Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரூ. 3 கோடி போதைப்பொருள் கடத்த முயற்சி: 9 பேர் கைது

Posted: 25 Jul 2015 01:16 PM PDT

தில்லியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்த முயன்ற மூன்று நைஜீரியர்கள் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடி எனத் தெரிய வந்துள்ளது.

போலி நோட்டரி வழக்குரைஞர்கள்: தில்லி முழுவதும் அதிரடி சோதனை

Posted: 25 Jul 2015 01:15 PM PDT

தலைநகரில் போலியாக "நோட்டரி' வழக்குரைஞர்களின் கையொப்பமிட்டு மோசடியில் ஈடுபட்டு வரும் செயல்களைத் தடுக்க நகர் முழுவதும் தில்லி வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கண் பார்வையற்ற உதவிப் பேராசிரியைக்கு வாடகை வீடு கிடைக்க நடவடிக்கை

Posted: 25 Jul 2015 01:13 PM PDT

கண் பார்வையற்ற உதவிப் பேராசிரியை டாக்டர் ரீம் ஷம்ஸுதீனுக்கு (30) அவர் சார்ந்த மதத்தின் பெயரால் தங்குவதற்கு வாடகை வீடு மறுக்கப்படும் விவகாரத்தில் தில்லி அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேள்விக்குறியாகும் மெட்ரோ ரயில் ஃபீடர் சேவை?

Posted: 25 Jul 2015 01:12 PM PDT

தில்லி மெட்ரோ ரயில் பயணிகள், ரயில் நிலையங்களுக்கு வந்து செல்ல வசதியாக அறிமுகப்படுத்தப்பட்ட "மெட்ரோ ஃபீடர் சேவை' (மினி பேருந்துகள்) பொதுப் போக்குவரத்துப் பயணிகளாலும் வழிப்போக்கர்களாலும் பயன்படுத்தப்படுவதால் அதன் நோக்கமே பயனற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

"தில்லி அரசின் கட்டுப்பாட்டில் காவல் துறை வரக் கூடாது': பஸ்ஸியின் கருத்துக்கு முன்னாள் காவல் ஆணையர்கள் ஆதரவு!

Posted: 25 Jul 2015 01:12 PM PDT

தில்லி அரசின் கீழ் தலைநகர் காவல் துறையை (தில்லி போலீஸ்) கொண்டு வர வேண்டும் என ஆம் ஆத்மி அரசு வலியுறுத்தி வரும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

Posted: 25 Jul 2015 01:10 PM PDT

தில்லியின் பசுமை பரப்பை அதிகரிக்க 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன. புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை மத்திய இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌதரி, கஸ்தூர்பா காந்தி மார்கில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

மண்டோலி சிறைச்சாலை திறப்பு எப்போது?

Posted: 25 Jul 2015 01:09 PM PDT

தில்லியில் உள்ள திகார் சிறையில் அதிகரித்து வரும் கைதிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கும் வகையில், கிழக்கு தில்லி மண்டோலி பகுதியில் கிளை சிறைச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 34 ஆண்டுகளாக நிறைவேறாத அவல நிலை இப்போதும் தொடருகிறது.

ஹசாரே - கேஜரிவால் இன்று சந்திப்பு

Posted: 25 Jul 2015 01:07 PM PDT

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்திக்க உள்ளதாக ஹசாரேவின் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.

சண்முகா கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 25 Jul 2015 01:07 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு தானிய விதை அளிப்பு

Posted: 25 Jul 2015 01:05 PM PDT

செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்பட்டு, பெருமுட்டம் மலைக் கிராம மக்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு தானிய விதைகள், மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2015 01:04 PM PDT

அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூடக் கோரி, தெள்ளாறு வட்டார தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிண்டிகேட் வங்கியில் வாடிக்கையாளர் தினம்

Posted: 25 Jul 2015 01:03 PM PDT

ஆரணி சிண்டிகேட் வங்கியில் வாடிக்கையாளர் தினம் சனிக்கிழமை  நடைபெற்றது.

ஆக. 14-க்கு பிறகு முதியோர் பென்ஷன் திட்டத்தில் சேர முடியாது:எல்.ஐ.சி. அறிவிப்பு

Posted: 25 Jul 2015 12:45 PM PDT

முதியோருக்கான "வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா' திட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிகிறது. அதன்பிறகு அந்தத் திட்டத்தில் சேர முடியாது என இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: ராமதாஸ் வரவேற்பு

Posted: 25 Jul 2015 12:44 PM PDT

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

மழையைப் பொருள்படுத்தாத காங்கிரஸ் தொண்டர்கள்: இளங்கோவன் மகிழ்ச்சி

Posted: 25 Jul 2015 12:44 PM PDT

திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மழையைப் பொருள்படுத்தாமல் தொண்டர்கள் பங்கேற்றதாக மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை தேவை: விஜயகாந்த்

Posted: 25 Jul 2015 12:44 PM PDT

குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சருக்கு வைகோ கண்டனம்

Posted: 25 Jul 2015 12:43 PM PDT

தனிப்பட்ட காரணங்களே விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்ற மத்திய அமைச்சரின் கருத்து கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி. பிரச்னை: பிரதமர் தலையிட திருமாவளவன் கோரிக்கை

Posted: 25 Jul 2015 12:42 PM PDT

நெய்வேலி நிறுவனத் தொழிலாளர் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்

Posted: 25 Jul 2015 12:41 PM PDT

இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதிலும் தமிழகம் முதலிடம் வகிப்பதாக, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்தார்.

பி.இ. கலந்தாய்வு 28-இல் நிறைவு

Posted: 25 Jul 2015 12:41 PM PDT

பி.இ. பொது கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 25 Jul 2015 12:40 PM PDT

பாக்ஜலசந்தி பகுதியில் சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்தனர்.

"அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள மாணவர்கள் முன்வருவது அவசியம்'

Posted: 25 Jul 2015 12:40 PM PDT

அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார் மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிர் தொழில்நுட்பத் துறைச் செயலர் கே. விஜயராகவன்.

பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி

Posted: 25 Jul 2015 12:40 PM PDT

திமுக இலக்கிய அணி சார்பில் ஆரணியில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரு நிறுவனங்களுக்காகச் செயல்படுவதா?மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

Posted: 25 Jul 2015 12:40 PM PDT

பெரு நிறுவனங்களுக்காக மத்திய அரசு செயல்படுவது தெளிவாகி விட்டதாக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது முகநூலில் அவர் சனிக்கிழமை செய்துள்ள பதிவு:

அரசு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்.:அனைத்து இடங்களும் நிரம்பின

Posted: 25 Jul 2015 12:39 PM PDT

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் காலியாக இருந்த அனைத்து இடங்களும் நிரம்பின. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது

நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும் குலோப் ஜாமூன்:ஆவின் அறிமுகம்

Posted: 25 Jul 2015 12:38 PM PDT

நுகர்வோர் வசதிக்காக 125, 250 கிராம் கொள்ளளவு கொண்ட புதிய பேக்கில் குலோப் ஜாமூன் (கர்ய்ஞ் கண்ச்ங் என்ப்ர்க்ஷ ஒஹம்ன்ய்) விற்பனையை ஆவின் நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தலைமைச் செயலகத்தில் பாம்பு: வனத் துறையிடம் ஒப்படைப்பு

Posted: 25 Jul 2015 12:37 PM PDT

சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை இரவு தீயணைப்புத் துறையினரால் பாம்பு பிடிக்கப்பட்டது.

முப்பெரும் விழா

Posted: 25 Jul 2015 12:36 PM PDT

வந்தவாசி அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருமுறை இன்னிசை விழா, திருமுழுக்காட்டு விழா, திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றன.

பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்:பொதுப்பணித் துறை பொறியாளர் சங்கம் வேண்டுகோள்

Posted: 25 Jul 2015 12:36 PM PDT

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மின் உற்பத்தியில் பாதிப்பில்லை: என்எல்சி

Posted: 25 Jul 2015 12:36 PM PDT

என்எல்சி நிறுவனத்தின் மின் உற்பத்தியில் பாதிப்பில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு கல்வி வலுவூட்டல் பயிற்சி

Posted: 25 Jul 2015 12:36 PM PDT

செய்யாறில் ஆசிரியர்களுக்குப் படைப்பாற்றல் கல்வி வலுவூட்டுதல் குறித்த ஒரு நாள் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நதிமூலம்

Posted: 25 Jul 2015 12:35 PM PDT

உலகில் தொண்ணூறு சதவிகித ஆறுகள் மலையில்தான் தோன்றுகின்றன என்பதைத் தமிழ் இலக்கியங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன. ""வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி'' (பட்டினப்பாலை-5,6),

ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2015 12:34 PM PDT

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பழைய முறையே தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுமொழி தரும் இலக்கியச் சொற்கள்

Posted: 25 Jul 2015 12:33 PM PDT

பேச்சு மொழி வேறு; எழுத்து மொழி வேறு என்று எண்ணுவது தவறு. பேச்சு மொழியே எழுத்து மொழியாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது - இருந்திருக்க வேண்டும். எழுத்து மொழி எவ்வளவு காலம் ஆனபோதிலும் எழுதப்பட்ட நிலையில் அப்படியே நிலைத்து நிற்கிறது.

சில நேரங்களில் சில உண்மைகள்

Posted: 25 Jul 2015 12:32 PM PDT

காதலும் வீரமும் தமிழர்க்கான தனி அடையாளங்கள். அவை உலகளாவியவை ஆனாலும் அவற்றில் தனித்த முத்திரை பெற்ற பெருமை தமிழருக்கே உண்டு. இந்த அடிப்படையில் வரையப்பட்டதுதான் தொல்காப்பியப் பொருளதிகாரம்.

திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி விழா

Posted: 25 Jul 2015 12:31 PM PDT

போளூரை அடுத்த கைலாசபுரம் கிராமம் திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 25 Jul 2015 12:31 PM PDT

இந்தவாரம் கலாரசிகன்

அதிமுக தெருமுனை பிரசாரம்

Posted: 25 Jul 2015 12:30 PM PDT

அதிமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரசாரம் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அண்மையில் நடைபெற்றது.

சொல் தேடல் -18

Posted: 25 Jul 2015 12:30 PM PDT

தம் தோற்றப் பொலிவாலும் நேரிய வாழ்க்கையாலும் புலமை நலத்தாலும் பலருக்கு வழிகாட்டியாக அமைந்தவர் எங்கள் பேராசிரியர் "கோவை ஆசான்' ப.சு. மணியம்.

குரூப்-2 தேர்வு: 74 மையங்களில் 20,414 பேர் எழுத ஏற்பாடு

Posted: 25 Jul 2015 12:28 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 74 தேர்வு மையங்களில் 20,414 பேர் குரூப்-2 தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நன்னெறிக் கல்விக் கருத்தரங்கம்

Posted: 25 Jul 2015 12:28 PM PDT

நன்னெறிக் கல்வி இயக்கம் சார்பில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நன்னெறிக் கல்விக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 25 Jul 2015 12:27 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற, கத்தியவாடி அரசுப் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

அரசியலால் பிகாரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது:பிரதமர் மோடி

Posted: 25 Jul 2015 12:27 PM PDT

""பிகாரின் வளர்ச்சி, அரசியலால் பாதிக்கப்படுகிறது; பிகாருக்கு நான் முன்பு அறிவித்திருந்த ரூ.50,000 கோடியையும் விட அதிக சிறப்பு உதவி வழங்கப்படும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

கல்குவாரி குட்டையில் மூழ்கிய இளைஞர் சாவு

Posted: 25 Jul 2015 12:26 PM PDT

வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் சனிக்கிழமை மூழ்கிய இளைஞர் உயிரிழந்தார்.

இன்னொரு கார்கில் போரை அனுமதிக்க மாட்டோம்:ராணுவ தலைமைத் தளபதி உறுதி

Posted: 25 Jul 2015 12:26 PM PDT

"இன்னொரு கார்கில் போரை இந்திய ராணுவம் அனுமதிக்காது' என்று ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் தெரிவித்தார்.

விபத்தில் மெக்கானிக் சாவு

Posted: 25 Jul 2015 12:25 PM PDT

பெங்களூரிலிருந்து இரும்பு உதிரி பாகங்கள் ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஹாகஸ் குமார் (29) ஓட்டி வந்தார்.

குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர் சாவு

Posted: 25 Jul 2015 12:25 PM PDT

கே.வி. குப்பம் அருகே கோயில் குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர் இறந்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்:பிரணாப் முகர்ஜி

Posted: 25 Jul 2015 12:24 PM PDT

""குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள ரெய்சினா வளாகத்தில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

வழிப்பறி வழக்குகள்: 5 பேர் கொண்ட கும்பல் கைது

Posted: 25 Jul 2015 12:24 PM PDT

வேலூர் மாநகரில் வழிப்பறி, பெண்களை மடக்கி நகைகளைப் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள், 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசு மதுக் கடைகளில் ரூ. 1 லட்சம் திருட்டு

Posted: 25 Jul 2015 12:23 PM PDT

சோளிங்கரை அடுத்த பாணாவரம் பகுதியில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளில் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் திருடு போனது.

ரூ. 2 லட்சம் தோல் திருட்டு: இருவர் கைது

Posted: 25 Jul 2015 12:22 PM PDT

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தோல் திருடு போனது சம்பந்தமாக இருவரை உமர்ஆபாத் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அரசுக்கு எதிரான வழக்குகளைக் குறைக்க தேசிய வழக்குக் கொள்கை:மத்திய அமைச்சர் சதானந்த கெளடா

Posted: 25 Jul 2015 12:22 PM PDT

அரசுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க "தேசிய வழக்கு தொடர்தல் கொள்கை 2015' வகுக்கப்பட்டுள்ளது என மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

"கறை படிந்த' அமைச்சர்களை பதவி விலகக் கோருவது எதிர்க்கட்சிகளின் உரிமை:காங்கிரஸ்

Posted: 25 Jul 2015 12:21 PM PDT

மத்திய, மாநில ஆட்சி நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளிக்கொணர்வதும், அவற்றை எதிர்ப்பதும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அமைச்சர்களை பதவி விலகக் கோருவதும் எதிர்க்கட்சிகளின் உரிமை என காங்கிரஸ் மூத்த தலைவர் அஸ்வனி குமார் தெரிவித்தார்.

இன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

Posted: 25 Jul 2015 12:21 PM PDT

தமிழகத்தில் குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் 6 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

வீட்டில் 15 பவுன் தங்க நகை திருட்டு

Posted: 25 Jul 2015 12:18 PM PDT

சோளிங்கர் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருடு போனது.

பிரதமர் மோடிக்கு நிதீஷ் குமாரின் 7 கேள்விகள்

Posted: 25 Jul 2015 12:18 PM PDT

கருப்புப் பணத்தை மீட்டு பொது மக்களுக்குப் பகிர்ந்து அளிப்பதாகக் கூறிய வாக்குறுதிகள் என்ன ஆயின என்பது உள்பட 7 கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடியிடம், பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான நிதீஷ் குமார் முன்வைத்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை குறித்த விவகாரம்:மத்திய அமைச்சரின் கருத்து திரிக்கப்பட்டுவிட்டது

Posted: 25 Jul 2015 12:16 PM PDT

விவசாயிகள் தற்கொலை குறித்த மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாக மத்திய வர்த்தக, தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

Posted: 25 Jul 2015 12:15 PM PDT

தாராபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வ.உ.சி.யின் மகன் வாலேஸ்வரன் காலமானார்

Posted: 25 Jul 2015 12:15 PM PDT

வ.உ.சி.யின் மகனான வாலேஸ்வரன் (88) சென்னையில் சனிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது.

மருத்துவச் சட்ட நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்:சுகாதாரச் செயலர் வலியுறுத்தல்

Posted: 25 Jul 2015 12:14 PM PDT

மருத்துவமனைகளில் மருத்துவ சட்ட நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2-இல் தேமுதிக தலைமை செயற்குழு கூட்டம்

Posted: 25 Jul 2015 12:14 PM PDT

தேமுதிக தலைமைச் செயற்குழுக் கூட்டம், ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரையில் 104 டிகிரி வெயில்

Posted: 25 Jul 2015 12:13 PM PDT

தமிழகத்திலேயே மதுரையில் அதிகபட்சமாக சனிக்கிழமை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நடிகர் விஷாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்புகள் கண்டனம்

Posted: 25 Jul 2015 12:12 PM PDT

கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் விஷாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்ப் புலிகள் அமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து அமைப்புகள்

கல்லூரி மாணவிக்கு கட்டாய தாலி கட்ட முயற்சி: சகோதரர்கள் கைது

Posted: 25 Jul 2015 12:12 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கல்லூரி மாணவிக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற சகோதரர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கரடி கடித்து விவசாயி சாவு

Posted: 25 Jul 2015 12:12 PM PDT

கல்வராயன்மலைப் பகுதியில் கரடி கடித்து விவசாயி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், மேல்பாச்சேரி வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் ராமசாமி

எ.வ.வேலு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் போலீஸார் மேல் முறையீடு

Posted: 25 Jul 2015 12:11 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஆகியோரை விடுதலை செய்து திருவண்ணாமலை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

மணல் லாரி மோதி பள்ளிச் சிறுமி சாவு

Posted: 25 Jul 2015 12:11 PM PDT

மதுரை அருகே சனிக்கிழமை மணல் லாரி மோதியதில் பள்ளிச் சிறுமி உயிரிழந்தாள். மதுரை அருகேயுள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி அடைக்கண். இவரது மகள் சித்ரா (8).

கூட்டுறவு அமைப்பின் பலவீனத்தால் விவசாயிகள் தற்கொலை

Posted: 25 Jul 2015 12:11 PM PDT

கூட்டுறவு அமைப்பின் பலவீனமே விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன (சிஐடியூ) மாநிலத் தலைவர் அ.செளந்தரராஜன் எம்எல்ஏ தெரிவித்தார்.

"மாலத்தீவில் சீன படைத் தளம் அமையும் என இந்தியா அச்சப்பட வேண்டாம்'

Posted: 25 Jul 2015 12:10 PM PDT

மாலத்தீவில் சீனா நிலம் வாங்குவதால் அங்கு படைத்தளம் அமையுமோ? என இந்தியா அச்சப்பட வேண்டாம் என்று சீன அரசுப் பத்திரிகையில் சனிக்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் திறப்பு

Posted: 25 Jul 2015 12:10 PM PDT

வேலூர் இந்தியன் வங்கியின் பிரதான கிளையில் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தை சிஎம்சி இயக்குநர் மருத்துவர் சுனில் சாண்டி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

பிஜேடி மூத்த தலைவர் கல்பதரு தாஸ் மறைவு

Posted: 25 Jul 2015 12:09 PM PDT

பிஜு ஜனதாதள மூத்த தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான கல்பதரு தாஸ் புது தில்லியில் சனிக்கிழமை காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு வயது 67.

நிலம் கையக மசோதாவை கைவிட 3 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 25 Jul 2015 12:08 PM PDT

நிலம் கையக மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம், அந்த மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு

Posted: 25 Jul 2015 12:08 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடி எரிக்கப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தால் பெரும்பாலான நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

1398 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Posted: 25 Jul 2015 12:07 PM PDT

ராணிப்பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள் 1398 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அரக்கோணம் எம்.பி. கோ.அரி வழங்கினார்.

ஜார்க்கண்ட்: மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

Posted: 25 Jul 2015 12:04 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸாருடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் அளிப்பதற்கு சிபாரிசு செய்யவில்லை

Posted: 25 Jul 2015 12:03 PM PDT

"ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் அளிப்பதற்கு பிரிட்டன் அரசிடம் நான் சிபாரிசு செய்யவில்லை' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

கேரள முன்னாள் ஆளுநர் மறைவு

Posted: 25 Jul 2015 12:02 PM PDT

கேரளம், பிகார் ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் (86) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.

பாதயாத்திரை மூலம் சாதித்தது என்ன?:ராகுலுக்கு தெலுங்கு தேசம் கேள்வி

Posted: 25 Jul 2015 12:01 PM PDT

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாதயாத்திரையின் மூலம் அவர் சாதித்தது என்ன? என்று தெலுங்கு தேசம் கட்சி கேள்வியெழுப்பியது.

ரூ. 50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு

Posted: 25 Jul 2015 12:00 PM PDT

குடியாத்தத்தில், ரூ. 50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

எனக்கும், நிதீஷுக்கும் இடையே பிளவு ஏற்படுத்த மோடி முயற்சி:லாலு குற்றச்சாட்டு

Posted: 25 Jul 2015 12:00 PM PDT

எனக்கும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயலுகிறார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் குற்றம்சாட்டினார். இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:

அமர்நாத் யாத்திரை: 3 பேர் பலி

Posted: 25 Jul 2015 12:00 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காந்தர்பல் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி அருகே பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

ஒடிஸாவில் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

Posted: 25 Jul 2015 12:00 PM PDT

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ஒடிஸா அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் பலன் பெறுவர்

இதுவரை 5.95 லட்சம் பேருக்கு விலையில்லாப் பொருள்கள் விநியோகம்

Posted: 25 Jul 2015 12:00 PM PDT

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 5.95 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.246 கோடி மதிப்பில் தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் தெரிவித்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் குண்டுவீசித் தாக்குதல்:ஒருவர் பலி; 6 பேர் காயம்

Posted: 25 Jul 2015 11:59 AM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.

திருடு போன மினி வேன், 4 இரு சக்கர வாகனங்கள் மீட்பு: இளைஞர் கைது

Posted: 25 Jul 2015 11:59 AM PDT

வாணியம்பாடி,  நாட்டறம்பள்ளி பகுதிகளில் திருடு போன மினி வேன், 4 இரு சக்கரவாகனங்கள் மீட்கப்பட்டன. இவற்றை திருடிய இளைஞரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஆம்பூரில் கூட்டுறவு கட்டடச் சங்கத்தில் மாநிலப் பதிவாளர் ஆய்வு

Posted: 25 Jul 2015 11:58 AM PDT

ஆம்பூர் கூட்டுறவுக் கட்டட சங்கத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில பதிவாளர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பயிற்சி

Posted: 25 Jul 2015 11:58 AM PDT

வாலாஜாபேட்டையை அடுத்துள்ள சுமைதாங்கியில் உள்ள நாக் கல்விக் குழுமத்தின் சிபிஎஸ்இ, மெட்ரிக். பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சனிக்கிழமை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஊக்குவிப்புப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

2 கிலோ போலி தங்க நகைகளை விற்க முயன்ற மூவர் கைது

Posted: 25 Jul 2015 11:57 AM PDT

வேலூரில் அசல் தங்க நகைகள் எனக் கூறி 2 கிலோ போலி தங்க நகைகளை விற்பனை செய்ய முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகள் தற்கொலை விவகாரம்:காதல் தோல்வியே காரணம் என காங்கிரஸ் அரசும் தெரிவித்தது

Posted: 25 Jul 2015 11:57 AM PDT

காதல் தோல்வி, வரதட்சிணைக் கொடுமை, குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்னைகளே விவசாயிகளின் தற்கொலைகளுக்குப் பெரிதும் காரணம் என மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவரது கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மாணவரைக் கத்தியால் குத்திய வழக்கில் சக மாணவர் கைது

Posted: 25 Jul 2015 11:56 AM PDT

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவரைக் கத்தியால் குத்திய வழக்கில் சக மாணவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

விவசாயிகள் தற்கொலை விவகாரம்:அமைச்சரின் கருத்துக்கு விவசாய அமைப்புகள் கண்டனம்

Posted: 25 Jul 2015 11:56 AM PDT

விவசாயிகளின் தற்கொலை குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங்குக்கு, விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தனது கருத்தை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

இமயமலை சிகரத்துக்கு மலையேற்ற வீராங்கனையின் பெயர் பரிந்துரை

Posted: 25 Jul 2015 11:55 AM PDT

இமயமலைத் தொடரில் உள்ள சிகரம் ஒன்றுக்கு பிரபல மலையேற்ற வீராங்கனை நளினி சென்குப்தாவின் பெயர் சூட்டப்படவுள்ளது.

கால்நடை மருந்தகக் கட்டடங்கள் திறப்பு

Posted: 25 Jul 2015 11:55 AM PDT

அரக்கோணம் அருகே இரு இடங்களில் புதிய கால்நடை மருந்தகங்களை அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினர் கோ.அரி திறந்து வைத்தார்.

குப்பையில்லா தமிழகத்தைப் பசுமைத்தாயகம் உருவாக்கும்: ஜி.கே.மணி

Posted: 25 Jul 2015 11:54 AM PDT

குப்பையில்லா தமிழகத்தை உருவாக்குவதும், மாசுபடாத நீர், காற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுமே பசுமைத்தாயகத்தின் நோக்கம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

"ரெட் எஃப்.எம்.' மனு: தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவு

Posted: 25 Jul 2015 11:54 AM PDT

மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நடத்த உள்ள இணைய வழி ஏலத்தில், சன் குழுமத்தின் "ரெட் எஃப்.எம்.' பண்பலை வானொலி நிறுவனம் பங்கேற்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

பாதுகாப்புப் படைகளில் மகளிரின் பங்களிப்பை அதிகப்படுத்துவோம்

Posted: 25 Jul 2015 11:54 AM PDT

பாதுகாப்புப் படைகளில் மகளிரின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்று கவலை தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்,மகளிரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த எதிர்வரும் மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: மீண்டும் நடத்தியது சிபிஎஸ்இ

Posted: 25 Jul 2015 11:53 AM PDT

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சனிக்கிழமை மீண்டும் நடத்தியது.

திருவள்ளுவர் பல்கலை. பொறுப்பு  குழு உறுப்பினருக்கு பாராட்டு

Posted: 25 Jul 2015 11:53 AM PDT

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓய்வு பெற்றதையொட்டி புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை நிர்வாகத்தை கவனிக்க பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடன்  புதிய பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டது. இதில், உயர்கல்வித் துறைச் செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருடன் மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியின்  வரலாற்றுத் துறை பேராசிரியரும் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான எச். முனவர்ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.ஜியாவூதீன் அஹமத்,  கல்லூரியின் தாளாளர் அப்ரார் அஹமது, கல்லூரி முதல்வர் எஸ்.ஏ ஷாஜித்  உள்ளிட்டோர் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

51 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

Posted: 25 Jul 2015 11:53 AM PDT

வேலூர் மாவட்டத்தில் 51 காவல் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஜவ்வாதுமலை கோடை விழா தொடங்கியது

Posted: 25 Jul 2015 11:52 AM PDT

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 2 நாள் நடைபெறும் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™