Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அதிக இளைஞர்கள்

Posted:

டிராஸ்:''பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது,'' என, ராணுவத்தின் வடக்கு பிரிவின், லெப்டினன்ட் ஜெனரல், டி.எஸ்.ஹூடா கூறினார்.

கடந்த 1999ல், கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவி, அதனால் ஏற்பட்ட போரில் இந்தியா பெற்ற வெற்றி, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26ம் தேதி, 'விஜய் திவஸ்' என்ற பெயரில் ராணுவத்தினரால் கொண்டாடப்படுகிறது.ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், டில்லி, 'அமர் ஜவான் ஜோதி' எனப்படும், மறைந்த வீரர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, கார்கில் போரில் இறந்த, 490 வீரர்களுக்கு அஞ்சலி ...

மதவெறுப்புணர்வை தூண்டும் இணையதளங்கள் முடக்கம்

Posted:

புதுடில்லி:மதவாத வெறுப்புணர்வை துாண்டும் இணையதளங்களை முடக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, டில்லியில் நேற்று, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது:மத வெறுப்புணர்வை துாண்டும் வகையில், பயங்கரவாத அமைப்புகள், இணையதளங்களை பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகம் தொடர்பாக, வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான, 40 இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை அமைப்புகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

அரசின் உத்தரவை அடுத்து, சர்ச்சைக்குரிய இணையதளங்களும், சமூக வலைதளத்தில் இடம்பெற்ற, வெறுப்பை துாண்டும் பக்கங்களும் ...

ஈரானில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு அழைப்பு

Posted:

புதுடில்லி:''பொருளாதார தடை நீக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பிற நாடுகளை முந்திக்கொண்டு, ஈரானில் இந்தியா முதலீடு செய்ய வேண்டும்,'' என, ஈரான் துாதர்

வலியுறுத்தி உள்ளார். இந்தியாவுக்கான ஈரான் துாதர் கொலம்ரெசா அன்சாரி, டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அடுத்த மூன்று முதல், ஐந்து மாதங்களில், ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. ஈரானின் நீண்டகால நண்பராக, இந்தியா திகழ்ந்து வருகிறது. பொருளாதார தடை விதிக்கப்பட்ட சமயத்திலும், ஈரானுக்கு உறுதுணையாக இந்தியாஇருந்துள்ளது.ஈரானில் ...

விபத்துக்கு கட்டணமில்லா சிகிச்சை: பிரதமர் மோடி அறிவிப்பு

Posted:

புதுடில்லி:''சாலைகளில், விபத்துகளில் சிக்கி, உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், விபத்தில் சிக்குவோருக்கு, முதல், 50 மணி நேரம் கட்டணம் இல்லா, அவசர சிகிச்சை அளிக்க வகை செய்யும் புதிய திட்டம், நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, பிரதமர் மோடி அறிவித்தார்.

வானொலி உரை:
மாதம் ஒருமுறை, 'மன் கீ பாத்' என்ற தலைப்பில், 'மனதில் பட்டதை பேசுகிறேன்' என்ற அர்த்தத்தில், வானொலியில் பேசுவதை, பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று அவர், 15 நிமிடங்கள் பேசியதன் முக்கிய அம்சங்களாவன:
சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் ...

1,241 அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்கள் 4.65 லட்சம் பேர்: 1.55 லட்சம் பேர் 'ஆப்சென்ட்:' 2 மாதங்களில் முடிவு

Posted:

சென்னை : தமிழகத்தில், 1,241 அரசு வேலைக்காக, நேற்று நடந்த, குரூப் - 2 முதல் நிலைத் தேர்வை, 4.65 லட்சம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 1.55 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 'தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 1,241 பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய, குரூப் - 2 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. இதற்கான முதல்நிலைத் தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும், 1,511 மையங்களில் நடந்தது. துணை வணிகவரி அதிகாரி, சார் - நிலை பதிவாளர், சிறைத்துறை ...

இந்தியாவிலிருந்து 61,000 கோடீஸ்வரர்கள் ஓட்டம்

Posted:

புதுடில்லி: கடந்த, 14 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து, 61 ஆயிரம் கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து, அவற்றை தங்களது சொந்த நாடாக மாற்றிக் கொண்டுள்ளனர்.நியூ வேர்ல் வெல்த், எல்.ஐ.ஓ., குளோபல் ஆகிய அமைப்புகள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த நுாற்றாண்டு துவக்கம் முதல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் வேறு நாடுகளுக்கு குடிபுகுவதும், இரண்டாம் குடியுரிமை விண்ணப்பங்கள் அளிப்பதும் அதிகரித்து வருகிறது. கடந்த, 14 ஆண்டுகளில், உலகளவில் அதிகபட்சமாக, சீனாவிலிருந்து 91 ஆயிரம் கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளில் ...

1.4 லட்சம் கி.மீ., நெடுஞ்சாலையின் இருபுறமும் பசுமை: பழ மரம், பூச்செடிகள் வளர்க்க மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி: நாடு முழுவதும், 1.4 லட்சம் கி.மீ., சாலையின் இருபுறமும் பழ மரங்கள், பூஞ்செடிகள் நட்டு, பசுமை நெடுஞ்சாலையாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சாலை அமைப்பு மற்றும் அபிவிருத்தி செலவில், 1 சதவீதத்தை ஒதுக்கவும், அந்தந்த பகுதியில் செழிப்பாக வளரும் மரக்கன்றுகளை நடவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையிலான அமைச்சகம், புதிய பசுமை நெடுஞ்சாலை, மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, 2015ஐ தயாரித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களாவன:* தேசிய நெடுஞ்சாலையில், 1.4 ...

'ஒருநாள்' கோடீஸ்வரி: ஏழைப் பெண்ணிற்கு பாரத ஸ்டேட் பாங்க் கொடுத்த அதிர்ச்சி

Posted:

கான்பூர்: உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணின் கணக்கில், 95 ஆயிரம் கோடி ரூபாயை வரவு வைத்து, பாரத ஸ்டேட் பாங்க் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உபி., மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஊர்மிளா, வீட்டு வேலை செய்து, சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார். மத்திய அரசின், 'ஜன்தன்' திட்டத்தின் கீழ், பாரத ஸ்டேட் பாங்க்கில் சேமிப்பு கணக்கு துவங்கிய ஊர்மிளா, 2,000 ரூபாய் டிபாசிட் செய்தார். பல மாதங்களாக, சேமிப்பு கணக்கு பரிவர்த்தனை இன்றி செயல்படாமல் இருந்த நிலையில், ஊர்மிளாவின் மொபைல் போனுக்கு, பாரத ஸ்டேட் பாங்க்கிடமிருந்து நேற்று, இரு எஸ்.எம்.எஸ்.,கள் ...

விவசாயிகளை காப்பாற்றுங்க: விஜயகாந்த் வேண்டுகோள்

Posted:

சென்னை: 'கரும்பு விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றும் முழுப் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. அதை, மறந்து விடக்கூடாது' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தனியார் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு 1,078 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. அதை வாங்கித் தர, அ.தி.மு.க., அரசு முன்வரவில்லை. மத்திய அரசின் ஆதார விலை அதிகரித்தும், மாநில அரசின் பரிந்துரை விலை குறைந்துள்ளது. இந்த குறைந்த விலையைக் கூட, கரும்பு விவசாயிகளுக்கு தர மறுத்து, தனியார் சர்க்கரை ஆலைகள் வழக்கு தொடுத்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், 250 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி, ...

அண்ணா நூலகத்தில் 'பயோ - மெட்ரிக்' பழுது: பொழுதை போக்கி ஊதியம் பெறும் ஊழியர்கள்

Posted:

அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும், 'பயோ - மெட்ரிக்' அமைப்பு, மூன்று ஆண்டுகளாக பழுதாகி உள்ளதால், ஊழியர்களில் பலர் கையெழுத்து போட்டு, பொழுதைப் போக்கி விட்டு, ஊதியம் பெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, நுாலக ஊழியர்கள் சிலர் கூறியதாவது:அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக, பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. பொதுநுாலகத் துறை அதிகாரிகள் யாரும், நுாலகத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்வதில்லை. நுால்களில் பல திருடு போய்விட்டன. அதை விசாரிக்க கூட இல்லை. நுாலகத்திற்கான நிர்வாக அதிகாரி, துணை ...

பா.ஜ.,வுக்கு சத்ருகன் சின்கா 'டாட்டா?'

Posted:

பாட்னா:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும், பாலிவுட்டின் முன்னாள் பிரபல வில்லன் நடிகர் சத்ருகன் சின்கா, 69, பீகார் முதல்வரும், மோடியின் முதன்மையான எதிர்ப்பாளருமான நிதிஷ்குமாரை நேற்று சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.திடீரென அவர், நிதிஷ்குமாரை சந்தித்தது குறித்து, நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, ''நிதிஷ்குமார், இந்த மாநிலத்தின் பாதுகாவலர். பீகார் கண்ட சிறந்த முதல்வர்களில் நிதிஷ்குமார் முதன்மையானவர்,'' என கூறினார். இதனால், நடிகர் சத்ருகன் சின்கா, ...

ஏமன் குண்டுவீச்சில் 120 பேர் பலி

Posted:

சனா : ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள ரெட் சீ நகரில், சவுதி தலைமையிலான கூட்டு விமானப் படை திடீர் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில், 120க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். கடந்த மார்ச் முதல், ஹூதி என்றழைக்கப்படும் ஷியா பிரிவினருக்கு எதிராக, சவுதி கூட்டு விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை நடத்திய தாக்குதல்களில், ஒரே நாளில் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டதில்லை என, கூறப்படுகிறது. மோகா நகரில், மின் திட்ட பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பும் குண்டுவீச்சில் தரைமட்டமானது. அருகில் இருந்த பல ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™