Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அப்துல் கலாம் மறைவிற்கு மக்கள் உருக்கம்: ராமேஸ்வரத்தில் நாளை உடல் நல்லடக்கம்

Posted:

புதுடில்லி: மாரடைப்பால் காலமான, மக்கள் ஜனாதிபதி, அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாமின் மறைவுக்கு, நாடு முழுவதும் உள்ள மக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் உடல், சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் முழு அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. 'மக்கள் ஜனாதிபதி' என, நாட்டு மக்களால் போற்றப்படும், 'பாரத ரத்னா' டாக்டர்.அப்துல் கலாம், 84, நேற்று முன்தினம், வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில், மாரடைப்பால் காலமானார். அவரின் உடல், நேற்று காலை, 7:00 மணிக்கு ஷில்லாங்கில் இருந்து, இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில், அசாம் மாநிலம் ...

பேச்சுகள், கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு, 'தினமலர்' நாளிதழ் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:தமிழக ஏழை மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று மிகப்பெரிய தேர்ச்சி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், ஆண்டு தோறும், 'ஜெயித்துக் காட்டுவோம்' என்ற கல்வித் திருவிழாவை, முக்கிய நகரங்களில், 'தினமலர்' நாளிதழ் நடத்தி வருகிறது. மாணவ, மாணவியருக்கு அறிவுரைசென்னையில் நடந்த, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில், இரு முறை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மிகுந்த ஆர்வத்துடன் ...

வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்கள் இனி தப்ப முடியாது: மென்பொருள் மூலம் தகவல் திரட்ட திட்டம்

Posted:

மும்பை: அரசுக்கு வருமான வரி செலுத்தாமல், சாமர்த்தியமாக காலம் தள்ளிக் கொண்டிருப்போரை மடக்கிப் பிடித்து, வரி வளையத்திற்குள் கொண்டுவர, மத்திய நிதியமைச்சகம் அதிரடித் திட்டம் தீட்டியுள்ளது. மத்திய அரசு ரகசியமாக உருவாக்கி வரும் நுண்ணறிவுத் திட்டத்தை அமல்படுத்த, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் தொகையில், சீனாவுக்கு அடுத்தபடியாக, 127 கோடி பேருடன் இரண்டாமிடம் வகிக்கும் இந்தியாவில், வரி செலுத்துவோர், 3 சதவீதம் பேர் மட்டுமே. கொழுத்த வருமானம் வந்தாலும், பல தில்லுமுல்லுகளை செய்து, ஏராளமானோர் வரி செலுத்தாமல் தப்பி வருகின்றனர். பலர், ...

பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலும் தாக்குதல் நடத்த திட்டம்: பாக்., பயங்கரவாதிகளின் 'பகீர்' சதி

Posted:

புதுடில்லி : பாகிஸ்தானில் இருந்து, பஞ்சாப் மாநிலத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலும் தாக்குதல் நடத்த, சதி திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தாக்குதல் :
பாகிஸ்தானில் இருந்து, பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூருக்குள் நேற்று முன்தினம் ஊடுருவிய, மூன்று பயங்கரவாதிகள், பஸ், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் எஸ்.பி., ஒருவர் உட்பட, எட்டு பேர் பலியாகினர். தினா நகர் பகுதியில் நடந்த என்கவுன்டரில், மூன்று பயங்கரவாதிகளும், போலீசாரால் ...

மனிதநேயத்தை நெஞ்சில் தாங்கி வாழ்ந்த கலாம்

Posted:

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு, பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதி :மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி, நான், 2002 ஜூன், 13ம் தேதி எழுதிய கவிதையின், ஒரு சில வரிகளை, இந்த நேரத்தில் நினைவூட்டுவது, பொருத்தமாக இருக்கும் என, கருதுகிறேன்.கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்துமடமை நீங்கி மத நல்லிணக்கம் ஓங்க;மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி நாட்டின்மணி விளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று!அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல்அமைதி காக்கும் கேடயமாய் ஆவதற்கும்மறு பிறப்பை ...

கலாமின் கடைசி நிமிடங்கள்

Posted:

அப்துல்கலாமின் கடைசி சிந்தனை கூட நாட்டின்எதிர்காலத்தை பற்றியதாகவே இருந்தது. மரணிக்கும் தருவாயில் கூட நாட்டுக்காக,ஓய்வில்லாமல் உழைத்தவர் இவர்ஒருவராகத்தான் இருக்க வேண்டும். ஜூலை 27 ம் தேதி, அப்துல் கலாம் ஷில்லாங் சென்றபோது, அவருடன் சென்ற ஸ்ரீஜன்பால் சிங் என்பவர் தனது அனுபவத்தை முகநுாலில் எழுதி உள்ளார். அவர் கூறியதில் முக்கிய சாராம்சம்:டில்லியில் இருந்து ஜூலை 27ம் தேதி நண்பகல் 12 மணிக்கு, ஷில்லாங்கை நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது. கவுகாத்தி செல்லும் விமானத்தில், கலாம் 1எ சீட்டில் அமர்ந்திருந்தார். நான் 1சி சீட்டில் அமர்ந்திருந்தேன். ...

மாணவர்களும் கலாமும்

Posted:

விஞ்ஞானி, ஏவுகணை மனிதன், ஜனாதிபதி உள்ளிட்ட பல பெருமைகளுக்கு கலாம் சொந்தக்காரர் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்பதே இவரது விருப்பமான பணியாக இருந்தது என சொல்லாம். இந்தியாவில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் தேசம் முழுவதும் உள்ள மாணவர்களின் ரோல்மாடலாக தன்னை உயர்த்திக் கொண்டார். அப்துல்கலாம் மறைவுச் செய்தியைக் கேட்ட, அசாமைச் சேர்ந்த அன்வேஷா ராய் என்ற 14 வயது மாணவி கூறியதாவது; 'அசாமின் கவுகாத்தி நகரில் 4 ஆண்டுகளுக்கு முன் குளிர்கால காலை நேரத்தில் என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை. காரணம் அப்பள்ளியில் ...

விடுமுறை குறித்து முறையான அறிவிப்பு இல்லை: கடும் அவதிக்குள்ளான பள்ளி மாணவர்கள்

Posted:

தமிழக அரசின் முறையான அறிவிப்பு இல்லாததால், பள்ளி, கல்லுாரிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகினர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, நேற்று முன்தினம் இரவே, பல காட்சி ஊடகங்களில் செய்தி வெளியானது. ஊடக செய்திகளை அதிகாரபூர்வமாக எடுத்துக் கொண்டு, பல தனியார் பள்ளிகள் விடுப்பு அறிவித்து, மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு, மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பின.ஆனால், பள்ளி, கல்லுாரிகள் இயங்குமா அல்லது விடுமுறையா என்ற தெளிவான அறிவிப்பை, ...

இந்தியா மீது பாக்., புகார்

Posted:

இஸ்லாமாபாத் : கடந்த 15ம் தேதி, எல்லைக் கட்டுப்பாட்டு கோடருகே, சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம், இந்திய ராணுவத்தால் இயக்கப்பட்டதாக, பாக்., ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து, பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர், இஸ்லாமாபாத்தில் நேற்று கூறியதாவது: கடந்த 15ம் தேதி, இந்தியா - பாக்., எல்லைக் கட்டுப்பாட்டு கோடருகே பறந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தின் கேமராவிலிருந்து பெறப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து பார்க்கையில், இந்திய பகுதியிலிருந்து, இந்திய ராணுவத்தினரால் அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. வீடியோ காட்சிகள் ...

தேசிய கண்டுபிடிப்பு பிரசாரத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கலாமின் பெயர்

Posted:

புதுடில்லி :மறைந்த முன்னாள் ஜனாதிபதி, ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில், 'தேசிய கண்டுபிடிப்பு பிரசாரம்' (நேஷனல் இன்வென்ஷன் காம்பைன்) திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, 'ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய கண்டுபிடிப்பு பிரசாரம்' என, வைக்கப்படுகிறது.மாணவர்கள், தங்கள் பாடங்களைத் தாண்டி, அறிவியல் அறிவில் சிறந்து விளங்குவதை ஊக்குவிப்பதற்கும், பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா விஷன்' திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையிலும், 'தேசிய கண்டுபிடிப்பு பிரசாரம்' திட்டத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்தது. கடந்த, 11ம் தேதி, டில்லியில் ...

எளிளையின் சிகரம் அப்துல் கலாம்: ஜனாதிபதி மாளிகை பணியாளர்கள் உருக்கம்

Posted:

புதுடில்லி : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் எளிமையைப் பற்றி, ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள், அவருடனான தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.ஜனாதிபதி மாளிகையில், 18 ஆண்டுகள் பணியாற்றிய ஜே.கே. சஹா கூறியதாவது:ஒரு நாள் அப்துல் கலாம் 'இன்டர் காம்' ல் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரைச் சொல்லி, அவரின் தொலைபேசி இணைப்பை பெற்றுத் தருமாறு கூறினார். பொதுவாக, ஜனாதிபதியின் செயலர்கள் தான் இவ்வாறு இணைப்பை பெற்றுத் தருமாறு கேட்பது வழக்கம்.தவிர, கலாம் அவர்கள் கூறிய பெயர் எனக்கு புரியவில்லை. எனவே, அவரை நேரடியாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™