Tamil News | Online Tamil News |
- கூட்டணிக்கு முட்டுக்கட்டை போடும் மார்க்சிஸ்ட்: கடுப்பில் தி.மு.க.,
- 'துறை தோறும் ஒளி வெள்ளம்'
- 'ஒரே ரேங்க்; ஒரே பென்ஷன்: 'மாஜி' ராணுவத்தினர் அதிர்ச்சி
- நாகா மக்களுக்கு இறையாண்மை வேண்டும்: கிளர்ச்சி அமைப்பு மீண்டும் போர்க்கொடி
- எதிர்க்கட்சி தலைவர்களின் மதுவிலக்கு பட்டாசு 'புஸ்': ஜெ.,யின் சுதந்திர தின உரை ஏமாற்றம் தருவதாக புலம்பல்
- என்னை விட்டுருங்க ப்ளீஸ்: ராகுல் கெஞ்சல்
- அம்பானியை விட திருப்பதி ஏழுமலையான் சொத்து அதிகம்: இந்திய கோவில்களில் 22 ஆயிரம் டன் தங்கம் கையிருப்பு
- மதவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
- எங்கும், எதிலும் கெஜ்ரிவால்: டில்லி பா.ஜ., கடும் கண்டனம்
- மோடி திடீர் உண்ணாவிரதம்?
- எம்.பி.,க்களை நிற்க வைத்த அதிகாரிகள்!
- பாக்., படை அத்துமீறல் இந்தியர்கள் 5 பேர் பலி
| கூட்டணிக்கு முட்டுக்கட்டை போடும் மார்க்சிஸ்ட்: கடுப்பில் தி.மு.க., Posted: அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை இணைத்து, தி.மு.க., தலைமை யில் கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கிறது. 'கூட்டணிக் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு அளிக்கும் முறையை அமல்படுத்தினால் தான் கூட்டணி' என்ற, சிறு கட்சிகளின் கோரிக்கையை, ஏற்றுக் கொண்டாலும், அ.தி.மு.க., - தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் வேண்டுமானால், இக்கூட்டணியை அமைக்கலாம் என்பது, மார்க்சிஸ்ட் கருத்தாக உள்ளது. இதற்கிடையே, தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., ... |
| Posted: சென்னை:''நான்கு ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார். சுதந்திர தின விழாவை யொட்டி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியேற்றி வைத்து பேசியதாவது:சுதந்திரத்தின் இலக்கணம் என்ன என்பது, ஒவ்வொருவரின் மனப்பாங்கை பொறுத்து அமைகிறது. எனினும், சுதந்திரத்தின் அடித்தளமாக, ஆணிவேராக, அச்சாணியாக விளங்குவது, பொருளாதார சுதந்திரம். அனைவருக்கும் தேவையான வாழ்வாதாரம் ... |
| 'ஒரே ரேங்க்; ஒரே பென்ஷன்: 'மாஜி' ராணுவத்தினர் அதிர்ச்சி Posted: புதுடில்லி:பிரதமரின் சுதந்திர தின உரையில், முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான, 'ஒரே ரேங்க்; ஒரே பென்ஷன்' குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் கோபமடைந்துள்ள அவர்கள், மோடியை பொய்யர் என வசைபாடியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, டில்லியில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினர், போராட்ட பந்தல் அருகே பெரிய, 'டிவி'யை வைத்து, பிரதமரின் உரையை உன்னிப்பாக கவனித்து வந்தனர். 'முன்னாள் ராணுவத்தினரின், ஒரே ரேங்க்; ஒரே பென்ஷன் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்' என்று மட்டுமே ... |
| நாகா மக்களுக்கு இறையாண்மை வேண்டும்: கிளர்ச்சி அமைப்பு மீண்டும் போர்க்கொடி Posted: கோஹிமா:வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், போராட்டத்தை கைவிட்டு, மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள, என்.எஸ்.சி.என்., (ஐ.எம்.,) இயக்கம், இறையாண்மை, ஒருமைப்பாடு கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. முய்வா பங்கேற்பு:நாகாலாந்து தலைநகர் கோஹிமா அருகே, நாகாலாந்து தேசியவாத, சமத்துவ கவுன்சில் எனப்படும், என்.எஸ்.சி.என்., (ஐ.எம்.,) கிளர்ச்சி இயக்க தலைமையகம் உள்ளது. இங்கு, நேற்று நடந்த, 69வது நாகா சுதந்திர தின விழாவில், என்.எஸ்.சி.என்., (ஐ.எம்.,) பொதுச் செயலர் முய்வா கலந்து கொண்டு பேசினார். |
| Posted: சுதந்திர தினமான நேற்று, சென்னை கோட்டையில், தேசியக் கொடிஏற்றி வைத்துப் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, மதுவிலக்கு தொடர்பாக, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து, பெரிதாக வெடிக்கும் என்ற நினைப்பில், எதிர்க்கட்சித் தலைவர்கள், 'கொளுத்திப் போட்ட' மதுவிலக்கு பட்டாசு, 'புஸ்'சென்றாகி விட்டது. முதல்வரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக, இப்போது, அந்தத் தலைவர்கள் புலம்பத் துவங்கி உள்ளனர்.கடந்த ஒரு மாதமாக, மதுவுக்கு எதிராக, பலவிதங்களில் போராட்டம் நடத்திய கட்சித் தலைவர்கள், அரசின் நிலைப்பாடு குறித்து அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்து, நேற்று ... |
| என்னை விட்டுருங்க ப்ளீஸ்: ராகுல் கெஞ்சல் Posted: புதுடில்லி:டில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், 'பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை குறித்து உங்கள் கருத்து என்ன?' என, பத்திரிகையாளர்கள் கேட்டனர்.அதற்கு, ''இன்று சுதந்திர நாள்; அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க இந்த நாள் ஏற்றதன்று; நாளை பதிலளிக்கிறேன்,'' என்றார். அதுபோலவே, ராகுலின் தாயும், காங்கிரஸ் தலைவருமான சோனியாவும் கூறினார்.மூன்று நாட்களுக்கு முன் முடிவடைந்த, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் கடும் அமளியில் ஈடுபட்டு, காரசாரமாக கருத்துகளை ... |
| அம்பானியை விட திருப்பதி ஏழுமலையான் சொத்து அதிகம்: இந்திய கோவில்களில் 22 ஆயிரம் டன் தங்கம் கையிருப்பு Posted: ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள, ஏழுமலையான் கோவிலின் மொத்த சொத்து மதிப்பு, நாட்டின் நம்பர் - 1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட அதிகம் என தெரியவந்துள்ளது. தவிர, அமெரிக்காவின் மொத்த தங்கக் கையிருப்பை விட, நம் நாட்டின் கோவில்களில் உள்ள, மொத்த தங்கக் கையிருப்பின் அளவு, பலமடங்கு அதிகம்.ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளியால் ஆன ஆபரணங்கள், பணம் ... |
| மதவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி Posted: புதுடில்லி: ''மதவாதம், ஜாதிவாதம் போன்றவை, கொடிய விஷம் போன்றவை. மக்களை பிரித்தாலும் சதிக்கு, இந்தியாவில் இடம் இல்லை. இந்தியாவின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, தன், சுதந்திர தின விழா உரையில் குறிப்பிட்டார். நாட்டின் சுதந்திர தின விழா, நாடு முழுவதும், நேற்று கோலாகலமாக நடந்தது. டில்லியில், நேற்று காலை, மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று, பிரதமர் நரேந்திர மோடி, மலர் அஞ்சலி செலுத்தினார். பின், செங்கோட்டையில் தேசியகொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவரின் உரை:வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ... |
| எங்கும், எதிலும் கெஜ்ரிவால்: டில்லி பா.ஜ., கடும் கண்டனம் Posted: புதுடில்லி: சுதந்திர தினமான நேற்று, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை, பள்ளி குழந்தைகள், வண்ண அட்டைகளை வைத்து உருவாக்கினர்; இப்புகைப்படம், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துடன் பரிமாறப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி, டில்லி மாநில பள்ளிகளில் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்தன. ஒரு பள்ளியில், மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை, வண்ண அட்டைகளை வைத்து, பள்ளி குழந்தைகள் உருவாக்கினர். இப்புகைப்படம், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுடன் பரவியது. இதுகுறித்து, டில்லி மாநில, பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், 'பள்ளி குழந்தைகள், ... |
| Posted: புதுடில்லி: பார்லிமென்டை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் சமாதி, டில்லியில் ராஜ்காட் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.மகாத்மா காந்தியின் சமாதி, டில்லியில், 'ராஜ்காட்' பகுதியில் உள்ளது. கடந்த வாரம், இந்த இடம் பரபரப்பானது. எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர், 'ராஜ்காட்டில்' வந்து சோதனை நடத்தினர். இந்த பாதுகாப்பு அமைப்பு, படுவேகமாக செயல்படக்கூடிய வீரர்களைக் கொண்டுள்ளது. எந்த நேரத்திலும், எப்படிப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதல் வந்தாலும், அதை முறியடிக்கக் கூடிய வகையில், இந்த ... |
| எம்.பி.,க்களை நிற்க வைத்த அதிகாரிகள்! Posted: சென்னை: சுதந்திர தின விழா, ஏற்பாடுகளில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்தனர். இதனால், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உட்கார இடமின்றி தவித்தனர்.சென்னை கோட்டையில் நேற்று நடந்த, சுதந்திர தின விழாவில், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உட்காருவதற்கு, தனித்தனியாக இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், போதுமான அளவுக்கு இருக்கைகள் இல்லை. கடமைக்கு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொஞ்சம் இருக்கைகளைப் போட்டு இருந்தனர். விழாவுக்கு வந்த எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, அந்தப் பகுதிக்கு அனுப்பினர். ஆனால், அங்கே இருக்கை இல்லாததால், அவர்கள் ... |
| பாக்., படை அத்துமீறல் இந்தியர்கள் 5 பேர் பலி Posted: மீரட்: ஜம்மு - காஷ்மீரில், பாக்., படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஐந்து பேர் பலியாயினர்.இந்தியா - பாக்., எல்லையில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில், பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய சுதந்திர தினமான நேற்று, பாக்., பிரதமர் நவாஷ் ஷெரீப், இந்திய பிரதம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடையிலான பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், பாக்., படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில், பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஐந்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 16,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |