பு உலகமெகுங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒற்றுமை ஓங்கி வளர்ந்துள்ளது. இந்திய தேசத்தில் ...

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Posted: 15 Aug 2015 03:23 AM PDT

- - நாட்டின் 69-வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே அரசின் லட்சியம் அந்த லட்சியத்துக்காகவே தமிழக அரசு செயல்படுகிறது" என்றார். அவரது முழு உரை: இந்திய நாட்டின் விடுதலைக்காக உரிமைக் குரல் எழுப்பி, நாளெல்லாம் சிறை கண்டு, அடிபட்டு, மிதிபட்டு, நாடி நரம்புகள் வலுவிழந்து, மாண்டு போன பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான சுதந்திரத் தியாகிகள்; தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து முத்தமிட்ட ...

நாட்டு நடப்பு - கார்ட்டூன்

Posted: 15 Aug 2015 02:34 AM PDT

இஸ்ரோ திட்ட இயக்குநருக்கு அப்துல்கலாம் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்

Posted: 15 Aug 2015 02:28 AM PDT

- முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து அப்துல்கலாம் விருதினை பெற்றுக் கொள்ளும் இஸ்ரோ திட்ட இயக்குநர் என்.வளர்மதி. -- - கல்பனா சாவ்லா விருதி பெறும் ஜோதிமணி -------------- - இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு இவ்வாண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட டாக்டர் அப்துல்கலாம் விருதினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நாட்டின் 69-வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்ட ...

திமுக-வின் போராட்டங்கள் கேளிக்கூத்தாகியது…

Posted: 15 Aug 2015 01:03 AM PDT

- திமுக கட்சி கடந்த 10ஆம் தேதி மதுவிலகிற்காக நடத்திய போராட்டம் மிகச் பெரும் புரட்சியைப் ஏற்படுத்தியது என்று அக்கட்சியின் தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். மதுவிற்காக திமுக தலைமையில் தமிழகத்தில் அரங்கேற்றிய போராட்டங்கள் முடிந்தவுடன் ஹாயாக தங்களின் கட்சிக் கொடியுடன் மதுக்கடைக்கு சென்று மது அருந்துகிறார்கள் திமுக தொண்டார்கள். ஆம் மிகச் பெரும் புரட்சித்தானே! இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அவர்களின் சுயலாபத்திற்காக போராட்டங்களை அரங்கேற்றி விட்டு ...

மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்

Posted: 15 Aug 2015 01:01 AM PDT

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு தலைமையாசிரியர் ஒருவரும், மற்றொரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களும் பணியில் உள்ள கொடுமையும் நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டையில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 85 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 37 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள், 7 நடு நிலை பள்ளிகளும், 41 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளும் உள்ளன. ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் ...

சுதந்திர இந்தியாவில் விவசாயிகள்

Posted: 14 Aug 2015 11:28 PM PDT

முன்பெல்லாம் விவசாயி
விதைகளை வியர்வையில்
விதைத்தான்!!

இன்றோ விதையை
கண்ணீரில்
விதைக்கின்றான்!!


விதைகளோடு சேர்த்து
விவசாயியையும்
மண்ணில் புதைத்து விட்டு
எங்கே போகின்றோம்!!

சுதந்திரம் பெற்றும்
வறுமையின் அடிமைகளாக
இருக்கின்றோம்!!

வயிற்றுகே வழி
இல்லாத போது

எங்கே வல்லரசு ஆவது??

வறுமையில்லா வல்லரசு இவ்வரசாக முரசறைவோம்….

Posted: 14 Aug 2015 10:51 PM PDT

- வெண்பனி கூட்டம் இயற்கையின் நாட்டம் அருமையான காற்று அளவில்லா நீர் ஊற்று பலவகை மக்கள் அவர்களைப் புரந்த மாக்கள் உலகளாவிய புகழ் பல்தொழில் தேர்ச்சி இவ்வனைத்து வளமும் குன்றா நாடு நமது பாரதம் புகழும் பெருமையும் வளமும் கொண்டு வறுமையும் எளிமையும் ஏழ்மையும் இணையாக கொண்டு விளங்கும் பாரதம் என்று கூறுவதே உண்மை உள்ளன உளபோல் இல்லாது உள்ளன எல்லாம் வல்லன வாவது முன்னேற்றம். தாயின் பிள்ளைகள் பலவெனினும் காட்டும் அன்பும் உரிமையும் ஒன்றே அதேபோல் பாரத மக்கள் பலரெனினும் முன்னேற்றம் இவர்களுக்கு ...

வாய்ப்பின்றி வாடும் இனியா

Posted: 14 Aug 2015 07:36 PM PDT

- - மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து குமரியானவுடன் நாயகியாக மாறி அசத்தியவர் இனியா. தமிழில் இவர் நடித்த 'வாகை சூடவா' படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். எனினும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவே வியந்து பாராட்டுகிற அளவுக்கு அந்தப் படத்தில் நல்ல நடிப்பை வெளிக் காட்டியிருந்தார் இனியா. தொடர்ந்து 'மெளனகுரு', சென்னையில் ஒரு மழைக்காலம் என வெற்றிப் படங்களில் நடித்தவருக்கு மார்க்கெட் சரிய ஆரம்பித்தது 'மாசாணி' படத்தில்தான். அம்மாவை மேலாளராக மாற்றிய ...

பெரிய மீசையுடன் வலம் வரும் விக்ரம்

Posted: 14 Aug 2015 07:34 PM PDT

- விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள புதிய படம் 'பத்து எண்றதுக்குள்ள'. இப்படத்தில் விக்ரம் டாக்சி ஓட்டுநராக நடித்துள்ளார். - இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். 'கோலி சோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். - இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், சமந்தா, இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு விக்ரம், வீரப்பன் மீசையுடன் கலந்து கொண்டார். - -----------------------

எம்எல்ஏ தலைமையில் ‘பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டம்’

Posted: 14 Aug 2015 07:31 PM PDT

மேட்டூர்: பொதுமக்களிடம் பிச்சை எடுத்து தாசில்தாருக்கு லஞ்சம் கொடுக்கும் நூதனப் போராட்டம் மேட்டூர் தேமுதிக எம்.எல்.ஏ., பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கோரி தாசில்தாரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. - இதையடுத்து லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் எழுப்பினர். இந்நிலையில் அதிகாரிகளின் போக்கை கண்டித்து, பொதுமக்கள் 'பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் ...

‘ரோபோ’ தாக்கியதில் சக ஊழியர் மரணம்

Posted: 14 Aug 2015 07:28 PM PDT

இந்தியாவின் ஹரியானா மாநிலத் தில் ரோபோ எனப்படும் எந்திர மனிதன் தாக்கி ஊழியர் ஒருவர் மாண்டார். இம்மாநிலத்தின் குர்காவோன் நகரில் உள்ள உலோகத் தொழிற்சாலையில் உலோகங்களை உருக் கவும் பற்றவைக்கவும் எந்திர மனிதர்கள் பயன்படுத்தப் படுகின்றன. எந்திர மனிதனில் இருந்த கூர்மையான பற்றவைப்புக் கம்பிகள் ராம்ஜியின் அடிவயிற்றில் குத்தின. பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த இளையர் மாண்டுவிட்டார். - --------------------------- தமிழ்முரசு (சிங்கப்பூர்)

அடிக்கல் நாட்டிய சிறையிலேயே அடைக்கப்பட்டார் கோவா முன்னாள் அமைச்சர்

Posted: 14 Aug 2015 07:08 PM PDT

- அமெரிக்க நிறுவனத்தினடம் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட கோவா மாநில பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சர் சர்ச்சில் அலெமோ, அவர் அடிக்கல் நாட்டிய சிறையிலேயே வியாழக்கிழமை அடைக்கப்பட்டார். - கோவாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, நீர்வள மேம்பாடு - கழிவுநீர் மேலாண்மை தொடர்பான பணிகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் பெர்கர் என்ற நிறுவனத்துடன் அந்த மாநில அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. - அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக, லூயிஸ் பெர்கர் நிறுவனத்திடம் இருந்து அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் ...

சுதந்திர தின சிறப்பு கவிதை: யாசகர்கள்....

Posted: 14 Aug 2015 06:54 PM PDT

-- வறுமை, அம்மா... தாயே.... என்ற அடுக்குமொழிகளின் ஆசிரியன்..... இந்தியாவை இன்னும் ஏழையாக காண்பிக்கும் ஒரு பிரகஸ்பதி...... ஆதி அந்தமில்லாது அடக்குமுறைக்குட்படாத ஓர் அவதிக்குழு... நம் இந்திய தேசத் திக்குகளின் திருஷ்டிபொட்டு .... வானில் ஒரு நிலாவென்றால் வையத்தில் உள்ளது பலரிடமும், பிச்சைத்தட்டு வேகமாய் முன்னேறும் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்ட வேகத்தடை..... வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் அம்மக்களின் வயிற்றிலும் வறுமைக்கோடு.... நம் நாட்டின் பேருந்து ...

அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே

Posted: 14 Aug 2015 06:18 PM PDT

- அடிமைநாட்டுக்கும், ஜனநாயக நாட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை தியாகிகளின் வாழ்க்கை வரலாறுகளில் மட்டுமே அறிய முடியும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகள் பலரை மறந்து விட்டோம். அவர்களை மறந்து விட்டால் அனுபவிக்கும் சுதந்திரத்தின் பலனில் அர்த்தம் இருக்காது. அப்படி ஒரு அறியப்படாத தலைவர் தான் தோண்டோ கேசவ் கார்வே. இவர் பெண் உரிமைக்காக போராடியவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படுபவர். மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள முருட் எனும் கிராமத்தில் 1858, ஏப்.18ல் பிறந்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™