Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராஜிவ் கொலையாளிகளின் தண்டனை குறைப்பு சரிதான்: மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted:

புதுடில்லி : 'ராஜிவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரிதான்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துஉள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான, ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாருக்கு, லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது, விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு துாக்கு தண்டனை ...

கண்ணீர்... கண்ணீர்...: பிறந்த மண்ணில் 'மக்கள் ஜனாதிபதி' கலாமுக்கு அஞ்சலி

Posted:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உடல் நேற்று மதியம் 3.50 மணிக்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள கீழக்காடு மைதானத்தில் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் மல்க நீண்ட வரிசை யில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். பலர் துக்கம் தாளாமல் கதறி அழுதனர்.மதுரையிலிருந்து அப்துல் கலாம் உடல் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கேம்ப் ஹெலிபேடிற்கு மதியம் 2:25க்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படையை சேர்ந்த அதிகாரிகள் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ...

கள்ளச்சந்தையால் அரசுக்கு ரூ.39 ஆயிரம் கோடி நஷ்டம்: போலி சிகரெட், மது வகைகள் விற்பனை அதிகரிப்பு

Posted:

புதுடில்லி: கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களால், அரசுக்கு, 39 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகையிலை பொருட்கள், மது, மொபைல் போன் ஆகியவை தான், அதிக அளவில் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின், கடத்தல் மற்றும் போலி வர்த்தகத்துக்கு எதிரான பிரிவு, சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. 'கள்ளச் சந்தை: தேசிய நலனுக்கு எதிரானது' என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப் ...

இந்தியாவில் தாக்குதல்: ஐ.எஸ்., 'பகீர்' திட்டம்

Posted:

வாஷிங்டன் : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்தியாவை தாக்க தயாராகி வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில், தலிபானுக்கு நெருக்கமான ஒருவரிடம் இருந்து, உருது மொழியில் எழுதப்பட்ட, 32 பக்க ரகசிய ஆவணம், அமெரிக்கன் மீடியா இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பிற்கு கிடைத்துள்ளது.

விரிவான வரலாறு:
'கலிபாவின் இஸ்லாமிய தேசத்தின் விரிவான வரலாறு' என்ற அந்த ஆவண விவரங்களை, 'யு.எஸ்.ஏ., டுடே' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில விவரங்கள்:இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த, தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த தாக்குதல், ஊழிக்கால போர் போல், ...

சான்பிரான்சிஸ்கோ செல்ல நரேந்திர மோடி திட்டம்

Posted:

வாஷிங்டன்:நியூயார்க்கில், வரும் செப்டம்பர் இறுதியில், 70வது ஐ.நா., பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோவின் மேற்கு கடலோரம் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதிகளில், இந்தியர்கள் கணிசமாக உள்ளனர். இதனால், மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க, அவர்கள் தயாராகி வருகின்றனர். சிலிக்கான் பள்ளத்தாக்கின், சாப் மையத்தில், 20 ஆயிரம் பேர் கூடும் மிகப் பிரம்மாண்ட கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார்.இதற்கு முன், பிரதமர் என்ற வகையில், 1949ல் நேருவும், 1978ல், மொரார்ஜி ...

காருக்கு பெட்ரோல் கேட்கும் பிரதிபா

Posted:

புதுடில்லி: எளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பின், அந்த உயரிய பதவியில் அமர்ந்த, பிரதிபா பாட்டீல், அரசு வழங்கிய காரையும் பயன்படுத்திக் கொண்டு, தன் சொந்தக் காருக்கும், எரிபொருள் வழங்க வேண்டும் என, மத்திய அரசை நச்சரித்து வருகிறார்.கடந்த, 2002 - 2007 வரை, தமிழகத்தை சேர்ந்த, அப்துல் கலாம், ஜனாதிபதியாக இருந்தார். அவருக்குப் பின், 2007 - 2012 வரை, அந்தப் பதவிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, பிரதிபா பாட்டீல் நியமிக்கப்பட்டார். பதவியில் இருக்கும் போது ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய பிரதிபா, ...

விடுமுறை நாளில் கூடுதல் வேலை: கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்

Posted:

பாலக்காடு: முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று, கேரளாவிலுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், விடுமுறை நாட்களிலும், கூடுதல் நேரம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.'என்னை விரும்புவோர், விடுமுறைக்கு பதிலாக, ஒரு நாள் அதிகமாக வேலை செய்யுங்கள்' என, கலாம் கூறியிருந்த வாக்குகளை நினைவுகூர்ந்து, கேரளாவில், பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று முன்தினம், பல மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்தனர். புன்னபிரா வடக்கு பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று முன்தினம், ஏழு மணி நேரம் கூடுதலாக வேலை செய்தனர். கல்லேற்றும்கரை ரயில் நிலைய டிக்கெட் ...

அண்ணா பல்கலை அறையில் கலாம் பொருட்கள் பாதுகாப்பு

Posted:

சென்னை, அண்ணா பல்கலையில், அப்துல் கலாம் தங்கும் அறையிலுள்ள, கலாமின் பொருட்கள் மற்றும் விருதுகளை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தப் பொருட்களின் உரிமை குறித்து, அரசு முடிவெடுக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.அண்ணா பல்கலையின் முன்னாள் மாணவர் மற்றும் பேராசிரியரான அப்துல் கலாமுக்கு, அண்ணா பல்கலையில், செவ்வாய்கிழமை இரங்கல் கூட்டம் நடந்தது. அப்துல் கலாமின் படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ...

ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி

Posted:

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இறுதி சடங்கு, இன்று நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில், இன்று கடைகள் மூடப்படுகின்றன; லாரிகள் ஓடாது. சினிமா காட்சிகள் ரத்து என, யார் நிர்பந்தமும் இல்லாமல், அனைத்து அமைப்பினரும், தானாக முன்வந்து அறிவித்துள்ளனர். அரசு முழு விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகள் இயங்காது. அரசியல் கட்சி தலைவர்கள் மறைந்தால், கடைகளை மூடும்படியும், வாகனங்களை நிறுத்தும்படியும், கட்சி தொண்டர்கள் வற்புறுத்துவர். ஆனால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, நாடு முழுவதும், மக்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.இன்று, அவரது இறுதி சடங்கு ...

கலாம் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை!

Posted:

சென்னை: 'என் உடல்நிலை காரணமாக, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதி சடங்கில், கலந்து கொள்ள இயலவில்லை' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இந்தியாவின், 11வது ஜனாதிபதியும், விஞ்ஞானிகள், இளைஞர்கள், பள்ளி சிறுவர்கள், சாதாரண குடிமக்கள் என, அனைவராலும் போற்றப்பட்டவர், அப்துல் கலாம்.அனைவரின் நெஞ்சில் நிறைந்தவர்; தமிழகத்தின் தலை சிறந்த மைந்தர். அவரது மறைவினால், நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில், மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பத்தில் பிறந்து, உன்னத நிலையை அடைந்தவர்; எதையும் விஞ்ஞானப் பார்வையுடன் அணுகியவர்; ...

கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை

Posted:

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, காங்., துணை தலைவர் ராகுல், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் இன்று ராமேஸ்வரம் வரவுள்ளனர். வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில், மாரடைப்பால் காலமான, மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. இதையடுத்து, அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு, ராமேஸ்வரம் அருகேயுள்ள பேக்கரும்பு கிராமத்தில் இன்று நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™