Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பயன்படுத்த முடியாத நிலையில் மிக்சி, கிரைண்டர்: இலவச பொருளுக்கு செலவான கோடிகள் வீண்!

Posted:

இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை தரமில்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழக அரசு, 1 கோடியே 85 லட்சம் பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி அல்லது மின் அடுப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்க முடிவு செய்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், இந்த இலவசப் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

ரூ.3,500 கோடி செலவில்... :
இதுவரை, 95 லட்சம் பேருக்கு இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள, 90 லட்சம் பேருக்கு 3,500 கோடி ரூபாய் செலவில் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. ''நவம்பர் ...

உப்பூர், வட சென்னை மின் நிலையங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்க முடிவு

Posted:

உப்பூர், வட சென்னை மின் நிலையங்களின் கட்டுமான பணிக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியம், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில், 9,600 கோடி ரூபாய் செலவில், தலா, 800 மெகாவாட் திறனுடைய இரண்டு அலகுகள் கொண்ட மின் நிலையத்தையும், திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், 4,800 கோடி ரூபாய் செலவில், 800 மெகாவாட் திறனுடைய, வட சென்னை அனல் மின் நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளது.இவற்றுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த இரு மின் ...

26 பெட்டிகளுடன் ரயில்கள் இயங்கினால்தமிழக ரயில் நிலையங்களில் நிற்க முடியுமா?

Posted:

பயணிகளின் வசதிக்காக, 26 பெட்டிகளுடன் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஆனால், 26 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் நின்று செல்ல, தமிழகத்தில் எந்த ரயில் நிலையத்திலும் நடைமேடை வசதி இல்லை.

தற்போது, எக்ஸ்பிரஸ் ரயில்கள் எல்லாம், அதிகபட்சமாக, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, ரயில்களில் கூடுதலாக, இரண்டு பெட்டிகள் இணைக்க, ரயில்வே துறை முடிவு செய்து உள்ளது. முதற்கட்டமாக, ஐந்து வழித்தடங்களில், இந்த திட்டம் அமலாக உள்ளது. இருப்பினும், பெரும்பாலான ரயில் நிலையங்களில், 24 பெட்டிகளை உடைய ரயில்கள்
நின்று செல்லவே, ...

தி.மு.க.,வுக்கு தகவல் சொன்னது யார்? அ.தி.மு.க., மேலிடம் விசாரணை

Posted:

தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன், தி.மு.க., தலைமைக்கு தெரிவது, அ.தி.மு.க., தலைமைக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க, தி.மு.க.,விற்கு தகவல் தெரிவிப்பது யார் என, ரகசிய விசாரணையை துவக்கி உள்ளது.

முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், தமிழக அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள், உடனுக்குடன் தி.மு.க., தலைமைக்கு தெரிகின்றன. முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றதும், சட்டசபை கூட்டத்தை கூட்ட தேதி முடிவு செய்த தகவல்அறிந்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என, வலியுறுத்தினார். ...

யாகூப் மேமனுக்கு வரும் 30ல் தூக்கு: சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted:

புதுடில்லி:மும்பை தொடர் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான, யாகூப் மேமன் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வரும், 30ல், யாகூப் மேமனுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என, தகவல் வெளியாகி

உள்ளது.
பொது மக்கள்:
கடந்த, 1993ல், மும்பையில், பங்குச் சந்தை உள்ளிட்ட, முக்கியமான 13 இடங்களில், தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. 257 அப்பாவி பொதுமக்கள் இதில் இறந்தனர்; 700க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மும்பை நிழல் உலக தாதா, தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன், அவன் சகோதரன் யாகூப் மேமன், 53, ...

ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணை வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

Posted:

புதுடில்லி: 'நம் நாட்டிலேயே, மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, முன்னாள் பிரதமர் ராஜிவை கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு கருணை காட்ட வேண்டாம்' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்தது. 'இவர்களை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலிக்கலாம்' ...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா? அரசு நிதியில் 15 சதவீதம் 'துண்டு'

Posted:

'தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன; போராட்டங்களும் நடத்தி வருகின்றன. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், இது சாத்தியமா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, மது கடைகளை மூடினால், அரசு வருவாயில், 15சதவீதம், 'துண்டு' விழும். ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ள நிலையில், பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது: தமிழக ...

மதுவிலக்கு வேண்டாம்; விற்பனையிலிருந்து விலகலாம்!

Posted:

மக்களுக்காகச் செயல்படும் எந்த ஒரு அமைப்பும், மக்கள் சேவைக்காக மட்டுமே செயல்படுவது தான் இயல்பு. அந்த வகையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மது விற்பனையை அமல்படுத்த முன்வரும் அரசோ, அமைப்போ, அதற்குரிய உச்சபட்ச பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது தான் நியதி. அதிலிருந்து தவறும்போது ஏற்படும் ஆபத்துகளை தான், தமிழகம் தற்போது சந்தித்து வருகிறது.

இன்னல்கள்:
* மது குடிப்போருக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல் போனதால், சிறு பிள்ளைகளும் மது குடிக்கத் துவங்கி விட்டனர். இதற்கென பணம் ஈட்டும் முகமாக, குற்றச் ...

மதுவிலக்கு சாத்தியமா? கருணாநிதி பதில்

Posted:

சென்னை: 'தமிழகத்தில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என, நேற்று முன்தினம் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து, அரசியல் வட்டாரங்களில், பல விதமான கருத்துகள் சொல்லப்படுகின்றன. 'மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை' என, கூறப்படும் சூழலில், நேற்று மாலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில், நிருபர்களை சந்தித்த கருணாநிதி கூறியதாவது: தமிழகத்தில், மதுவிலக்கு சாத்தியப்படுமா என, கேட்கின்றனர். மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்றாலும், அதை முயற்சி எடுத்து, நாம் தான் அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்துவது ...

ம.பி., போல தமிழகத்திலும் 'வியாபம்' முறைகேடு: ஆள்மாறாட்டம் செய்தவரை கண்டுகொள்ளாத மர்மம் என்ன?

Posted:

சென்னை: மத்திய பிரதேச மாநிலத்தை உலுக்கி வரும், 'வியாபம்' முறைகேடு, தமிழகத்திலும் எதிரொலிக்க துவங்கி உள்ளது.ஆள்மாறாட்டம் செய்து, சென்னை வருமானவரித் துறையில் பணியில் சேர முயன்ற, பீகாரை சேர்ந்தவர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாப்பிள்ளையைப் போல், அவரை திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால், 'வியாபம்' முறைகேடு கும்பலுக்கும், இதற்கும் தொடர்பு இருக்கலாம் என, சந்தேகம் கிளம்பி உள்ளது.பீகார் மாநிலம், விசாலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணியாளர் தேர்வு ஆணையமான, 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' மூலம், வருமானவரித் துறை குரூப் 'பி' பிரிவு பணியாளராக தேர்வு ...

பா.ஜ.,வில் 'லோக்பால்' வேணும்: 'மாஜி' முதல்வர் அதிரடி

Posted:

புதுடில்லி:'''வியாபம்' போன்ற மெகா ஊழல் விவகாரங்களை கையாள, கட்சிக்குள் லோக்பால் அமைப்பு தேவை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சாந்தகுமார் கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. ம.பி.,யில், தொழில்முறைக் கல்வி அமைப்பான, 'வியாபம்' நிர்வாகிகள், அரசியல்வாதி களுடன் கூட்டு சேர்ந்து, பல நுாறு கோடி ரூபாய் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மகாராஷ்டிர பா.ஜ., அமைச்சர் பங்கஜா முண்டே, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எதிராகவும், புகார்கள் கிளம்பி உள்ளன.இருப்பினும், ...

53 சதவீத மார்க் பெற்றவர் முதலிடம்!

Posted:

புதுடில்லி:சமீபத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில், முதலிடம் பெற்றவர், 53 சதவீத மதிப்பெண்தான் பெற்றுள்ளார்.விவரம்:யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, அகில இந்திய நிர்வாகப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகின்றன. இந்தாண்டில், தேர்வானவர்கள் பற்றிய விவரம் கடந்த, 4ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டதாலும், கேள்விகள் கடுமையாக இருந்ததாலும், குறைவான மதிப்பெண்களே பெற முடிந்தது.முதலிடம் பிடித்த டில்லியைச் சேர்ந்த இரா சிங்கால், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™