Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஊழியர்களுக்கு லாபத்தில் 3 சதவீதம்... பரிசு!:வழங்குவதற்கு ஸ்டேட் பாங்க் திட்டம்

Posted:

புதுடில்லி:திறமைசாலிகள் வேறு நிறுவனங்களுக்கு செல்வதைத் தடுக்கவும், மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கவும், வருடாந்திர லாபத்தில் 3 சதவீதத்தை பரிசாக அளிக்க, நாட்டின் முன்னணி வங்கியான, பாரத ஸ்டேட் பாங்க் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பெரிய வங்கியாக, பாரத ஸ்டேட் பாங்க் திகழ்கிறது. இதில், 2.3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கூடுதல் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை தரப்படுவதால், திறமையான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேறு நிறுவனங்களுக்கு தாவி விடுகின்றனர். இதனால், ...

மருமகனுக்கு சோனியா உதவுவதாக பிரதமர் மோடி...சாடல்:வாரிசு அரசியலையும் ஊக்குவிக்கக் கூடாது என்கிறார்

Posted:

ஜம்மு:''மருமகனுக்காக சிலர் எவ்வளவோ உதவி செய்யும் நிலையில், அருண் ஜெட்லியின் மாமனார் கிர்தாரி லால் டோக்ரா, தன் மருமகனுக்காக எதையும் செய்யவில்லை. மருமகனும், மாமனாரும் அரசியலில் தனித்தனி பாதையில் பயணித்த போதிலும், தங்களுக்கு என எதையும் சேர்த்துக் கொள்ளவில்லை,'' என, பிரதமர் மோடி பேசினார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான, ஜம்முவில் நேற்று நடைபெற்ற, அம்மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சர் கிர்தாரி லால் டோக்ரா, நுாற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரின் உயரிய தலைவர்களில் ஒருவர் டோக்ரா. அவர், மாநில நிதியமைச்சராக, 26 பட்ஜெட்களை ...

நீர்த்துப் போகிறது நில மசோதா

Posted:

நிலம் கையகப்படுத்தும் மசோதா மீதான தீவிரம், படிப்படியாக குறைத்துக் கொள்ளப்படுமென, தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, பீகார் சட்டசபைத் தேர்தல், அன்னா ஹசாரே உண்ணாவிரத அறிவிப்பு போன்ற காரணங்களால், மத்திய அரசு இம்முடிவுக்கு தள்ளப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.கிடப்பில்...:நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக, நிலம் கையகப்படுத்தும் மசோதா இருந்து வருகிறது. இதை நிறைவேற்ற, கடந்த பல மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், தற்போது உருவாகி வரும் அரசியல் சூழ்நிலைகளால், ...

தமிழகத்தில் கிழக்கு கடற்கரைச்சாலைத் திட்டம்:நிதின் கட்காரி அறிவிப்பு

Posted:

மதுரை:''தமிழகத்தில் கிழக்கு கடற்கரைச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும். ஆந்திரா - தமிழகத்தை இணைக்கும் 'பக்கிங்காம்' கால்வாய் திட்டம் டிசம்பருக்குள் மேற்கொள்ளப்படும்,'' என மதுரையில் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலை, பரமக்குடி - ராமநாதபுரம் இரு வழிச்சாலை மற்றும் நாகபட்டினம் - தஞ்சாவூர் இரு வழிச்சாலைக்கு ரூ.1965 கோடியே 50 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நேற்று நடந்தது.என்.எச்.ஏ.ஐ., மேலாளர் அலோக் தீபக் வரவேற்றார்.மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ...

கனிமொழிக்கு 'பாரா தைராய்டு ஆபரேஷன்' ஸ்டாலின் - துர்கா உடன் இருந்து கவனிப்பு

Posted:

தி.மு.க., - எம்.பி., கனிமொழிக்கு, 'பாரா தைராய்டு' பிரச்னையையொட்டி, நேற்று, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து, கனிமொழி கண் திறக்கும் வரை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர் உடனிருந்து, கவனித்தனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவையொட்டி, தென் மாவட்டங்களில் நடந்த தொடர்ச்சியான விழாக்கள், பொதுக் கூட்டங்களில் கனிமொழி பங்கேற்று பேசினார்.சமீபத்தில், டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா அளித்த, 'இப்தார்' விருந்திலும் கலந்து கொண்டார். பின், சென்னை திரும்பினார்.அவருக்கு திடீரென தொண்டைக்கு கீழே வலி ஏற்பட, ...

'மெட்ரோ' சுரங்கப் பணி : அடுத்து என்ன: கணக்கு சரிபார்க்கும் வேலை துவக்கம்

Posted:

சென்னை, மெட்ரோ ரயில் சுரங்கப் பணியை மேற்கொண்டு வந்த, 'கேமன்' நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கேமன் நிறுவனத்தினர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். கட்டுமான பணிக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்தவர்களின் நிலுவைத் தொகை குறித்து, கணக்கை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.சென்னை, மே தின பூங்கா - சைதாப்பேட்டை இடையிலான, மெட்ரோ ரயில் சுரங்க வழித்தட பணி நிறுத்தப்பட்டு உள்ளது. பணியை மேற்கொண்ட, கேமன் நிறுவன ஒப்பந்தத்தை, மெட்ரோ ரயில் நிர்வாகம் ரத்து செய்தது. இதை ஏற்க மறுத்த, கேமன் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி உள்ளது.பணியில் இருந்த, 2,000 பணியாளர் ...

அரசு நிலத்தில் நடந்த பத்திர பதிவுகளின் நிலை என்ன?

Posted:

சென்னை, பள்ளிக்கரணை நிலமோசடி வழக்கில் தொடர்புடைய சர்வே எண் தொடர்பாக, இதுவரை, 167 விற்பனை பதிவுகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆவண பதிவு களின் நிலை குறித்து, பதிவுத் துறை விசாரணையை துவக்கி உள்ளது.சென்னை பள்ளிக்கரணையில், 66 ஏக்கர், 70 சென்ட் நிலம் விற்பனை குறித்த வழக்கு விசாரணையில், பதிவுத் துறை தலைவர் அளித்த பதில், சர்ச்சையை ஏற்படுத்தியது.இதில், கோர்ட்டில் ஆஜராவதை முதலில் தவிர்த்த பதிவுத்துறை தலைவர், பின் நேரில் ஆஜரானார். இதையடுத்து இந்த வழக்கு, 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பள்ளிக்கரணை நிலமோசடி விவகாரத்தில், அரசு நிலத்திற்கு வழிகாட்டி ...

எங்களுக்கு பவர் போனால் 'யு.பி.எஸ்.,அம்மா'வுக்கு பவர் போனால் ஓ.பி.எஸ்.,

Posted:

''எங்களுக்கு பவர் போனால், யு.பி.எஸ். பயன்படுத்திக் கொள்வோம். 'அம்மா'வுக்கு பவர் போனால், ஓ.பி.எஸ்.,சை பயன்படுத்திக் கொள்வர்,'' என, பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.கரூரில், அவர் கூறியதாவது:ஜாதி வாரியான கணக்கெடுப்பை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில், எத்தனை ஜாதிகள் உள்ளது என்பதை, கணக்கெடுப்பது சிரமம். கிட்டத்தட்ட, 46 லட்சம் ஜாதிகள் இருப்பதாக, கணக்கெடுப்பில் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில், அணைகளின் நீர்மட்டம் உயர வேண்டும் என்றால், அணையில் உள்ள வண்டல் மண் அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ...

அணைகள் புனரமைப்பு திட்ட குழு கூட்டம் *தமிழகம் சார்பில் பங்கேற்பது யார்?

Posted:

கர்நாடகாவில், அணைகள் புனரமைப்பு தொழிற்நுட்ப குழு கூட்டம், அடுத்த மாதம் நடக்கிறது. இதில், தமிழகம் சார்பில் யார் பங்கேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.உலக வங்கி கடனுதவியுடன், மத்திய நீர்வள ஆணையம் மூலம் நாடு முழுவதும், 223 அணைகளில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதில், தமிழகம், ம.பி., ஒடிசா, கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.இத்திட்டம் மூலம் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக, 113 அணைகள் புனரமைக்கப்பட உள்ளன. இந்த அணைகளை, 6 ஆண்டுகளுக்குள் புனரமைக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில், 15க்கும் குறைவான ...

சோலார் பேனல் ஊழல் விவகாரம் கேரள முதல்வருக்கு 'நோட்டீஸ்'

Posted:

கொச்சி: சோலார் பேனல் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குழு, முதல்வர் உம்மன் சாண்டிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. சோலார் பேனல் அமைத்து தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், சரிதா நாயர், அவரது கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர், கடந்த 2013ல், கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில், முதல்வர் உம்மன் சாண்டியின் தனி உதவியாளர்கள் இருவர் உட்பட பல பிரபலங்களுக்கு தொடர்புண்டு என, தகவல்கள் வெளியானதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சோலார் பேனல் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி சிவராஜன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. ஊழலில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™