Tamil News | Online Tamil News |
- 21 குண்டுகள் முழங்க அப்துல் கலாமிற்கு...பிரியாவிடை ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கானோர் கண்ணீர்
- மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் கதை...முடிந்தது:சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றம்
- பங்களாவில் வசிக்க அனுமதி கோரிய காங்., - எம்.பி.,க்களின் மனு 'டிஸ்மிஸ்'
- கல்லூரிக்கு கலாம் பெயர் பீகார் மாநில அரசு அசத்தல்
- தே.மு.தி.க.,வை விட கூடுதல் 'சீட்'கள்: காங்கிரஸ் அதிரடியால் தி.மு.க., அதிர்ச்சி
- மத்திய அரசின் உள்ளாட்சித் துறை நிதி பெற வேண்டும்: ஸ்டாலின்
- இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
- கலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகள் ஏற்பாடு
- தமிழகத்தில் பேரமைதி: போலீசார் நிம்மதி
21 குண்டுகள் முழங்க அப்துல் கலாமிற்கு...பிரியாவிடை ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கானோர் கண்ணீர் Posted: ![]() ராமேஸ்வரம்:விண்வெளி நாய-கனான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாடு, நேற்று கண்ணீருடன் பிரியா விடையளித்தது. இறுதி சடங்குகளுக்குப் பின், ராணுவ மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க, ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு கிராமத்தில், கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.கலாமின் இறுதி சடங்கில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி, காங்., துணைத் தலைவர் ராகுல் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.மக்கள் ஜனாதிபதியான கலாம், கடந்த, 27ம் தேதி மாலை, மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள, இந்திய மேலாண்மை பயிற்சி ... |
Posted: ![]() நாக்பூர்:மும்பையில், 22 ஆண்டுகளுக்கு முன், 12 இடங்களில் வைக்கப்பட்ட பயங்கர குண்டுகளால், 257 பேர் உயிரை பறித்து, 750 பேருக்கும் மேற்பட்டோரை சிதைத்து, முடமாக்கிய பயங்கர தாக்குதலின், முக்கிய குற்றவாளியான, 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' யாகூப் மேமனுக்கு, அவனின், 53வது பிறந்த நாளான நேற்று, நாக்பூர் சிறையில் துாக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது. தண்டனையிலிருந்து அவனை காப்பாற்ற, நள்ளிரவு துவங்கி, அதிகாலை வரை நடைபெற்ற முயற்சிகள் வெற்றி பெறவில்லை.பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு, 'ஜூலை 30ம் தேதி, யாகூப் மேமனுக்கு துாக்கு ... |
பங்களாவில் வசிக்க அனுமதி கோரிய காங்., - எம்.பி.,க்களின் மனு 'டிஸ்மிஸ்' Posted: ![]() புதுடில்லி:விதிமுறைகளை மீறி, அரசு பங்களாவில் வசிக்க அனுமதி கோரி, காங்., - எம்.பி.,க்கள் அம்பிகா சோனி, குமாரி செல்ஜா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஒதுக்கப்பட்டன:முந்தைய காங்., ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக, அம்பிகா சோனி, குமாரி செல்ஜா ஆகியோர் பதவி வகித்தனர். அப்போது, இவர்கள் டில்லியில் வசிப்பதற்கு அமைச்சர்கள் என்ற அடிப்படையில், 'டைப் - 8' பங்களாக்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அம்பிகா சோனி, குமாரி செல்ஜா ஆகியோர் தற்போது அமைச்சர்களாக இல்லை; ஆனாலும், ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். ... |
கல்லூரிக்கு கலாம் பெயர் பீகார் மாநில அரசு அசத்தல் Posted: ![]() பாட்னா:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, விவசாய கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, பீகார் மாநில அரசு அவரின் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளது. கூட்டம்:பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. நேற்று, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் ஜனாதிபதி, மறைந்த மாமேதை அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கிஷான்கஞ்சில் உள்ள விவசாய கல்லுாரிக்கும், பாட்னாவில் அமையவுள்ள அறிவியல் நகரத்துக்கும், அப்துல் கலாமின் பெயரை சூட்ட முடிவு ... |
தே.மு.தி.க.,வை விட கூடுதல் 'சீட்'கள்: காங்கிரஸ் அதிரடியால் தி.மு.க., அதிர்ச்சி Posted: ![]() 'தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, பெரிய கட்சி நாங்கள் தான்' என, காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருவது, தி.மு.க., மேலிடத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்க்க, பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி ஒன்றை, தன் தலைமையில் அமைக்க வேண்டும் என, தி.மு.க., முயற்சிக்கிறது.அந்த அணியில், தே.மு.தி.க.,வையும், காங்கிரசையும் இணைக்க வேண்டும் என, திட்டமிட்டு, அதற்கான காரியங்களில், தி.மு.க.,வினர் இறங்கி உள்ளனர்.ஆனால், விஜயகாந்த் தரப்பு, தி.மு.க.,வினருக்கு ... |
மத்திய அரசின் உள்ளாட்சித் துறை நிதி பெற வேண்டும்: ஸ்டாலின் Posted: ![]() சென்னை:'மத்திய அரசிடம் இருந்து, உள்ளாட்சித் துறை நிதியை, அ.தி.மு.க., அரசு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: அ.தி.மு.க., அரசின் அலட்சியத்தால், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய, மத்திய அரசின் நிதி, இந்த ஆண்டு கிடைக்காமல் போய் விட்டது. இதனால், தமிழக உள்ளாட்சி அமைப்புகள், பல கோடி ரூபாயை இழந்து நிற்கின்றன.இந்த நிதியை பெறுவதற்கு, 13வது நிதி ஆணையம், சில நிபந்தனைகளை நிர்ணயித்தது; அவற்றுள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ... |
இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! Posted: ![]() ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் நடந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், நாடு முழுவதும் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து, 5 கி.மீ.,யில் உள்ள பேக்கரும்பு வரை, எங்கு பார்த்தாலும் மனிதக் கூட்டமாக தென்பட்டது. இறுதி அடக்கம் நடந்த மைதானத்தைச் சுற்றி ஏராளமானோர் கூடினர்.பலர், அருகில் இருந்த வீடு, கட்டட மாடிகள், தென்னை, பனை மரங்கள் மீது ஏறி நின்று, இறுதிச் சடங்கை பார்த்தனர். மைதானத்தின் பின் பகுதியில் கூடிய கூட்டத்தினர், திடீரென தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற முயன்றனர். அவர்களை, ... |
கலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகள் ஏற்பாடு Posted: ![]() அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 534 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆகஸ்ட், 3ம் தேதி, புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. முதல் நாளில், முன்னாள் ஜனாதிபதியும், அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியருமான அப்துல் கலாமுக்கு அஞ்சலி மற்றும் அவரைப் பற்றி பாடம் நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: இன்ஜினியரிங் கல்லுாரிகளில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், இன்ஜி., துறையில் எட்ட முடியாத சாதனைகளைச் செய்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்துள்ளார். அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., கல்லுாரியில், பி.இ., படித்த அவர், ஜனாதிபதியாகும் முன், அண்ணா ... |
தமிழகத்தில் பேரமைதி: போலீசார் நிம்மதி Posted: ![]() மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் நேற்று, 'டாஸ்மாக்' உள்ளிட்ட எல்லா கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏதுமின்றி போலீசார் நிம்மதி அடைந்தனர்.போலீஸ் உயர் அதிகாரிகளில் இருந்து கான்ஸ்டபிள் வரை, வீட்டில் இருந்து புறப்படும்போது, இன்று எந்த மாதிரி பிரச்னைகளை சந்திக்கப் போகிறோமோ என்று நினைத்துக் கொண்டுதான் கிளம்புவார்கள்.'ஓவர்... ஓவர்': காவல் நிலையங்கள் மற்றும் உளவுப் பிரிவில் பணிபுரிவோர், உயர் அதிகாரிகளிடம் இருந்து எந்த நேரத்திலும் உத்தரவு வரலாம் என, காத்திருப்பார்கள். ... |
You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 31,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |