ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் கலாமுக்கு மோட்ச தீபம்!
- அருகம்புல்லில் இத்தனை அருமையான குணங்களா!
- தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?
- அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
- இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன?
- கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்!
- மனைவி தொடர்ந்து பேசவில்லை…!!
- அம்மனும், ஈஸ்வரியும்
- ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கம் ஏன்….
- எனது கதைகள் --
- கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கலாமுக்கு மோட்ச தீபம்! Posted: 30 Jul 2015 02:03 AM PDT சென்னை: அப்துல் கலாம் ஆத்மா சாந்தி அடைய, சிதம்பரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஆத்மா சாந்தியடைய பொது தீட்சிதர்களால், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மோட்ச தீபம் செவ்வாயன்று ஏற்றப்பட்டது. நடராஜர் சன்னதியில் நெய் தீபமும், நான்கு கோபுரங்களில் மோட்ச தீபமும் ஏற்றப்பட்டன.அது போல, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், தமிழ்நாடு பிராமண இளைஞர்கள் மத நல்லிணக்கப் பேரவை சார்பில், அப்துல் கலாம் ஆத்மா சாந்தி அடைய, மோட்ச தீப வேதவேள்வி நடத்தப்பட்டது. ... |
அருகம்புல்லில் இத்தனை அருமையான குணங்களா! Posted: 30 Jul 2015 01:49 AM PDT ஆடு, மாடுகளுக்குதான் அருகம்புல், உணவு. ஆனால் மனிதர்களுக்கு அது மருந்து. அருகம் எளிமையாக கிடைப்பதால், அதை பலர் ஏளனமாக நினைக்கின்றனர். அதன் மகத்துவம் அறிந்தால், மறக்க மாட்டார்கள். அருகம்புல்லுக்கு பல விசேஷமான தன்மைகள் இருக்கின்றன. நாக்கு வறட்சி, நாக்கு சுவை தெரியாமல் போவது, வாந்தி, எரிச்சல், பித்த மயக்கம், சோர்வு இது எல்லாவற்றுக்கும் அருகம்புல் சாறு மிகவும் நல்லது. ரத்த பித்தத்தை தணித்து, உடம்பை குளுமையாக்கும் சக்தி, அருகம்புல்லுக்கு இருக்கிறது. அக்கி என்பது ஒரு அவஸ்தையான தோல் நோய். ... |
Posted: 30 Jul 2015 01:43 AM PDT உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள். சரிவிகித நீர்ச்சத்து: அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை. தொடர்ச்சியான ... |
அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Posted: 30 Jul 2015 01:40 AM PDT சாதி.... மதம்... இனம்... மொழி.... என எல்லாவற்றையுமே கடந்து அப்துல்கலாமுக்காக அனைத்து தரப்பு மக்களுமே கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன் (26). அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலவச ஆட்டோ பயணம் மேற்கொண்டுள்ளார். 4 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், தனது ஆட்டோவில் அப்துல்கலாம் படம் பொறித்த பேனரை கட்டியுள்ளார். அதில், "நான் விட்டுச்சென்ற பணிகளை மாணவர்கள் தொடர வேண்டும்" –அப்துல்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி ... |
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Posted: 30 Jul 2015 01:39 AM PDT ஒரு சினை முட்டை, கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள், இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் என்று இருக்கும்; 'அல்லது இரண்டு முட்டைகள், தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்களுடன் சேர்ந்து, இரண்டும் சினை முட்டையாக மாறலாம். இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் தோன்றுவது உண்டு. சில நேரம், ஒரு சினைமுட்டை இரண்டாகப் பிரியும்போது, முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டிக்கொண்டு அப்படியே கர்ப்பப் பையில் வளர்ந்து, குழந்தைகள் ... |
கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Posted: 30 Jul 2015 01:27 AM PDT விடுமுறை நாளில் கூடுதல் வேலை: கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! பாலக்காடு: முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று, கேரளாவிலுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், விடுமுறை நாட்களிலும், கூடுதல் நேரம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர். 'என்னை விரும்புவோர், விடுமுறைக்கு பதிலாக, ஒரு நாள் அதிகமாக வேலை செய்யுங்கள்' என, கலாம் கூறியிருந்த வாக்குகளை நினைவுகூர்ந்து, கேரளாவில், பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று முன்தினம், பல மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்தனர். புன்னபிரா ... |
Posted: 30 Jul 2015 01:16 AM PDT இறந்தவர்களின் ஆவியுடன் மீடியம் வழியாக பேசலாம். அப்படி ஒரு மீடியம் வழியாக இறந்து விட்ட கணவனின் ஆவியுடன் ஒரு மனைவி பேசினாள். – அத்தான்…நான்தான் உங்க பொண்டாட்டி பேசறேன். இப்ப எப்படி இருக்கறீங்க..? – மிக மிக சந்தோசமாக இருக்கிறேன்..! – நீஙள் உயிருடன் என்னோடு வாழ்ந்த போது இருந்ததை விடவா மகிழ்ச்சியாக இருக்கிறீங்களா? – ஆமாம், ஆமாம்…அதை விட பல மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்! – அவ்வளவு மகிழ்ச்சியா சொர்க்கத்தில்…? – சொர்க்கத்திலா…இல்லை நரகத்தில்தான் அவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கிறேன். – மனைவி ... |
Posted: 30 Jul 2015 01:14 AM PDT ஆடி மாதம் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது, அம்மன் திருவிழாக்கள்தான். அம்மன் பாடல்கள் என்றால் நம் கண்முன் வருபவர், திரைப்பட பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி தான் பாடிய அம்மன் பாடல்களைப் பற்றி மனம் திறக்கிறார் அவர். – நான் பாடி, ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் மாரியம்மன் பாடல், "வரமளித்து உலகயெல்லாம் வாழ்வளிக்க வந்தவளே!' என்ற பாட்டு, அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன். இன்று ஆடி, தை மாதம் என்றால் மாரியம்மன் கோயில்களில் மட்டுமல்லாமல், பல்வேறு ... |
ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கம் ஏன்…. Posted: 29 Jul 2015 09:28 PM PDT ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக விளக்குகிறார் ஜோதிட பண்டிதர் காழியூர் நாராயணன். "பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே ... |
Posted: 29 Jul 2015 07:37 PM PDT ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ... |
கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு Posted: 29 Jul 2015 03:21 PM PDT நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |