Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உணவுகளின் போட்டோகள் ! :)

Posted: 26 Jul 2015 12:43 PM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

மாலைநேர சிற்றுண்டிகள் ! - வெங்காய மெது பகோடா + photo :)

Posted: 26 Jul 2015 12:20 PM PDT

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. -

Posted: 26 Jul 2015 11:48 AM PDT

முன்னொரு காலத்தில் சீன தேசத்தை ஆண்ட ஒரு அரசனுக்கு மூங்கில் என்றால் மிகப் பிரியம். அரண்மனைத் தோட்டங்கள் மூங்கில் காடுகளாக மாறியிருந்தன. அவன் பயன்படுத்தும் அணிகலன்கள், தேனீர் அருந்தும் கோப்பைகள், எழுதுகோல், காலணிகள்.. இப்படி எல்லாவற்றிலும் மூங்கிலில் செய்த ஏதாவது ஒன்று இருந்தே ஆகும். - அரண்மனை முழுக்க மூங்கில் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. இருந்தாலும் அந்த ஒவியங்களில் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு சிறந்த மூங்கில் ஓவியத்தைத் தமது அறையில் வைக்க நினைத்தான். - நாட்டிலேயே ...

பாசிப்பருப்பு போண்டா

Posted: 26 Jul 2015 11:44 AM PDT

தேவையானவை : முழு பாசிப்பருப்பு - 1 கப் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன் அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிது உப்பு - ருசிக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். (மட்டா தண்ணி விட்டு அரைக்கவும் ) அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், கொத்தமல்லித்தழை சேருங்கள். கடலை மாவு, அரிசிமாவு, உப்பும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் ...

மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்

Posted: 26 Jul 2015 11:40 AM PDT

கோவிலில் ஆடி மாதம் காஞ்சி வார்ப்பது நாம் அறிந்ததே. அதாவது அரிசியை கஞ்சியாக செய்து அதில் அதிமதுரம், ரகம்,திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சிற்றாமுட்டி,கடலாடி வேர் போன்றவற்றை பொடியாக்கி ஒரு துணியில் கட்டி காஞ்சியில் போட்டு சிறிது நேரம் கழித்து அதை பிழிந்து எடுத்து விட வேண்டும். இந்த கஞ்சியை அருந்தும் அனைவருக்கும் எந்தவித வெம்மை நோயும் இருமல் நோயும் அணுகாது. அத்தகைய சிறப்பு மிக்க கஞ்சி மருந்து நோக்கில் தான் பரிமாறப் படுகிறது சில இடங்களில் கம்பு, கேழ்வரகு கூழும் ...

உலகச் செய்திகள்!

Posted: 26 Jul 2015 11:22 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

வாழ்த்துவோம் -- வெல்டன் ,ஷோபனா !

Posted: 26 Jul 2015 11:20 AM PDT

வாழ்த்துவோம் -- வெல்டன் ,ஷோபனா !



இணைந்து குறுகிய காலத்தில் ,1000 பதிவுகளை கடந்த
ஷோபனா வை வாழ்த்துவோம் .
இதே உற்சாகத்துடன் இணைந்து
ஈகரைக்கு பயனுள்ள பதிவுகள் பல பதிவிட
வாழ்த்துகிறோம் .

வெல்டன் ,ஷோபனா !

ரமணியன்

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Posted: 26 Jul 2015 11:15 AM PDT

திருப்பதி: கோதாவரி நதியில் புனித குளியலை, மூன்று நிமிடங்களில் முடித்து விட வேண்டும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில், 12 ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கரத்தின் போது, மக்கள் திரண்டு வந்து நதியில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, கடந்த 14ம் தேதி துவங்கப்பட்ட கோதாவரி புஷ்கரத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து புனித நீராடி வருகின்றனர். தினசரி ஒரு மணிநேரத்தில், 70 ஆயிரம் பக்தர்கள் வரை கோதாவரியில் நீராடுவதால், நதி நீரில் பாக்டீரியாக்கள் ...

டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்

Posted: 26 Jul 2015 11:07 AM PDT

டாஸ்மாக் மது மனிதர்களை மட்டுமல்ல விலங்கினங்களையும் அடிமைப்படுத்தியுள்ளது என்பதற்கு சான்றாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் ஒரு ஆடு டாஸ்மாக் மதுவை ருசித்து குடித்து வருகிறது. டி.என்.பாளையம் மெயின்ரோடு அருகே டாஸ்மாக் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான குடிமகன்கள் குடிப்பது வழக்கம். கடந்த 4ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் சுற்றித்திரியும் ஆடு ஒன்று டாஸ்மாக் அருகே நின்றுகொன்று குடிமகன்கள் குடித்துவிட்டு வீசி செல்லும் டம்ளர்களில் ...

தேர்வறையில் நேர மேலாண்மை

Posted: 26 Jul 2015 11:04 AM PDT

தேர்வறை பெரும்பாலானவர்களுக்கு பதட்டம் தரும் இடமாக இருக்கிறது. தேர்வுக்காக சரியாக தயாராகாதவர்கள் மட்டுமல்லாது நன்றாக தயார் செய்து வந்தவர்கள் கூட தேர்வறைக்குள் நுழைந்ததும் தடுமாற்றம் அடைவது உண்டு. 'எல்லாம் தெரிந்த கேள்வியாகத்தான் இருந்தது, ஆனால் பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை' என்று பரீட்சை எழுதி முடித்ததும் புலம்புபவர்களும் உண்டு. தேர்வறைக்குள் எப்படி நடக்க வேண்டும், நேரத்தை மிச்சம் பிடித்து வெற்றியை எப்படி தனதாக்க வேண்டும்? * போட்டித் தேர்வு அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகின்றன. வேலைவாய்ப்புக்கான ...

வெற்றி தரும் பழமொழிகள்!

Posted: 26 Jul 2015 10:55 AM PDT

பழமொழிகள் பழமையானவை என்றாலும், நம் முன்னோரின் முதிர்ந்த அனுபவத்தில் மொழிந்தவையாக இருக்கும். இளையோருக்கு அறிவுத் தெளிவைக் கொடுக்கும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவையே பழமொழிகள். அவை நம்மை தீயவற்றில் இருந்து விலக்கி நல்லவற்றை நோக்கி செயல்படத் தூண்டும். அத்தகைய பழமொழிகள் சிலவற்றை பார்ப்போம்..! பருவத்தே பயிர்செய் அவ்வையாரின் அமுதமொழி இது. 'பருவம்' என்பது குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கிறது. உரிய காலத்தில் எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். இல்லையென்றால், எதிர்பார்த்த பலன் கிடைக்காது. படிக்கிற ...

சுய அறிமுகம் - சிவசங்கர்

Posted: 26 Jul 2015 10:50 AM PDT

பெயர்:SIVASANKAR S
சொந்த ஊர்:UDUMALPET
ஆண்/பெண்:MALE
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் VALIYAAGA
பொழுதுபோக்கு:ரீடிங் BOOKS
தொழில்:VAO
மேலும் என்னைப் பற்றி:SAADHARANA MANITHANUKKU THANI ATHIKAARAM VENDUM AADHAR MATTUM POTHATHU

குரு என்ற ஒரு சாமானியன்

Posted: 26 Jul 2015 10:48 AM PDT

பெயர்: குருபிரசாத் சொந்த ஊர்: ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நண்பர் மூலம் பொழுதுபோக்கு: கவிதை, தனிமை, கிரிக்கெட் தொழில்: கணினி துறை மேலும் என்னைப் பற்றி: இவன் - - ஒரு குறு விளக்கம் என்னை பற்றி எழுத எண்ணினேன்...... பித்தனா, சித்தனா, ஜித்தனா இல்லை புத்தனா ? எவரும் இல்லை நான் ஒரு கனவுப் பறவை. இயற்கையாகவே இயற்கைக்கு புறம்பானவை பற்றி யோசித்து அவற்றையே சுவாசிப்பேன். எனை என்றும் ஈர்ப்பது அழகு குழந்தை அழகு குமரி அழகு முதிர்ந்தோர் அழகு புவி அழகு புல் அழகு என்று அழகாய் ...

என்னைப் பற்றி - கி.வெங்கடேசன்

Posted: 26 Jul 2015 10:47 AM PDT

பெயர் :கி.வெங்கடேசன்
த/பெ:கிருஷ்ணமூர்த்தி
விருத்தாசலம் அருகில் கோவிலூர் கிராமம்
ஈகரை அறிமுகம் ஆனது நண்பர்கள் மூலம்
பொழுதுபோக்கு புத்தகம் படித்தல்

இந்தியா-இலங்கை இடையே பாலம்

Posted: 26 Jul 2015 10:44 AM PDT

இந்தியாவின் காலடியில் கண்ணீர்த் துளி போல் இருக்கும் அழகான குட்டி தேசம். பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான தீவு நாடு. சமூக, கலாசார பழக்க வழக்கங்கள் மற்றும் உறவிலும் இந்தியாவுக்கு ஒரு சின்னத்தம்பி. தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் அங்கு மண்ணின் மைந்தர்களாக வாழ்கிறார்கள். தென் மாவட்டங்களில் இலங்கை தமிழர்களின் உறவுகள் அதிகம். உறவு ரீதியாகவும், வணிக ரீதியாகவும் தமிழர்கள் இங்கிருந்து இலங்கைக்கு செல்வதும், அங்கிருந்து இங்கே வருவதும் தலைமுறை தலைமுறையாக ...

சுய அறிமுகம்---கா.செந்தில் குமார்

Posted: 26 Jul 2015 10:42 AM PDT

பெயர்: கா.செந்தில் குமார்
சொந்த ஊர்: விருதுநகர் அருகே சூலக்கரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: வலை தேடல்
பொழுதுபோக்கு: சினிமா
தொழில்: பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி: மெல்ல மெல்ல தெரிந்து கொண்டு வருகுகிறன்

பூக்குட்டி - சுஜாதா

Posted: 26 Jul 2015 10:32 AM PDT

http://www.mediafire.com/download/c1te248bn8391b2/Pookutty.pdf என்றும் அன்புடன் செல்லா

ரோஜா - சுஜாதா

Posted: 26 Jul 2015 10:31 AM PDT

கல்கி இதழில் வெளியான ரோஜா கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்தும் நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி, http://www.mediafire.com/download/0bt1qakr7vmqk1o/Roja.pdf என்றும் அன்புடன் செல்லா

300 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 26 Jul 2015 10:25 AM PDT

300 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

பரமார்த்த குரு கதைகள் - தராசன்

Posted: 26 Jul 2015 10:06 AM PDT

http://www.mediafire.com/download/21ped0fdju2hemg/Paramaatha+Guru+Kathaikal.pdf என்றும் அன்புடன் செல்லா

மதுவிலக்கு வேண்டும் - #bantasmac

Posted: 26 Jul 2015 10:04 AM PDT

மது அரக்கனின் கோரப்பிடியில் ஆண்கள், பெண்கள் என்ற நிலை மாறி, தற்பொழுது மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகள் வரை சிக்கி சீரழியும் கேவலமான நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது! இந்நிலை தொடர்ந்தால், தமிழர்களைப் போன்ற கேவலமான பிறவிகள் உலகில் வேறெங்கும் இல்லை என்ற நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிடுவார்கள்! ஈழத்தை தேர்தலுக்குப் பயன்படுத்திய அரசியல்வாதிகள், இனிமேல் அங்கு பேச எதுவும் இல்லை என்பதறிந்து இப்பொழுது டாஸ்மாக்கை தேர்தல் களத்திற்குக் கொண்டுவந்து விட்டார்கள். இவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு ...

ரத்தன் டாடா - என்.சொக்கன்

Posted: 26 Jul 2015 09:43 AM PDT

என்றோ ஒரு நாள் ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் இருந்து வெளியேறும் நிலைவரும்போது, அவர்கள் தொடங்கிய தொழில்களுக்கு "டாடா" காட்டி அனுப்ப வேண்டும் என்பதற்காகவே, டாடா குடும்பத்தின் முன்னோர்கள், இப்படி ஒரு பெயரை தங்கள் குடும்பப் பெயராக சேர்த்துக் கொண்டனர் போலும். ஆம், ஆங்கிலேயர்கள் துரத்தி அடிக்கப்பட்ட போது இந்திய தொழில்களின் நிலையை வலுவடைய செய்ததில் பெரும் பங்கு டாடா நிறுவனத்தையே சாரும். இது வெறும் ஒருவரால் தொடங்கி முடிவடைந்த சிறு தொழில் அல்ல. பரம்பரை பரம்பரையாக டாடா குழுமம்இயங்கி வருகின்றது, இதில் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(387)

Posted: 26 Jul 2015 09:41 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கி.மு.வில் சோமு - சிம்பு

Posted: 26 Jul 2015 09:38 AM PDT

http://www.mediafire.com/download/c1te248bn8391b2/Pookutty.pdf என்றும் அன்புடன் செல்லா

பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான வீட்டு வேலைக்காரப் பெண்![/u]

Posted: 26 Jul 2015 09:36 AM PDT

எஸ்.பி.ஐ.யின் முட்டாள்தனத்தால் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான வீட்டு வேலைக்காரப் பெண்! கான்பூர்: ஆயிரம் ரூபாய் நோட்டை எதிர்பாராதவிதமாக கண்ணில் பார்த்தாலே நமக்கு அடடா என்று ஆச்சரியம் மேலோங்கும்.. அதுவே ஆயிரக்கணக்கான கோடி பணத்தை இந்தா பிடி என்று கையில் திணித்தால் மாரடைப்பே வந்து விடும் அல்லவா.. அப்படித்தான் நடந்துள்ளது கான்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முட்டாள்தனமான ஒரு காரியத்தால் அந்தப் பெண்ணின் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரம் கோடி பணம் கணக்கி் சேர்ந்து ...

தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்!

Posted: 26 Jul 2015 09:26 AM PDT

மூளையைச் சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தமே தலைவலி ஏற்பட முக்கியக் காரணம். தலை, கழுத்தைச் சுற்றி உள்ள நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்புதான் தலைவலி. மனப்பதற்றம் அதிகரிப்பதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதுவே தலைக்குள் பரவி வலியை உண்டாக்குகிறது. வலி நிவாரண மாத்திரைகளைக் காட்டிலும் பதற்றமான மனநிலையைத் தவிர்ப்பதே தலைவலிக்கான தீர்வாகும். தலைவலி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் ...

பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை

Posted: 26 Jul 2015 09:22 AM PDT

எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால் காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப் பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த நிறுத்தியதோடு, ...

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

Posted: 26 Jul 2015 09:05 AM PDT

ஜூலியட் கியூரி என்ற பெண் விஞ்ஞானி தான் நியூட்ரானை கண்டுபிடித்தவர். கியூரி என்ற பெயரை கேட்டவுடனே எல்லோருக்கும் மேரி கியூரிதான் நினைவுக்கு வரும். அந்த மேரி கியூரியின் மகள்தான் ஜூலியட் கியூரி. பொதுவாக விஞ்ஞானிகளின் குழந்தைகள் விஞ்ஞானிகளாக வருவதில்லை. அந்த சித்தாந்தத்தில் விதிவிலக்கானவர் ஜூலியட். இவரது முழுப்பெயர் ஐரீன் கியூரி ஜூலியட். 1897 செப்டம்பர் 12-ல் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற பெற்றோரின் குழந்தை என்பதை மறந்து, கடுமையாக உழைத்து படித்தார், ஜூலியட். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ...

அறுவடைத் திருவிழா

Posted: 26 Jul 2015 09:00 AM PDT

உணவுப் பயிர்கள் அறுவடை செய்யும் போது நடத்தப்படும் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. அறுவடை செய்யும் போது பயிர்களில் உள்ள ஆவி கோபமடையும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த கோபத்தை குறைக்க அவற்றுக்கு படையல் செலுத்த வேண்டும் என்பது ஆதியில் இருந்து வரும் நம்பிக்கைகளில் ஒன்று. இதன் அடிப்படையில் தான் அறுவடைத் திருவிழாக்கள் இன்றைக்கும் நடத்தப்படுகின்றன. கிரேக்க, ரோம், எகிப்திய, எபிரேய கலாச்சாரங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ...

பாகுபலி - விமர்சனம் | செய்திகள்

Posted: 26 Jul 2015 08:51 AM PDT

நாம் பார்த்து ரசித்த மன்னர்கதைகளின் புதியவடிவமாய் வந்திருக்கிறது பாகுபலி. இதற்குமுன் பார்த்த படங்களை விடப் பிரமாண்டமாகவே இருக்கிறது என்பதுதான் இதன்பலம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் சகோதர யுத்தத்தின் காரணமாக அரண்மனையை விட்டு காட்டுக்குள் வந்துவிட்ட பிரபாஸ் மீண்டும் அரண்மனைக்குச் சென்றவுடன் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைத்தான் நெஞ்சம் அதிரச் சொல்லியிருக்கிறார்கள். தொடக்கத்திலேயே மிகப்பெரிய அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் காட்சியிலேயே ...

என் கணவருக்கு காட்டுங்கள்: யாகூப் மேமன் மனைவி வேண்டுகோள்

Posted: 26 Jul 2015 08:50 AM PDT

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தாமே முன்வந்து சரணடைந்ததைக் கருத்தில்கொண்டு, தன் கணவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று நீதித்துறைக்கும் அரசுக்கும் யாகூப் மேமனின் மனைவி ரஹீன் மேமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே நபரான யாகூப் மேமனுக்கு மும்பை தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை மும்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி யாகூப் மேமன் ...

குறள் அந்தாதி

Posted: 26 Jul 2015 08:05 AM PDT

அன்பு நண்பர்களே ! யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் . " அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் . "சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ...

நுனிப் புல் திண்போமா ?

Posted: 26 Jul 2015 08:01 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

முடியும்

Posted: 26 Jul 2015 07:23 AM PDT

முடியுமென முயற்சி செய்

முடியாத்தும் முடியும்

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே

Posted: 26 Jul 2015 06:56 AM PDT

வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே உங்கள் கலந்துரையாடல் ஜூலை 1-15 , மங்கையர் மலரில் , உங்கள் கலந்துரையாடல் , இன்றைய கல்வி முறை சாதகமா ?பாதகமா? கண்டேன் . மேலெழுந்தவாரியாக படித்தேன் .நன்றாக உள்ளது . ஆழ்ந்து படித்து ,பிறகு அலசலாம் . வாழ்த்துகள் ரமணியன்

பிறந்தநாள் விளையாட்டு

Posted: 26 Jul 2015 06:41 AM PDT

பொறுமையுடன் கால்குலேட்டர் உதவியுடன் இதை விளையாண்டு பாருங்கள் • Enter the number 7 • Multiply by the month of your birth • Subtract 1 • Multiply by 13 • Add the day of your birth • Add 3 • Multiply by 11 • Subtract the month of your birth • Subtract the day of your birth • Divide by 10 • Add 11 • Divide by 100 Birth date is May 18 1. 7 2. 7x5=35 3. 35-1=34 4. 34x13=442 5. 442+18=460 6. 460+3=463 7. 463x11=5093 8. 5093-5=5088 9. 5088-18=5070 10. 5070/10=507 11. ...

எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Posted: 26 Jul 2015 04:30 AM PDT

http://www.mediafire.com/download/swxpbwdm2d0jepx/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.pdf

கேமரா ஷாட்

Posted: 26 Jul 2015 04:22 AM PDT

கோவா போட்டோஸ்....





ந்ருசிம்ஹாவதாரம்

Posted: 26 Jul 2015 03:55 AM PDT

ந்ருசிம்ஹாவதாரம் என்கிற நரசிம்ஹ அவதாரம் . @velmurugan wrote:ந்ருஸிம்ஹர் அப்படினா என்னமா அர்த்தம் ....... எனக்கு தெரிந்த விஷயங்கள் , உங்களுக்காக , வேல்முருகனுக்காக ! மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் இதுவும் ஒன்று அரக்கன் ஹிரண்ய கசிபுவை அழிப்பதற்காக எடுக்கப் பட்ட அவதாரம் . ஹிரண்ய கசிபு ,பிரம்மாவிடம் சாகாவரம் கேட்க ,பிறந்தவர் யாவரும் மடிந்தே தீரவேண்டும் என பிரம்மா கூற , புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து , அப்பிடி மரணம் நிச்சயம் சம்பவிக்கும் என்றால் ,எனது மரணம் . 1. மனிதராலோ மிருகத்தாலோ ...

வானம்

Posted: 26 Jul 2015 02:47 AM PDT

மேக உழவர்கள் நட்டுவைத்த

நட்சத்திர வயற்காடு

வெண்ணிலா வீடு

இடியும்,மின்னலும் ஆர்ப்பாட்டம்போடும்

வன்முறையில்லா வளமான நாடு.

-பூமிப்பிரியன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™