Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'முல்லை பெரியாறு: சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு தேவையில்லை'

Posted:

புதுடில்லி: 'முல்லைப் பெரியாறு அணைக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையான, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின் பாதுகாப்பு தேவையில்லை' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், 'முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பொறுப்பை, மத்திய தொழில் பாதுகாப்பு படையான, சி.ஐ.எஸ்.எப்.,பிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, ...

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 'சூடு பிடிக்கிறது' : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் நம்பிக்கை

Posted:

இந்திய பொருளாதாரம் குறித்த மத்திய அரசின் மதிப்பீடுகளுக்கு, கண்ணை மூடி, 'ஆமாம் சாமி' போடாதவர், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். அவர் நேற்று, முதன் முறையாக, ''இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி காணத் துவங்கியுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டத்தில் பங்கேற்க, சென்னை வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்திய பொருளாதாரம், மந்தநிலையில் இருந்து, ஸ்திரமாக, மறுமலர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு அறிகுறியாக, மூலதன முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.
சீர்திருத்தம்
அதே சமயம், இன்னும் ...

வந்துவிட்டது "கொத்தனார்' ரோபோ: இரண்டே நாட்களில் வீட்டை கட்டி முடிக்கும்

Posted:

பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், மனிதர்களால் காலம் காலமாக கைகளால் செய்யப்பட்டு வந்த செங்கல் சுவர் கட்டும் வேலையை, விரைவில் செய்து முடிக்கும் ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்.
வடக்கு இங்கிலாந்தில் கட்டடக் கலையில் சிறந்து விளங்கிய "ஹாட்ரியன்' எனும் ரோமன் பேரரசரை நினைவு கூறும் வகையில், இந்த ரோபோவிற்கு "ஹாட்ரியன்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஹாட்ரியன் ஒரு மணி நேரத்திற்கு 1000 செங்கற்களை கட்டும் திறன் கொண்டது. ஏற்கனவே அதனுள் திட்டமிடப்பட்ட புரோகிராம் படி, தனது 28 அடி நீள கை போன்ற அமைப்பின் மூலம் ஒவ்வொரு ...

கன்னத்தில் கை பட்டது; அடிக்கவில்லை: ஸ்டாலின்

Posted:

''வாலிபரை தள்ளிப் போகச் சொல்லி, கை அசைத்தேன்; ஆனால், அவரை அடிக்கவில்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று முன்தினம் பயணித்த ஸ்டாலின், வாலிபர் ஒருவரை கன்னத்தில் அறைந்தது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவின. ஸ்டாலினின் நடவடிக்கையை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதாவும் அறிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பாக நேற்று, நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் கூறியதாவது:
சம்பவத்தன்று, மகளிர், கட்சியினர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் ரயிலில் இருந்தனர். அவர்களுக்கு நெருக்கமாக ...

எகிறியது ஹெல்மெட் விலை... ரூ.3,000:தரமானவைகளுக்கு தட்டுப்பாடு

Posted:

தமிழகத்தில், 'ஹெல்மெட்' விலை, 3,000 ரூபாய் என, விண்ணைத் தொடும் அளவுக்கு எகிறியதால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி தவிக்கின்றனர். குறைந்த விலையில் தரமான ஹெல்மெட் கிடைக்க அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

'இரு சக்கர வாகன ஓட்டிகளும் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்' என்ற நடைமுறை, கடந்த, 1ம் தேதி முதல், தமிழகம் முழுவதும்அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, முதல் நாளில், மாநிலம் முழுவதும், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து சென்றனர். இரண்டாவது நாளான நேற்று, போலீசாரிடம் ...

நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி!

Posted:

புதுடில்லி:நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'பிரதமரின் கிரிஷி சின்சால் யோஜனா' எனப்படும், பி.எம்.கே.எஸ்.ஒய்., திட்டத்திற்கு, வரும் ஐந்தாண்டுகளில், 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என, மத்திய அரசு நேற்று அறிவித்தது.பிரதமர் தலைமையில் நேற்று கூடிய, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்துடன் இணைந்து, இந்த புதிய, நீர்ப்பாசன திட்டத்தையும் செயல்படுத்துவோம். நடப்பு ...

விமான தாமத விவகாரம்: அமைச்சர்கள் மன்னிப்பு

Posted:

புதுடில்லி:மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்காக, 'ஏர் இந்தியா' விமானம், வேண்டுமென்றே தாமதமாக புறப்பட்டதாகவும், அதில் டிக்கெட் வாங்கியிருந்த, விமானப் படை அதிகாரியின் குடும்பத்தினர், அமைச்சர் பயணம் செய்ய வசதியாக, இறக்கி விடப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.இதுதொடர்பாக, அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு மன்னிப்பு கேட்டுள்ளனர்.அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., கிரண் ரிஜிஜு, 43, மத்திய உள்துறை இணையமைச்சராக உள்ளார். இவர், கடந்த மாதம் 24ல், ஜம்மு - காஷ்மீரின், லே பகுதிக்கு சென்று, ஏர் ...

'மூத்தவர்களை ராகுல் மதிப்பதில்லை'

Posted:

புதுடில்லி:''நாட்டில் என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரமே, ராகுலுக்கு தெரிவது இல்லை; கட்சியின் மூத்த தலைவர்களை அவர் மதிப்பதும் இல்லை,'' என, காங்., மூத்த தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான பரத்வாஜ் ஆவேசத்துடன் தெரிவித்து உள்ளார். காங்., மூத்த தலைவர்களில் ஒருவர் பரத்வாஜ். மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில் சட்ட அமைச்சராக பதவி வகித்தவர். கர்நாடக மாநில கவர்னராகவும் பதவி வகித்தார். ஏற்கனவே அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், காங்., தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ...

என் புகாருக்கு ஜெ., பதில் என்ன? கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை: 'தொழிலதிபர் அதானியின் சூரிய மின் சக்தி நிலைய ஒப்பந்தத்தில், விதி மீறல் இருப்பதாக, நானும், ராமதாசும் வெளியிட்ட அறிக்கைக்கு, தமிழக அரசு விளக்கம் தராதது ஏன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:தொழிலதிபர் அதானிக்குச் சொந்தமான குழுமத்துக்கு, தமிழகத்தில், 1,400 கோடி ரூபாய் மதிப்பில், 200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளிவந்து உள்ளது. இதை, 1,000 மெகாவாட்டாக உயர்த்துவதற்கான பேச்சு, அ.தி.மு.க., அரசுடன் நடைபெற்று வருகிறது என, அறிக்கை வெளியிட்டேன்.ராமதாஸ் விடுத்த அறிக்கையில், சூரிய ஒளி ...

மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு கருணாநிதியே காரணம்: ஜெ.,

Posted:

சென்னை:'மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க முடியாததற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கையெழுத்திட்ட ஒப்பந்தமே காரணம்' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சி முடிவில், கருணாநிதி கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, * ரொக்க இழப்பு மற்றும் திட்ட செயலாக்க காலத்தில் ஏற்படும், மூலதனச் செலவினத்தை, மாநில அரசே ஏற்க வேண்டும்.* திட்டம் செயல்பாட்டுக்கு வந்த, இரண்டாவது ஆண்டில் இருந்து, கூடுதலாக வாங்கப்பட வேண்டிய, ரயில் பெட்டிகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாங்க இயலவில்லை என்றால், அதற்கான செலவை, மாநில அரசே ஏற்க வேண்டும். * சென்னை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™