Tamil News | Online Tamil News |
- டாஸ்மாக் மது விற்பனைக்கு தமிழக அரசு 'டாட்டா?': அதிகரிக்கும் அரசியல் நெருக்கடியால் கைவிட திட்டம்
- நில மசோதா போல ஜி.எஸ்.டி.,யும் 'புஸ்?' ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு
- 275 வி.வி.ஐ.பி.,க்களுக்கு மத்திய படை பாதுகாப்பு
- இறந்து போனவர்களுக்கு பென்ஷன்: எஸ்.பி.ஐ., மீது மத்திய அரசு அதிருப்தி
- வெளிநாட்டு சேட்டிலைட்கள் மூலம் இஸ்ரோவுக்கு 630 கோடி வருவாய்
- அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கவர்னர் மீண்டும் மோதல்
- மின்சார சட்ட திருத்தம் பாதிப்பை ஏற்படுத்தும்: கருணாநிதி
- அப்துல் கலாமுக்கு மரியாதை: ஜார்க்கண்ட் பள்ளி வினோதம்
- நான் தான் டில்லி அரசு? அதுக்கு என்னா இப்போ?: கெஜ்ரிவாலுக்கு கடிதம் மூலம் நஜிப் ஜங் சூடு
- பல்கலைகளில் பாலியல் தொந்தரவு: பாதிக்கப்பட்ட 75 பெண்கள் புகார்
- பாட புத்தகத்தில் முஷாரப்: கடும் எதிர்ப்பு
| டாஸ்மாக் மது விற்பனைக்கு தமிழக அரசு 'டாட்டா?': அதிகரிக்கும் அரசியல் நெருக்கடியால் கைவிட திட்டம் Posted: டாஸ்மாக் மூலமான மது விற்பனையை கைவிட அரசு முடிவெடுத்து உள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், மது விற்பனை, தனியார்மயம் ஆக்கப்படுமா அல்லது பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்பது, இன்னும் தெளிவாகவில்லை. தற்போதையநிலவரப்படி, மது விற்பனை தனியார் மயமாக்கப்படும் என்ற தகவலே, வலுத்து வருகிறது.தமிழகத்தில், தேர்தல் காற்று வீசத் துவங்கியுள்ள நிலையில், மதுவை மையப்படுத்தும் அரசியல் சத்தம் அதிகரித்து உள்ளது. தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் மதுவிலக்கு வாத்தியம் வாசிப்பதால், பெண்களின் ஓட்டுகளை கருதி, அ.தி.மு.க.,வும் இது தொடர்பான ஒரு முடிவுக்கு வர வேண்டிய ... |
| நில மசோதா போல ஜி.எஸ்.டி.,யும் 'புஸ்?' ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு Posted: புதுடில்லி : சரக்கு மற்றும் சேவை வரியில், மாநில அரசுகள் கோரிய பெரும்பாலான திருத்தங்களை, ராஜ்யசபா குழு ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், அந்த மசோதாவை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என, அ.தி.மு.க., திரிணமுல் காங்., இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உறுதியாக அறிவித்துள்ளதால், மாற்றியமைக்கப்பட்ட அந்த மசோதா, ராஜ்யசபாவில், நில மசோதா முடங்கியுள்ளது போல முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான நாடுகளில், ஒரே மாதிரியான வரி முறை உள்ளது. ஆனால், நம் நாட்டில், மாநிலத்திற்கு மாநிலம் வரி முறை மாறுபடுகிறது. இதை மாற்றி, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான மறைமுக வரியாக, 'வாட்' ... |
| 275 வி.வி.ஐ.பி.,க்களுக்கு மத்திய படை பாதுகாப்பு Posted: புதுடில்லி: நாடு முழுவதும், 275 பேருக்கு மத்திய படையின் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், இதற்கான செலவு குறித்த விவரங்கள் கைவசம் இல்லை என்றும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி, லோக்சபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:தனி நபர்களுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தலை அடிப்படையாக வைத்து, மத்திய படையின் பாதுகாப்பு, அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் பாதுகாப்பும், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு, திரும்ப பெற வேண்டுமா அல்லது தொடர ... |
| இறந்து போனவர்களுக்கு பென்ஷன்: எஸ்.பி.ஐ., மீது மத்திய அரசு அதிருப்தி Posted: புதுடில்லி: 'பென்ஷன் வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இறந்துபோன, 3,000 பேருக்கு, பல ஆண்டுகளாக, எஸ்.பி.ஐ., பென்ஷன் வழங்கி வருகிறது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள்: ராஜ்யசபாவில் நேற்று, மத்திய உள்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, கிரண் ரிஜிஜு கூறியதாவது:பென்ஷன் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. குறிப்பாக, இறந்துபோன, 3,000க்கும் அதிகமானவர்களுக்கு, பல ஆண்டுகளாக, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்ஷன், எஸ்.பி.ஐ., மூலமாக வழங்கப்படுகிறது. உண்மையான பென்ஷன் தொகைக்கு பதிலாக, ... |
| வெளிநாட்டு சேட்டிலைட்கள் மூலம் இஸ்ரோவுக்கு 630 கோடி வருவாய் Posted: புதுடில்லி: இந்திய ராக்கெட்கள் மூலம் வெளிநாடுகளை சேர்ந்த 45 செயற்கைக் கோள்களை விண்ணில்செலுத்தியதன் மூலம், 630 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இதுகுறித்து லோக்சபாவில் நேற்று மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்த பதில்:'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வர்த்தக பிரிவாக, 'ஆன்ட்ரிக்ஸ்' செயல்படுகிறது. இதுவரை, 19 நாடுகளின் 45 செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. இதன் மூலம், 630 கோடி ரூபாய் வருவாயை ஆன்ட்ரிக்ஸ் ஈட்டியுள்ளது. வரும் 2015-17ம் ... |
| அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கவர்னர் மீண்டும் மோதல் Posted: புதுடில்லி: ''டில்லி மாநில அரசு, பெண்கள் கமிஷன் தலைவராக சுவாதி மலிவாலை நியமித்தது செல்லாது,'' என, டில்லி லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங் அறிவித்துள்ளார். டில்லி மாநில லெப்டினன்ட் கவர்னருக்கும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பல விஷயங்களில் கடும் மோதல் நிலவி வருகிறது. டில்லி அரசின் நியமனங்களை செல்லாது என அறிவித்து, கவர்னர் வேறு நபர்களை நியமித்து வருவதால், சலசலப்பு காணப்படுகிறது. இந்நிலையில், டில்லி பெண்கள் கமிஷன் தலைவராக, சுவாதி மலிவாலை, மாநில அரசு சில நாட்களுக்கு முன் நியமித்தது. ஆனால், இந்த நியமனம் செல்லாது ... |
| மின்சார சட்ட திருத்தம் பாதிப்பை ஏற்படுத்தும்: கருணாநிதி Posted: சென்னை : 'மத்திய அரசு, மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சீனா, 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. ஆண்டுக்கு, 12 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து, உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. 31 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்க நாடு, ஆண்டுக்கு, 11 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.இதுதவிர, 13 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பான் நாடு, 3 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.ஆனால் இந்தியாவிலோ, மக்கள் தொகை, 123 கோடி; மின் உற்பத்தியோ, 2.6 லட்சம் மெகாவாட் தான். ... |
| அப்துல் கலாமுக்கு மரியாதை: ஜார்க்கண்ட் பள்ளி வினோதம் Posted: கோடர்மா: ஜார்க்கண்ட் மாநில பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, 83, மரியாதை செலுத்துகிறோம் என்ற பெருமிதத்தில், அவர் படத்திற்கு மாலை சூட்டி, குங்குமம் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நம் இந்திய மரபு படி, உயிருடன் இருப்பவர்களின் படங்களுக்கு மாலைகள் சூடுவதில்லை; குங்குமம் வைப்பதில்லை. இதுகூட தெரியாமல், ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர், பெண்ணான, நீரா யாதவ், கலாம் படத்திற்கு மாலை சூட்டி, குங்குமம் வைத்துள்ளார்.பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும், தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட, அதிநவீன வகுப்பறை துவக்க விழாவில், ... |
| நான் தான் டில்லி அரசு? அதுக்கு என்னா இப்போ?: கெஜ்ரிவாலுக்கு கடிதம் மூலம் நஜிப் ஜங் சூடு Posted: புதுடில்லி: நான் தான் டில்லி அரசு , அதுக்கு என்ன இப்போ? என வெளிப்படையாக துணை நிலை கவர்னர் , ஆம் ஆதமி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் மூலம் சவால் விடப்பட்டுள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். அரசு உயரதிகாரிகள் நியமன விவகாரத்தில் துணை நிலை கவர்னர் நஜிப் ஜங்கிற்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நிலவி வருகிறது.இதன் உச்சகட்டமாக டில்லி மகளிர் ஆணையத்தலைவர் நியமன விவகாரம் வெளிப்படையானது. டில்லி மகளிர் ஆணையத்தின் தலைவரான பர்கா சிங் பதவி காலம் இம்மாதத்துடன் ... |
| பல்கலைகளில் பாலியல் தொந்தரவு: பாதிக்கப்பட்ட 75 பெண்கள் புகார் Posted: புதுடில்லி : நாடு முழுவதும், உயர்கல்வி மையங்களில், பாலியல் தொந்தரவு குறித்து, 75 புகார்கள் வந்துள்ளதாக, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது. |
| பாட புத்தகத்தில் முஷாரப்: கடும் எதிர்ப்பு Posted: ஜபல்பூர் : மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுக்கநெறி பாட புத்தகத்தில், பிரபலங்கள் வரிசையில், பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் படம் இடம் பெற்றிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 23,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |