Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 29 Jul 2015 03:02 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

சாமை பிசிபேளாபாத்

Posted: 29 Jul 2015 02:56 PM PDT

வரகரிசி டோக்ளா & மிக்சட் மில்லட் அடை

Posted: 29 Jul 2015 02:54 PM PDT

தமிழ்த்தாய்க்கு தலைமகனார்

Posted: 29 Jul 2015 02:50 PM PDT

தமிழ் தாய்க்கு தலைமகனார் தன்னிகரில்லா மக்கள் தலைவரானார் தமிழில் அரிச்சுவடி வளர்சியில் அறிவியல்படி இவரால் உயரப் பறந்தது இந்தியக் கொடி வேலைக்காக வெளிநாடு செல்லும் போதையில் விஞ்ஞானத்தை காட்டி அஞ்ஞானம் அகற்றிய அற்புதர் கனவென்றாலெ இயலாமை அதை களம் கட்டி இழுத்ததால் இந்திய இளைஞர்களை கண்டு வெளிநாடுகள் பொறாமை சாதித்த பிறகும் கூட போதிப்பில போக ஒரு மனம் வேண்டும் பிள்ளைகளுக்கு ஆசானாய்... தகப்பனாய்... தோழனாய்... கடைக் கோடியில் உதயமாகி கண்ணியராய் வாழ்ந்து நாட்டுக்கு உழைத்து உத்தமரானார் மக்கள் ...

கலாமுக்கு ஓர் அஞ்சலி !

Posted: 29 Jul 2015 02:47 PM PDT

இந்தியத் திருநாட்டின் பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ ! பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ ! முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு ! "உன் பிறப்பு ஒரு சம்பவம் ஆனால் உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் ! நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் ! காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ ! மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் ! காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல ! காணவரும் மக்களுக்காக ! கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் ...

தேசியச் செய்திகள்

Posted: 29 Jul 2015 02:42 PM PDT

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ...

வரலாற்றில் இன்று - ஜூலை

Posted: 29 Jul 2015 02:41 PM PDT





மரணம் துரத்துகிறது!

Posted: 29 Jul 2015 02:39 PM PDT

நெத்திலிமேடு என்ற ஊருக்கு ஒரு சாது வந்திருந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு உபதேசங்களைச் செய்ய ஆரம்பித்தார். அவர் சொன்ன நல்லுரைகளால் அங்குள்ள மக்கள் நல்வழிப்படுத்தப் பட்டனர். எனவே, அவருக்கு அவ்வூரில் செல்வாக்கு உயர்ந்தது. ஒருநாள் அவர் தம்முடைய உபதேசத்துக்கு இடையில் சொன்னார். ""பணத்தை நீங்கள் எல்லாரும் தர்ம வழியில் தான் தேட வேண்டும். தர்மம் தவறி குறுக்கு வழியில் சம்பாதிக்கப் படும் பணம் அந்த வழியிலேயே போய் விடும். அது மட்டுமல்ல... பணம் எப்படிப்பட்ட இணை பிரியாத நண்பர்களையும், விரோதிகளாக மாற்றிவிடும் ...

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

Posted: 29 Jul 2015 02:15 PM PDT

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ''மாணவர்களே கனவு காணுங்கள்'' என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். 4. நாட்டுக்கு சேவை செய்ய ...

கனவு நாயகனே கலாமே!

Posted: 29 Jul 2015 02:14 PM PDT

கனவு  நாயகனே  கலாமே! காலத்தால்  அழியா காவியமே! தமிழ்  பெற்ற  தவமே! தாயகம்  போற்றும்  தங்கமே! அக்னிச்சிறகுகளை  அருளிய  அறிவே! அகிலமே  அதிசியக்கும்  அறமே! ஏழ்மையில்  அரும்பிய  வலியவனே! எல்லோர்  விரும்பும் எளியவனே! சாதிக்க  பிறந்த  சரித்திறமே! சகாப்தம்  கண்ட  யதார்த்தமே! இளைஞரே இமயமென்ற இசையே! தேசத்தை  நேசித்த  தென்றலே! சிந்திக்கத்  தூண்டிய  சிகரமே! அழிவில்லையுனக்கு  நீயொரு  அணையாதீபம்!!!

தமிழ்நாட்டில் தாவரங்கள் (127)

Posted: 29 Jul 2015 11:55 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

190 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானது விண்டோஸ் 10!

Posted: 29 Jul 2015 11:24 AM PDT

மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று (புதன்கிழமை), சுமார் 190 நாடுகளில் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. விண்டோஸ் 7/8/8.1 இயங்குதளங்களின் 'பைரேட்' (Pirate) பதிப்புகள் அல்லாது அதிகாரப்பூர்வ பதிப்புகளை வைத்திருக்கும் பயனர்கள், இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 இயங்குதளத்தின் தோல்விக்கு பிறகு, மைக்ரோசாப்ட் ஆற அமர, அணு அணுவாய் உழைத்து உருவாக்கி இருக்கும் இந்த விண்டோஸ் 10, வெளிவர ஏறத்தாழ 3 வருடங்கள் பிடித்திருக்கிறது. திறன்பேசிகள் ...

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV

Posted: 29 Jul 2015 11:19 AM PDT

Group: Group IV ((+)ssRNA) வரிசை: Nidovirales குடும்பம்: Coronaviridae துணைக்குடும்பம்: Coronavirinae பேரினம்: Betacoronavirus இனம்: MERS-CoV மெர்ஸ் நோய் (Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV) ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஒட்டகங்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகள் கடந்த ஒன்றை ஆண்டுக்கு ...

ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Posted: 29 Jul 2015 09:57 AM PDT

'ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டது, ஆகுமானது என்று பொருள். தடை செய்யப்பட்டது. விலக்கப்பட்டது 'ஹராம்' ஆகும். இஸ்லாம் மார்க்கத்தில் இந்தச் செயல்களெல்லாம் நன்மை அளிப்பவை. இவற்றைச் செய்ய அனுமதி உண்டு என்று கூறப்பட்டவை ஹலால். இந்தச் செயல்களெல்லாம் தீமை பயப்பவை, பாவச் செயல்கள் எனவே இவற்றுக்கு அனுமதி இல்லை என்று விலக்கப்பட்டவை ஹராம். உதாரணமாக இஸ்லாத்தில் வியாபாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. ''வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியைத் தடுத்துவிட்டான் (இறைவன்). எவரேனும் பின்னும் ...

கலாம் என்றால் கலகமா... கருணாநிதிக்கு முஸ்லீம்கள் கடும் கண்டனம்

Posted: 29 Jul 2015 09:44 AM PDT

சென்னை: கலாம் என்றால் கலகம் என்று தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை திமுக தலைவர் கருணாநிதி புண்படுத்தி விட்டார் என்று இஸ்லாமிய அமைப்பும், பிற அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில் கலாம் என்றால் கலகம் என்று தமிழில் பொருள் உண்டு என்று கருத்து தெரிவித்திருந்தார். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது. கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு இதுவரை அப்துல் கலாம் கருத்து தெரிவிக்கவில்லை. அமைதியாக இருக்கிறார். அதேசமயம், இஸ்லாமியர்களிடையே ...

உங்கள் தோழியாக !!!!

Posted: 29 Jul 2015 09:33 AM PDT

பெயர்: ப்ரீதிகா  சந்திரகுமார்
சொந்த ஊர்: கண்டி, ஸ்ரீ லங்கா
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: நூல்கள் சில தேடும் போது ஈகரை கிடைத்தது,பொக்கிஷம் போல்
பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல்
தொழில்: ஊடகவியலாளர்
மேலும் என்னைப் பற்றி: பாரதி கண்ட புதுமை பெண்!!!!!!!!!!

இலங்கை தமிழச்சி அறிமுகம்

Posted: 29 Jul 2015 08:26 AM PDT

பெயர்:தமிழிசை
சொந்த ஊர்:பதுளை
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:தேடல்
பொழுதுபோக்கு:தமிழறிதல்
தொழில்:கதை கவிதை கட்டுரை
மேலும் என்னைப் பற்றி:தமிழேமூச்சு

வழித்துணை மட்டுமல்ல.. வாழ்க்கைத் துணையும்!

Posted: 29 Jul 2015 07:43 AM PDT

குலதெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம் – இந்த தெய்வங்களை எந்தக் காலத்திலும் கைவிட்டு விடக்கூடாது. இந்த அனைத்து தெய்வங்களும் நம் குலம் காக்க வந்த தெய்வங்கள். நம் குடும்பத்தின் ந ன்மைக்காக நம்முடனே அரூபமாக (உருவம் இல்லாமல்) இருந்து வருபவர்கள். – காவல் தெய்வத்தின் முக்கியத்துவம் என்ன என்று பலருக்கும் தெரியவில்லை. "காவல் தெய்வம்' என்று நாங்கள் வணங்குகிற ஒரு தெய்வம் கிராமத்தில் இருந்து வந்தது. குழந்தையாக இருந்தபோது எல்லா வழிபாடும் செய்வோம். நகரத்துக்கு வந்த பின்பு வெளி நாட்டுக்குப் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 29 Jul 2015 07:25 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ஷிர்டி சாய் பாபா ஷிர்டி கிராமத்திற்கு வந்த கதை

Posted: 29 Jul 2015 03:32 AM PDT

ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபா வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு. அப்படியான ஓர் அதிகாலை... வேப்ப மரத்தடிக்கு வந்த சிலர் வியப்போடு மரத்தடியை ...

பாபாவின் பல ரூபங்கள், பல சக்திகள்!

Posted: 29 Jul 2015 01:36 AM PDT

ஷிரடி பாபா அஷ்டமகா சக்திகள் பெற்றிருந்த மகான். அவர் பல தெய்வங்களின் வடிவில் பக்தர்கள் சிலருக்குக் காட்சி அளித்தார் என்பதை முன்பு பார்த்தோம். அவர் தெய்வங்களின் ரூபத்தில் மட்டுமல்லாமல் பல வித மனிதர்கள் ரூபத்திலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்குக் காட்சி அளித்திருந்தார். ஒரு முறை நாச்னே என்ற பக்தரின் சகோதரர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நாச்னே தன் அண்ணனின் அறுவை சிகிச்சை நல்ல விதமாக முடிந்து அவர் குணம் அடைய வேண்டும் என்று பாபாவை ஆழ்ந்த பக்தியுடன் வேண்டிக் கொண்டிருந்தார். ...

'டாஸ்மாக்' நாளை விடுமுறை?

Posted: 28 Jul 2015 09:43 PM PDT

சென்னை : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிச் சடங்கை முன்னிட்டு, தமிழக அரசு, நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது. டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்துக்கு, தமிழகம் முழுவதம் மதுக் கடைகள் உள்ளன, கலாம் இறுதிச்சடங்கு நடப்பதை முன்னிட்டு, நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு, டாஸ்மாக் நிறுவனத்துக்கும் பொருந்துமா என, மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது .டாஸ்மாக் வட்டாரத்தில் ...

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

Posted: 28 Jul 2015 09:41 PM PDT

ஜூலியட் கியூரி என்ற பெண் விஞ்ஞானி தான் நியூட்ரானை கண்டுபிடித்தவர். கியூரி என்ற பெயரை கேட்டவுடனே எல்லோருக்கும் மேரி கியூரிதான் நினைவுக்கு வரும். அந்த மேரி கியூரியின் மகள்தான் ஜூலியட் கியூரி. பொதுவாக விஞ்ஞானிகளின் குழந்தைகள் விஞ்ஞானிகளாக வருவதில்லை. அந்த சித்தாந்தத்தில் விதிவிலக்கானவர் ஜூலியட். இவரது முழுப்பெயர் ஐரீன் கியூரி ஜூலியட். 1897 செப்டம்பர் 12-ல் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற பெற்றோரின் குழந்தை என்பதை மறந்து, கடுமையாக உழைத்து படித்தார், ஜூலியட். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ...

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை

Posted: 28 Jul 2015 09:34 PM PDT

-- ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை செய்வதைப் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பூஜை என்ன மாதிரியான பலனை தருகிறது என்பதைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து வருகிறார்கள். ஆடி வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை செய்தால், ஒரு கோடி சுமங்கலிப் பிரார்த்தனைகள் செய்த பலன் உண்டு. மேலும் கணவரின் தீர்க்காயுளுக்காகவும், பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வதற்காகவும், பிரிந்த தம்பதிகள் கூடுவதற்காகவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும் விளக்கு பூஜை செய்தல் நல்லது. ஆடி மாதத்தில் மலையில் ...

நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி

Posted: 28 Jul 2015 09:22 PM PDT

- நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக, நடிகர் ராதாரவி ஆதரவு திரட்டிய கூட்டத்தில், விஷால் அணியைச் சேர்ந்த ஒருவர், சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். இதனால், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், இரு அணிகள் மோதுகின்றன. நடிகர் ராதாரவி தலைமையிலான அணியில் நடிகர்கள் சரத்குமார், விஜயகுமார், நடிகை குயிலி என, சிலர் போட்டியிட உள்ளனர். நடிகர் விஷால் தலைமையிலான அணியில், நடிகர்கள் நாசர், கருணாஸ், ...

சுதந்திர தின விழா ஏற்பாடு துவக்கம்

Posted: 28 Jul 2015 03:37 PM PDT

சென்னை : - - சென்னையில், சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடு துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, தமிழக அரசு சார்பில், கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்படும். கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில், முதல்வர் கொடியேற்றுவார். வழக்கம்போல், இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று, முதல்வர் ஜெயலலிதா கொடியேற்ற உள்ளார். சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடு, தற்போது துவக்கப்பட்டு உள்ளது. நேற்று, கோட்டை கொத்தளம் அருகே, மேடை அமைக்கும் பணி துவங்கியது. - -

பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Posted: 28 Jul 2015 03:20 PM PDT

நண்பர்களே, எனக்கு பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை. ஈகரையில் தேடினேன். கிடைத்தது. ஆனால் கடைசி பாகத்தின் அரை பகுதி மட்டுமே உள்ளது. யாராவது எனக்கு முழு புத்தகமும் கிடைக்கும் படி செய்வீர்களா? நன்றி.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™