Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒரு ரூபாய் தயாரி்க்க ஆகும் செலவு ரூ.1.14

Posted: 02 Jul 2015 03:20 PM PDT

புதுடில்லி:
ஒரு ரூபாய் நோட்டை தயாரிக்க ரூ.1.14 வரை
செலவாகும் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கூறப்படுவதாவது:
20 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு ரூபாய் நோட்டை
வெளியிட ரிசர்வ் வங்கிமுடிவு செய்துள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
விளககம் கேட்கப்பட்டது.அதற்கு கிடைத்த பதிலில்
ஒரு ரூபாய்நோட்டை தயாரிப்பதற்கு ரூ.1.14 வரை
செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
--

மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

Posted: 02 Jul 2015 03:18 PM PDT

– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 20 ஆயிரத்துக்கு கீழ் வெள்ளிக்கிழமை குறைந்தது. இதற்கு முன்னர் ஏப்ரல் 1-ஆம் தேதி ரூ. 20 ஆயிரத்துக்கு கீழ் தங்கத்தின் விலை குறைந்திருந்தது. அதன் பிறகு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) பவுன் விலை ரூ. 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. தொடர்ந்து விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்த ...

சாலை விபத்தில் பா.ஜ., எம்.பி ஹேமமாலினி காயம்

Posted: 02 Jul 2015 03:04 PM PDT

- ஜெய்ப்பூர் : நடிகையும் மதுரா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி சென்ற கார் மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெற்றோருடன் வந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. - இந்த விபத்தில் ஹேமமாலினிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தனது தொகுதியான மதுராவில் இருந்து ஹேமமாலினி பென்ஸ் காரில் ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்தார். - டவ்சா என்ற பகுதி அருகே அதிவேகமாக வந்த ஹேமமாலினியின் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த ஆல்டோ கார் ...

யுகங்கள் மாறினாலும்...

Posted: 02 Jul 2015 02:53 PM PDT

சற்று இளைப்பாற வண்டியை விட்டு இறங்கி, ஓரமாக நின்று, சுற்றும் முற்றும் பார்த்தேன். கார்களிலும், ஆட்டோக்களிலும் மக்கள் வந்து, சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீபுரம் நாராயணியம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்று பல முறை எண்ணியும் முடியவில்லை. என் மகளின் திருமணம் முடிந்து, அவர்களை தேனிலவுக்கு அனுப்பி வைத்து, கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் நாராயணியம்மனுக்கு நன்றி சொல்ல குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தோம். கோவில் அருகே, எங்களையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தாரை சுட்டிக் காட்டி, ''ஏங்க, அந்த ...

விடுகதைகள்

Posted: 02 Jul 2015 02:51 PM PDT

நம்மில் பலர் நம்முடைய விடுகதைகளை மறுத்துவிட்டோம், இந்த திரியல் உங்களுக்கு தெரிந்த விடுகதைகளை பகிர்த்து கொள்ளலாமே? 1.கால்கள் இல்லாமல் ஆடுவான் வாய் இல்லாமல் சத்தம் போடுவான் - ஆனால் நடக்க மட்டும் தெரியாது அவன் யார்? 2. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ? 3. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன? 4. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? 3. உயிர் இல்லாத ...

வெயிலை வெறுப்பதா?

Posted: 02 Jul 2015 01:10 PM PDT

மழை பெய்தால் அது, சனியன் பிடிச்ச மழை; வெயிலடித்தால் அது, கருமாந்திரம் பிடிச்ச வெயில்! மக்கள், இப்படி இயற்கையை திட்டுவதைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. வர வர 'நம் உடல் ஏகமாய் வசதிகளை கேட்க ஆரம்பித்து விட்டது. பலர், குளிர் சாதனங்களுக்கும், மின் விசிறிகளுக்கும் பழகி விட்டனர். இதற்கு மாறான வெப்பநிலை அமையும் போது, அதை ஏகமாய் நொந்து, மனம் சலித்துக் கொள்கின்றனர். அப்போது யாராவது ஏதாவது கேட்டு விட்டால், சூடாகப் பேசுகின்றனர்; குதியாய் குதிக்கின்றனர்; 'வேலையே ஓடவில்லை...' என்று சொல்லி ...

கத்திரிக்காய் கறி!

Posted: 02 Jul 2015 12:49 PM PDT

கத்திரிக்காய் கறி! அந்த குருகுலத்தில் பல சீடர்கள் மகரிஷியிடம் பயின்று வந்தனர். அவரது ஆசிரமத்தில் இடம் கிடைப்பதையே பெரும்பேறாக நினைத்தனர் சீடர்கள். அன்று ஆசிரமத்தில் வைக்கப்பட்ட கத்தரிக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருந்தது. எனவே, சீடர்கள் சுவைத்துச் சாப்பிட்டனர்."நாளைக்கும் இதே கத்தரிக்காய் கறி கிடைத்தால், ஒரு வெட்டு வெட்டலாம்' என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அப்போது குருவானவர் அங்கு வந்தார். ""கடவுளுக்கு சித்தமானால் நாளைக்கும் கத்தரிக்காய் கறி கிடைத்தால், நம் சாப்பிடுவோம் என்று ...

நீ குடை விரித்தாய்….. மழை நின்றது!

Posted: 02 Jul 2015 12:42 PM PDT


-

அன்று
நீ குடை விரித்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
நின்றுவிட்ட மழையைப்
பார்த்தவனாகையால்..
இன்று
சட்டென்று மழை நின்றால்
நீ எங்கோ குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.

--------------------------------------------

– தபூ சங்கர்

சாமர்த்தியமான போலீஸ்!

Posted: 02 Jul 2015 12:39 PM PDT

- இரண்டு நாட்களுக்கு முன்னால்… ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்…. போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையில்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன். இன்று, வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் மாட்டிக்கொண்டோம். ...

எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......

Posted: 02 Jul 2015 12:37 PM PDT

ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் " மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ….." மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் " எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக ...

அம்மாக்கள் அறிவார்கள்

Posted: 02 Jul 2015 12:35 PM PDT

- வெள்ளிக்கிழமைகளில் வீடுதிரும்பும் குழந்தைகள் அம்மாக்களின் இடுப்பைக் கட்டிக்கொள்கின்றன – கழுத்தை வளைத்துக் கன்னத்தில் முத்தமிடுகிறார்கள் கண்களை மூடச்சொல்லி ஐந்து விரல்களையும் விரிக்கிறார்கள் – பிறகு, ஒவ்வொன்றாக மூன்று விரல்களை மடித்து கண்களை திறக்கச் சொல்கிறார்கள் – இரண்டு விரல்களை மட்டும் உயர்த்தி இடதும் வலதுமாக அசைத்து டூ டேஸ் லீவ் எனக் கூறும் குழந்தைகளின் குதூகலத்தை அம்மாக்கள் மட்டுமே அறிகிறார்கள் – ————————————– பாப்பு நன்றி – ஆனந்த விகடன்

மருமகள்!

Posted: 02 Jul 2015 12:27 PM PDT

வசந்தி இரக்க சுபாவம் கொண்டவள். அவள் சிறுவயது முதலே சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து வந்தாள். அவளது தாயார் அவள் சிறுமியாக இருக்கும்போதே இறந்து போனாள். அவளது தந்தை மறுமணம் செய்து கொண்டார். வந்தவளோ வசந்தியின் செயல்களில் எந்தவித குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்க முடியாது போனாலும், அவளுக்குச் சரியாக சாப்பாடு போடாமல் இருந்தாள். வசந்தி கவலைப்பட வில்லை. ஏனெனில், மற்றவர்கள் அவள் தமக்கு செய்யும் வேலைகளுக்காக உணவு கொடுத்து வந்தனர். இப்படி இருக்கையில், ஒருமுறை அவளது மாற்றாந்தாய் சீதா தன் பிறந்த வீட்டில் யாருக்கோ ...

கூழாங்கற்கள்...!!

Posted: 02 Jul 2015 12:20 PM PDT

தவறு…!!
*
மருத்துவர் கேட்ட கேள்விக்கு
தவறாமல் பதில் சொன்னாள்
தவறை மறைத்து…
ஒரு நாள் வெளிப்பட்டது தவறு.
*

விரல்கள் செய்யும் விந்தை!

Posted: 02 Jul 2015 11:17 AM PDT

உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். ...

ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ?

Posted: 02 Jul 2015 10:47 AM PDT

இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் - இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங்கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டோ, ரியர்வியூ மிரரில் சொருகியபடியோ ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு பயணிப்பது - சட்டத்தை மட்டுமல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்! 'ஹெல்மெட் இல்லையென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும்; வாகனம் சீஸ் செய்யப்படும்' போன்ற கடுமையான சட்ட திட்டத்தையெல்லாம் ...

10000 ( +/- , X ,/ 10% ?)பதிவுகள் கடந்த ரமணியன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Posted: 02 Jul 2015 10:44 AM PDT

10000 ( +/- , X ,/ 10% ?) பதிவுகள் கடந்த ரமணியன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க



இன்னும் பல ஆயிரம் பதிவுகள் கடக்க வாழ்த்துக்கள் .

நின்றால் ஒரு பெயர் ,ஓடினால் ஒரு பெயர் - விடுகதைகள்

Posted: 02 Jul 2015 10:43 AM PDT

-- 1. சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு அது கோட்டையும் அல்ல - அது என்ன? - 2. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள், சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள் ஒற்றுமையாக ஓரே அறையில் இருப்பவர்கள் ஒருவர் வீட்டின் சுவரில் உரசினால் அனைவரும் எரிந்துவிடுவார்கள்.- இவர்கள் யார்? - 3. வானத்தில் பறக்கும் அது பறவை அல்ல நீண்ட வால் உண்டு அது குரங்கு அல்ல வானத்தில் ஆட்டம் போடும் அது மயில் அல்ல அது என்ன? -- 4. வீதியில் கொட்டி ...

நீரைக்கண்டால் பயந்தாங்கொள்ளி – விடுகதைகள்

Posted: 02 Jul 2015 10:35 AM PDT

1) ஊரைக் கண்டால் பாயும் கொள்ளி, நீரைக்கண்டால் பயந்தாங்கொள்ளி – அது என்ன? – 2) பச்சை பெட்டகத்துக்கு சிவப்புக்கதவு – அது என்ன? – 3) ஓட்டு வீட்டைத் தாண்டி ஓட முடியாத சோம்பேறி – அவன் யார்? – 4) வல்லவன் வாலும் வாளாக மாறும் – அது என்ன? – 5) அன்றாடம் தீ பிடித்தும் அழியாத வீடு – அது என்ன? – 6) கடல் நீரில் வளரும், மழை நீரில் கரையும் – அது என்னன? – 7) ஆயிரம் பேர் அணி வகுப்பு, ஆனாலும் இல்லை சல சலப்பு – அது என்ன? – 8) விரிந்த பெருங்கடலில் சமைக்க மூடியாத மீன் கூட்டம் – அது என்ன? – 9) குதிரையோ ...

துப்பட்டாவால முக்காடு போட்டு மூஞ்ச மூடற வேலை மிச்சம்...!! (பஞ்ச் பரந்தாமன்)

Posted: 02 Jul 2015 10:34 AM PDT

கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு..!!

Posted: 02 Jul 2015 10:31 AM PDT

உன்னைப் பார்த்து மகாலட்சுமின்னு சொல்றானே…!!

Posted: 02 Jul 2015 10:29 AM PDT

லாரியிலே ஏன் சாராய சப்ளை செய்யறாங்க?!

Posted: 02 Jul 2015 10:25 AM PDT

- லாரியிலே ஏன் சாராய சப்ளை செய்யறாங்க? – தண்ணி லாரிய அனுப்பச் சொல்லி தலைவர்கிட்டே சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல! – யோகநாயகி – ——————————————- – நான் அழகா இருக்கேன்னு ஒரு முறை கூட என் கணவர் சொன்னதில்லை தரகரே…! – நான்தான் சொன்னேனேம்மா…மாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு! – சரவணன் – —————————————– – மழையை வென்ற தலைவன்னு நம்ம தலைவருக்கு ஏன் பட்டம் கொடுக்கிறாங்க? – இவ்வளவு மழைக்குக் கலையாத கூட்டம் தலைவர் பேச ஆரம்பிச்சதும் கலைஞ்சுடுச்சு…அதான்..! – வி.அங்கப்பன் – ———————————————– – தன்னோட ...

குமுதம் வாசகர்களின் கலக்கல் டிட் பிட்ஸ்

Posted: 02 Jul 2015 10:23 AM PDT

தெரிஞ்சுக்கோங்க!................எப்படி?...எப்படி?...

Posted: 02 Jul 2015 10:15 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

படித்ததில் பிடித்தது :) --உஷாரய்யா உஷாரு!

Posted: 02 Jul 2015 09:50 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

எமனை ஏமாற்றிய கதை.

Posted: 02 Jul 2015 09:28 AM PDT

எமதர்மன் அந்த வீட்டின் ஜன்னலில் அமர்ந்து நீண்ட நேரமாக, உள்ளே நடக்கும் சம்பாஷ்னையைக் கேட்டுக் கொண்டிருந்தான். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மனைவி கணவனிடம் "உங்களோடு இத்தனை நாள் குப்பை கொட்டி என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல புடவை உண்டா? நகை நாட்டுத் தான் உண்டா? அடுத்த வீட்டைப் பாருங்கள்? அவனுடைய மனைவி தினம் ஒரு புடவை, வைர நகைகள் என்று மினுக்கிறாள்.நீங்களும் தான்?" என்று இடிக்காத குறையாக குறைப்பட்டுக் கொண்டிருந்தாள். – கணவன் மனைவியிடம் " அதெல்லாம் சரிதான். அவன் ...

இது எந்தன் 10000 பதிவு

Posted: 02 Jul 2015 09:24 AM PDT

[b]இது எந்தன் 10000 பதிவு ! இது எந்தன் சொந்த நகைச்சுவை . ++" என்னங்க 10042 பதிவு போட்டுவிட்டு , 10000 பதிவு என்கிறீர் " "10000இக்கு 10% குறைச்சலாக இருந்தால்  கணக்குலே ,சேர்த்துக்க வேண்டாமாமே . அதனால்தான் இதை 10000பதிவு என்கிறேன் " ரமணியன் . கீழ்கண்டவை சுட்டவை ■ "ஏன் டாக்டர் இதென்ன கூத்து நீங்க ஞாபகமறதில உங்களுக்கே ஆபரேஷன் பண்ணி ரெண்டு கிட்னியையும் எடுத்துட்டீங்களாமே?" "அதை விட பெரிய கூத்து, ஏதோ ஞாபகத்துல, என் மேலயே ஒரு கேஸ் வேற போட்டுட்டேன் இதுக்கு என்ன சொல்றீங்க..?" ■ சென்னை ...

உற்பத்தி அளவையியல் - மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மின்னூல் .

Posted: 02 Jul 2015 08:56 AM PDT

கலைச்செல்வங்கள் அனைத்தையும் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற பாரதியின் கனவை நினைவாக்க வேண்டும் என்ற தாகம் என் மாணவ பருவத்திலிருந்தே நெஞ்சில் நிலைத்து வந்திருக்கிறது. முடிந்த போதெல்லாம் தமிழில் அறிவியல், பொறியியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளேன். அதன் தொடர்ச்சியாக, என் மனதுக்கு நெருக்கமான அளவையியல் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை பற்றி இந்நூலை எழுதத் தொடங்கினேன். அளவையியல் பாடத்தை நடத்தும் பணியும் எனக்கு தொடக்கம் முதலே வழங்கப்பட்டது. என்னுடைய ஆசிரிய பணி காலத்தில் பல பாடங்களை ...

தேகமே கண்களாய் - உத்தம சோழன் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 02 Jul 2015 08:51 AM PDT

உத்தம சோழன் - தேகமே கண்களாய் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . ஆசிரியர் பற்றி : உத்தமசோழன் என்கிற புனைப் பெயர் கொண்ட அ. செல்வராஜ் ஒரு வட்டாட்சியராக தஞ்சையில் பணிபுரிந்தவர். இவர் பணிஓய்விற்குப் பிறகு முழுநேர படைப்பாளியாக மாறி உள்ளார்.எழுத்தே முக்கியம் என்று விருப்ப ஒய்வில் அரசு ப் பணியிலிருந்து விலகினார். இவரது பல நாவல்கள் ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்து பிரபலம் ஆனது குறிப்பிடபடத் தக்கது .இவரது தொலைதூர வெளிச்சம் நாவல் மிகவும் ...

நம்ம குலதெய்வம்

Posted: 02 Jul 2015 08:20 AM PDT

இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம் குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி. காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக ...

அழகின் நிறம் - விக்கிரமன் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 02 Jul 2015 08:07 AM PDT

தலைவருக்கு போதை இறங்குதாம்..!

Posted: 02 Jul 2015 07:49 AM PDT

- கணவன்-மனைவி இரண்டு பேரும் போலீஸ் வேலைக்கு போறாங்களாம்..! – தப்பே இல்லே…இந்தக் காலத்துல ஒருத்தர் மட்டும் மாமூல் வாங்கினா பிழைக்க முடியாதே..! – ஜே.தனலட்சுமி – ——————————————— – தலைவருக்கு போதை இறங்குதாம்..! – இன்னொரு கட்டிங் கொடுத்து போதையை டாப் அப் பண்ணுங்க! – அம்பை தேவா -_ ———————————– – நாளைக்கு ஒரு கிரகப்பிரவேசத்துக்கு போகணும்னு இன்ஸ்பெக்டர்கிட்டே ஏன் கபாலி சொல்றான்..! – புதுவீட்ல திருடப் போறதைத்தான் சிம்பாலிக்கா சொல்றான்..! – பா.ஜெயக்குமார் – ———————————————— – கபாலிக்கு ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (122)

Posted: 02 Jul 2015 06:01 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா

Posted: 02 Jul 2015 05:24 AM PDT

அன்பான நண்பர்களே... டி எம் எஸ் அவர்களும்...பி சுசிலா அவர்களும் பாடிய ஒரு பாடல் அவ்வளவு இனிமை ,எந்த திரைப்படம் என்று தேயவில்லை அந்த ஒரு பாடலே போதும் அந்த திரையில் வந்த மற்றைய பாடல்களும் இது போன்று இனிமையாக இருக்குமென்று .... ராயா ஓ ராயா .. பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ... இப்படி ஆரம்பிக்கும்.. மிக இனிமை.. நண்பர்களே ,இந்த பாடல் எந்த திரையில் இடம் பெற்றது ,இந்த திரைப்படத்தில் வேறு பாடல்கள் இருக்குமாயின் தயை கூர்ந்து தந்து உதவுங்கள் ..அருமையான பாடல்

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Posted: 02 Jul 2015 05:13 AM PDT

வணக்கம்.... எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா.. ..நான் உங்கள் ரசிகன் ,,புதிழ சரித்திரம்.. ..அந்த வீட்டில் ஒருகோவில்.. ..தங்கச்சி.. அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில் அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா.. இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்..

ஏட்டில் முடங்கும் தாலாட்டு!

Posted: 02 Jul 2015 02:59 AM PDT

கடன்காரன் வந்தால்கலங்காத நெஞ்சம் கை மீது பிள்ளை அழுதாலே அஞ்சும்' என்று பாட்டு உண்டு. அழுகிற குழந்தையை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. மூன்று வேளை நல்ல உணவு கொடுத்து, நல்ல சம்பளமும் கொடுத்து, பிள்ளையை மட்டும் பார்த்து கொள்ள ஆள் தேடுவோமானால், இன்றைய சூழலில் இந்த பணிக்கு ஆள் கிடைப்பது அரிது. இந்த மாதிரி ஒரு பணிக்கு ஆள் கேட்டோமானால், அவர்கள் சொல்வது "பிள்ளை எடுத்து சாப்பிடுவதற்கு, பிச்சை எடுத்து சாப்பிடலாம்" என்கிறார்கள். பொழுதுக்கும் குழந்தையை பார்த்து கொள்வது, அதுவும் இந்த ...

மூளைக்குணவு

Posted: 02 Jul 2015 02:28 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

ஹெல்மெட் நகைச்சுவை

Posted: 02 Jul 2015 01:12 AM PDT

ஹெல்மெட் நகைச்சுவை





ஹெல்மெட் போட்டதுல இருந்து பின்னாடி வர வண்டி எதுமே தெரியமாட்டேங்குது... அதான் இப்படி... எப்பூடிடிடி



ரமணியன்

நன்றி தினமலர் /முகநூல்

இலவசமாக தரும் எதுவுமே சீக்கிரம் மதிப்பிழந்து விடும்..!!

Posted: 01 Jul 2015 10:07 PM PDT

அவர் காதுல ஹேண்ட்ஸ் அப் -னு விழுதாம்..!!

Posted: 01 Jul 2015 09:16 PM PDT

உலகில் முதல் அழகிப்போட்டி நடந்த நாடு – (பொது அறவு தகவல்)

Posted: 01 Jul 2015 09:14 PM PDT

--- - சினிமாவுக்கு சென்சார் இல்லாத நாடு – பிரான்ஸ் – நேரு உயிரியல் பூங்கா ஐதராபாத்தில் உள்ளது- – உலகில் மிக குறைந்த வயதில் உலக சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்றவர்- மார்டின் லூதர் கிங் – இந்தியாவின் முதல் பெண் தூதர் – விஜயலட்சுமி பண்டிட் (1947 – 1949) – ரஷியா – முதல் பெண் கவர்னர் – சரோஜினிதேவி நாயுடு – உலகில் முதல் அழகிப்போட்டி நடந்த நாடு – பெல்ஜியம் – உலகின் மிகப்பெரிய தங்க மார்க்கெட் லண்டனில் உள்ளது – ஒரு யூனிட் ரத்தம் என்பது – 350 மில்லி – பத்திரிகை துறைக்கு வழங்கப்படும் ...

வெளிப்படுத்தாமலே புரிந்து கொள்ளப்பட வேண்டுமென நினைக்கிறாள் பெண்...

Posted: 01 Jul 2015 09:04 PM PDT

தலைவரே நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க…!!

Posted: 01 Jul 2015 09:02 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™