Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பணியின் போது உயிரிழந்த மின் வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி

Posted: 16 Jul 2015 02:16 PM PDT

பணியின் போது உயிரிழந்த மின் வாரிய ஊழியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

மகேந்திரகிரி இஸ்ரோவில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி: சாதனையில் புதிய மைல்கல்

Posted: 16 Jul 2015 02:15 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் வியாழக்கிழமை, ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டில்

ஜாதி மறுப்பு திருமணம் செய்தோர் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 16 Jul 2015 02:12 PM PDT

ஜாதி மறுப்பு திருமணம் செய்தோரின் பிள்ளைகளுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

மெட்ரோ ரயில் திட்டம்: மு.க.ஸ்டாலின் சவால்

Posted: 16 Jul 2015 02:10 PM PDT

மெட்ரோ ரயில் திட்டத்தை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க அதிமுக தயாரா என்று

பல்கலைக்கழகத் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை: துணைவேந்தர் தாண்டவன்

Posted: 16 Jul 2015 02:09 PM PDT

சமூக நலனைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கை

நிலம் கையக மசோதா: முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

Posted: 16 Jul 2015 02:08 PM PDT

நிலம் கையகச் சட்டத் திருத்த மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுத்

ராமநாதபுரம்

Posted: 16 Jul 2015 02:07 PM PDT

அருப்புக்கோட்டை

Posted: 16 Jul 2015 02:07 PM PDT

திண்டுக்கல்

Posted: 16 Jul 2015 02:06 PM PDT

ஆடி முதல் வெள்ளி: காரைக்குடி ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு இன்று பச்சை மஞ்சள் அபிஷேகம்

Posted: 16 Jul 2015 02:06 PM PDT

காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு, ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான ஜூலை 17 ஆம் தேதி பச்சை, மஞ்சள் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.

பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆனி அமாவாசை யாகம்

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில், ஆனி அமாவாசை யாகம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்முகப் பயிற்சி

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (ஜூலை 18) இலவச மாதிரி நேர்முகத் தேர்வுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக, துணைவேந்தர் சொ. சுப்பையா தெரிவித்துள்ளார்.

ரெகுநாதபுரத்தில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்: எம்.பி. திறப்பு

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத்தை, மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

திருப்பாலைக்குடி அருகே வீடுகளில் நகை, பணம் திருட்டு

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

திருவாடானை தாலுகா,  திருப்பாலைக்குடி அருகே ஆக்களூர் கிராமத்தில் புதன்கிழமை பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் சலுகினிப்பட்டி கிராம மக்கள்

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட சலுகினிப்பட்டி கிராம மக்கள், அடிப்படை வசதிகளான குடிநீர், வீடு, ரேஷன் கடை உள்ளிட்டவை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மாணவர்கள் பள்ளிக்கு 4 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

மானாமதுரை அருகே தீப்பற்றி இளைஞர் சாவு

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

மானாமதுரை அருகே புதன்கிழமை உடம்பில் தீப்பற்றி இளைஞர் உயிரிழந்தார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணம் கையாடல்: பெண் ஊழியர்கள் இருவர் மீது வழக்கு

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணத்தை கையாடல் செய்ததாக, இரு பெண் ஊழியர்கள் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாடானையில் தூய்மை பாரத இயக்கம் தொடக்கம்

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

திருவாடானை ஊராட்சி மன்றத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலை ஆய்வாளர் பணி நியமனங்களில் பாரபட்சம்: விசாரணை நடத்த முதல்வருக்கு மனு

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணி நியமனங்கள் பாரபட்சத்துடன் நடந்திருப்பதால், விசாரணை நடத்தப்பட வேண்டும் என, கட்டடப் பட வரைவாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆணும், பெண்ணும் சமமாக கருதப்பட வேண்டும்: ஆட்சியர்

Posted: 16 Jul 2015 02:05 PM PDT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மக்கள் தொகை கருத்தரங்கில், ஆணும், பெண்ணும் சமமாகக் கருதப்பட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழி பேசினார்.

காரைக்குடி நகராட்சிப் பள்ளிக்கு தனி இணையதளம் தொடக்கம்

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

காரைக்குடி ராம.சு. ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளிக்கான தனி இணையதளம் (வெப்-சைட்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில், தேவகோட்டை  சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தனுஷ்கோடி கடல் பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

ராமேசுவரம் பகுதி கடலில் குளிக்கச் சென்று அலையில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து, தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கட்டாய தலைக்கவச உத்தரவு: ஆவணங்களை பறிமுதல் செய்வதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்வதற்குத் தடை விதிக்க முடியாது என்று

பெண்ணை கேலி செய்ததாக கொத்தனார்கள் கைது

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கல்லூரிப் பெண்களை கேலி செய்ததாக, கொத்தனார் இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அழகப்பா பல்கலை.யில் மாணவர்களுக்கு தன்னார்வப் பயிலும் வட்டம்: துணைவேந்தர்

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தன்னார்வப் பயிலும் வட்டம் தொடங்கப்பட உள்ளதாக, துணைவேந்தர் சொ. சுப்பையா தெரிவித்துள்ளார்.

பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில், காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

காரைக்குடி, திருப்பத்தூரில் காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, புதன்கிழமை அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

கஞ்சா கடத்தியதாக இலங்கை சிறையிலுள்ள 4 ராமேசுவரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

படகில் கஞ்சா கடத்தியதாக இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 4 பேருக்கு, ஜூலை 30 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முகுந்தராயர் கடல் பகுதியிலிருந்து அம்மன் சிலை மீட்பு

Posted: 16 Jul 2015 02:04 PM PDT

ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் கடல் பகுதியிலிருந்து பெக்காளி அம்மன் சிலை வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

பயன்பாட்டில் இல்லாத 295 சட்டங்கள் விரைவில் ரத்து

Posted: 16 Jul 2015 02:03 PM PDT

பயன்பாட்டில் இல்லாத 295 சட்டங்களை ரத்து செய்வதற்கு மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

எல்லையில் 2-ஆவது நாளாக தாக்குதல்: 4 பேர் காயம்

Posted: 16 Jul 2015 02:02 PM PDT

ஜம்முவில் எல்லைக் கோட்டையொட்டி அமைந்துள்ள பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக

ஜூனியர் ரெட்கிராஸ் இயக்க பொறுப்பாசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 16 Jul 2015 02:02 PM PDT

திருச்சி கல்வி மாவட்ட அளவில் ஜூனியர் ரெட்கிராஸ் பொறுப்பாசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

பாகிஸ்தான் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி: ராஜ்நாத் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

Posted: 16 Jul 2015 02:02 PM PDT

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும் தக்க பதிலடி கொடுப்பதற்கு

விமான நிலைய ஆணையம் சார்பில் ரூ. 40 லட்சத்தில் 15 பள்ளிகளுக்கு கழிவறைகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது

Posted: 16 Jul 2015 02:02 PM PDT

திருச்சி விமான நிலையம் சார்பில் ரூ. 40 லட்சத்தில் 15 பள்ளிகளுக்கு கழிவறைகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 10-ம் தேதி முதல் அவற்றை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலைய கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Jul 2015 02:02 PM PDT

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ச. ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

மக்களின் வரவேற்பைப் பெறும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை

Posted: 16 Jul 2015 02:01 PM PDT

திருச்சி மாவட்ட பொது சேவை மையங்கள் மூலமான பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் பணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தி: திருச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை

Posted: 16 Jul 2015 02:01 PM PDT

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தியால் திருச்சியில் அதிமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விரைவில் கலங்கல் இல்லாத குடிநீர்: மேயர் உறுதி

Posted: 16 Jul 2015 02:01 PM PDT

திருச்சி மாநகராட்சி 40ஆவது வார்டு பகுதி மக்களுக்கு விரைவில் கலங்கல் இல்லாத குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் அ. ஜெயா தெரிவித்தார்.

82 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 16 Jul 2015 02:00 PM PDT

திருச்சி மாவட்டத்தில் விலையில்லா கால்நடைகள் பெறும் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் 82 ஊராட்சிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரெட்டை மலை கோயிலுக்கு செல்லும் பாதை மூடல்: கல்குவாரி முற்றுகை

Posted: 16 Jul 2015 02:00 PM PDT

திருச்சி எடமலைப்பட்டி புதூரிலுள்ள ரெட்டமலை கோயிலுக்கு செல்லும பாதை திடீரென மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அங்குள்ள கல்குவாரியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பால் நிறுவனத்தில் கொள்கலன் வெடித்து இளைஞர் சாவு

Posted: 16 Jul 2015 01:59 PM PDT

பூவந்தி அருகே உள்ள தனியார் பால் நிறுவனத்தில் பாலை பதப்படுத்தக் கூடிய கொள்கலன் வெடித்ததில், இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலையை கடக்க முயன்ற பெண் உதவிச் செயற்பொறியாளர் கார் மோதி சாவு

Posted: 16 Jul 2015 01:59 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில், வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற பெண் உதவிச் செயற்பொறியாளர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

Posted: 16 Jul 2015 01:59 PM PDT

ராமநாதபுரம் அருள்மிகு அனுமார் கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் ஆனித் திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொங்கப்பட்டியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை

Posted: 16 Jul 2015 01:59 PM PDT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், கொங்கப்பட்டி ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என, ஒன்றிய ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நயினார்கோவில் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

Posted: 16 Jul 2015 01:59 PM PDT

நயினார்கோவில் அருகே சிறுவயல் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்ற மூதாட்டி தவறி விழுந்ததில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

வரதட்சணைக் கொடுமை: இரண்டாவது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Posted: 16 Jul 2015 01:59 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள சின்னநாகாச்சி கிராமத்தில், மனைவியிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கணவர் உள்பட 4 பேர் மீது, பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இலங்கை அகதிகளுக்கு அலுவலர்கள் உதவவேண்டும்: கடலோரக் காவல்படை ஐ.ஜி. பேச்சு

Posted: 16 Jul 2015 01:59 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அலுவலர்கள் உதவவேண்டும் என, கடலோரக் காவல்படை ஐ.ஜி. சொக்கலிங்கம் வியாழக்கிழமை பேசினார் .

கருமாத்தூர் பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 16 Jul 2015 01:59 PM PDT

உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் கிளாரட் சபையின் 166வது ஆரம்ப விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புனித சந்தியாகப்பர் தேவாலயத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 16 Jul 2015 01:31 PM PDT

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

Posted: 16 Jul 2015 01:30 PM PDT

காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி, கல்குறிச்சி பிரிவு அருகே அடிக்கடி விபத்து நடப்பதால், இப்பகுதியில் மேம்பாலம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியில் காமராஜர் பிறந்தநாள்

Posted: 16 Jul 2015 01:27 PM PDT

சிவகாசி ஏ.பி.கே. காளியப்பநாடார் உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

காரியாபட்டியில் இப்தார் விருந்து

Posted: 16 Jul 2015 01:27 PM PDT

காரியாபட்டி மஜ்ஜிதேநூர் ஜூம்மா பள்ளி வாசலில் வட்டார அளவிலான தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடந்தது.

காமராஜர் பிறந்தநாள் விழா

Posted: 16 Jul 2015 01:26 PM PDT

விருதுநகர் ஹாஜி சிக்கந்தர் ஹவ்வாபீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 113-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

Posted: 16 Jul 2015 01:25 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 16 Jul 2015 01:21 PM PDT

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கக்கூட்டம் நடைபெற்றது. திருச்சுழி கிளைச் சங்கத் தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.  சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் அழ,ராம்ராசு சிறப்புரையாற்றினார். மாவட்ட பிரதிநிதிகள் கண.கணேசன், கே.முத்துராமலிங்கம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படித்தவன் பாவம் செய்தால்...

Posted: 16 Jul 2015 01:21 PM PDT

பிகாரில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் அந்த மாநிலத்தை மட்டுமன்றி இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 16 Jul 2015 01:20 PM PDT

விருதுநகர் அருகே மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆராய்ச்சியும் சமூகமும்

Posted: 16 Jul 2015 01:19 PM PDT

ஒரு நாட்டில் உயர் கல்வியின் தரம் உயர உயர சமூகத்தின் வாழ்க்கைத் தரமும், பொருளாதாரச் செயல்பாடுகளும் உயரும் என்பதும் கோட்பாடு.

விருதுநகர் அருகே குப்பையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சகோதரர்கள் படுகாயம்

Posted: 16 Jul 2015 01:19 PM PDT

விருதுநகர் அருகே வியாழக்கிழமை இரவு குப்பையில் கிடந்த பட்டாசு கழிவுகள் திடீரென வெடித்து சிதறியதில் அந்த வழியாக நடந்து சென்ற சகோதரர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இந்தியன் வங்கி புதிய கட்டடம் திறப்பு

Posted: 16 Jul 2015 01:18 PM PDT

உசிலம்பட்டி வட்டம், சேடபட்டி ஒன்றியத்தில் டி.ராமநாதபுரத்தில் இந்தியன் வங்கியின் புதிய கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுஅருந்திய தொழிலாளி சாவு

Posted: 16 Jul 2015 01:18 PM PDT

சிவகாசியில் மது அருந்திய கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

செயற்கைப் பேரிடர்!

Posted: 16 Jul 2015 01:18 PM PDT

புது தில்லியில் ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்ற மத்திய கொள்கைக் குழுக் கூட்டத்தில் (நீதி ஆயோக்) பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் ஒருமித்த கருத்து ஏற்பட முடியாமல் போனால்,

ஸ்ரீவிலி. கருவூல கொள்ளையன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 16 Jul 2015 01:17 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் கருவூலத்தில் புகுந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள், பணம், பொருள்களை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முருகேசன் (52) என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் புதன்கிழமை உத்தரவிட்டார்.

பாலிடெக்னிக்கில் பயிற்சி பட்டறை

Posted: 16 Jul 2015 01:17 PM PDT

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் மின்னியல் மற்றும் தொடர்பியல் சார்பில், புதன் மற்றும் வியாழக்கிழமை பயிற்சி பட்டறை நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா

Posted: 16 Jul 2015 01:16 PM PDT

அருப்புக்கோட்டையில் அதிமுக சார்பில் காமராஜரின் 113வது பிறந்தநாள் விழா வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. காமராஜரின் உருவச்சிலைக்கு அவர் மலர் மாலை அணிவித்தார். பின்னர், பங்கேற்றவர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

Posted: 16 Jul 2015 01:16 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ராஜபாளையம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

Posted: 16 Jul 2015 01:15 PM PDT

கேரளத்தில் ஒப்பந்த அடிப்படையில் எடுத்த குவாரியை   மற்றொருவருக்கு வாடகைக்கு விட்டு பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஐவரை தேடிவருகின்றனர்.

பதுக்கல் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 16 Jul 2015 01:15 PM PDT

சிவகாசி பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வழங்கல் அதிகாரி கிருஷ்ணவேணி வியாழக்கிழமை தெரிவித்தார்.

பட்டிவீரன்பட்டியில் வாரச் சந்தை இடம் மாற்றம்

Posted: 16 Jul 2015 01:14 PM PDT

பட்டிவீரன்பட்டியில் வாரச் சந்தை இட மாற்றம் செய்யப்பட்டது.

கார் பாலத்தில் மோதி 7 பேர் காயம்

Posted: 16 Jul 2015 01:14 PM PDT

பழனி அருகே வியாழக்கிழமை கார் பாலத்தில் மோதிய விபத்தில் அதில் பயணம் செய்த 7 பேர் காயமடைந்தனர்.

நுண்ணீர் பாசனத் திட்ட சாகுபடி நிலங்கள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 16 Jul 2015 01:13 PM PDT

பெரியகுளம் வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி நடைபெறும் விவசாய நிலங்களை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: ஓய்வு பெற்ற காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சாவு

Posted: 16 Jul 2015 01:13 PM PDT

போடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர், சரக்கு வாகனம் மோதி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

கொடைக்கானலில் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றக் கோரி சாலை மறியல்

Posted: 16 Jul 2015 01:12 PM PDT

கொடைக்கானல் லாஸ்காட் சாலையிலுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றக் கோரி பொது மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 16 Jul 2015 01:11 PM PDT

உத்தமபாளையம் அடுத்த கோம்பை முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கருப்பையா (28). கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இதே பகுதியில் சைக்கிளில் சென்ற போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பழனியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

Posted: 16 Jul 2015 01:11 PM PDT

பழனியில் 18ஆவது வார்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில்  நகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டது.

கல்லூரியில் இலவச பயிற்சி மையம் தொடக்கம்

Posted: 16 Jul 2015 01:10 PM PDT

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் பள்ளிகளில் விளையாட்டுப் பாடம் கட்டாயம்: மாநில அரசு முடிவு

Posted: 16 Jul 2015 01:10 PM PDT

பஞ்சாப் மாநிலப் பள்ளிகளில் விளையாட்டை கட்டாயப் பாடமாக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்

Posted: 16 Jul 2015 01:09 PM PDT

இந்தியா - நியூஸிலாந்து வீரர்கள் மோதும் டேவிஸ் கோப்பை ஆசியா-ஓசியானா குரூப்-1 டென்னிஸ் போட்டி நியூஸிலாந்தில்

என்பிஏ கூடைப்பந்து போட்டி: சத்னம் சிங் உதவியால் மாவெரிக்ஸ் அணி வெற்றி

Posted: 16 Jul 2015 01:08 PM PDT

அமெரிக்க கூடைப்பந்து போட்டியின் (ஏன்பிஏ) தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சத்னம் சிங் உதவியால் டல்லாஸ் மாவெரிக்ஸ்

காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 16 Jul 2015 01:08 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கே.பி.ராஜம்மாள் கல்வி அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

டாஸ்மாக் கடையில் மோதல்: ஊழியர்கள் 2 பேர் காயம்

Posted: 16 Jul 2015 01:07 PM PDT

பழனியில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். 

துளிகள்..!

Posted: 16 Jul 2015 01:07 PM PDT

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த

விபத்து இழப்பீடு வழங்காததால் தொடக்கக் கல்வி அலுவலக வாகனம் ஜப்தி

Posted: 16 Jul 2015 01:07 PM PDT

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததாதல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் அரசு வாகனத்தை நீதிமன்ற ஊழியர்கள் புதன்கிழமை ஜப்தி செய்தனர்.

ஸ்மித் - ரோஜர்ஸ் சதம்: ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபாரம்

Posted: 16 Jul 2015 01:06 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித், கிறிஸ் ரோஜர்ஸ் சதம் விளாச,

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

Posted: 16 Jul 2015 01:06 PM PDT

பழனி அருகே ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்த ஐபிஎல் தொடர் பெரும் வெற்றி பெறும்: ராஜீவ் சுக்லா

Posted: 16 Jul 2015 01:05 PM PDT

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் பெரும் வெற்றி பெறும் என்று அதன் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

வேன் ஓட்டுநர்கள் மோதல்: 3 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 16 Jul 2015 01:05 PM PDT

பழனி அருகே வேன் ஓட்டுநர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: 290 சமையல் உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு நேரடி நியமனம்

Posted: 16 Jul 2015 01:05 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 290 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப் பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல் டி-20 ஆட்டம்: இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்

Posted: 16 Jul 2015 01:04 PM PDT

அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் குறுகிய கால சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

தேனியில் இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது

Posted: 16 Jul 2015 01:04 PM PDT

தேனியில் இருசக்கர வாகனங்கள் திருடியதாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

வத்தலகுண்டு அருகே விலையில்லா பொருள்கள் வழங்கல்

Posted: 16 Jul 2015 01:03 PM PDT

வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டில் அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தி சொற்பொழிவு

Posted: 16 Jul 2015 01:02 PM PDT

போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற பக்தி சொற்பொழிவில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு தினம்: இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Jul 2015 01:02 PM PDT

கும்பகோணம் தனியார் பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை திண்டுக்கல் மற்றும் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மும்பை பங்குச் சந்தையில் 247 புள்ளிகள் உயர்வு

Posted: 16 Jul 2015 01:01 PM PDT

கடந்த மூன்று மாத அளவில் இதுவே மிகப் பெரிய உயர்வாகும். அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகளை

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்

Posted: 16 Jul 2015 01:01 PM PDT

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்கும் வகையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரின் முழு விவரங்களையும் உரிய சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ. 10,000 கோடி திரட்ட சோழமண்டலம் திட்டம்

Posted: 16 Jul 2015 01:01 PM PDT

மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ. 10,000 கோடி திரட்ட சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ்

திருமலைக்கேணியில் சிறப்பு வழிபாடு

Posted: 16 Jul 2015 01:00 PM PDT

நத்தத்தை அடுத்துள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இண்டஸ்இந்த் வங்கி லாபம் 25% உயர்வு

Posted: 16 Jul 2015 01:00 PM PDT

தனியார் துறையைச் சேர்ந்த இண்டஸ்இந்த் வங்கியின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்ததாக அந்த வங்கி தெரிவித்தது.

நந்த கோபாலகிருஷ்ண சுவாமி ஆலய வருஷாபிஷேகம்

Posted: 16 Jul 2015 01:00 PM PDT

நந்த கோபாலகிருஷ்ண சுவாமி ஆலய வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™