Tamil News | Online Tamil News |
- ஜாதி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட மத்திய அரசு... முடிவு!தகவல்களை பகுத்தாய 'நிடி ஆயோக்' தலைவருக்கு உத்தரவு
- தமிழகத்தில் 27 ரயில்வே ஸ்டேஷன்கள்...பொலிவடையும்: புதுமை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
- ஒரு அங்குல நிலம் கூட எடுக்க முடியாது
- வாலாட்ட வேண்டாம்; பதிலடி உண்டு
- மெட்ரோ ரயில் திட்டம் யார் கொண்டு வந்தது கோர்ட்டில் வழக்கு தொடுக்க தயாரா?: ஸ்டாலின்
- விஜயகாந்தை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்:ஆக., 1ல் அவர் வருவாரா
- பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் தான்! மக்கள் நலனே முக்கியம்:விலக்கு அளிக்க நீதிபதி மறுப்பு
- பார் கவுன்சில் விதியால் வழக்கறிஞர்களுக்கு சிக்கல்
- மெட்ரோ ரயில் பணிக்கு மூலப்பொருட்கள் சப்ளை நிறுத்தம் : விற்பனையாளர்கள் எச்சரிக்கையால் புதிய சிக்கல்
- நடிகர்களுக்கு எதுக்கு சலுகை?
| Posted: புதுடில்லி:பா.ஜ., தவிர்த்து, கட்சி பேதமில்லாமல் அனைத்து கட்சிகளும் கோரிய, ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே எடுக்கப்பட்ட தகவல்களை பகுத்தாய்ந்து பட்டியலிடும் பணியை, 'நிடி ஆயோக்' துணைத்தலைவர் அரவிந்த் பானகரியா தலைமையிலான குழுவிடம், மத்திய அரசு வழங்கி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து அரசியல் நடத்துவது, இந்தியாவின் அங்கமாகிவிட்டது. சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட, 2011ம் ஆண்டுக்கான சமூக, பொருளாதார கணக்கெடுப்பில், ஜாதிவாரி தகவல்கள் இடம்பெறவில்லை. இதற்கு, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ... |
| தமிழகத்தில் 27 ரயில்வே ஸ்டேஷன்கள்...பொலிவடையும்: புதுமை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் Posted: புதுடில்லி:தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உட்பட நாடு முழுவதும், 400 ரயில் நிலையங்களில், வழக்கமான ரயில் சேவைகளுடன், பயணிகளுக்கான வர்த்தக, பொழுதுபோக்கு, வியாபார கேந்திரமாக மாற்றும் புதுமையான திட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் அமலாகும்போது, ரயிலில் ஏற, இறங்க மட்டுமின்றி, நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும் வகையில், ரயில் நிலையங்களில் தங்கியிருக்கும் சில மணிநேரங்கள் இருக்கும். இதன் மூலம், ரயில்வே துறை வருமானத்தை குவிக்கும் அதே நேரத்தில், ரயில் ... |
| ஒரு அங்குல நிலம் கூட எடுக்க முடியாது Posted: ஜெய்ப்பூர்:மத்திய அரசின் நில மசோதாவுக்கு எதிராக, ராஜஸ்தானில், நேற்று, பாத யாத்திரையை துவக்கிய காங்., துணைத் தலைவர் ராகுல்,''விவசாயிகளிடமிருந்து ஒரு அங்குல நிலத்தை கையகப்படுத்துவதற்கு கூட, மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம்,'' என, ஆவேசமாக பேசினார். பாத யாத்திரை:மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக, ராஜஸ்தானில் கிராமம், கிராமமாக பாத யாத்திரை சென்று, விவசாயிகளை சந்திக்க போவதாக, காங். துணை தலைவர் ராகுல் தெரிவித்திருந்தார். இதன்படி, இரண்டு நாள் பயணமாக, நேற்று, ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்த அவர், பாத யாத்திரையை துவக்கினார். அப்போது, ... |
| வாலாட்ட வேண்டாம்; பதிலடி உண்டு Posted: புதுடில்லி:சில நாட்களுக்கு முன், ரஷ்யாவில், இந்தியா - பாக்., பிரதமர்கள் சந்தித்து, 'இரு நாடுகளும் அமைதியான முறையில் நல்லுறவை பேண வேண்டும்' என பேசி முடிவெடுத்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, எல்லையில் நிலவும் பதற்றம் நேற்று உச்சகட்டத்தை அடைந்தது.எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து, அந்நாட்டு எல்லை பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி குண்டு வீச்சில், இந்திய எல்லையில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பெண் பலியானார்; பலர் படுகாயம் அடைந்தனர். நேற்றும் தாக்குதல் தொடர்ந்தது. இதனால் அதிருப்தி ... |
| மெட்ரோ ரயில் திட்டம் யார் கொண்டு வந்தது கோர்ட்டில் வழக்கு தொடுக்க தயாரா?: ஸ்டாலின் Posted: ''மெட்ரோ ரயில் திட்டம், தி.மு.க., கொண்டு வந்தது என, நான் பேசுவது தவறு என்றால், கோர்ட்டில் வழக்கு தொடுக்க தயாரா?'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.சென்னையில், அவரது பேட்டி:மெட்ரோ ரயில் திட்டத்தை, தி.மு.க., தான் கொண்டு வந்தது என்பது, எல்லாருக்கும் தெரியும். இதற்காக, தி.மு.க., ஆட்சியில், நானே, ஜப்பான் நாட்டிற்கு சென்று, நிதி உதவி பெற்று வந்தேன்; இந்த திட்டத்திற்கு, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தேன்.அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, 'மெட்ரோ ரயிலை விட, மோனோ ரயில் தான் சென்னைக்கு உகந்தது' என, சட்டசபையில் பேசினார்.அவரது பேச்சை, சட்டசபை ... |
| விஜயகாந்தை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்:ஆக., 1ல் அவர் வருவாரா Posted: மதுரை:சென்னையில் ஆசிரியர்கள் நடத்தும் பிரமாண்ட தொடர் முழக்க போராட்டத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்க உறுதி அளித்துள்ள நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தரப்பில் இருந்து மட்டும் இதுவரை பதில் வரவில்லை. இதனால் 'அவர் வருவாரா' என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் இதரப் பலன்கள், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 1.6.2006ல் அன்று பணிவரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை சம்பளம் வழங்குவது உட்பட 15 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து ... |
| பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் தான்! மக்கள் நலனே முக்கியம்:விலக்கு அளிக்க நீதிபதி மறுப்பு Posted: சென்னை:'இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, 'ஹெல்மெட்' அணிவதில் இருந்து விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இது தொடர்பான மனு, 24ம் தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான வழக்கு, நேற்று, நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது.அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன், வழக்கறிஞர்கள் பால் கனகராஜ், ராஜன் பாபு, காசி ராமலிங்கம், நிம்மு வசந்த் ஆஜராகி வாதிட்டனர்.அப்போது நடந்த வாதம் வருமாறு:-வழக்கறிஞர் பால் கனகராஜ்:- ஹெல்மெட் தொடர்பாக, 1989, 2007ல் ... |
| பார் கவுன்சில் விதியால் வழக்கறிஞர்களுக்கு சிக்கல் Posted: பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், பிராக்டீசுக்கான தேர்வில் தேர்ச்சி பெறாத, ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களின் உரிமம் ரத்தாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சட்டப் படிப்பு முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் தான், நீதிமன்றத்தில் ஆஜராக முடியும். 2010ல், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்திய பார் கவுன்சில், ஒரு விதிமுறையை கொண்டு வந்தது.அந்த விதிகள் விவரம்: * பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், 'சர்டிபிகேட் ஆப் பிராக்டீஸ்' சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு, பார் கவுன்சில் நடத்தும் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்றால் தான், ... |
| மெட்ரோ ரயில் பணிக்கு மூலப்பொருட்கள் சப்ளை நிறுத்தம் : விற்பனையாளர்கள் எச்சரிக்கையால் புதிய சிக்கல் Posted: 'நிலுவைத் தொகைக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பொறுப்பு ஏற்காவிட்டால் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்வதை நிறுத்துவோம்' என விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை மே தின பூங்கா - சைதாப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடம் மற்றும் ரயில் நிலைய பணியில் ஏற்பட்ட தாமதத்தை காரணம் காட்டி 'கேமன்' நிறுவன ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று முன்தினம் ரத்து செய்தது. இதனால் பணி முடங்கிக் கிடக்கிறது.மெட்ரோ ரயில் பணிக்கு மூலப்பொருட்கள் வழங்கும் விற்பனையாளர்கள் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். ... |
| Posted: புதுடில்லி: 'அப்பீல் மனு தாக்கல் செய்து, பல ஆண்டுகளாக ஏராளமானோர் காத்திருக்கும்போது, நடிகர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை மட்டும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது ஏன்' என கேட்டு, மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது. குற்றவாளிமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர், சசிகலா. இவரின் கணவர், கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவும், மேல்முறையீட்டு மனுவும், இதுவரை விசாரணைக்கு எடுத்துக் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 17,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |