Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெ., வழக்கில் 27ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை

Posted:

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, வரும் ஜூலை 27ல் நடைபெறவுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா கடந்த ஆண்டு, தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, தலா நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர், கர்நாடக ...

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதி அதிரடி அறிவிப்பு

Posted:

'தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று அதிரடியாக அறிவித்தார்.'தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, காங்கிரஸ், பா.ஜ., - ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவை வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கோவை மாவட்டத்தில், பள்ளி மாணவி ஒருவர், மது அருந்தி விட்டு, நடு ரோட்டில் ரகளை செய்த விவகாரம், தமிழக மக்களிடம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்று வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் ...

தங்கம் விலை கணிசமாக குறைந்ததால் நுகர்வோர் மகிழ்ச்சி: ஒரே நாளில் சவரனுக்கு 256 ரூபாய் வீழ்ச்சி

Posted:

தங்கம் விலை கணிசமாகக் குறைந்ததால், நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 256 ரூபாய் குறைந்ததால், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. சர்வதேச சந்தையில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தங்கம் விலை நேற்று சரிவடைந்தது. அதே நேரத்தில், உள்நாட்டில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. மும்பையில் நேற்று, 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 520 ரூபாய் குறைந்து, 25,250 ரூபாய்க்கு விற்பனையானது. டில்லியில், 10 கிராம் சுத்த தங்கம், 300 ரூபாய் குறைந்து, 25,700 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேபோல, ஒரு கிலோ ...

காங்கிரஸ் நிபந்தனையை ஏற்க மத்திய அரசு மறுப்பு: தோல்வியில் முடிந்தது அனைத்து கட்சி கூட்டம்

Posted:

புதுடில்லி: 'பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த வேண்டுமானால், ஊழல் புகாரில் சிக்கிய பா.ஜ., முதல்வர்கள், அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என, காங்கிரஸ் விதித்த நிபந்தனையை ஏற்க, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதனால், பார்லி., கூட்டத் தொடரில் கடும் அமளி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. * பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கி, அடுத்த மூன்று வாரங்களுக்கு நடக்கிறது. *'ஊழல் மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள பா.ஜ., மூத்த தலைவரும், வெளியுறவு துறை அமைச்சருமான, சுஷ்மா ...

7 கைதிகளை விடுவித்தது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்

Posted:

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புள்ள, ஏழு கைதிகளை விடுவிப்பதென, முடிவு எடுத்ததற்கான காரணங்களை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னா, எழுத்து மூலம் தாக்கல் செய்த பதில் விவரம்:ராஜிவ் கொலையில் கைதிகளாக உள்ள, ஏழு பேரின் விடுதலை குறித்து முடிவு செய்ய வேண்டியது, தமிழக அரசு மட்டுமே. இவ்விஷயத்தில், தமிழக அரசை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டுக்கு, மத்திய அரசு ஓடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் சாசனப்படி, 'ரிட்' மனுவை, பிரஜைகள் மட்டுமே ...

துணிச்சல் ஏட்டு, முதல்வர் மீது வழக்கு?

Posted:

புதுடில்லி:போலீசாரை இழிவாக பேசிய, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, இரு போலீசார், புகார் அளித்து உள்ளனர். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், 'கனத்த தொப்பையுடன் மந்தமாக உலவும் போலீஸ்' என பொருள்படும், 'துல்லா' என்ற வார்த்தையை சொல்லி, போலீசாரை விமர்சித்தார்.''தெருவோர வியாபாரி களை மிரட்டி பணம் பறிக்கும் 'துல்லா'வுக்கு எதிராக வழக்கு பதியப்படுவதில்லை; இதை ஏற்க முடியாது,'' என, அரவிந்த் கெஜ்ரிவால் அந்த பேட்டியில் கூறிஇருந்தார். முதல்வரின் இந்த பேட்டி, டில்லி போலீசாரை கொதித்தெழச் செய்துள்ளது. கபூர் ...

கேரளாவிற்கு பயணித்த 306 டன் காய்கறிகள்: அரசு மூலம் தீவிர கண்காணிப்பு

Posted:

தமிழகத்தில் இருந்து எந்த பிரச்னையும் இன்றி, நேற்று கேரளாவுக்கு, 306 டன் காய்கறிகள் எடுத்து செல்லப்பட்டன. இது, அரசு மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து நாள்தோறும், 200 லாரிகள் மூலம், கேரளாவிற்கு பல வகை காய்கறிகள் எடுத்து செல்லப்படுகின்றன. இந்த காய்கறிகளில் ரசாயன தன்மை இருப்பதாக, கேரள அரசு பிரச்னை கிளப்புகிறது. இதுகுறித்து, ஏற்கனவே ஆய்வு செய்த தமிழக அரசு, காய்கறிகளில் நச்சுதன்மை இல்லை என, உறுதி செய்துள்ளது. இருப்பினும், தேசிய ஆய்வகங்களில், சான்றிதழ் பெற்று வரும் காய்கறிகளை மட்டுமே, கேரளாவிற்குள் அனுமதிக்கப் போவதாக ...

கேரளா அண்டை மாநிலமா, அண்டை நாடா? விஜயகாந்த் கேள்வி

Posted:

சென்னை: 'விவசாயிகளை பழிவாங்குவதற்காக, காய்கறிகளுக்கு தடை விதிக்கும் கேரளா, அண்டை மாநிலமா அல்லது அண்டை நாடா என்ற சந்தேகம் எழுகிறது' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, காய்கறிகளில் நச்சுத்தன்மை உள்ளதாக, பொய்யான குற்றச்சாட்டை கேரளா கூறுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து வேளாண் பல்லைக்கழகமும், உணவு பாதுகாப்பு கழகமும் பல ஆய்வுகளை செய்து, 'உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், எந்த நச்சுத்தன்மையும் தமிழக காய்கறிகளில் இல்லை' என, திட்டவட்டமாக கூறியுள்ளன. இந்நிலையில், ...

ஒரு லட்சம் கோடி நஷ்டமா? குற்றம் சாட்டுவோரின் அறியாமையும்... உண்மை நிலவரமும்...! ல. ஆதிமூலம்

Posted:

தமிழக அரசியல்வாதிகள், சமீப நாட்களாக கையிலெடுத்திருக்கும் அஸ்திரம், 'அதானி குழுமத்திடம்' அதிக விலைக்கு சூரிய மின்சாரத்தை கொள்முதல் செய்ய, தமிழக மின் வாரியம் கையயெழுத்திட்டிருக்கிறது' என்பதுதான். இந்த குழுமத்துடன், 25 ஆண்டுகளுக்கு செய்துள்ள ஒப்பந்தம் காரணமாக, மின் வாரியத்துக்கு, ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என, குற்றம் சாட்டியுள்ளார் ஸ்டாலின்.இவர்கள், சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை எதிர்க்கிறார்களா; அல்லது, அதானி குழுமம் தமிழகத்தில் முதலீடு செய்வதை எதிர்க்கிறார்களா; அல்லது, அதானி மோடியின் நண்பர், என்பதால் எதிர்க்கிறார்களா என, ...

தொழிலாளர் சட்டதிருத்தம் எப்போது?

Posted:

புதுடில்லி: ''தொழிலாளர் தொடர்பான சட்டதிருத்தங்கள், அவர்களுடன் கலந்தாலோசித்து, ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்தான் மேற்கொள்ளப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் தொடர்பான விதிமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு தொழிலாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சு நடத்த...:
தொழிலாளர் பிரச்னை கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் பேச்சு நடத்த, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமை யில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் ...

நில மசோதா அறிக்கை தாக்கல் ஆகஸ்ட் வரை அவகாசம்

Posted:

புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு, ஆகஸ்ட் முதல் வாரம் வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, தற்போதைய நிலையிலேயே பார்லிமென்டில் நிறைவேற்ற, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, இந்த மசோதாவை ஆய்வு செய்து, அதில் திருத்தம் மேற்கொள்ள, பா.ஜ., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான, எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையில், 30 உறுப்பினர்கள் அடங்கிய, பார்லி., கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய, இந்த குழுவுக்கு ...

ரூ.36,000 கோடி ஊழல்? சத்தீஸ்கர் அரசுக்கு எதிராக மனு

Posted:

புதுடில்லி : சத்தீஸ்கரில், பொதுவினியோக திட்டத்துக்கு அரிசி கொள்முதல் செய்ததில், 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட, வீரேந்திர பாண்டே என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு:பொது வினியோக திட்டத்துக்கு அரிசி கொள்முதல் செய்ததில், 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதில், சத்தீஸ்கர் மாநில பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்புள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™