Tamil News | Online Tamil News |
- தமிழக காய்கறிகள் விஷயத்தில் கேரள அதிகாரிகள் மீண்டும் முரண்டு: பரிசோதனை அறிக்கையுடன் வரும்படி டிரைவர்களுக்கு எச்சரிக்கை
- ஆள் பிடிக்கும் வேலையில் வருமானவரி துறை: ஒரு கோடி பேரை வரி கட்ட வைக்க தீவிரம்
- வரிந்து கட்டுவரா அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்?
- ரயில்களின் பெட்டிகளை 26 ஆக்க திட்டம்
- பார்லி.,யில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க பா.ஜ., தயார்
- ஜல்லிக்கட்டுக்கு விரைவில் அனுமதி?
- 'விவசாய துறையில் தமிழகம் பின்னடைவு': விஜயகாந்த் காட்டம்
- நாக்கை வெட்டுவேன்: எம்.பி., ஆவேசம்
- அமெரிக்க நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது யார்: சி.பி.ஐ., விசாரணை நடத்த கோவா முதல்வர் முடிவு
- ஆறு வாரம் அவகாசம்: தீர்ப்பை ஆய்வு செய்ய குழு
- உ.பி.,யில் எம்.எல்.ஏ.,வை சிறைபிடித்த கிராமவாசிகள்
| Posted: 'தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை' என, தமிழக அரசு விளக்கம் அளித்தும், கேரளா மீண்டும் முரண்டு பிடிக்கிறது. காய்கறிகளின் பரிசோதனை அறிக்கையுடன் வரும்படி, டிரைவர்களுக்கு அம்மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும், 2.28 கோடி டன் காய்கறிகளும், இரண்டு கோடி டன் பழங்களும் உற்பத்தியாகின்றன. திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உற்பத்தியாகும், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், தினமும், 200 லாரிகளில் கேரளாவுக்கு ... |
| ஆள் பிடிக்கும் வேலையில் வருமானவரி துறை: ஒரு கோடி பேரை வரி கட்ட வைக்க தீவிரம் Posted: புதுடில்லி: நடப்பு நிதியாண்டிற்குள், ஒரு கோடி பேரை, தன் வரி வளையத்திற்குள் கொண்டு வர, வருமானவரி துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதிகபட்சமாக, புனேவில், 10 லட்சம் பேரையும், தமிழகத்தில், 7.6 லட்சம் பேரையும், வரி வளையத்தில் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரி துறையின் கொள்கைகளை நிர்ணயிக்கும் அமைப்பாக, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம் இருக்கிறது. சமீபத்தில், மத்திய அரசு நடப்பு நிதியாண்டிற்குள், புதிதாக, 1 கோடி பேரை வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வருமாறு, சி.பி.டி.டி., நிர்வாகிகளை கேட்டுக் கொண்டது. அரசின் உத்தரவை ... |
| வரிந்து கட்டுவரா அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்? Posted: சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு, தமிழகத்திற்கு ௧௨ ஸ்மார்ட் சிட்டிகள் அனுமதி குறித்து விமர்சனம் என, அடுத்தடுத்து சீண்டும் காங்கிரசுக்கு பாடம் புகட்ட, அ.தி.மு.க.,வுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அக்கட்சி தயாரா என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது.இதுகுறித்து டில்லி யில், பார்லிமென்டின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்திரா, ராஜிவ் காலங்களில், அ.தி.மு.க., - -காங்., இடையிலான உறவு மிகவும் நெருக்கமாயிருந்தது. சோனியா தலைவரான பிறகு, அந்த நிலை மாறியது. இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் ... |
| ரயில்களின் பெட்டிகளை 26 ஆக்க திட்டம் Posted: புதுடில்லி : பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகளை, தற்போதுள்ள, 24ல் இருந்து, 26 ஆக அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:குறிப்பிட்ட சில வழித் தடங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. முன்பதிவு பெட்டிகளில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்போது, 18 - 24 பெட்டி கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதை ஏற்று, குறிப்பிட்ட சில வழித் தடங்களில் ... |
| பார்லி.,யில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க பா.ஜ., தயார் Posted: புதுடில்லி : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்க, பா.ஜ., அதிரடி வியூகம் வகுத்துள்ளது. இதுகுறித்து, தே.ஜ., கூட்டணி கட்சித் தலைவர்களுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், நாளை துவங்கி, ஆகஸ்ட், 13 வரை நடக்கவுள்ளது. |
| ஜல்லிக்கட்டுக்கு விரைவில் அனுமதி? Posted: புதுடில்லி: ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், சட்ட திருத்தம் மூலம் இந்த பாரம்பரிய விளையாட்டிற்கு அங்கீகாரம் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்துடன், மத நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் போன்றவற்றில், யானைகளை பயன்படுத்துவதற்கும், பாரம்பரிய மாட்டு வண்டி போட்டி களை நடத்துவதற்கும், சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இதை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.இதன்படி, இந்த சட்ட திருத்தங்களுக்கு பார்லிமென்டின் இரு அவைகளும் ஒப்புதல் ... |
| 'விவசாய துறையில் தமிழகம் பின்னடைவு': விஜயகாந்த் காட்டம் Posted: சென்னை: 'அதிக எண்ணிக்கையில், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, விவசாயத் துறையில், தமிழகம் பின் தங்கியுள்ளதற்கு சான்றாக அமைந்துள்ளது' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி, தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடன் தொல்லையால், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையில், நான்காவது இடத்தில் உள்ளது வேதனைக்குரியது.'தமிழகத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக மாற்றுவோம்' எனக்கூறிய ஜெயலலிதா ஆட்சியில், தமிழகம் எல்லா துறைகளிலும், குறிப்பாக விவசாயத்திலும் ... |
| நாக்கை வெட்டுவேன்: எம்.பி., ஆவேசம் Posted: ராசிபுரம்: "தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி யாராவது பேசினால், நாக்கை வெட்டுவேன்," என, பொதுக் கூட்டத்தில், எம்.பி., சுந்தரம் ஆவேசமாக பேசினார். |
| அமெரிக்க நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது யார்: சி.பி.ஐ., விசாரணை நடத்த கோவா முதல்வர் முடிவு Posted: பனாஜி: அமெரிக்காவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம், கோவா வில், நீர் மேம்பாட்டுத் திட்டத்துக்கான, 'ஆர்டரை' பெற, ஆறு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணை கோரப் போவதாக, கோவா முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் கூறிஉள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம், லுாயிஸ் பெர்ஜர். கோவா மாநிலத்தில் பெரிய நீர் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஆர்டரை, இந்நிறுவனம், ஆறு கோடி ரூபாய் லஞ்சம் தந்து பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, அமெரிக்க கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவா முதல்வர் லஷ்மிகாந்த் ... |
| ஆறு வாரம் அவகாசம்: தீர்ப்பை ஆய்வு செய்ய குழு Posted: மும்பை: பிரிமியர் ஆட்சி மன்ற கூட்டத்தில் உருப்படியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சென்னை, ராஜஸ்தான் அணிக்கு தடை விதித்த லோதா கமிட்டியின் தீர்ப்பை ஆய்வு செய்ய சிறப்பு பணி குழுவை அமைக்க உள்ளனர். இக்குழு 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாம். மொத்தத்தில் பிரச்னையை இழுத்தடிப்பதற்கான முயற்சியை தான் பி.சி.சி.ஐ., மேற்கொண்டுள்ளது.இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008ல் சர்ச்சைக்குரிய பிரிமியர் 'டுவென்டி-20' தொடர் துவங்கப்பட்டது. ஆறாவது தொடரில்(2013) 'ஸ்பாட்-பிக்சிங்' எனப்படும் சூதாட்ட புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், ... |
| உ.பி.,யில் எம்.எல்.ஏ.,வை சிறைபிடித்த கிராமவாசிகள் Posted: சந்தாலி: உ.பி.,யில், தம் பகுதியில் மின்சாரம், குடிநீர் முறையாக சப்ளை செய்யப்படாததை கண்டித்து, எம்.எல்.ஏ.,வை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உ.பி., மாநிலம், சந்தாலி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில், தண்ணீர், மின்சாரம் சரியாக சப்ளை செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை சந்தித்து சமாதானம் செய்ய, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., பப்பன் சிங் சவுகான் சென்றார்.தம் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய எம்.எல்.ஏ.,வை, கிராம மக்கள் சிறைபிடித்தனர். சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 20,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |