Tamil News | Online Tamil News |
- உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி: கோட்டைக்கு வந்து புது திட்டங்களை துவக்கினார்
- நில மசோதாவுக்கு கருத்தொற்றுமைக்கான மோடி முயற்சி தோல்வி: காங்கிரஸ் முதல்வர்கள் மொத்தமாக புறக்கணித்து எதிர்ப்பு
- நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
- நாய் வளர்க்க வரி: பஞ்சாபில் அறிவிப்பு
- யாகூப் மேமனை தூக்கிலிட தேதி குறிப்பு
- பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்டாவிட்டால்...: எச்சரிக்கையால் தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்
- 'ஷாக்' பிரச்னையை கையில் எடுக்கும் விஜயகாந்த்!
- நடுவழியில் நிற்கும் பஸ்களால் பயணிகள் பாதிப்பு: நிர்வாக திறமையில்லை என ஊழியர்கள் புகார்
- எல்லையில் பாக்., ராணுவம் அட்டூழியம்: பெண் பலி
- நக்சல்கள் கடத்தி கொன்ற 4 போலீசார் உடல் மீட்பு
- கெஜ்ரிவால் விளம்பரம்: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
- பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைந்தது
| Posted: சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று, தலைமைச் செயலகம் வந்ததன் மூலம், தன் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு, முற்றுப்புள்ளி வைத்தார். அங்கு அவர், புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். அவரது வருகை, அ.தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா, கடந்த 4ம் தேதி, தலைமை செயலகம் வந்தார். அன்று, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றார்; அதன்பின், அவர் தலைமை செயலகம் வரவில்லை.அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு டாக்டர்கள், சிகிச்சை அளித்து வருவதாகவும், தகவல் பரவியது. மேலும், மேல் சிகிச்சைக்காக, |
| Posted: புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமாக மத்திய அரசு கருதும், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, வரும், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற ஏதுவாக, மாநில முதல்வர்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்தலாம் என்ற, பிரதமர் மோடியின் முயற்சி நேற்று தோல்வி அடைந்தது.நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணித்ததால், மோடியின் எண்ணம் பலிக்கவில்லை. |
| நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு Posted: சென்னை : நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தம் மீது, லோக்சபாவில் ஓட்டெடுப்பு நடந்த போது, அதை ஆதரித்து அ.தி.மு.க., ஓட்டளித்த நிலையில், தற்போது முதல்வர் ஜெயலலிதா, சட்டத்திருத்தத்தில், சில பகுதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.டில்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மாநில முதல்வர்கள் பங்கேற்ற, 'நிடி ஆயோக்' நிர்வாகக் குழுவின், இரண்டாவது கூட்டம் நடந்தது.கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கலந்து கொள்ளவில்லை. எனினும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தம் தொடர்பாக, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், ... |
| நாய் வளர்க்க வரி: பஞ்சாபில் அறிவிப்பு Posted: லூதியானா: பஞ்சாபில், நாய் வளர்க்க விரும்புவோர், நாயின் புகைப்படத்துடன் பதிவு செய்து வரி செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அம்மாநில கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாயின் புகைப்படம் மற்றும் அதன் விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை, கார்ப்பரேஷனின் சுகாதார பிரிவில் அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு ஓராண்டுக்கானது. இதற்காக, 250 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும். ஆண்டுதோறும், இந்த பதிவை புதுப்பிப்பதுடன், வரியையும் செலுத்த வேண்டும். தவறினால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நாய் விற்பனையில் ... |
| யாகூப் மேமனை தூக்கிலிட தேதி குறிப்பு Posted: மும்பை : மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய குற்றவாளியான, யாகூப் மேமனுக்கு, இம்மாதம், 30ல், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம், இந்த பயங்கரவாத தாக்குதலில், முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. |
| பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்டாவிட்டால்...: எச்சரிக்கையால் தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம் Posted: கடலூரில் நாளை மறுநாள் தி.மு.க., சார்பில் நடக்கும் பேரணிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்து வரும் பொறுப்பு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 'செய்யாவிடில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்' என மாவட்ட செயலர்கள் மிரட்டுவதால் நிர்வாகிகள் கலக்கமடைந்து உள்ளனர்.நான்காண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் ஆட்சியாளர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை காரணமாக காட்டி நீதி கேட்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை மண்டல வாரியாக தி.மு.க., நடத்துகிறது.அந்த வகையில் மதுரையை அடுத்து கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.'இந்த ... |
| 'ஷாக்' பிரச்னையை கையில் எடுக்கும் விஜயகாந்த்! Posted: மின்சாரப் பிரச்னையை மையப்படுத்தி மிகப் பெரிய போராட்டம் நடத்துவது குறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதன் பின் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்த விஜயகாந்த் ஏற்கனவே முடிவு செய்துள்ளார். இதன் துவக்கமாக திருவாரூரில் விவசாயிகள் பிரச்னையை மையப்படுத்தி போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ... |
| நடுவழியில் நிற்கும் பஸ்களால் பயணிகள் பாதிப்பு: நிர்வாக திறமையில்லை என ஊழியர்கள் புகார் Posted: டீசல் இன்றி, அரசு பஸ்கள் திடீர் திடீரென நிறுத்தப்படுவதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 'நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம்' என, ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். |
| எல்லையில் பாக்., ராணுவம் அட்டூழியம்: பெண் பலி Posted: ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், பாக்., ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், ஒரு பெண் உயிரிழந்தார்; மூவர் காயமடைந்தனர். ஜம்முவில் நாளை, முன்னாள் மாநில நிதியமைச்சர் கிரிதாரி லால் டோக்ராவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். இந்நிலையில், ஜம்மு வின், அக்னூர் பகுதியில், பாக்., ராணுவத்தினர், போர் நிறுத்தத்தை மீறும் வகையில், நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், எல்லை பகுதியில் பாதுகாவல் பணியில் ஈடுபட்ட வீரர் காயமடைந்தார். அவரை வாகனத்தில் ஏற்றி ... |
| நக்சல்கள் கடத்தி கொன்ற 4 போலீசார் உடல் மீட்பு Posted: ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட நான்கு போலீசாரின் உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.இதுகுறித்து, சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி., இந்திரா கல்யாண் எலெசிலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பீஜப்பூர் அருகே, இரு நாட்களுக்கு முன், நான்கு போலீசாரை நக்சலைட்டுகள் கடத்திச் சென்றனர். இவர்களின் உடல்கள், அடர்ந்த காட்டின் இடையே செல்லும் சாலையில் கண்டெடுக்கப்பட்டன. 'மக்கள் கோர்ட்' என்ற பெயரில் விசாரணை நடத்தி, நான்கு போலீசாரையும், நக்சலைட்டுகள் கொன்று விட்டதாக தெரிகிறது. போலீசாரின் உடல்கள் ... |
| கெஜ்ரிவால் விளம்பரம்: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு Posted: புதுடில்லி: டில்லி அரசு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, உன்னதமான தலைவராக புகழ்ந்து, ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க, டில்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. டில்லி காங்., தலைவர் அஜய் மக்கான் சார்பில், வழக்கறிஞர் விகாஸ் சிங், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:ஊடகங்களில் விளம்பரம் அளிக்க, டில்லி அரசு, நடப்பு நிதியாண்டில், 526 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. முந்தைய ஆண் டில், விளம்பரங்களுக்கு வெறும், 23 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள, 500 கோடி ரூபாயில், 100 பள்ளிகள் கட்டியிருக்கலாம்; 1,000 பஸ் ... |
| பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைந்தது Posted: புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதை அடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்குப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.2.55 குறைந்து, ரூ.67.29 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.44 குறைந்து ரூ.51.08 ஆகவும் விற்பனை செய்யப்படும். இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அமைச்சர் நம்பிக்கை: வளர்ந்த நாடுகளுடன், ஈரான் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்தால், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 16,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |