Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விளையாட்டு வீரர் கொலை?

Posted:

லக்னோ: வாள்வீச்சு போட்டி யில் தேசிய அளவில் பதக்கம் பெற்ற வீரரை, ஓடும் ரயிலில் இருந்து, ரயில்வே போலீசார் தள்ளி விட்டதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் ஹோசியார் சிங். வாள்வீச்சு போட்டிகளில் தேசிய அளவில் பதக்கங்களை குவித்தவர். இவர், நேற்று முன்தினம், மதுராவிலிருந்து, தன் சொந்த ஊரான காஸ்கான்ச்சிற்கு ரயிலில், தன் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார். ரயிலில், பெண்களுக்கான பெட்டியில், தன் தாயார், மனைவி, குழந்தை ஆகியோரை ஏற்றிவிட்ட ஹோசியார், தான் மட்டும் பொது பெட்டியில் பயணித்தார். ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்ற போது, ...

நகை கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது : தங்கம் விலை மேலும் மேலும் வீழ்ச்சி

Posted:

சர்வதேச சந்தையில், தங்கமும், உள்நாட்டில் வெள்ளியும், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்று கடும் விலை சரிவைச் சந்தித்தன. இப்படி தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால், நகைக் கடைகளில், மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெற்று, வேலையில்லா திண்டாட்டம், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், வங்கிகளின் வட்டி விகிதத்தை, அமெரிக்க மத்திய வங்கி உயர்த்த உள்ளது. எனவே, ஆசியா உள்ளிட்ட பிற நாடுகளில், நிதி மற்றும் தங்கம் சந்தைகளில் முதலீடு செய்துள்ளோர், ...

மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மகாராஷ்டிராவில் மதுவிலக்கு? மாநிலம் முழுவதும் அமல்படுத்த முதல்வர் ஆசை

Posted:

மும்பை : மாநிலம் முழுவதும், மாட்டிறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை கொண்டு வந்துள்ள மகாராஷ்டிராவில், விரைவில், மாநிலம் தழுவிய அளவில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், 45, நேற்று அறிவித்தார்.மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது; முதல்வராக, கடந்த ஆண்டு அக்டோபர் முதல், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார். இந்த ஆண்டு மார்ச் முதல், அங்கு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலவையில் கேள்வி:
இந்நிலையில், ...

கிரிக்கெட் சூதாட்டத்தில் கறுப்பு பண புழக்கம்

Posted:

புதுடில்லி : 'கிரிக்கெட் சூதாட்டத்தை தடுப்பதன் மூலமும், கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை கண்காணிப்பதன் மூலமும், கறுப்பு பண புழக்கத்தை பெருமளவில் தடுக்க முடியும்' என, சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு வருவதற்காகவும், கறுப்பு பண புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், சிறப்பு புலனாய்வு குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. இந்த குழு, தன் மூன்றாவது அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கணக்கில் ...

ரிசர்வ் வங்கி கவர்னர் அதிகாரம் பறிப்பு?

Posted:

புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் அதிகாரத்தைக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, நாட்டின் பணவீக்க அளவுகோலின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான 'ரெப்போ' வட்டியைக் குறைக்கவோ, கூட்டவோ செய்கிறது.

நிதியமைச்சகம் முடிவு :
இத்தகைய முடிவெடுக்கும் அதிகாரம், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மட்டுமே உள்ளது. இனி, இந்த அதிகாரத்தை, ஆறு பேர் கொண்ட, நிதிக் கொள்கைக் குழுவிடம் ஒப்படைக்க, மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துஉள்ளது. இதில், நான்கு பேரை, மத்திய அரசு நியமிக்கும். ரிசர்வ் வங்கியின் ...

எங்களுக்கு மானியம் வேண்டாம்!

Posted:

புதுடில்லி : நாடு முழுவதும், 12.6 லட்சம் பேர், மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் வேண்டாம் என தெரிவித்து, சந்தை விலையில், சமையல் காஸ் சிலிண்டர்களை பெற்று வருகின்றனர்.ஏழைகளுக்கு எளிதாக, குறைந்த விலையில் சமையல் காஸ் சிலிண்டர் கிடைக்க ஏதுவாக, வசதி படைத்தவர்கள், மானிய சிலிண்டர் வாங்குவதை கைவிட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி, அழைப்பு விடுத்தார்.அதை ஏற்று, இது வரை, 12.6 லட்சம் பேர், மானிய சிலிண்டர் வேண்டாம் என, எழுதிக் கொடுத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 20 ஆயிரம் பேர், மானியம் வேண்டாம் என, எழுதிக் கொடுத்து வருகின்றனர். இதன் மூலம், மத்திய அரசுக்கு, 140 கோடி ...

'கண்டபடி பேச இதுவொன்றும் முச்சந்தி அல்ல'

Posted:

"மக்கள் நலன் காக்கும் பிரச்னைகளை, பேசி தீர்வுகாண்பதற்கான இடம் தானே தவிர, அவரவர் இஷ்டத்திற்கு நின்று கொண்டு, கண்டபடி பேச, பார்லிமென்ட் ஒன்றும் முச்சந்தி அல்ல," என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அதிரடியாகக் கூறியுள்ளார்.

பெரும்பான்மை:
கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில், காங்கிரசுக்கு லோக்சபா, ராஜ்யசபா என இரண்டிலுமே பெரும்பான்மை கிடையாது. இதனால், எந்த ஒரு முக்கிய பிரச்னையின் போதும், இரு சபைகளிலுமே அமளியும், கூச்சலும் ஏற்படும். பெரும்பாலான நேரங்களில், இரு சபைகளுமே ஒத்தி வைக்கப்பட்டதுண்டு.தற்போது, நரேந்திர மோடி அரசுக்கு, லோக்சபாவில் ...

'என்.எல்.சி., பிரச்னையில் கடிதம் எழுதினால் போதுமா?': கருணாநிதி

Posted:

சென்னை: 'என்.எல்.சி., தொழிலாளர் வேலைநிறுத்த பிரச்னையில் தலையிட்டு, முதல்வர் தீர்வு காணாமல் இருப்பது வருந்தத்தக்கது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:என்.எல்.சி., நிறுவனத்தில், ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி, நிரந்தர தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு ஒப்பந்த தொழிலாளர்களும், ஆதரவு தெரிவித்துள்ளதால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது. என்.எல்.சி.,யில், 22 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். நிரந்தர ஊழியர்களுக்கு, ஐந்தாண்டுக்கு ஒருமுறை, நிர்வாகம், ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஆனால், ...

'ஹெல்மெட் அணிய பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு தேவை'

Posted:

சென்னை: 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, 'ஹெல்மெட்' அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. 'இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஜூலை 1ம் தேதி முதல், கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; தவறினால், அவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், தங்களை இணைத்து கொள்ளக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற ...

கோடை மழை கொட்டியதால் 'கரன்ட் கட்' ஆகலையாம்!

Posted:

தமிழக வரலாற்றில் முதன்முறையாக, இந்த ஆண்டு கோடை காலத்தில், மின் தேவை அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் தினமும், 12 ஆயிரம் முதல், 12,500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.ஆண்டுதோறும், மார்ச் முதல் ஜூலை வரை, கோடை வெயில் கடுமையாக இருக்கும்; அதனால், 'ஏசி, பிரிட்ஜ்' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகமாக இருக்கும். இதனால், கோடை காலத்தில் வழக்கத்தை விட, 500 முதல் 1,000 மெகாவாட் மின் தேவை அதிகரிக்கும்.கடந்த மார்ச் 25ம் தேதி, மின் பயன்பாடு, 13,251 மெகாவாட்டாக இருந்தது. அதனால், மே முதல் ஜூலை வரை, மின் தேவை, 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என, மின் வாரிய அதிகாரிகள் ...

என்.ஆர்.ஐ.,களுக்கு விரைவில் ஓட்டுரிமை!

Posted:

என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், ஓட்டளிக்கும் உரிமையை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட மத்திய அரசு, அது தொடர்பாக விரைவில் முடிவெடுக்குமாறு, தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய சட்டத் துறையை வலியுறுத்தி உள்ளது. அதையடுத்து, அப்பணியில் தேர்தல் கமிஷன், மும்முரமாக இறங்கி உள்ளது.

இந்த விவகாரம் - இதுவரை:
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது தொடர்பாக, தேர்தல் துணை கமிஷனர், வினோத் ஜட்சி தலைமையில், சட்டத் துறை, வெளியுறவுத் துறை, தேர்தல் கமிஷன் அதிகாரிகளை கொண்ட, 12 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™