Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கார், டூ - வீலர்களுக்கும் வேக கட்டுப்பாடு கருவி...வருகிறது?:ஏன் பொருத்தக்கூடாது என அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Posted:

சென்னை:இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என, அதிரடி உத்தரவு பிறப்பித்த, சென்னை உயர்நீதிமன்றம், தற்போது, வாகன வேகம் விஷயத்தில் தன் கவனத்தை திருப்பி உள்ளது. 'கார்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில், வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக் கூடாது' என, கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில், இரு பஸ்கள் மோதியதில், இருவர் உயிரிழந்தனர்; 29 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு, வாகனங்களின் அதிவேகமே காரணம் என கூறப்பட்டது.உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை ...

காங்., - எம்.பி., சசி தரூருக்கு பிரதமர் மோடி...பாராட்டு ஆக்ஸ்போர்டில் ஆற்றிய உணர்ச்சிகர உரைக்கு நன்றி

Posted:

புதுடில்லி:திருவனந்தபுரம் தொகுதி, காங்., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர், பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு யூனியன் விவாத மேடையில், 'இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்த பிரிட்டன், அதை திருப்பித் தர வேண்டும்' என, உணர்ச்சிகரமாக பேசியதற்கு, பிரதமர் மோடி பாராட்டினார்; அதே சமயம், பார்லிமென்டில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ரகளை செய்வதை கண்டித்து பேட்டியளித்ததற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, சசி தரூரை அழைத்து கண்டித்தார்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரை, காங்., தலைமையில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வருவதை கண்டித்து, பத்திரிகை ஒன்றில், நேற்று ...

'அவதூறு வழக்கு சட்டங்களை ரத்து செய்ய முடியாது' :சுப்ரீம் கோர்ட்

Posted:

புதுடில்லி:'அவதுாறு வழக்கு தொடரும் சட்டங்களை ரத்து செய்வது, அராஜகத்துக்கு வழிவகுத்து விடும். ஒழுங்குமுறை நிறைந்த சமுதாயத்தில், யார் வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும், அவதுாறாக பேசுவதை அனுமதிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவதுாறு வழக்கு தொடரும் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன்சாமி உள்ளிட்ட சிலர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பாண்ட் ஆகியோர் அடங்கிய,'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ...

விழித்துக் கொள்வோரே... பிழைத்துக் கொள்வார்...!

Posted:

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், அதிகாரப்பூர்வமாக பதிவு பெற, ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசிடம் முட்டி மோத ஆரம்பித்துவிட்டன. இந்த திட்டத்தில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, புதுச்சேரி தன்னை பதிவு செய்து கொண்ட நிலையில், தமிழகம் எப்போது அதிகாரப்பூர்வ பதிவை துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அடிப்படை:அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும், 100 ஸ்மார்ட் சிட்டிகள் ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டிகளில், உலகத்தரம் வாய்ந்த சாலை, 24 மணி நேர மின் வசதி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உலகத் ...

பா.ஜ., நிகழ்ச்சியாக மாறிய பஞ்., தலைவர்கள் பாராட்டு விழா

Posted:

டில்லியில், தமிழக வர்த்தகப் பிரிவு, பா.ஜ., சார்பில் நடைபெற்ற, பஞ்சாயத்து தலைவர்களுக்கான பாராட்டு விழாவில், தமிழகத்தின் இரண்டு கட்சிகளான, அ.தி.மு.க.,வையும், தி.மு.க., வையும், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரேந்திர சிங் கடுமையாக வசைபாடினார். டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்திலிருந்து, 200க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர், சவுத்ரி பிரேந்திர சிங் பேசியதாவது:தமிழகத்தில் நிலவியது போன்ற நிலை தான், என் சொந்த மாநிலமான அரியானாவிலும் இருந்தது. காங்கிரஸ் அல்லது ஓம் ...

என்.எல்.சி., பிரச்னையை கவனியுங்க! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெ., கடிதம்

Posted:

சென்ன:'என்.எல்.சி., தொழிலாளர் பிரச்னைக்கு, உடனடியாக தீர்வு காண, நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:என்.எல்.சி.,யில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள், திருப்தியான ஊதிய திருத்தம் கோரி, 20ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். என்.எல்.சி., தமிழகத்திற்கு முக்கிய மின் ஆதாரம். அங்கிருந்து, தமிழகம், 1,450 மெகாவாட் மின்சாரம் வாங்குகிறது.என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான, ஊதிய திருத்த ஒப்பந்தம், 2012 ஜன., ௧ம் தேதியில் ...

'எச்சரித்தும் கேட்காததால் குடிநீர் தட்டுப்பாடு'

Posted:

சென்னை:'பெண்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'சென்னையில், 12 ஆண்டுகளுக்குப் பின், கடும் குடிநீர் தட்டுப்பாடு' என்ற தலைப்பில், 'தினமலர்' நாளிதழ், 22ம் தேதி பல செய்திகளை தொகுத்து தந்துள்ளது. சென்னை உட்பட, பல மாவட்டங்களில், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படப் போகும் அபாயம் பற்றி, அடிக்கடி சுட்டிக் காட்டப்படுகின்றன.ஆனால், அந்தத் துறையின் அமைச்சர், அதிகாரிகளை அழைத்துப் பேசி, குடிநீர்ப் பற்றாக்குறை பற்றிய உண்மைகளை தெரிந்த பின், 'குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்' ...

அக்னி குண்டமான ஆந்திரா ஒரே ஆண்டில் 8,000 பேர் பலி!

Posted:

கடந்து போன கோடைக்காலத்தில், அதீத வெப்பத்தால் ஆயிரக் கணக் கானோர் மாய்ந்து போயினர். விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை, அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்ததின் விளைவு இது.தழல் நரகம்:ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் நிலவும் கோடையை வர்ணிக்க, ஒரே ஒரு வார்த்தை தான் உண்டு; அது தழல் நரகம். ஆனால், இந்தாண்டு தழல் நரகத்துக்கே கொடும் கோடை வந்தது போல் இருந்தது.கடந்த மே 18ல் துவங்கி, 31ம் தேதி வரை, ஆந்திராவில், 47 டிகிரி செல்சியசிலும், தெலுங்கானாவில், 48 டிகிரி செல்சியசிலும் வெயில் கொளுத்தியது. கடந்த, 75 ஆண்டுகளில் இது தான் உச்சபட்ச தொடர் வெப்பம். தெலுங்கானாவின் கரீம் நகர், ...

3வது நாளாக முடங்கிய பார்லி., இறங்கி வராத எதிர்க்கட்சிகள்

Posted:

புதுடில்லி:ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் முன்னாள் அமைப்பாளர், லண்டனில் பதுங்கி வாழும் லலித் மோடிக்கு உதவி செய்ததாக கூறப்படும், வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, மற்றும் பா.ஜ., முதல்வர்கள், வசுந்தரா ராஜே, சிவராஜ் சிங் சவுகான் ஆகிய மூவரையும் பதவியிலிருந்து நீக்கக் கோரி, பார்லிமென்டில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் நடத்தி வரும் அமளியால், தொடர்ந்து மூன்றாவது நாளாக லோக்சபாவும், இரண்டாவது நாளாக ராஜ்யசபாவும், அலுவல் எதுவும் இன்றி முடங்கியது.நேற்று மதியம், 12:00 மணி வரை லோக்சபாவும், மதியம், 2:00 மணி வரை, மூன்று ஒத்திவைப்புகளுடன் ராஜ்யசபாவும் செயல்பட்டன. அதற்குப் ...

தூக்குல போடாதீங்கோ: யாகூப் 'அப்பீல்!'

Posted:

புதுடில்லி: மும்பையில், 1993ல், 250க்கும் மேற்பட்ட அப்பாவிகளை கொன்று குவித்த, தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, யாகூப் மேமனுக்கு, 53, கருணை காட்ட அனைத்து கோர்ட்டுகளும் மறுத்து விட்ட நிலையில், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளான்.மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனுக்கு தண்டனையை நிறைவேற்ற, அம்மாநிலஅரசு, இம்மாதம், 30ம்தேதியை நிர்ணயித்துள்ளநிலையில், மாநில கவர்னருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பி, தண்டனையை தள்ளிப் போட முயற்சித்துள்ளான்.தனக்கு ஏன் தண்டனை நிறைவேற்றப்படக் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™