Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு

Posted: 13 Aug 2015 12:50 PM PDT

போராட்டம் அன்புக்காக போராடலாம் அன்பே போராட்டம் ஆகாத வரை மற்றவர் மீது செல்லுத்தியது அதீத அன்பாயினும் மரியாதையுடன் விலகிவிடுவது சிறந்தது அவர் தேவை தெரியும்பொழுது ..... உலக தேவைகளை என்றோ கடந்து விட்டிருந்தாலும் உணர்வுகளை கடப்பது மட்டும் ஏனோ இன்னும் புதிராய் உன் பிரிவும் கற்றுதந்திடுமோ ? புரிந்தும் பிரிந்தேன் உன் வெறுப்பு அறிந்து - நீயோ பிரிந்தும் புரிந்துக் கொள்ளவில்லை கனலென வீசிய வார்த்தைகளில் இதயம் வெந்து விடாமல் இருப்பது அதிசயம் தான் அன்பான இதயத்தை ...

ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி!

Posted: 13 Aug 2015 12:41 PM PDT

நிலைத்த செல்வங்களை பெறவும், பெற்ற செல்வங்கள் நிலைக்கவும், உங்கள் வீடு வரும் மகாலட்சுமியை மனதாரப் பணிந்து பாக்யங்களைப் பெற சொல்லவேண்டிய துதி ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி இதோ...! ஆதிலக்ஷ்மி நமஸ்தே அஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணி யசோதேஹி தனம் தேஹி ஸர்வ காமாம் ச தேஹிமே பரப்ரம்ம சொரூபமான ஆதிலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம். புகழ், தனம் ஆகியவற்றைக் கொடு. என் நியாயமான தேவைகளை நிறைவேற்று. ஸந்தானலக்ஷ்மி நமஸ்தே அஸ்து புத்ர பௌத்ர ப்ரதாயினி புத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே பிள்ளைகள், பேரன்களை ...

இவ்ளோதாங்க வாழ்க்கை...!!

Posted: 13 Aug 2015 12:34 PM PDT


-
பசிக்கு பன் தின்னா அவன் ஏழை!
பகு மானத்துக்கு பர்கங்கிற பேர்ல
பன் தின்னா அவன் பணக்காரன்!
-
--இவ்ளோதாங்க வாழ்க்கை
-
குமரரேஷ் சுப்ரமணியம்

========================
தொடரரும்...

இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)

Posted: 13 Aug 2015 12:03 PM PDT

முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற பட்டணத்தை கத்தலைராஜா என்ற அரசன் ஆண்டுவந்தான். இவனுக்கு குழந்தைகள் இல்லை. பல புண்ணிய தலங்களுக்கு சென்று விரதம் மேற்கொண்டான். புண்ணிய நதிகளில் நீராடினான். அதன் பலனாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அழகேசன் என பெயரிட்டனர். கத்தலைராஜா ஒரு முறை வேட்டைக்கு சென்றான். தாகத்தின் மிகுதியால் ஒரு சுனையைத் தேடிச்சென்றான். தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கவும் எதிரே ஒரு காளி கோயில் இருந்தது தெரிந்தது. காளி மாதாவை தரிசித்தான்.அன்னையிடமிருந்து ஒரு வாக்கு ...

ஆடி அமாவாசை ! 14-8-2015

Posted: 13 Aug 2015 12:01 PM PDT

ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், மாதம் பட்சம், வாரம், நாள், நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும் போதோ, தனித்து வரும்போதோ ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அயனம் என்பது வருடத்தின் இரண்டு பகுதிகள். அதாவது, சூரியனின் பயணத்தை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்ட கால அளவு. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்தராயணம். சூரியன் உதிப்பது கிழக்கு பகுதி என்றாலும், சற்று வடக்கு பக்கம் நகர்ந்த நிலையில் சூர்யோதயம் நடக்கும். ஆடி மாதம் முதல் மார்கழி ...

கோணல் உலகம்

Posted: 13 Aug 2015 11:51 AM PDT

ஆனை வந்தது முதலில்…

Posted: 13 Aug 2015 11:51 AM PDT

-- ஆனை வந்தது முதலில் அப்புறம் கலைந்து போனது குதிரை மீதில் ஒருவன் கொஞ்ச நேரம் போனான் பாட்டன்  புரண்டு மல்லாந்தான் பாளை வெடிச்சு மரமாச்சு அலையாய் சுருண்டது கொஞ்சம் மணலாய் இறைந்தது கொஞ்சம் கணத்தில் மாறிடும் மேகம் உண்மையில் எது உன் ரூபம்? — - - — மாலன்

ஒய்யாரமாய் படுத்திருக்கும் பூனை..!

Posted: 13 Aug 2015 11:48 AM PDT



--

எங்கிருந்து வருகிறது இந்த நதி?

Posted: 13 Aug 2015 11:47 AM PDT

- எங்கிருந்து வருகிறது இந்த நதி? மலைகளின் மெளனம் உடைந்தா? முகில்களின் ஆடை கிழிந்தா? வ்னங்கள் பேசிய இரகசியங்கள் கசிந்தா? – என்னிலிருந்து என் அந்தரங்களின் ஊற்றுக் கண் திறந்து என் மார்புகள் புல்லரித்து என் இரத்த குழாய்களில் புல்லும் பூவும் மணந்து என்னை முழுக்காட்டி என்னையே கரைத்துக் கொண்டு அங்கிருந்து வருகிறது இந்த நதி – - –  சிற்பி

இல்லாதவன்..

Posted: 13 Aug 2015 11:43 AM PDT

- இலக்கு நெருங்கியதென நினைத்த நொடியில் ஒரு சம்மட்டி அடி பிடரியில் உற்றுப்பார் இலக்கு எங்கே என்றது காலம் கண்ணுக்கெட்டிய தொலைவில் எட்டிப்பிடிக்க முடியா தூரத்தில் எக்காளமிட்டது இலக்கு இப்படியாவது மீண்டுமொரு முறையில் மற்றுமொரு முறை முன்னெப்போதும் இல்லா சவால்கள் புதிய முட்பாதைகள் ஓடிக்கொண்டே இருப்பதன் தாகம் இருப்பதாய் நம்பப்படும் திறமை அதிகமாய் சோதிக்கப்படுகிறது சோதிக்கப்பட இருக்கிறது கடைசி நாளில் கடைவழிதான் என்றபோதினும் கடைசி வரைக்கும் இந்தவழி மட்டுமே ஓடத்துணிந்து விட்டேன் இலக்கை ...

விண்ணரசி மாரியம்மன்

Posted: 13 Aug 2015 11:36 AM PDT

ஆடிக்கடைவெள்ளி தீமிதி உற்சவம் நாகை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒருங்கிணைந்து கொண்டாடும் மிகப் பெரிய விழாவென மாதானம் முத்துமாரியம்மன் ஆலயத் தீமிதித் திருவிழாவைச் சொல்லலாம். சீர்காழிக்கு அருகேயுள்ள மிகச் சிறிய கிராமமான மாதானத்தில் விண்ணரசி மாரியம்மன் குடியிருக்கிறார். ஆடி மாதம் கடைவெள்ளியில் நடக்கும் தீமிதி உற்சவத்துக்காக அதிலிருந்து பத்து நாட்களுக்கு முன்னதாக வரும் புதன் கிழமையில் காப்பு கப்பட்டப்பட்டு உற்சவம் தொடங்குகிறது, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்மன் வீதியுலாவோடு ...

சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்!

Posted: 13 Aug 2015 11:32 AM PDT

அருணகிரிநாதரின் நினைவைப் போற்றும் பக்திபூர்வமான நிகழ்ச்சியை சித்ரா மூர்த்தி கடந்த வாரம் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடத்தினார். திருப்புகழ் பாடல்களை சிலர் பாடுவார்கள். சிலர் அந்தப் பாடல்களில் இருக்கும் கருத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் சித்ரா மூர்த்தியின் நிகழ்ச்சியில் இசையுடன் கூடிய பாடலும் அதற்கான உரையும் சேர்ந்தே வெளிப்பட்டன. இதற்குக் காரணம் இவர், திருப்புகழ் அன்பர்கள் அமைப்பை டெல்லியில் நிறுவிய ஏ.எஸ். ராகவனிடம் இசையுடனும் சந்தத்துடனும் திருப்புகழ் பாடக் கற்றதும், பாடல்களுக்கான அர்த்தத்தை ...

முட்டை பப்ஸ்ல முழு முட்டைய வைக்க போராட்டம்…

Posted: 13 Aug 2015 11:25 AM PDT

- ''எங்கடா போற?'' ''மது குடிக்க!'' ''சரி, போ..!'' ''எங்கடா போற?'' ''மது தடுக்க!'' ''வந்து ஜீப்புல ஏறு!'' # தமிழ்நாடு – ——————————————— – 'உயர் போலீஸ் பாதுகாப்பு மற்றும் நவீன பார் வசதி உடைய டாஸ்மாக்'னு விளம்பரம் எதிர்பார்க்கலாம் விரைவில்… – ———————————————- – டாஸ்மாக்குக்கு பாதிப் பேர், செல்போன் டவர்க்கு மீதிப் பேர் பாதுகாப்புக்கு போயிட்டா, அப்ப ஸ்டேஷன்ல யார்தான் இருப்பாங்க? – —————————————————- – பத்து கடைக்கு ஒரு கடை டாஸ்மாக் என்றானபின்தான் நான்கு கடைக்கு ஒரு அடகுக்கடை ...

கொடியின் கதை!

Posted: 13 Aug 2015 11:23 AM PDT

- பார்சி பெண்ணான காமா என்பவரும், இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஐரோப்பாவில் பிரசாரம் செய்து வந்த சில புரட்சிக்காரர்களும் 1907ம் ஆண்டில் நம் நாட்டுக்காக ஒரு கொடியைத் தயாரித்து 'இந்தியாவின் சுதந்திரக்கொடி பறக்கிறது. இங்குள்ள மக்கள் எல்லோரும் எழுந்து நின்று அஞ்சலி செய்ய வேண்டும்' என்று முழங்கினார்கள். – மூவர்ணப் பட்டையான இந்தக் கொடி சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்கள் அடங்கியது. சிவப்பு நிறத்தில் ஒரு தாமரைப் பூவும் ஏழு நட்சத்திரங்களும் இருந்தன. மஞ்சள் பட்டையில் 'வந்தே மாதரம்' என்று நீல ...

நுனிப் புல் திண்போமா ?

Posted: 13 Aug 2015 11:10 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Posted: 13 Aug 2015 11:07 AM PDT

அட்டுழியம்,அனாச்சாரம் தலைநிமிர்ந்து நியாயம்,நீதி,தர்மம், தலை குனிந்து உனக்கே...,நீயே! குழி தோண்டிக் கொண்ட தொடர் கதையே.......!!!!மீதம்...., நீ பெற்ற அறிவோ? நீரில் வரைந்த ஒவியம் என் மூதாதையின் அறிவோ? கல்லில் வெட்டிய காவியம். அன்று,என் மூதாதை பெற்ற அறிவு உண்மை நேர்மை சாத்தியமென இட்டுச் சென்று வாழ்வே இன்ப பூங்காவனம். இன்று, உன் அறிவு பொய் துரோகம் அசத்தியமென வாழ்வே துயர நந்த வனம். அடுக்கு மாளிகைகளை கட்டுகிறாய்; தேவாமீர்தம்,முக்கனிகளை சுவைக்கிறாய்; வயிற்றுக்காக கையேந்திய ...

சும்மா

Posted: 13 Aug 2015 11:05 AM PDT

வாசலில் நிழலாடியது. யாரென்று பார்த்தேன். பக்கத்துத்தெரு பத்மநாபன் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டு இருந்தார். " வாங்க! பத்மநாபன்! என்ன இவ்வளவு தூரம்?" " ஒண்ணுமில்ல சார்! சும்மா உங்கள பாத்துட்டுப் போலாம்ணு வந்தேன் " " அதென்ன கையில பை ?" " பெரியவங்களைப் பார்க்கப் போகும்போது சும்மா கைய வீசிக்கிட்டுப் போகக்கூடாது. ஏதாவது பழங்கள் வாங்கிக்கிட்டுப் போ! " ன்னு அப்பா சொன்னார்.அதான் ஆப்பிள் வாங்கியாந்தேன்." என்று சொல்லிவிட்டுப் பையிலிருந்த பழங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.மொத்தம் 13 பழங்கள் ...

அரு உருவ கொளஞ்சி குமரன்!

Posted: 13 Aug 2015 11:00 AM PDT

- - கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மணவாள நல்லூரில் முருகப்பெருமான் பிற திருக்கோயில்களிலிருந்து மாறுபட்டு உருவமின்றி அரூபமாகத் திருமேனி கொண்டு "கொளஞ்சியப்பர்' என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். – நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் முருகன் விரும்பி உரையும் இடங்களைப் பட்டியலிட்டு கூறுமிடத்து தன் அடையாளமாக நடப்பட்ட கல் நிற்கும் இடத்திலும் முருகன் வீற்றிருப்பான் என்கின்றார். இவ்வாறு ஒரு கல்லில் ஆவேசித்து (ஆபிர்வித்து) நிற்கும் முருகனின் தொன்மையான நிலைக்கு கந்துடை ...

உலக உறுப்பு தான தினம்

Posted: 13 Aug 2015 10:59 AM PDT

உலக உறுப்பு தான தினம்  இன்று உலக உறுப்பு தான தினமாக கொண்டாடப்படுகிறது . எந்தெந்த உறுப்புகளை தானமாக கொடுக்க முடியும் . 1.கரு விழிகள்  -- இறந்தவுடன்  2. சிறு நீரகம் ---உயிருடன் இருக்கும் போதே , ஒரு சிறுநீரகத்தை கொடுக்கலாம்  3.கல்லீரல்  --மூளைச்சாவு ஏற்படும் நேரங்களில்  4. இதயம் --மூளைச்சாவு ஏற்படும் நேரங்களில் . நாமும் , நம்முடைய சம்மதத்தை , எழுத்துப் பூர்வமாக கொடுத்தால் , இறந்தும் கொடுத்தான் என்ற பெயருடன் , நம்முடைய உறுப்புகள் மூலம் , தேவைபட்டோர் , வாழ முடியும் ,பார்க்க முடியும்.  நாமும் ...

காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!!

Posted: 13 Aug 2015 10:57 AM PDT

- ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது வெறும் மாயை என்பது புரியும். - ஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை. காதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை ஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே சொல்லத் தோன்றும். - இவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு . - மொத்த‌த்தில் காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை. இத‌னால் யாருக்கும் இலாப‌முமில்லை. - --------------------------------------- காதல் குறித்து ஒரு பெண்ணின் பார்வை ...

இதய சிறை

Posted: 13 Aug 2015 10:49 AM PDT

கூண்டுக்குள்ளே இரண்டு காதல் குருவிகள் கூடி குளவுச்சாம்! கூட்டமாய் பறந்த குருவிகளை பார்த்து பொறாமை கொண்டுச்சாம்! ஆண் குருவி கேட்டுச்சாம்? காதல் சிறைக்குள் அகப்பட்டு கொண்டோமே! காதல் சிறைக்குள்ளிருந்து எங்களை கட்டவிழ்த்து விடுவீர்களா?? என சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்த குருவிகளை பார்த்து கேட்டதாம்! காதல் எனும் அன்பு சிறைக்குள்ளிருந்து உங்களால் மீளமுடியாது!! அதற்குள்ளிருந்து நான் உன்னை விடுவித்தாலும் நீ மீண்டும் அந்த சிறைக்குள் அகப்பட்டு கொள்வாய்!!! என்று ...

சிரிக்க ................சிந்திக்க :)

Posted: 13 Aug 2015 10:48 AM PDT

கோவில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம். காட்சிக்கு எளியவனான கடவுளை வசூல் ராஜாவாக மாற்றக் கூடாது என்றுதானே? *** உத்தரகாண்ட்டில் குள்ளமானவர்களுக்கு மாதம் ரூ. 800 அரசு நிதி உதவி. குழந்தைகளுக்கு காம்ப்ளான் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமா? **** தென்னாப்பிரிக்காவில் முள்ளம் பன்றியைத் தின்ற மலைப் பாம்பு மரணம். பாம்பின் உள்ளே போன இரை சிலிர்த்து விஸ்வரூபம் எடுத்திருக்கும் *** அமெரிக்காவில், தொழில் நுட்பக் கோளாறுகளைச் சரி செய்ய மந்திரவாதி உதவி. இயந்திரங்கள் ...

குடிகாரர்களுக்கு மரியாதை ‘ரெடி’.

Posted: 13 Aug 2015 10:44 AM PDT

- அருண் -டக்ட் - செல்போன் டவருக்கு போலீஸ் பாதுகாப்பு # ஹலோ, ஐ.ஜி சாரா? சார் என் செல்போன்ல 3ஜி சிக்னல் விட்டு விட்டு கிடைக்குது, கொஞ்சம் டவர்ல ஏறி என்னன்னு பாருங்களேன்! – —————————————————- – இனியவன்-வாய்ஸ் - குடிமக்களுக்கு லத்தி 'அடி'; குடிகாரர்களுக்கு மரியாதை 'ரெடி'. நாடு 'வல்லரசு' போ(பா)தைல போகுது போல… – ————————————————- – பூபதி முருகேஷ் - போலீஸ் பந்தோபஸ்தோட குடிப்பதெல்லாம் ஒரு கெத்துதான். # ''ஏ.சி. சார், அந்த ஏசிய போடுங்க… இன்ஸ்பெக்டர் சார், அந்த சிப்ஸ எடுங்க!'' – ————————————————– – மர்மயோகி - இன்னும் ...

"ஆழ்வார்கள் -ஒரு எளிய அறிமுகம் ""என்ற புத்தகம் தேவை !

Posted: 13 Aug 2015 10:40 AM PDT

tnkesaven wrote:எனக்கு சுஜாதாவின் ""ஆழ்வார்கள் -ஒரு எளிய அறிமுகம் ""என்ற புத்தகம் தேவை .பிடிஎப் வடிவில் கிடைக்குமா .டௌன்லோடு செய்வதில் எனக்கு விருப்பம் illai மேற்கோள் செய்த பதிவு: 1157245 இதை மற்றொரு திரி இல் அவர் கேட்டிர்ந்தார், இங்கு தனியாய் போட்டால் பலருக்கும் தெரிய வரும் என்று தனி பதிவாக போடுகிறேன்..........புத்தகம் கிடைத்தால் அவருக்கு உதவுங்கள் நண்பர்களே ! அன்புடன், கிருஷ்ணாம்மா

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Posted: 13 Aug 2015 10:38 AM PDT

நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ...

சர்மாவின் உயில் - கா.ந. சுப்ரமண்யனின் நாவல் வரிசை -2.

Posted: 13 Aug 2015 10:32 AM PDT

கா.ந. சுப்ரமண்யம் - சர்மாவின் உயில் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/ulnf7sloy31qb26/Sarmavin+Uyil+KA.NA.SU.pdf

குதிரைக்காரன் குறிப்புகள் - லக்ஷ்மி சரவணகுமார் சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 13 Aug 2015 10:31 AM PDT

லக்ஷ்மி சரவணகுமார் - குதிரைக்காரன் குறிப்புகள் சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும். விகடன் நட்சத்திர எழுத்தாளர்கள் சிறுகதை டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/6ejcoca7naq5iax/Kuthiraikaran+kuripukal+Lakshmi+saravanakumar.pdf

ஐந்து கிராம் நிலவு - ராஜேஷ்குமார் டிடெக்டிவ் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 13 Aug 2015 10:29 AM PDT

ஒரு கிலோ எடையிலான தங்கக் காதணி அறிமுகம்…!

Posted: 13 Aug 2015 10:29 AM PDT

சென்னையில் ஒரு கிலோ எடையிலான தங்கக் காதணி அறிமுகம். – உன் காது இதைச் சுமக்காது என்கிற கணவனின் எச்சரிக்கையை காதில் போட்டுக்கொள்ளவா போகிறார்கள்? *** இந்தியாவில் உள்ள வக்கீல்களில் 30 சதவீதம் போலியாம். – கருப்பு கோட்டு அணிந்த கருப்பு ஆடுகள். *** இந்தியாவில் 5 வருடங்களில் 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவார்களாம். – ஊழல்கள் பெருகப் பெருக கணக்கர்களின் தேவை பெருகும் என்றுதானே? *** ஸ்டிக்கர் வகை தபால் தலைகள் விரைவில் அறிமுகமாகும். – ஸ்டாம்புகளை ஒட்டக் கூட தண்ணீர் கிடைக்காமல் போகலாம் ...

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Posted: 13 Aug 2015 10:26 AM PDT

ஆந்திரா: தெலுங்கானாவில், 30 ரூபாய்க்கு, மூன்று பெக் மது, விற்பனை செய்யப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில், கிராமப்புறத்தில் உள்ளவர்கள், நாட்டு சாராயத்திற்கு அடிமையாகி, தங்கள் உயிரை இழக்கின்றனர். அதனால், தெலுங்கானா அரசு, மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது, கிராமப்புறங்களில் நாட்டு சாராயம், 90மி.லி., 10 ரூபாய்க்கும், 180 மி.லி., 20 ரூபாய்க்கும் விற்கப் படுகிறது. மதுக்கடைகளில், வெவ்வேறு ரக மது, குவாட்டர், 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதனால், மலிவு ...

உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!

Posted: 13 Aug 2015 08:32 AM PDT

விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் .



GT-P3100
ROM: Sungsonic™ HD

எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!!

Posted: 13 Aug 2015 08:20 AM PDT

எரிகோ கோட்டையின் அலங்கத்தை இடிக்கவும், எரிகோ கோட்டையை பிடிப்பதற்க்காகவும் இன்றைய திருச்சபைகள் ஆரவாரத்திலும்,ஆர்பாட்டத்திலும் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய இதே நிலையில் எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு,அதன் இடுக்கமான வாசல் தீக்குயிரையாக்கப்பட்டு ஓநாய்களும்,நரிகளும் அதற்குள் வேட்டையாடிக் கொண்டியிருக்கிறது.ஆனால் பொதுவாக அநேக சபைகளும் தங்கள் அலங்கம் வலிமையாக இருப்பதாகவே தீர்மானிக்கின்றனர்.சான்பல்லாத்தும்,அம்மோனியனாகிய தோபியாவும் திருச்சபைக்கு எதிராக சொல்லும் சவாலான வார்த்தையை கேளுங்கள்" இவர்கள் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 13 Aug 2015 08:18 AM PDT



மாமூல் தர மறுத்த மாற்றுத்திறனாளி கடைக்காரரை வெட்ட வந்த ரவுடி- தடுத்து காப்பாற்றிய வாடிக்கையாளர்: வீடியோ

Posted: 13 Aug 2015 06:29 AM PDT

மாமூல் தர மறுத்த செல்போன்கள் விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி கடைக்காரரை வாளால் வெட்ட வந்த ரவுடியைத் தடுத்து அவரை வாடிக்கையாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் கடந்த மே மாதம் ஆறு பேர் அடங்கிய ரவுடிகள் குழு அப்பகுதி வியாபாரிகள் தொடர்ந்து அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாமூல் வழங்க வேண்டும் என கட்டளை விதித்தது. அவ்வாறு, தர மறுப்பவர்களது கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு ...

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 13 Aug 2015 05:44 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா

Posted: 13 Aug 2015 04:17 AM PDT

http://www.mediafire.com/download/1z2m2d86bjtl3ai/Meendum+Thoondil+Kathaikal.pdf என்றும் அன்புடன் செல்லா

ஒரே ஒரு துரோகம் - சுஜாதா

Posted: 13 Aug 2015 04:15 AM PDT

"ஒரே ஒரு துரோகம்" 1983ல் 'சாவி' பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்குஇ சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதைஇ 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது. http://www.mediafire.com/download/5oxg7ace78fn148/Ore+Oru+Thurogam.pdf என்றும் அன்புடன் செல்லா


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™