Tamil News | Online Tamil News |
- பஞ்சாபில் நுழைந்து பாக்., பயங்கரவாதிகள் வெறியாட்டம் போலீசார், பொதுமக்கள் 7 பேர் சுட்டுக்கொலை
- பார்லி., குஸ்தியை வேடிக்கை பார்க்கும் கட்சிகள்
- 'ஏர் இந்தியா' நஷ்டம் ரூ.5,547 கோடி
- மண்ணுலகை நீத்தார் மக்கள் ஜனாதிபதி: இழந்தோம் 'பாரத ரத்னா' அப்துல் கலாமை:உலகம் முழுவதும் இந்தியர்கள் கண்ணீர்
- இப்படி ஒரு ஜனாதிபதி இனிமேல் கிடைப்பாரா...: எளிமையின் மறுபெயராக விளங்கியவர்...
- ஏழ்மை + எளிமை + திறமை + அர்ப்பணிப்பு = கலாம்
- புதிய எண்ணங்களுடன் வெற்றி காணுங்கள்": அப்துல் கலாம்
- ராமேஸ்வரத்தில் தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும்: பேரன், உறவினர்கள் கதறல்
- 'பள்ளிகளில் மூன்றாவது மொழியான தமிழ்': கருணாநிதி
- மேலிட செல்வாக்கு மமதையில் வலம் வந்தவர் செந்தில் பாலாஜி
- கலாம் மறைவு: இரங்கல் தெரிவிக்க மத்திய அமைச்சரவை சிறப்புக்கூட்டம்
| பஞ்சாபில் நுழைந்து பாக்., பயங்கரவாதிகள் வெறியாட்டம் போலீசார், பொதுமக்கள் 7 பேர் சுட்டுக்கொலை Posted: குருதாஸ்பூர்: பஞ்சாபின் குருதாஸ்பூர் நகரத்திற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நான்கு பேர், அப்பாவி பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள் என, ஏழு பேரை சுட்டுக் கொன்று வெறியாட்டம் ஆடினர். நம் வீரர்கள், அந்த பயங்கரவாதிகள் நால்வரையும் சுட்டுக் கொன்றனர். |
| பார்லி., குஸ்தியை வேடிக்கை பார்க்கும் கட்சிகள் Posted: மழைக்கால கூட்டத் தொடரில், பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும், முட்டல் மோதல்களை, மற்ற கட்சிகள் அனைத்தும், தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்றன. கடந்த 21ம் தேதி துவங்கிய, மழைக்கால கூட்டத்தொடரில், ஒருநாள்கூட, அலுவல்கள் நடைபெறவில்லை. இரண்டாவது வாரத்தின், முதல்நாளான நேற்று, ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இரண்டு சபைகளிலும் பழைய காட்சிகளே தொடர்ந்தன. பொதுவாக, அரசுக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டால், சூழ்நிலைக்கு ஏற்ப, மற்ற முக்கிய கட்சிகள், தங்களது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி, ... |
| 'ஏர் இந்தியா' நஷ்டம் ரூ.5,547 கோடி Posted: புதுடில்லி: அரசு நிறுவனமான, 'ஏர் இந்தியா' கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில், 5,547 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. |
| Posted: ஷில்லாங்: உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால், 'மக்கள் ஜனாதிபதி' என, அன்புடன் அழைக்கப்பட்டவரும், இளைய தலைமுறையினரிடையே, 'கனவு காணுங்கள்' என்ற தன்னம்பிக்கையை விதைத்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டியவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று இரவு, மாரடைப்பால் காலமானார். முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், 84, வடகிழக்கு மாநிலமான, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை பயிற்சி நிறுவனமான, ஐ.ஐ.எம்.,மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். நேற்று மாலை துவங்கிய கருத்தரங்கில், ... |
| இப்படி ஒரு ஜனாதிபதி இனிமேல் கிடைப்பாரா...: எளிமையின் மறுபெயராக விளங்கியவர்... Posted: எளிமை என்பதற்கு ஏராளமானோர் விளக்கம் தந்திருக்கின்றனர். 'எவ்வளவு எளிமையாக இருக்க வேண்டுமோ, அதற்கு மேல் ஒன்றுமில்லை என்ற அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும்' என்றார் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.'உலகிலேயே மிக வசதியானது என்பது எளிமைதான்' என்றார்பிரமாண்டங்களைப் படைத்தஇத் தாலியின் லியனார்டோ டாவின்சி. 'ஆழ்ந்த சிந்தனையின்விளைவாக இயற்கையிலேயே எழுகிற குணாதிசயம்தான் எளிமை' என்றார் வில்லியம் ஹாஸ்லிட் என்ற தத்துவ ஞானி. இதுபோன்று எளிமைக்குஎத்தனையோ பேர் எத்தனையோவிதங்களில் விளக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், நாடு பேதமில்லாமல் தற்போது உலகில் வாழும் ... |
| ஏழ்மை + எளிமை + திறமை + அர்ப்பணிப்பு = கலாம் Posted: ஏவுகணை விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி, இளைஞர்களின் வழிகாட்டி, எளிமையின் நாயகனாக திகழந்தஅப்துல்கலாம் நேற்று மாரடைப்பால்காலமானார். இவர் 1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தமிழைப் பாடமொழியாகக் கொண்டு பயின்றார். ஆங்கிலம்ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. திருச்சி செயிண்ட் ஜோசப்பில் கல்லுாரிப் படிப்பை முடித்த அவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜியில் விமானயியலில் பட்டம் பெற்றார். வெளிநாட்டு நிறுவனங்களில் பயிற்சி பெற வாய்ப்பின்றி முழுக்க முழுக்க ... |
| புதிய எண்ணங்களுடன் வெற்றி காணுங்கள்": அப்துல் கலாம் Posted: 'தினமலர்' மற்றும் டி.வி.ஆர்.அகாடமியின் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 2012 டிச., 6ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.அவரது சிறப்புரையின் முழுத்தொகுப்பு:புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்கஎனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.நண்பர்களே, இன்றைக்கு தினமலர் நடத்தும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் வந்து மாணவர்களாகிய உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்பிற்கு ... |
| ராமேஸ்வரத்தில் தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும்: பேரன், உறவினர்கள் கதறல் Posted: ராமேஸ்வரம்: அப்துல்கலாம் உடலை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும்,என அவரது பேரன் மற்றும் உறவினர்கள் அழுதபடி கூறினர்.அப்துல் கலாம் இறந்தது குறித்து அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் பேரன் சலீம் கூறியதாவது: நேற்று (ஜூலை 26ல்) மாலை 4 மணிக்கு தாத்தாவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். எனது நலம், அவரது அண்ணன் நலம் குறித்து விசாரித்தார். உறவினர் நலம் குறித்து கேட்டார். ஷில்லாங்கில் குளிர் சீதோஷ்ண நிலையாக இருந்ததால், சுவாச பிரச்னை ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளதுள்ளது. இந்த செய்தியை எங்களால் தாங்கிக்கொள்ள ... |
| 'பள்ளிகளில் மூன்றாவது மொழியான தமிழ்': கருணாநிதி Posted: சென்னை : 'தமிழக பள்ளிகளில், தமிழ் மொழி, மூன்றாவது மொழியாக ஆக்கப்பட்டுள்ளதோடு, வாரத்திற்கு ஒரு முறை மட்டும், கற்பிக்கப்படும் மொழியாகவும் மாறி விட்டது' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்.அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் கல்வி கற்போர், தமிழைப் படிக்காமலேயே, பல்கலைக் கழகம் வரை பட்டம் பெற்று, வெளிவரும் அவல நிலையை அகற்ற, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி தான், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக பெருகி, 10ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும், தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது என்ற நிலை உருவானது.ஆனால், அரசு ஆரம்பப் ... |
| மேலிட செல்வாக்கு மமதையில் வலம் வந்தவர் செந்தில் பாலாஜி Posted: முதல்வர் ஜெயலலிதாவுடன் சிறை சென்ற, இளவரசியின் குடும்பத்தாருடன் ஏற்பட்ட நெருக்கத்தால், தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற மமதையில், வலம் வந்த செந்தில் பாலாஜி மீது, கட்சியினர், மூத்த அமைச்சர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர் புகார் அளித்ததால், அவர் வகித்த பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் மிக நெருக்கமான, இளவரசியின் குடும்பத்தாருக்கு, மிகவும் வேண்டியவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அதனால், கட்சியிலும், ஆட்சியிலும், அதிகாரம் பெற்றவராக வலம் வந்தார். மற்றவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், தனக்கென தனி ராஜாங்கம் ... |
| கலாம் மறைவு: இரங்கல் தெரிவிக்க மத்திய அமைச்சரவை சிறப்புக்கூட்டம் Posted: புதுடில்லி: மக்களின் ஜனாதிபதி என அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவையொட்டி அவருக்கும் இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று மத்திய அமைச்சரவை சிறப்புகூட்டம் நடக்கிறது.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,84 , மேகாலயா தலைநகர் சென்றிருந்தார். ஷில்லாங்கில் ஐ.ஐ.எம்.மில், நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக பெதானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 28,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |