Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு வைத்துள்ள நிலுவை... ரூ.200 கோடி!:பட்டுவாடா இல்லாததால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

Posted:

ஆவின் நிறுவனத்திற்கு, பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு, அரசு, 200 கோடி ரூபாய், நிலுவை வைத்துள்ளது. பணம் பட்டுவாடா இல்லாததால், 23 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நிலுவைத் தொகையை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.

பால் பண்ணைத் தொழில் கிராமப்புற மக்களுக்கு நிலையான தினசரி வருமானத்தை, வழங்கி வருகிறது. இதை அறிந்த, முதல்வர் ஜெயலலிதா, இரண்டாம் வெண்மை புரட்சி திட்டம் மூலம் பால் உற்பத்தியை பெருக்க, கிராமப்புற மக்களின் வருமானம் அதிகரிக்க, இலவச கறவை மாடுகள் மற்றும் ...

மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்:அதிரடி:மீண்டும் சோதனை நடத்தவும் ஐகோர்ட் உத்தரவு

Posted:

மும்பை: 'மேகி நுாடுல்ஸ்' விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள மும்பை ஐகோர்ட், 'நுாடுல்சின் மாதிரிகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது.'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின், மேகி நுாடுல்ஸ் உணவு பண்டத்தில், அதிக சுவையை ஏற்படுத்துவதற்காக, காரீயம், ரசாயன உப்பு ஆகியவற்றை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கலந்திருப்பது, சமீபத்தில் நடந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின், ஒன்பது வகையான நுாடுல்சை விற்பனை செய்யவும், தயாரிக்கவும், இந்திய உணவு பாதுகாப்பு ...

லாலு - நிதிஷ் கூட்டணி விரைவில் 'படார்!'

Posted:

பாட்னா:பீகாரில், பா.ஜ.,வுக்கு எதிராக, மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் கட்சிகளை இணைத்து, தொகுதிகளை சமமாக பங்கீடு செய்யாத, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கும், ஆர்.ஜே.டி., கட்சித் தலைவர் லாலு பிரசாத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து, சரத் பவாரின், தேசியவாத காங்கிரஸ், கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.

தொகுதி பங்கீடு:
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் மாநிலத்தின், 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின், ஆர்.ஜே.டி., எனப்படும் ...

குண்டு துளைக்காத கூண்டில் உரையாற்றுவாரா மோடி?

Posted:

புதுடில்லி:'பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதால், சுதந்திர தின விழாவின்போது, குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து, அவர் உரையாற்ற வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்திஉள்ளது. பிரதமராக பதவி வகிப்போர், ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தின்போது, டில்லி, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி உரையாற்றுவது வழக்கம். பாதுகாப்பு காரணங்களால், சில ஆண்டுகளாக, குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து, பிரதமர்கள் உரை நிகழ்த்துவது வழக்கமாக உள்ளது. இந்த கண்ணாடி கூண்டு, துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாதபடி ...

காங்., பிடிவாதத்தால் ரூ.35 கோடி வீண்

Posted:

புதுடில்லி:காங்கிரசின் பிடிவாதத்தால், பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கியது. காங்கிரசினரின் கடும் அமளி காரணமாக, மக்களின் வரிப்பணம், 35 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளது.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கடந்த மாதம், 21ம் தேதி துவங்கிய, பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், காங்கிரசின் பிடிவாதம் காரணமாக ஏமாற்றத்தில் முடிவடைந்து உள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், முறைகேடு செய்த லலித் மோடிக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, ஆகியோர் உதவியதாகவும், ம.பி.,யில் நடந்த, 'வியாபம்' ஊழலில், முதல்வர் ...

சுதந்திர தினத்தில் மதுவிலக்கு கொள்கை ஜெ., அறிவிப்பார் என்கிறார் கருணாநிதி

Posted:

சென்னை:'சுதந்திர தினத்தன்று, மதுவிலக்கு கொள்கையை, முதல்வர் அறிவிப்பதை தவிர, அ.தி.மு.க., அரசுக்கு வேறு வழியில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:'கூகுள்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தமிழினத்தின் புகழை, மேலும் உயர்த்தும் வகையில், தன் பணியை தொடர, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சுதந்திர தினத்தன்று மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி, முதல்வர் அறிவிப்பதை தவிர, அ.தி.மு.க., அரசுக்கு வேறு வழியில்லை; அதை அறிவிப்பதிலிருந்து, அ.தி.மு.க., அரசு தப்ப முடியாது.பிரதமர் மோடியை, தன் வீட்டிற்கு அழைத்து, 21 பக்கங்கள் அடங்கிய ...

அ.தி.மு.க.,வுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை:'மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக வேண்டும்'

Posted:

சென்னை:''அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை என, காரணம் சொல்லக்கூடாது; மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, தமிழக அரசு செயல்பட வேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.மதுவிலக்கை வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில், சென்னை கோயம்பேட்டில் நடந்த உண்ணாவிரதத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:நான், மனதில் பட்டதை மட்டுமே பேசுவேன்; யாருக்கும் பயப்படமாட்டேன். மாநிலம் முழுவதும் மதுவிலக்கு பிரசாரம் தீவிரமடைந்தும், அரசு மவுனமாக உள்ளது.கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், மது விற்பனை செய்வதை காரணம் ...

'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் மத்திய அரசின் நேரடி மானியம் திட்டம்

Posted:

புதுடில்லி:சமையல் எரிவாயு மானியத்தை, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும், மத்திய அரசின், 'பாஹல்' திட்டம், 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:மத்திய அரசின், 'பாஹல்' திட்டம், உலகிலேயே, மிக அதிகமான மானிய தொகையை, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குகிறது என்று, கின்னஸ் அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த, 2014ம் ஆண்டு, நவம்பர், 15ம் தேதி, 54 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டு, இந்தாண்டு, ஜனவரி 1முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், இதுவரை, 13.9 கோடி பேர் ...

சிலைகளை கடத்தியது ஏன்: சினிமா இயக்குனர் வாக்குமூலம்

Posted:

பிரபல சினிமா பட இயக்குனர் வி.சேகர் பஞ்சலோக சாமி சிலைகள் கடத்தல் தொழிலில் இறங்கியது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு விவேக் உள்ளிட்டோர் நடித்த 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் வி.சேகர். 'திருவள்ளுவர் கலைக்கூடம்' என்ற பெயரில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி 'குடும்ப இயக்குனர்' என்ற தகுதியை பெற்றிருந்தார்.அவர் பஞ்சலோக சாமி சிலைகளை கடத்தியாக போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவருடன் சிலை கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாலதி என்பவர் போலீசாரிடம் ...

'ராஜபக் ஷே பிரதமராக முடியாது': அதிபர் சிறிசேனா அறிவிப்பு

Posted:

கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி வெற்றி பெற்றாலும், முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவை, பிரதமராக நியமிக்கப்போவதில்லை என, அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
வரும் 17ல், இலங்கையில், பார்லிமென்ட் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, சுதந்திரா கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.முதலில், ராஜபக் ஷேவுக்கு சீட் வழங்க மறுப்பு தெரிவித்த அதிபர் சிறிசேனா, பின் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தார்.
இந்நிலையில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™