Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரிட்டன் அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை: சுஷ்மா சுவராஜ் திடீர் 'பல்டி'

Posted:

புதுடில்லி: ''ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியின், போர்ச்சுகல் பயணத்திற்கு, பிரிட்டன் அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை,'' என்று, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.'லலித் மோடியின் பயண விவகாரம் வெடித்தபோது, மனிதாபிமான முறையில், அவருக்கு உதவினேன்' என, சுஷ்மா ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதையடுத்து, லலித் மோடிக்கு ஆதரவளித்த சுஷ்மா, பதவி விலக வேண்டும் என்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால், தொடர்ந்து நான்கு நாட்களாக, பார்லிமென்ட் அலுவல்கள் முடங்கின.இந்நிலையில், சுஷ்மா நேற்று டுவிட்டரில் ...

இன்ஜினியரிங் கல்லூரிகளில் நிரம்பிய இடங்கள் 88,000 சீட்: 1 லட்சம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு

Posted:

தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., இடங்களில், நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று வரை, 88 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.

தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில், 534 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரத்துடன், இந்த கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.

விளையாட்டு பிரிவு :
ஒவ்வொரு ஆண்டும், இந்த கல்லூரிகளில் உள்ள, இரண்டு லட்சம் இடங்களுக்கு, ...

விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கும் பீகார் மாநிலத்திற்கு ரூ.50,000 கோடி: பிரசாரத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி வாக்குறுதி

Posted:

பாட்னா:''பீகார் மாநிலத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். மழைக்கால கூட்டத்தொடருக்கு பின், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, அம்மாநிலத்தில் நேற்று, தேர்தல் பிரசாரத்தை துவக்கிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், அதன் தோழமைக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை, தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஏற்கனவே துவக்கி விட்டன. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, பாட்னாவில் நேற்று, பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரத்தை, ...

மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா: விளையாட்டு ஆணையத்துக்கு 'சுளீர்'

Posted:

புதுடில்லி: 'இந்திய விளையாட்டு ஆணையம், திட்டமிட்டு செயல்படாததால், 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் வீணாகியுள்ளது' என, ஆடிட்டர் ஜெனரல் அலுவலகமான, சி.ஏ.ஜி., குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான அறிக்கை பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் உள்ள விவரம்:ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபார்க் மாவட்டத்தில், துணை மையம் அமைக்க, 2001ல், விளையாட்டு ஆணையம் அனுமதி அளித்தது. இதற்கான கட்டடம், 14.15 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பின், அது, மாவோயிஸ்ட் பகுதி என்பதால், பாதுகாப்பு காரணங்களை கூறி, மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது. அதே ஹசாரிபார்க்கில், பத்மா ...

ஜெயலலிதா வழக்கில் நாளை விசாரணை

Posted:

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நால்வர் மீது தொடரப்பட்டுள்ள, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, நாளை, உச்ச நீதிமன்றத்தில் துவங்குகிறது.

விடுதலை:
கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெ., உள்ளிட்ட நால்வரையும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தார். இதை எதிர்த்து, கர்நாடகா அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.இதன் மீதான விசாரணை, நாளை துவங்குகிறது. இதில் ஆஜராவதற்காக, கர்நாடகா அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, இவரது உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ...

இப்போதே ஏன் சுமக்கிறீர்கள்? காங்., பற்றி கருணாநிதியிடம் கேள்வி

Posted:

'கூட்டணி விஷயத்தில், காங்கிரசுக்கு, ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான், அக்கட்சியும், ஆட்சியில் பங்கு கேட்கும் அளவுக்கு போய் விட்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், அக்கட்சி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர், புகார் தெரிவித்துள்ளனர்.காங்கிரசுடன் நெருக்கம் காட்டுவதன் காரணமாக, சில கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு வரத் தயக்கம் காட்டுவதையும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு, புதிய கூட்டணியை அமைக்க வேண்டிய அவசியம், தி.மு.க.,வுக்கு உள்ளது. அதை அறிந்த, விடுதலை ...

தி.மு.க., கூட்டணியில் 50 'சீட்': ராகுல் ஓப்புதல்?

Posted:

'சட்டசபை தேர்தலில், ஆட்சியில் பங்கு வேண்டும்; 50 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, தி.மு.க., தரப்புக்கு, காங்கிரஸ் சார்பில், நிபந்தனை விதிக்கலாம் என்ற, கட்சியினரின் எதிர்பார்ப்புக்கு, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுவதாவது:'தமிழகத்தில், அ.தி.மு.க., அரசை அகற்ற, தி.மு.க., காங்கிரஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும்; இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றும்' என, தமிழக காங்., தலைவர் இளங்கோவன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் மாறி, மாறி ஒரு நிகழ்ச்சியில் பேசினர். ...

இலங்கை தமிழ் மீனவர்கள் உருவாக்கிய 'லக்ஸ்மன் கடல் காப்பு படை'

Posted:

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராட்சத மீன்பிடி விசைப் படகுகளை அடித்து விரட்ட, இலங்கை தமிழ் மீனவர்கள், 'லக்ஸ்மன் கடல் காப்பு படை' என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஆயுதங்களை இயக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்ற முன்னாள் போராளிகள், இலங்கை, 'மீன்வளப் பாதுகாப்பு படை'க்கு அதிரடி தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கத் துவங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கும் அணிக்கு, 'லக்ஸ்மன் டீம்' என்று பெயர் சூட்டியுள்ளதாக, இலங்கை மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மீன்பிடி ...

வேளாண் துறையில் மாத மாமூல் கலாசாரம் அம்பலம்: விவசாயி, வியாபாரிகளிடம் தலா ரூ.3,000 வசூல்?

Posted:

கோவை : வேளாண் வணிகத்துறையில், அதிகாரிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், உழவர் சந்தைகளில் விவசாயிகள், வியாபாரிகளிடம் மாதம்தோறும், 'மாமூல்' வசூலிக்கும் விவகாரம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கோவை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையில் துணை இயக்குனராக பணியாற்றுபவர் கலைவாணி. அவரது கட்டுப்பாட்டில், தொண்டாமுத்துார் வட்டாரத்தில், வேளாண் அலுவலராக (வணிகம்) பணியாற்றி வந்தவர் கண்ணன். இவர், திடீரென திருவாரூர் மாவட்டத்திற்கு வேளாண் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதற்கு சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெற்ற கண்ணன், தொண்டாமுத்துார் வட்டாரத்தில் ...

ஆம்புலன்சாக மாறிய கடற்படை விமானம்

Posted:

திருவனந்தபுரம்: மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயத்தை, கடற்படை விமானத்தில் எடுத்துச் சென்று, மற்றொருவருக்கு பொருத்திய சம்பவம், கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நீலகண்ட சர்மா என்பவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர், மூளைச்சாவடைந்தார். இவருடைய இதயத்தை, கொச்சி, லிசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேத்யூ என்பவருக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த டாக்டர்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™