Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்

Posted: 19 Jul 2015 10:23 AM PDT

குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள் வீடுகளில் சேரும் பழைய பொருட்களை எடைக்கு வாங்கி விற்பதற்கென்றே 'குப்பவண்டி டாட் காம்' என்ற இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர் திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்கள். வேஸ்ட் பேப்பர் மற்றும் பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் பொருட் கள் எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் சேரும் பழைய பொருட்களை விற்பதற்கு ஏதுவாக ...

இன்றைய அரசியல் கூட்டணி

Posted: 19 Jul 2015 09:51 AM PDT

இன்றைய அரசியல் கூட்டணி





இலவசியம்




ரமணியன்

இராம ஜெயம்

Posted: 19 Jul 2015 09:43 AM PDT

நம் இந்தியக் குடும்பங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களில்  "இராம ஜெயம்" எழுதுவதை சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் கடவுளை வணங்கிய பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் 108 முறை தினமும் "இராம ஜெயம்" எழுதுவர். அலுவலகம் செல்பவர்கள் கூட சிலர், அந்த நோட்டுப் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வர். உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம், " இராம ஜெயம் " எழுதுவர். நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ' இராம ஜெயம் " எழுதுவர். போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் ...

பொண்ணுக்கு நூறு பவுன் நகை நிச்சயம் போடுவாங்க…!!

Posted: 19 Jul 2015 08:27 AM PDT

அழகான பெண்

Posted: 19 Jul 2015 08:27 AM PDT

- சார்… மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்?'' – கேட்டவர் ஒரு முதியவர். - ''டைம் கீப்பர் ஆபீஸ்ல போய்க் கேளுங்க பெரியவரே…'' – சொல்லி விட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர் சையது. - ''சார்… ஃபைவ் பி எங்கே வரும்?'' – கல்லூரி மாணவன் கேட்டான். - ''படிக்கத் தெரியும் இல்லே… மேல இருக்கற போர்டைப் பாரு!'' என்று சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறப்போனார். - ''சார், இது ராயப்பேட்டை போகுமா?'' – இந்த முறை கேட்டது ஓர் அழகான இளம்பெண். - ''இந்த ...

‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’

Posted: 19 Jul 2015 08:27 AM PDT

- 'சுயமுயற்சியுடன் கடினமாக உழைத்தால், எந்நிலையில் இருந்தாலும், கனவை எளிதில் நிஜமாக்க முடியும்," என்கிறார், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற உடுமலையை சேர்ந்த சுபரஞ்சினி. - உடுமலை, பழனியாண்டவர் நகரைச் சேர்ந்த இவர் 2010ம் ஆண்டு, பி.டெக்., ஐ.டி., பட்டம் பெற்று, ஓராண்டு ஐ.டி. துறையில் பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ்., ஆவதை மட்டுமே இலக்காகக் கொண்டு முயற்சித்து இரண்டு முறை தோல்வியுற்று, மூன்றாவது முறையாக, 2014ம் ஆண்டு எழுதிய தேர்வில் அகில இந்திய அளவில் 911 வது 'ரேங்க்' பெற்று வெற்றி பெற்றுள்ளார். ...

ஓர் அரசியலின் கதை - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல் வரிசை -3.

Posted: 19 Jul 2015 08:22 AM PDT

உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Posted: 19 Jul 2015 08:17 AM PDT

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். 'பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொத்துக் கணக்குகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்' என்று சொன்னதன் காரணமாக தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. அவரைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் எல்லோரும் அவரிடம் தனிக் கட்சி ஒன்று தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். அவர் அந்த முடிவுக்குச் சட்டென்று வந்து விடவில்லை. அதே காலகட்டத்தில் மற்றொரு பெரும் பொறுப்பும் அவரைச் சூழ்ந்து அழுத்திக் கொண்டிருந்தது. தன் சொந்த நிறுவனமான எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்க்காக அவர் பெரும் ...

பில்லா , ரங்கா

Posted: 19 Jul 2015 07:34 AM PDT

பக்கத்து ஊரில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரமசிவ முதலியார் கிளம்பினார். தன் வீட்டில் வேலை செய்யும் பில்லா, ரங்கா ஆகிய இரண்டு வேலையாட்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டார். முதலியார் ,வீட்டைப் பூட்டும் சமயத்தில் ரங்கா , முதலியாரைப் பார்த்து," ஐயா ! செல்போன், ATM கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டீர்களா? சமயத்தில் உதவும்; கையோடு குடையையும் எடுத்துக் கொள்ளுங்கள் ! மழை வரும்போல இருக்கிறது." என்று சொன்னான். " சரியாகச் சொன்னாய் ரங்கா!" என்று சொல்லிவிட்டு , முதலியார் வீட்டினுள் சென்று ...

சுய அறிமுகம் - சிவசங்கர்

Posted: 19 Jul 2015 07:25 AM PDT

பெயர்:SIVASANKAR S
சொந்த ஊர்:UDUMALPET
ஆண்/பெண்:MALE
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் VALIYAAGA
பொழுதுபோக்கு:ரீடிங் BOOKS
தொழில்:VAO
மேலும் என்னைப் பற்றி:SAADHARANA MANITHANUKKU THANI ATHIKAARAM VENDUM AADHAR MATTUM POTHATHU

ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை

Posted: 19 Jul 2015 07:21 AM PDT

ஹெல்மெட் நிறுவனங்களிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி வருத்தம் தருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வகை செய்யும் அரசு உத்தரவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவில் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவிட்டமாகக் கூறினார். ஹெல்மெட் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியில் இருந்து 5 கோடி வரை பணம் பெற்றதாக செய்தி வந்துள்ளது என்றும், ஹெல்மெட் நிறுவனங்களிடம் ...

மழையிலே நனைஞ்சாலும் ஜூஸ்தான் குடிக்கணும்...!!

Posted: 19 Jul 2015 07:17 AM PDT


-
மருமகளே, மழையிலே நனைஞ்சு வீட்டுக்கு வந்த
என்கிட்டே, ஜில்லுனு ஜூஸ் குடிக்கிறீங்களா-னு
கேட்கிறியே, ...?
-
எனக்கு இன்னமும் டீ சரியா போடத் தெரியாது,
அத்தை, அதான்....!!
-
--------------------------------------------

-தொடரும்...

உங்க அம்மாவுக்கு பேய் பிடிச்சிருக்குங்க…!

Posted: 19 Jul 2015 07:09 AM PDT

- அடிக்கடி நகைக்கடைகளிலேயே கொள்ளை அடிக்கிறியே,? – நகை-ன்னா எனக்கு கொள்ளை ஆசை எசமான்..! – வெ.சீதாராமன் – ————————————— – தண்ணியடிச்சிட்டு அசிங்கமா பேசினது, லோக்கல் தலைவர்களுக்கு தெரிந்து விட்டது..! – அதனால் என்ன? – கட்சியில சேரச்சொல்லி ஆளாளுக்கு கூப்பிடறாங்க..! – சி.ஆர் ஹரிஹரன் – —————————————– – என்னது, அண்ணன் தலைமையிலே நூறு பேர் இருக்காங்களா? கட்சியிலேயா…? சான்ஸே இல்லையே…! – அட..வாட்ஸ் அப்லேப்பா…!! – எஸ்.கார்த்திகேயன் – —————————————— – ஏங்க…உங்க அம்மாவுக்கு பேய் ...

13 குழந்தைகளை பெற்றெடுத்த வாடகைத் தாய்!

Posted: 19 Jul 2015 07:09 AM PDT

- லண்டனைச் சேர்ந்தவர், கரோல் ஹோல்லோக்; 49 வயது பெண்மணியான இவரின் வேலையே குழந்தைகளை பெற்றெடுப்பது தான். 12 லட்ச ரூபாய் கொடுத்தால் போதும், யாருடைய குழந்தையாக இருந்தாலும், வயிற்றில் சுமந்து, பெற்றுத் தந்து விடுவார். இதுவரை, 13 குழந்தைகள் பெற்றெடுத்துள்ள இந்த வாடகை தாய், 'இதுபற்றி பலரும் என்னை குற்றம் சொன்னாலும், இதை தவறான செயலாக நான் நினைக்கவில்லை…' என்கிறார். – ————————————— — ஜோல்னாபையன் வாரமலர்.

கே.டி.எம். தெரியுமா?

Posted: 19 Jul 2015 06:42 AM PDT

- பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதனின் கலாச்சார சின்னமாக, பண மதிப்பாக மதச் சின்னமாகப் பயன்படுத்தி வரும், "மெட்டல்' தங்கமாகும். – இது மிகக் கடினத்தன்மையுள்ள ஒரே மெட்டல். நினைத்த வடிவங்களில் இயைந்து வரக் கூடியதாகும். தங்க நகைத் தயாரிப்பில், இணைப்புகளில் சேதாரமாகலாம். இதனால் எடையும், மதிப்பும் குறையலாம். இதனைத் தவிர்க்க KDM என்ற காட்மியம் பயன்படுகிறது. – காட்மியம் பற்ற வைத்தபின் ஆவியாகி மறைந்து முழுத்தங்கமாகவே இணைப்பு தெரியாமல் காட்சியளிக்கும். முழு எடையும் அப்படியே கிடைக்கும். ...

எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்!

Posted: 19 Jul 2015 06:30 AM PDT

- பெயருக்கு ஏற்ற மாதிரி பளிச்சென்ற ஓவியமாக பளபளக்கிறார் ஓவியா. கேள்விகளுக்கு இவரிடம் இருந்து பதில் வருவதற்கு முன்னர் முந்திக் கொண்டு பேசிவிடுகிறது கண்கள். யப்பா…! அவ்வளவு எக்ஸ்ப்ரஸிவ். இந்த மலையாள மைனாவிடம் சம்ஸாரித்ததில் இருந்து…. படங்கள் குறைந்ததும் கிளாமருக்கு மாறிட்டீங்களாமே? எனக்கு படங்கள் குறைஞ்சுடுச்சுன்னு யார் சொன்னா? இப்பவும் நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நாலு மொழியிலும் நாயகியாக நடிக்கிறேன். நான் கிளாமர் பண்றது ஒண்ணும் புதுசு இல்ல. கிளாமர் பண்ண மாட்டேன் நீச்சல் டிரெஸ் ...

ஹன்ஸிகாவுக்கும் என் மகனுக்கும் காதலா? – ஜெயப்ரதா ஜாலி டாக்!

Posted: 19 Jul 2015 06:29 AM PDT

80களில் கனவுக் கன்னியாக ரசிகர்களின் இதயம் நிறைந்த ஜெயப்ரதாவின் சினிமா பயணம் "நினைத்தாலே இனிக்கும்'. மகன் சித்து ஹீரோவாக அறிமுகமாகும் "உயிரே உயிரே' பட விழாவுக்காக சென்னை வந்தவரிடம் பேச நிறைய இருந்தது. திநகர் வீட்டில் அவரைச் சந்தித்தபோது பேச்சிலும் தோற்றத்திலும் இளமையின் "சலங்கை ஒலி'. மகனுடன் இணைந்து அளித்த அவரது பேட்டியிலிருந்து. தமிழில் குறைவான படங்களில் மட்டும் நடித்தது ஏன்? சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சாக்குச் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. எனினும் அதுதான் உண்மையும், அப்படி அமைந்துவிட்டது. ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 19 Jul 2015 06:21 AM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Posted: 19 Jul 2015 06:17 AM PDT

வணக்கம் உறவுகளே... இங்கே கொஞ்சம் விவகாரமான விஷயத்தைப் பேசலாம் என்றுதான் இந்த மடலை உங்கள் முன் வி(வ)ரிக்கிறேன்... இந்த விவகாரம் இன்று நேற்றல்ல பல்லாண்டுகளாகத் துருத்திக்கொண்டே தொடர்கிறது. கவிதை எது?-கவிஞன் யார்? இந்தக் கேள்விகள் இன்றும் எழுப்பப்படுகின்றன. தமிழ்த் துறையில் பயின்று தமிழ் இலக்கியத்தில் பட்டங்கள் பெற்றவர்களே இந்தக் கேள்விகளை எழுப்புவதில் என்றைக்கும் முன்னிலையில் இருப்பவர்கள். அதிலும் குறிப்பாக மனனம் செய்தவற்றைத் தவிர மனசில் வேறு எதையும் தேக்காதவர்கள்-தேக்க இயலாதவர்கள் இந்தக் ...

சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை

Posted: 19 Jul 2015 06:06 AM PDT

குட்டிக்கதை: முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவளையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது. பல நாட்கள் சென்றன. மீண்டும் ஒரு நாள் ...

மெல்லிசை மன்னருடன் - ஆதிரா

Posted: 19 Jul 2015 04:54 AM PDT

நேற்று மாலை (18/08/13) கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்டூடன்ஸ் விஷன் அகதமி நடத்திய ஆண்டு விழாவில் அதன் தலைவர் ஆர். ராஜராஜன், கல்வித் தலைவர் வசந்தி ராஜராஜன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன், நல்லாசிரியர் விருதுபெற்ற ஜி.பெரியண்ணன், எட்வர்டு சாலமன் ராஜா, அரிமா தட்சினாமூர்த்தி ஆகியோருடன்

தொடத் தொடத் தொல்காப்பியம்(386)

Posted: 19 Jul 2015 04:52 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நேற்றின் நிழல்!

Posted: 19 Jul 2015 04:46 AM PDT

- – மலர் சருகாக மாறுவதை ஏற்றுக் கொள்ளும் எதார்த்தம் இல்லாமல் ஏன் புலம்புகிறாய்! ஆயுள் முழுவதும் வளமை வற்றாத ஜீவநதி தான் வாழ்க்கை என்று யார் சொன்னது? இன்பத்தை சில நிகழ்வுகள் அழைத்து வந்து அறிமுகம் செய்வதைப் போல துன்பத்தை சில முடிவுகள் விளைத்தெடுத்து சோகத்தை குவிக்கும்! காத்திருந்த கனவுகளை கலைத்து விட்டு நெஞ்சை காயப்படுத்தி சில உறவுகள் செல்லும்! எப்படியாயினும் எதார்த்தத்தை ஏற்கும் துணிவை உன் தோழனாக்கு! எதிர்பார்ப்புகளை வெளியே வைத்து விட்டு எதார்த்தத்துடன் ...

நடிகர் முகேஷை மணந்த பரதநாட்டிய கலைஞர்!

Posted: 19 Jul 2015 04:31 AM PDT

– படத்தில் இருப்பவர் பெயர் தேவிகா; மேதில் தேவிகா என்று அழைக்கப்படும் இவர், பரதநாட்டிய நடனக் கலைஞர். பாலக்காடு ராமநாதபுரத்தில், 'த்ரிபாதம்' என்ற நடன பள்ளி அமைத்து, நடன பயிற்சி அளித்து வரும் இவர், மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்துள்ளார். நடிகை சரிதாவும், முகேஷும் விவாகரத்து பெற்ற பின், ஏழு வயது ஆண் குழந்தையின் தாயான தேவிகாவை மணந்துள்ளார் முகேஷ். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்ற தேவிகா, இரு வீட்டார் அனுமதியுடன் மறுமணத்திற்கு கழுத்து நீட்டியுள்ளார். – ——————————— — ...

போலீசிலிருந்து நடிகரான, ‘மிஸ்டர் இந்தியா!’

Posted: 19 Jul 2015 04:27 AM PDT

- -ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு, சமீபத்தில் இந்தியா வந்த போது, அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அபு சலீம் என்ற முன்னாள், ' மிஸ்டர் இந்தியா!' – இவர், கேரளாவில் உள்ள வயநாட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். பணியில் இருக்கும் போதே, சினிமாவில் வில்லன் வேடத்தில் நடித்தார். – இதன்பின், ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கவே, போலீஸ் வேலைக்கு முழுக்கு போட்டு, முழு நேர நடிகராகிவிட்டார்! – ————————————- — ஜோல்னாபையன்.

நாட்களை செயல்களால் நிரப்புவோம்!

Posted: 19 Jul 2015 04:24 AM PDT

– இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம். புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம். – ஆனால், 'கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்…' என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியும். – சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள் கூட, 'உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த அளவாவது சாத்தியமாயிற்று…' என்பர். – உங்களது சொந்த வாழ்வில், சுய முயற்சியில், கடந்த ஆறு மாத பணிகள் திருப்திகரமா ...

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!!

Posted: 18 Jul 2015 10:51 AM PDT

கிரிக்கெட்டை பொறுத்த வரை கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டு வந்த வங்கதேசம் தற்போது ஜாம்பவான் அணிகளை கூட வேட்டையாடத் தொடங்கி விட்டது. பாகிஸ்தான், இந்தியா அணிகளை தொடர்ந்து தற்போது தென்ஆப்ரிக்காவும் வங்கதேசத்திடம் தொடரை இழந்து ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிட்டாங்கில் நடந்த 3வது ஒருநாள் பகலிரவு போட்டியில் வங்கதேச அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக பந்து வீசியது.பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல்குயின்டன் டி காக் 7 ரன்னிலும் டுப்லெசிஸ் 6 ரன்னிலும் வெளியேறினர். ஆம்லா 15 ரன்னிலும் ரோசவ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™