Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சமையல் 'காஸ்' நேரடி பண பட்டுவாடா திட்டம் வெற்றி: ஒரே ஆண்டில் அரசுக்கு ரூ.10,000 கோடி மிச்சம்

Posted:

சமையல் காஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், நேரடியாக பணம் செலுத்தும் டி.பி.டி.எல்., திட்டத்தால், மத்திய அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தி உள்ளது. சமையல் காஸ் சிலிண்டர்களை, சட்டவிரோதமாக வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. டி.பி.டி.எல்., திட்டம், இரு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டபோது, பொதுமக்களுக்கு உடனடியாக புரியாததால், பெரும் குழப்பம் நிலவியது. ஆதார் அடையாள அட்டை இருந்தால் தான், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் மானிய பணம் செலுத்தப்படும் என, ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதனால், தங்களுக்கு சமையல் காஸ் ...

அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய் அதிகரிக்குமா?

Posted:

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வருவாயில் உயர்வு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய பஸ்கள் வழங்கிய போதிலும், அவற்றின் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தினால் மட்டுமே, வருவாயை உயர்த்த முடியும் என, தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
60 லட்சம் பேர்:அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் தினம் தோறும், 1.98 கோடி முதல், 2.10 கோடி பேரும், சென்னையில், 60 லட்சம் பேர் வரை, பயணிக்கின்றனர். இவர்களின் ஓட்டு களை குறி வைத்த அரசியல் கட்சிகள், பஸ் கட்டணத்தை ...

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 118 பேர் 'பாஸ்': அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்தார் கோவை சாருஸ்ரீ

Posted:

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், கோவையைச் சேர்ந்த சாருஸ்ரீ, அகில இந்திய அளவில், ஆறாமிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., 2014ல் நடத்திய, சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு, 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், 4.51 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் பிரதான தேர்வு எழுத, 16 ஆயிரத்து, 933 பேர் தேர்வாகினர்; எழுதியவர்கள், 16 ஆயிரத்து, 286 பேர். இதன் முடிவுகள், கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டன. நேர்முகத் ...

தமிழக மின் வாரியம் - 'அதானி' குழுமம் ரூ.4,500 கோடி ஒப்பந்தம் :சூரிய மின்சாரம் 648 மெகாவாட் தயாரிக்க திட்டம்

Posted:

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில், 4,536 கோடி ரூபாய் முதலீட்டில், அதானி குழும நிறுவனங்கள், ஐந்து சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உள்ளன. இவற்றில் இருந்து, 648 மெகாவாட் மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், 2014 செப்டம்பர், 12ம் தேதி நிர்ணயித்துள்ளபடி, யூனிட் ஒன்றுக்கு, 7 ரூபாய் ஒரு பைசா என்ற விலையில், சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஒப்பந்தம்:
அந்த வகையில், ...

'ஏசி' இல்லாத அறையில் தூங்குகிறாராம் கெஜ்ரிவால்!

Posted:

புதுடில்லி: 'ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மாதம், 45 ஆயிரம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்துகிறார்' என, ஊடகங்களில் வெளியான செய்தியை நேற்று மறுத்துள்ள, டில்லி மாநில மின் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''எங்கள் முதல்வர் கெஜ்ரிவால் துாங்கும் அறையில், 'ஏசி'யே கிடையாது,'' என தெரிவித்து உள்ளார்.எதிலும் எளிமை, நேர்மை என, தேர்தலின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மாதம், 45 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார் என்பதை, தகவல் ஆர்வலர் ஒருவர் அம்பலப்படுத்தினார்.அதையடுத்து, முதல்வர் கெஜ்ரிவாலின், 'இமேஜை' ...

மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம்

Posted:

காந்தி நகர் : சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு வரும், 'கிப்ட் சிட்டி' எனப்படும், குஜராத் சர்வதேச நிதி மற்றும் தொழில்நுட்ப நகரில், வர்த்தகத்தை பெருக்கும் நோக்கில், மதுவிலக்கு கொள்கையை தளர்த்த, குஜராத் அரசு ஆலோசித்து வருகிறது.மகாத்மா காந்தியடிகள் பிறந்த குஜராத் மாநிலத்தில், பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. கிராமங்கள், நகரங்கள் எங்கும் மதுபானக் கடைகளே கிடையாது. குறிப்பாக, அரசு சார்பில் மதுபானக் கடைகள் செயல்படுவதில்லை.இது பெரிய சாதனையாக இருந்தாலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், சிக்கலாகவும் இருக்கிறது.ஆசிய பிராந்தியத்தில், நிதித் துறையில் ...

ஆதரவு செய்தி வெளியிடாத ஊடகங்கள் பட்டியல் தயாரிப்பு

Posted:

புதுடில்லி: சர்வதேச யோகா தினம், 'ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா' போன்ற மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு, 'டிவி, பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகின்றன, என்பதை ஆராய்ந்து, சரிவர செய்தி வெளியிடாத ஊடகங்கள் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இதுகுறித்து, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சக மூத்த அதிகாரி, டில்லியில் கூறியதாவது:சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளுக்கு, ஊடகங்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிட்டன என்பது குறித்த அறிக்கைகளை, தகவல் தொடர்புத் துறை தயாரித்து வருகிறது. ...

தாவூத் இந்தியா வர விரும்பியது உண்மை தான்!

Posted:

புதுடில்லி: 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளிதழுக்கு, மும்பை நிழலுலக தாதாக்களில் ஒருவனான சோட்டா ஷகீல், அளித்த பேட்டியில், 'மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் தாவூத் இப்ராகிம், இந்தியா வர விரும்பியது உண்மை தான். ஆனால், அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் சரத் பவார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த தகவலை, என் தலைவனான தாவூத் இப்ராகிம், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடமும் தெரிவித்துள்ளார்' என, கூறியிருந்தான். இதையடுத்து, இந்த விவகாரம் பரபரப்படைந்தது. மும்பையில், 1993ல், பயங்கர தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதும், ...

புலிகளை குறை கூறுவதா? கருணாநிதி கண்டனம்

Posted:

சென்னை : 'முல்லை பெரியாறு அணைக்கு, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பாதுகாப்பு கோருவதற்கு, தமிழக அரசு கூறும் காரணங்கள் சரியல்ல' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:முல்லை பெரியாறு அணை, கேரளத்தில் அமைந்திருந்தாலும், அதன் பராமரிப்பு, தமிழகத்தின் வசம் உள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, கேரள அரசு அனுமதி மறுக்கிறது. இதனால், அணைப் பகுதிக்கு, மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே, தமிழக அரசின் கோரிக்கை.ஆனால், அணைக்கு, 'இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் ...

இனி ரேஷன் உணவு பொருட்களுக்கும் நேரடி மானியம்

Posted:

புதுடில்லி : மத்திய அரசு, சமையல் 'காஸ்' சிலிண்டரை தொடர்ந்து, நியாய விலை கடைகளில் விற்கப்படும், உணவுப் பொருட்களையும், நேரடி மானிய திட்டத்தின் கீழ், கொண்டு வர முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக, யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அறிமுகமாகிறது. புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில், நுகர்வோரின், 'ஆதார்' எண்ணுடன் கூடிய வங்கிக் கணக்கில், ரேஷன் பொருட்களுக்கான மானியத் தொகை சேர்க்கப்படும்.துவக்கத்தில், ஒரு குடும்பத்திற்கு, 500 - 700 ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.இத்திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்கில் மானியம் ...

சமமாகவும் மரியாதையாகவும் நடத்தினால் தான் பேச்சு: ஒபாமாவுக்கு புதின் நிபந்தனை

Posted:

மாஸ்கோ:""சமமாகவும் மரியாதையாகவும் நடத்தினால் தான் பேச்சுவார்த்தைக்கு முன் வருவேன்'' என அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனை விதித்துள்ளார்.அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒபாமாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார் புதின். அதில் அவர் கூறியுள்ளதாவது:உலகில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டுமானால் அமெரிக்க - ரஷ்ய உறவு நன்றாக இருக்க வேண்டும். உக்ரைன் விஷயத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன.என்ன தான் கருத்து வேறுபாடு இருந்தாலும், இரு நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது உலகிற்கு அவசியமாகிறது.சமமாகவும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™