Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ஹெல்மெட்' போடாமல் போலீசில் சிக்கியவர்கள் 3 லட்சம் பேர்: சென்னையில் தான் அதிகமானோர் அசட்டை

Posted:

'இருசக்கர வாகன ஓட்டிகள், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம்' என்ற உத்தரவு அமலுக்கு வந்து, நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து உள்ளது. இந்த ஒரு மாதத்தில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய, மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்; அதிலும், சென்னையில் தான் அதிகமானோர் அசட்டையாக இருந்து மாட்டியுள்ளனர். 'இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என, ஜூன் ௧௫ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசும், இதற்கு ஏற்றார் போல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 'இருசக்கர வாகனத்தின், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்' என, ...

இந்து பயங்கரவாதம் என்பதா: ராஜ்நாத் பாய்ச்சல்

Posted:

புதுடில்லி: ''முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், 'இந்து பயங்கரவாதம்' என்ற புதிய வார்த்தையை பயன்படுத்தினார். அதற்கு, பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரின் பேச்சால், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு தோல்வி ஏற்பட்டது,'' என, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்நாத் சிங் பேசினார்.

அறிக்கை:
சில நாட்களுக்கு முன், பஞ்சாபின் குருதாஸ்பூரில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து, லோக்சபாவில் நேற்று, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை ...

மாணவர்களின் எண்ணத்தை, பார்லிமென்டில் எதிரொலிக்கச் செய்வேன்: ராகுல்

Posted:

புனே : திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி மையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, பா.ஜ., உறுப்பினரான கஜேந்திர சவுகானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு, காங்., துணைத் தலைவர் ராகுல் ஆதரவு தெரிவித்து உள்ளார். எப்.டி.ஐ.ஐ., எனப்படும், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி மையத்தின் தலைவராக, கஜேந்திர சவுகான் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து, புனேவில் உள்ள இக்கல்வி மையத்தில் பயிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எப்.டி.ஐ.ஐ., மாணவர்களை, காங்., துணைத் தலைவர் ராகுல் நேற்று சந்தித்தார். அப்போது அவர் ...

கரன்சியில் தவறு: ரூ.37 கோடி இழப்பு

Posted:

புதுடில்லி: ரூபாய் நோட்டில், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரின் பெயர் தவறாக அச்சடித்ததால், மத்திய அரசுக்கு, 36.69 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தலைமை கணக்கு அலுவலகமான சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது. இது குறித்து லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை விவரம்:ரிசர்வ் வங்கி கவர்னராக 2008, செப்., 5 முதல், 2013, செப்., 4 வரை, டி.சுப்பாராவ் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆனார். இந்நிலையில், மத்திய பிரதேசம், தேவாசில் உள்ள பேங்க் நோட் பிரஸ் - பி.என்.பி., 2014, ஜனவரி முதல் பிப்ரவரி வரை, சுப்பாராவ் கையெழுத்துடன், 37.20 கோடி ரூபாய் நோட்டுகளை ...

கலாம் பிறந்த நாள் இனி 'இளைஞர் எழுச்சி நாள்'

Posted:

சென்னை: 'முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்டோபர், 15ம் தேதி, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும், 'இளைஞர் எழுச்சி நாளாக' கொண்டாடப்படும். அவர் பெயரில், சுதந்திர தினத்தன்று, விருது வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என, பலரையும் இந்தியாவிற்கு, தமிழன்னை வழங்கி உள்ளார்.

பன்முக தலைவர்:
அந்த வகையில், 'இந்தியாவின் ஏவுகணை நாயகன், அணுசக்தி நாயகன், தலைசிறந்த விஞ்ஞானி, திருக்குறள் வழி நடந்தவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன்' என, ...

ஜனாதிபதி பதவிக்கு கலாம் தேர்வானது எப்படி?

Posted:

கடந்த, 2002ம் ஆண்டில், ஜனாதிபதி பதவிக்கு தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து, 'டர்னிங் பாயின்ட்ஸ்: ஏ ஜார்னி த்ரு சேலஞ்சஸ்' என்ற தனது புத்தகத்தில், முன்னாள்ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளதாவது: மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், 2001 டிசம்பர் முதல், அண்ணா பல்கலையில் பணியாற்றி வந்தேன். அப்போது, அண்ணா பல்கலையின் பரந்து விரிந்த வளாகத்தில் தங்கியிருந்ததும், பேராசிரியர்கள், ஆராய்ச்சி பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்த மாணவர்களுடன் பணியாற்றியதும், பல்கலை மாணவர்களுக்கு பாடம் நடத்தியதும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தன. கடந்த, 2002ம் ஆண்டு, ஜூன், 10ம் ...

காங்.,குடன் பேச தயார்: மத்திய அரசு அறிவிப்பு

Posted:

புதுடில்லி: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்க, காங்கிரசுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், பா.ஜ., வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோரை பதவியிலிருந்து நீக்கும் வரை, பார்லிமென்டை செயல்பட விட மாட்டோம் என, காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பார்லிமென்டின் இரு சபைகளிலும் காங்கிரஸ் நடத்தி வரும் அமளியால், கடந்த 21ல், கூடிய மழைக்கால கூட்டத் தொடரில் உருப்படியாக எந்த ...

பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா

Posted:

புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா, பகவான் சத்ய சாய்க்குப் பிடித்தமான பக்தி பாடல்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பகவானின் நீண்ட கால பக்தரான சுரேஷ் வாட்கர், பகவானின் மகா சமாதி முன் அவர் மிகவும் விரும்பி ரசித்த பாடல்களைப் பாடினார். ஓம்கார ஸ்வரூபா... சத்குரு சமார்த்தா என்ற மராத்தி பாடலுடன் பஜனை துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு பிடித்தமான பாடல்கள் பாடப்பட்டன. கூடியிருந்த பக்தர்கள் பக்தி இசைமழையில் நனைந்து பரவசம் அடைந்தனர்.

'டாஸ்மாக்' ஒழிப்பு போராட்டத்தில் உயிர் துறந்தார் சசிபெருமாள்

Posted:

நாகர்கோவில்: மார்த்தாண்டம் அருகே, 'டாஸ்மாக்'கை அகற்றக் கோரி, 120 அடி உயரமொபைல் போன் கோபுரத்தில் ஏறிய, காந்தியவாதி சசிபெருமாள்,ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, உண்ணாமலைக்கடையில், பள்ளி, கல்லுாரி மற்றும் கோவில்கள் நிறைந்த பகுதியில் உள்ள, 'டாஸ்மாக்'கை அகற்றக் கோரி, இப்பகுதி மக்கள், பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, போராட்டக் குழு சார்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.அந்த பகுதியில் இருந்து கடையை அகற்ற, 2014 மே 30ம் தேதி, ஐகோர்ட் உத்தரவிட்டது.ஐகோர்ட் ...

தமிழக காய்கறிகளுக்கு சான்றிதழ்: தமிழக அரசு தீவிரம்

Posted:

'சுகாதாரத்துறை சான்று பெற்று, எடுத்து வரப்படும் காய்கறிகளை மட்டுமே, வரும், 4ம் தேதி முதல் அனுமதிப்போம்' என, கேரளா அறிவித்துள்ளது. இதனால், தமிழக வியாபாரிகளுக்கு, சுகாதார சான்று வழங்கும் பணியை, அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

500 டன் காய்கறிகள்:
தமிழகத்தில், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும், 300 லாரிகள் மூலம், கேரளாவிற்கு, 500 டன் காய்கறிகள் செல்கின்றன. உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், வாழைக்காய், வாழைப்பூ, காலிபிளவர், குடைமிளகாய், சாம்பார் வெங்காயம், நுாக்கல், கேரட் போன்ற காய்கறிகள் செல்கின்றன.இந்த ...

டைகர் மேமனை சந்தித்தேன்: காஷ்மீரின் காங். எம்.எல்.ஏ.பகீர் தகவல்

Posted:

ஸ்ரீநகர்; மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன் சகோதரர், டைகர் மேமனை , பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சந்தித்து பேசினேன் என காஷ்மீர் காங். எம்.எல்.ஏ. பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளான டைகர் மேமன், யாகூப் மேமன் ஆகியோரில் யாகூப் மேமனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த மாதம் 30-ம் தேதி நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.யாகூப் மேமன் தூக்கு தண்டனை குறித்து காஷ்மீரின் பந்திப்போரா ...

லிபியாவில் 2 இந்தியர்கள் கடத்தல்

Posted:

புதுடில்லி: லிபியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், நான்கு இந்தியர்களை கடத்திச் சென்று, இருவரை மட்டும் விடுவித்துள்ளனர். இதுகுறித்து, வெளிஉறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், விகாஸ் ஸ்வரூப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவைச் சேர்ந்த, நான்கு பேர் லிபியாவில் கடத்தப்பட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள், அங்குள்ள, சிர்டே பல்கலையில் பணியாற்றுபவர்கள். இந்தியா திரும்புவதற்காக, திரிபோலி வழியாக வந்து கொண்டிருந்த அவர்களை, சிர்டே நகர் அருகே உள்ள சோதனைச் சாவடியிலிருந்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™