Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 11:03 AM PDT

பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் ! கவிஞர் இரா .இரவி ! புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் ! பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர்! தந்தை பெரியாரின் புரட்சிக்கருத்துக்களை தனது பாடல்களில் வடித்துக் காட்டியவர்! தமிழ் ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியவர்! தமிழ் ஆசு கவியாக வாழ்வில் உயர்ந்தவர்! கொள்கையில் குன்றாக என்றும் நின்றவர்! குணத்தில் அன்பின் சிகரமாகத் திகழ்ந்தவர்! கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிக்காக பாரதிதாசன் என்று மாற்றிய உண்மைச் சீடர்! பாரதிதாசன் ஆத்திசூடி அழகாக ...

‘பேயே, பிசாசே, குட்டிச் சாத்தானேனு கொஞ்சறாரு..! –

Posted: 15 Jul 2015 10:39 AM PDT

இன்று பஸ்ஸில் உன்னை மாதிரியே ஒரு பெண்ணைப் பார்த்தேன்..! – நீங்க என்ன பண்ணினீங்க? – பயந்து போய் இறங்கி வேற பஸ்ஸிலே ஏறிட்டேன்..! – அமுதா அசோக்ராஜ் – —————————————– – அடிக்கடி வீட்டுக்காரரோட பேய்ப்படத்துக்குப் படத்துக்கு போனது தப்பாப் போச்சு..! – ஏன் என்னாச்சு? – கொஞ்சும்போது கூட, 'பேயே, பிசாசே, குட்டிச் சாத்தானேனு கொஞ்சறாரு..! – லெட்சுமி மணிவண்ணன் – —————————————– – என்ன சார், இந்த டாக்டர் பார்வை நேரம் இரவு 10 முதல் அதிகாலை 5 மணிவரை-னு போட்டிருக்காரே..! – இவரு தூக்கத்துல ...

நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:35 AM PDT

நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க ! கவிஞர் இரா .இரவி ! எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கி எட்டாத உயரம் கவிதையால் அடைந்தவரே ! பாரிஸ்டர் பட்டம் நீங்கள் பெறவில்லை ! பெற்று இருந்தால் நோபலுக்கு வாய்ப்பில்லை ! நோபல் பணத்தால் உருவானது பல்கலைக் கழகம் ! நோபல் பரிசுக்குப் பெருமை பெற்றுத் தந்தவரே ! உலக நாடுகள் பல பயணித்த முதல் கவிஞரே ! உலகத்தை உற்று நோக்கி தந்த கவி தேனாறு ! பாடலாசிரியர் கவிஞர் ஓவியர் இதழாசிரியரே ! பன்முக ஆற்றலில் தனி முத்திரைப் பதித்தவரே ! காந்தியடிகளுக்கு ...

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:35 AM PDT

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி ! தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டுவோம் ! தமிழோடு ஆங்கிலக் கலப்பின்றிப் பேசிடுவோம் ! ஆரம்பக்கல்வியை தமிழில் மட்டும் வழங்குவோம் ! அதன் பின் மற்ற மொழிகள் எதுவும் படிக்கட்டும் ! அப்பா அம்மா என்றழைப்பதைக் கட்டாமாக்கிடுவோம் ! டாடி மம்மி என்றால் தண்டத்தொகை வாங்கிடுவோம் ! குழந்தைகளுக்கு பெயர்களை நல்ல தமிழில் சூட்டுவோம் ! குழந்தைகளுக்கு சிந்திக்க தமிழைப் பயிற்றுவிப்போம் ! ஊடகங்களின் தமிழ்க் கொலையைத் தடுத்திடுவோம் ! உரிமைகளைத் தமிழ் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:34 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிரித்துக் கொண்டே இரு
கலங்காதே கற்பிக்கும்
மலர்கள் !

மரணிக்கும் வேளையிலும்
சிரிக்கும்
மலர்கள் !

ஒரு நாள் வாழ்க்கை
ஓயாத புன்னகை
மலர்கள் !

ஒவ்வொரு மலரும்
ஒவ்வொரு
அழகு !

மொட்டு
மலர் விற்றது
ஏழைச்சிறுமி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:33 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிரித்துக் கொண்டே இரு
கலங்காதே கற்பிக்கும்
மலர்கள் !

மரணிக்கும் வேளையிலும்
சிரிக்கும்
மலர்கள் !

ஒரு நாள் வாழ்க்கை
ஓயாத புன்னகை
மலர்கள் !

ஒவ்வொரு மலரும்
ஒவ்வொரு
அழகு !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:33 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பிறந்தது எங்கோ ?
இணைந்தன இங்கே !
மலர்கள் !

பிரிந்து இருந்தவைகளை
இணைத்தது நார்
மலர்கள் !

பயணம் எங்கோ
கோவிலுக்கா ? மயானத்திற்கா ?
மாலை !

யாருக்கோ ?
மணமக்களுக்கா ? மரணித்தவர்களுக்கா ?
மாலை !
ஆடாதே மனிதா
ஆடி உணர்த்தியது
மாலை !

கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:32 AM PDT

கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி ! பிராத்தனையிலும் சிறந்தது பிறர் கண்ணீர் துடைப்பது ! நல்ல கணவன் மனைவியைக் கண்ணீரின்றிக் காப்பவன் ! இறப்பிற்கு ஊரே அழுதால் உத்தமன் ! இறப்பிற்கு குடும்பம் மட்டுமே அழுதால் தன்னலமிக்கவன் ! பிறப்பில் தொடங்கி இறப்பு வரை தொடர்கிறது ஏழைகளுக்கு கண்ணீர் ! துகிலுரிபவனையும் கண் கலங்க வைப்பாள் வெங்காயம் ! சோகத்தில் மட்டுமல்ல மகிழ்விலும் வரும் கண்ணீர் ! . சிரிக்க வைப்பது சிறப்பு அழ வைப்பது வெறுப்பு ! அழுது பிறக்கும் ...

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:31 AM PDT

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி ! அறிவொளி தரும் அற்புத விளக்கு ஆசிரியர் ! வெற்றியின் பகைவன் தோல்வியின் தோழன் கோபம் ! கஷ்டப்பட்டு வாழாதே இஷ்டப்பட்டு வாழ் இனிக்கும் வாழ்வு ! வாசல் திறக்கும் துன்பத்திற்கு வழி வகுக்கும் அழிவிற்கு பேராசை ! குற்றம் பெருகிடக் காரணி பணத்தாசை ! நம் மகிழ்வின் ரகசியம் மற்றவரை மகிழ்விப்பது! வேண்டாம் விட்டுவிடு விரக்தி கவலை பிறக்கும் தன்னம்பிக்கை ! சாத்தியமன்று விதைக்காமல் அறுவடை ! இலாப நட்டம் கணக்குப்பார்த்தல் ...

தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:31 AM PDT

தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி ! தோல்விக்குத் துவண்டு விடும் சராசரியல்ல தோல்விக்குப் பின்னும் முயன்று வெல்வோம் ! ஆயிரம் முறை முயன்று வென்றிட்ட அற்புத எடிசன் வரலாறு அறிந்தவர்கள் நாங்கள் ! பதினேழு முறை முயன்று வென்றிட்ட பண்டைய கசினிமுகமது கதை படித்தவர்கள் நாங்கள் ! ஒரே ஒரு முறை முயன்று தோற்றதும் ஓடி விடும் கோழைகள் அல்ல நாங்கள் ! வீரத்தை இந்த உலகிற்கு கற்பிதா ஆசான் வீரத்தின் அடையாளமாக விளங்குபவர் நாங்கள் ! இந்தமுறை தோற்றாலும் அடுத்தமுறை வெல்வோம் ! எல்லாமுறையும் ...

கொடியது மது !கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:30 AM PDT

கொடியது மது !கவிஞர் இரா .இரவி ! மது மதியை இழக்க வைக்கும் ! மது கல்லறைக்கு விரைவில் அனுப்பும் ! மது தொடாமல் இருந்தால் சிறப்பாய் ! மது தொட்டு விட்டால் சீரழிவாய் ! மது சிந்தனையை சிதைத்து விடும் ! மது சீரழிவை விதைத்து விடும் ! மது ஆற்றலை அழித்து விடும் ! மது அறிவை குறைத்து விடும் ! மது தவறான வழியைக் காட்டும் ! மது தாயையும் மதிக்க மறுக்கும் ! மது குழந்தைகளை வெறுக்க வைக்கும் ! மது குவளயம் தூற்ற வைக்கும் ! மது கேடுகளை வரவழைக்கும் ! மது கோபத்தை அழைத்து வரும் ...

அப்பா ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:30 AM PDT

அப்பா ! கவிஞர் இரா .இரவி ! திடிரென ஒரு நாள் அப்பா காணாமல் போனார் ! திக்குத் தெரியாத காட்டில் விட்டது போலானேன் ! காவல் நிலையம் சென்று புகார் தந்தேன் ! காவலரோடு சென்று தம்பியும் நானும் தேடினோம் ! கடவுள் நம்பிக்கை இல்லாத நான் இராமேஸ்வரம் கோயில் பழனி கோயில் என்று சென்று தேடினேன் ! முதியோர் விடுதிகள் தோறும் தேடினோம் ! மதுரை விடுதிகள் அனைத்திலும் தேடினோம் ! அரசு ராசாசி மருத்துவமனையிலிருந்து அழைப்பார்கள் ! அங்குள்ள பிணவறைக்கு பலமுறை சென்று பார்த்தேன் ! நடமாடும் நடைப்பிணமாக ...

மாண்பு மிக்கவள் மண்ணில் மகத்தானவள் மகள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:29 AM PDT

மாண்பு மிக்கவள் மண்ணில் மகத்தானவள் மகள் ! கவிஞர் இரா .இரவி ! இரண்டாம் பட்சமாக நினைத்தே வளர்க்கின்றனர் முதல்பட்சமாக மகளே ஆகின்றாள் ! வேண்டாவெறுப்பாக சிலர் வளர்ப்பதுண்டு விவேகத்தில் சிறந்தவளாக அவள் ஆவதுண்டு ! கொள்ளி போட மகனில்லையே வருத்தத்தில் கனிவின்றி மகளை சிலர் வளர்ப்பதுண்டு ! மின்சாரத் தகனம் இங்கே வந்தபின்னே மகன் கொள்ளி போட வேண்டிய அவசியமில்லை ! மகள் கொள்ளி வைத்தாலும் வேகும் பிணம் ! மயானத்தில் அனுமதிப்பதில்லை மாற வேண்டும் இந்நிலை ! ஆண் வாரிசு என்று செல்லத்தால் ...

மாண்பு மிக்கவள் மண்ணில் மகத்தானவள் மகள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:29 AM PDT

மாண்பு மிக்கவள் மண்ணில் மகத்தானவள் மகள் ! கவிஞர் இரா .இரவி ! இரண்டாம் பட்சமாக நினைத்தே வளர்க்கின்றனர் முதல்பட்சமாக மகளே ஆகின்றாள் ! வேண்டாவெறுப்பாக சிலர் வளர்ப்பதுண்டு விவேகத்தில் சிறந்தவளாக அவள் ஆவதுண்டு ! கொள்ளி போட மகனில்லையே வருத்தத்தில் கனிவின்றி மகளை சிலர் வளர்ப்பதுண்டு ! மின்சாரத் தகனம் இங்கே வந்தபின்னே மகன் கொள்ளி போட வேண்டிய அவசியமில்லை ! மகள் கொள்ளி வைத்தாலும் வேகும் பிணம் ! மயானத்தில் அனுமதிப்பதில்லை மாற வேண்டும் இந்நிலை ! ஆண் வாரிசு என்று செல்லத்தால் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:28 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! அறிந்திடுக மேகி மட்டுமல்ல எல்லா நூடுல்சும் தீங்கு ! பீசா போய் தோசை வந்தது டும் டும் நன்றி காக்கா முட்டை ! நீக்கியது துருவை குளிர்பானம் ? நீர் ஆகாரம் அருந்துகையில் இல்லை நோய்கள் ! என்றும் நன்று வாங்கி அருந்துக இளநீர் ! உணவுகளில் கவனம் செயற்கை வண்ணம் வரவழைக்கும் புற்றுநோய் ! தந்தது பலருக்கு துரிதசாவு துரித உணவு ! செமிக்காமல் வயிற்றில் புரட்டியது புரோட்டா ! நெகிழி ஈடில்லை வாழை இலைக்கு ! ஆங்கிலேயன் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:28 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! படத்திற்கான விருப்பங்கள் படைப்பிற்கு கிடைப்பதில்லை முகநூலில் ! ஏமாற்றி கறக்கின்றனர் இறந்த கன்று வைத்து பால் ! மீனவர் வலையில் மீன்கள் இலங்கைப்படை வலையில் மீனவர்கள் ! இதயத்தை இதமாக்கும் ஓசையின் ஒழுங்கு இசை ! ஓவியர் உள்ளம் ஓங்கி உரைக்கும் ஓவியம் ! எந்த ஓவியராலும் வரைய முடியாது குழந்தை வரையும் ஓவியம் ! பராமரிப்பில் உள்ளது விளையாமல் போவதும் விதை விருட்சமாவதும் ! வெகு நாட்களாகி விட்டன நேர்மை விடைபெற்று அரசியல் ...

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:27 AM PDT

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி ! மலர்கள் மாலையான பின்னும் தொடரும் வண்டுகள் ! மாதத்தில் ஒரு நாள் மனம் போகும் கொள்ளை முழு நிலவு ! பூக்காமல் காய்ப்பதால் இனிப்பு அதிகமோ ? பலா ! பலாவின் ஆசையில் கெலாவை இழக்கின்றனர் இளைஞர்கள் ! . குப்புற விழுந்தும் மண் ஒட்டவில்லை மீசையில் இல்லை மீசை ! ஆடிப்பட்டம் தேடி விதித்தனர் வீட்டடிமனைக்கல் ! ஆள் பாதி ஆடை பாதி நடிகை ! ஓடுவதில்லை மெய்ப்படம் ஓடுகிறது பேய்ப்படம் திரைப்படம் ! பிடிக்க ஆசை பிடிபடுவதில்லை ...

இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே ! கவிஞர் இரா. இரவி !

Posted: 15 Jul 2015 10:26 AM PDT

இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே ! கவிஞர் இரா. இரவி ! பண்ணைப்புரத்தில் பிறந்த இசைப்பண்ணையே! பழைய மதுரை மாவட்டமான தேனியில் உதித்தவரே! மேட்டுக்குடி இசையை மாடு மேய்ப்பவருக்கும் தந்தவரே! மென்மையான இசையை மேன்மையாக வழங்கியவரே! நாட்டுப்புற இசையை நாடு வியக்க இசைத்தவரே! நாடுகள் தாண்டிச் சென்று சிம்பொனி மீட்டியவரே! விருதுகள் பல பெற்று விருதுகளுக்கு பெருமை ஈந்தவரே! விவேகமான பாடல்களை வெள்ளித்திரையில் யாத்தவரே! கடவுளுக்கு மேலாகத் தாயை வணங்குபவரே! கடவுள்கள் பலருக்கு கும்பாபிசேகம் ...

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:26 AM PDT

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி ! அழகிற்கு அழகு தருவது அனைவரும் அணிய வேண்டியது புன்னகை ! துப்பாக்கிச்சூடு வழக்குகள் மட்டுமல்ல துப்பாக்கிச்சூடும் நடக்கின்றது நீதி மன்றங்களில் ! வாசகர் வட்டத்திற்கான தடை கல்லூரி தனக்குத்தானே வைத்த சுய கொள்ளி ! அன்னத்தின் எதிர்பதமாய் அல்லவை ஏற்று நல்லவை தள்ளுகின்றனர் திரைப்பட ரசிகர்கள் ! அதிகம் எழுதி விட்டால் பொறுப்பதில்லை சில கவிஞர்கள் ஹைக்கூ ! முடிவாகிறது நிதியால் சில நீதி ! இனியும் வேண்டாம் கருப்புத்துணி ...

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:24 AM PDT

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

மனிதனுக்கு மட்டுமல்ல
கோயில் யானைக்கும் தேவை
நடைப்பயிற்சி !

உங்க பற்பசையில்
உப்பு இருக்கா ?
வேப்பங்குச்சி !

கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க
இழப்பீர்கள் செவித்திறன் !

தேவை கவனம்
உண்மை இல்லை
விளம்பர மொழிகள் !

பெரிய நிறுவனம் தயாரிப்பு
விலையும் மிக அதிகம்
சட்டையில் இல்லை பை !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:24 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வாழ்வாங்கு வாழ்கிறார் வளமான பாடல்களில் கவியரசர் ! முற்பாதி பகுத்தறிவு பிற்பாதி ஆன்மிகம் இரண்டும் அறிந்தவர் ! பாடாத பொருள் இல்லை பொருளின்றிப் பாடவில்லை கவியரசர் ! முன்னேற்ற விதையானது முத்தான பாடல்கள் முத்தையாவின் சொத்தானது ! வானம் அழாவிடில் மனிதன் அழ நேரிடும் வறட்சி ! இயற்கையின் கஞ்சத்தனம் வறட்சி ! இன்னல் ஏழைகளுக்கு பாதிப்பில்லை பணக்காரர்களுக்கு வறட்சி ! மழைநீர் சேகரிப்பு தொய்வின்றித் தொடர்ந்தால் வாய்ப்பில்லை ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:23 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! கட்டப்பட்டு வாழாது இட்டப்பட்டு வாழ்க இனிக்கும் வாழ்க்கை ! உற்று நோக்குங்கள் வாகை உள்ளது வாழ்க்கையில் ! பிறப்பு இறப்பு இரண்டிலும் ஒரு மெய் வாழ்க்கை இரு மெய் ! புரியாத புதிர் புரிந்தால் கரும்பு வாழ்க்கை ! பலருக்கு உயிருள்ளவரை சிலருக்கு உலகம் உள்ளவரை வாழ்க்கை ! வாழ்வாங்கு வாழ் இறந்தபின்னும் வாழ்வாய் வாழ்க்கை ! இன்பம் துன்பம் இரண்டின் கலப்பே வாழ்க்கை ! தனக்காக வாழ்வதல்ல பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை ! கவலையால் ...

தத்துவம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:22 AM PDT

தத்துவம் ! கவிஞர் இரா .இரவி ! அறிந்திடுக மேடு பள்ளம் சாலை இன்பம் துன்பம் வாழ்க்கை ! எல்லாம் அறிந்தவர் எதுவும் அறியாதவர் இல்லை எவரும் ! பயமுறுத்திடக் கற்பித்து பயத்தால் தொடர்வது கடவுள் நம்பிக்கை ! .வருந்தாதே இழந்ததாய் இழந்தது எதுவும் உன்னுடையதில்லை ! நிரந்தரமன்று தீயோருக்கு வெற்றி ! இன்று நீ நாளை யாரோ ? உச்சத்தில் ! கண்டுபிடித்தவர்கள் வாழ்விலும் சுழியம் ! அழிக்காமலே சிறிதாக்கலாம் அருகில் பெரிய கோடு இட்டு ! தீயில் கொடிய தீ பொறாமைத் ...

கேள்வி ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:21 AM PDT

கேள்வி ! கவிஞர் இரா .இரவி ! குழந்தைகள் கேட்டால் கோபம் வேண்டாம் அறிவாளியாவதன் அறிகுறி ! இந்த உலகம் உருவானது கேள்விகளால் ! எடிசனின் கேள்விகள் தந்தன எண்ணற்ற கண்டுபிடிப்புகள் ! தந்தை பெரியாரின் கேள்விகள் மலர்வித்தது பகுத்தறிவை ! எழுப்பியதால்தான் மக்கள் அறிந்தனர் சட்டமன்றத்தில் கேள்வி ! ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? கேள்விகள் அறிவின் தொடக்கம் ! புரட்சிகள் தொடங்கியது நல்வர்களின் கேள்விகளால் ! கேட்கக் கூடாது எனும்போது ஆரம்பமாகுது சர்வாதிகாரம் ...

உயர்திணை யார் ? கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:20 AM PDT

உயர்திணை யார் ? கவிஞர் இரா .இரவி ! காட்டு விலங்குகள் ஒற்றுமையாய் நாட்டு மனிதர்கள் வேற்றுமையாய் உயர்திணை யார் ? சிங்கமும் புலியும் சிநேகமாய் மனிதனும் மனிதனும் பகையாய் உயர்திணை யார் ? பசிக்கும்போது இரை தேடும் விலங்கு எப்போதும் இரை தேடும் மனிதன் உயர்திணை யார் ? சாதி மதச் சண்டை இல்லா விலங்குகள் சாதி மதச் சண்டை இடும் மனிதர்கள் உயர்திணை யார் ? நன்றி மறவாத நாய் நன்றி மறக்கும் மனிதன் உயர்திணை யார் ?

நகைச்சுவை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:19 AM PDT

நகைச்சுவை ! கவிஞர் இரா .இரவி ! வியாபாரி குல்லாவை எறிந்தும் எறியவில்லை நவீன குரங்குகள் ! காகம் பாடியது கா கா என்று வடையை காலில் வைத்து ! எட்டவில்லை என்றதும் புளிக்கும் எனவில்லை பழுக்கட்டும் என்றது நரி ! கிடைக்கவில்லை இந்த மருந்து என் கையெழுத்து என்றார் மருத்துவர் ! பானையில் கற்கள் போடவில்லை உறிஞ்சியது குழல் வைத்து கணினியுகத்தின் காகம் ! கிணற்றில் முகம் பார்த்து குதிக்கவில்லை விரட்டியது நரியை புத்தி மிக்க சிங்கம் ! கீழே குதித்தவன் விழுந்தான் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:18 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! பெற்ற பிள்ளை மட்டுமல்ல தத்துப் பிள்ளையும் தரும் கண்ணீர் ! மாதா பிதா குரு மூன்றிலும் மேலானவன் நல்ல நண்பன் ! ஆற்றலின் புதையல்கள் அறிவின் விதைகள் இளைஞர்கள் ! எண்ணம் உயர்ந்தால் செயல் சிறக்கும் வாழ்க்கை இனிக்கும் ! தூர விலகும் துன்பம் நெருங்கி வரும் இன்பம் வேண்டும் தன்னம்பிக்கை ! முற்போக்குவாதி இரத்தத்திலும் கலந்துள்ளது ஆணாதிக்கம் ! எதிர்ப்பார்ப்பது போலவே கொடுக்க வேண்டும் மரியாதை ! நடப்பட்ட நாற்று நோகாமல் காத்திடு ...

கேள்வி ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:17 AM PDT

கேள்வி ! கவிஞர் இரா .இரவி ! குழந்தைகள் கேட்டால் கோபம் வேண்டாம் அறிவாளியாவதன் அறிகுறி ! இந்த உலகம் உருவானது கேள்விகளால் ! எடிசனின் கேள்விகள் தந்தன எண்ணற்ற கண்டுபிடிப்புகள் ! தந்தை பெரியாரின் கேள்விகள் மலர்வித்தது பகுத்தறிவை ! எழுப்பியதால்தான் மக்கள் அறிந்தனர் சட்டமன்றத்தில் கேள்வி ! ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? கேள்விகள் அறிவின் தொடக்கம் ! புரட்சிகள் தொடங்கியது நல்வர்களின் கேள்விகளால் ! கேட்கக் கூடாது எனும்போது ஆரம்பமாகுது சர்வாதிகாரம் ...

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:16 AM PDT

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி ! நூற்க முடியாத வெண்பஞ்சு வானத்தில் ! காளை என்றால் மகிழ்ச்சி மாடு என்றால் கோபம் இளைஞன் ! இனிதாக்கியது பயணத்தை இசைப்பாடல் ! கண்ணிர்க்குக் குளிர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி மலர்ந்த மலர்கள் ! மனதின் இருப்பிடம் இதயமல்ல இன்று மூளை ! பெரு மழை துளிர்த்தது பட்டமரம் ! வயது அறுபது கல்லூரி மாணவர் கதாநாயகன் ! சம்பளம் கோடி பாத்திரம் ஏழை நடிகர் !

புரட்சி ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:15 AM PDT

புரட்சி ! கவிஞர் இரா .இரவி ! ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் புரட்சி ! தன்னலமற்றவர்களின் பொதுக்குரல் புரட்சி ! உயர்வான உயிரும் துச்சமாகும் புரட்சி ! தொடக்கம் இன்னல் முடிவு இன்பம் புரட்சி ! ஒடுக்கப்பட்டோரின் விடியல் விதை புரட்சி ! ஒருவரில் தொடங்கி பல கோடியில் முடியும் புரட்சி ! வேறுபாட்டை வேர் அறுக்கும் சமதர்மம் சமைக்கும் புரட்சி ! ஆளும் வர்க்கம் ஆட்டம் காணும் புரட்சி ! உயர்ந்த சொல் கேலிச் சொல்லானது புரட்சி ! விளம்பரங்களில் ...

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி

Posted: 15 Jul 2015 10:15 AM PDT

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி ! தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களே இல்லாமல் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது திருக்குறள் .உலகில் தமிழ் மொழி அறியாதவர்கள் கூட திருக்குறள் அறிந்துள்ளனர்.அதனால்தான் தமிழ்ப்பாட்டி அவ்வை சொன்னாள். ."அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் . திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை .திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை .பெரும்பாலான உலக மொழிகள் யாவிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். ...

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:14 AM PDT

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி ! உற்றுக் கேளுங்கள் பேசுவது கேட்கும் மலர்கள் ! இரண்டே நிமிடத்தில் தயார் என்று சொல்லி விற்றனர் உயிர்க்கொல்லி ! ஆபத்து நவீன உடையும் நவீன உணவும் ! உணர்த்திடும் அடுத்தவர் வலி மனிதநேயம் ! மடிகிறார்கள் மனிதர்கள் மண் சண்டையால் ! சிறகுகள் இருந்தும் பறக்காததால் வாத்து மடையன் ! காற்றுடன் போராடியே எரிகிறது மெழுகுவர்த்தி ! அடங்குவதே இல்லை பணக்காரனின் பணப்பசி ! ஒளி வர இருள் ஒளியும் தன்னம்பிக்கை வர ...

இயற்கை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:13 AM PDT

இயற்கை ! கவிஞர் இரா .இரவி ! மனமில்லை கடந்து செல்ல சிரிக்கும் மலர்கள் ! கண்கள் இரண்டு போதவில்லை கண்டு ரசிக்க இயற்கை ! காயமில்லை வானிலிருந்து விழுந்தும் மழை ! புள்ளிகள் உண்டு கோலம் இல்லை நட்சத்திரங்கள் ! போனது கொள்ளை முழு மனமும் முழு நிலவு ! உண்டு வேறுபாடு காலை மாலை ஒரே வானம் ! வெளியே தெரிவதில்லை வேர்களின் உழைப்பு வேர்களின்றி மரமில்லை ! ஒய்வு என்றால் என்னவென்று அறியாதவன் கதிரவன் ! வளைந்து வணங்கி உரைத்தது உழைத்து உண்ணுக விளைந்த ...

தீண்டாதே என்றும் மது ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:12 AM PDT

தீண்டாதே என்றும் மது ! கவிஞர் இரா .இரவி ! அறிவை இழக்க வைக்கும் மது ! ஆறிலிருந்து ஐந்திற்கு மாற்றும் மது ! ஆற்றலை அழிக்கும் மது ! ஆண்மையை குறைக்கும் மது ! தடுக்காமலே விழ வைக்கும் மது ! தள்ளாடி விழ வைக்கும் மது ! தரத்தை போக்கிவிடும் மது ! தன்மானம் இழக்க வைக்கும் மது ! பணத்தைப் பறிக்கும் மது ! பண்பாட்டைச் சிதைக்கும் மது ! கேட்டை விளைவிக்கும் மது ! கேடுகெட்ட செயல் செய்யும் மது ! மதியை மயக்கிடும் மது ! மானம் கெட வைக்கும் மது ! பாதையைத் தவறாக்கும் மது ! ...

துளிப்பா ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:12 AM PDT

துளிப்பா ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி ! ஆசையே அழிவு என்றவன் அரண்மனை துறந்து வந்தான் புத்தன் ! அறியலாம் மெய் பொய் ஆர்ப்பரிக்கும் பொய் அடக்கமாக மெய் ! உண்மை இல்லை தேய்வதும் வளர்வதும் நிலவு ! இல்லை கிழக்கும் மேற்கும் சூரியனுக்கு ! நோயை உரைப்பார் நாடி பிடித்தே நாட்டு வைத்தியர் ! உணர்க உயிர் உருக்கும் திரவம் குளிர்பானம் ! உரைத்தார் அன்றே உணவில் சிறந்தது சைவம் ஒப்பற்ற வள்ளுவர் ! உயிர்கள் வணங்கும் உணவில் சைவமானால் உரைத்தார் வள்ளுவர் ! ...

துளிப்பா ! பூங்கொத்து ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:11 AM PDT

துளிப்பா ! பூங்கொத்து ! கவிஞர் இரா .இரவி ! வரவேற்க வழங்குகிறோம் வாங்கியவர் மகிழ்கின்றார் பூங்கொத்து ! கற்காலம் தொடங்கியது கணினி காலமும் தொடர்கிறது பூங்கொத்து ! வரவேற்பில் முதலிடம் வாங்கியவர் மலர்கின்றார் பூங்கொத்து ! ஒரு நாள் வாழ்க்கை ஒரு கவலையும் இல்லை பூங்கொத்து ! எங்கோ பூத்த பூக்கள் இணைந்தன கொத்தாக பூங்கொத்து ! முக்கியமான இடங்களில் சோதனை செய்யப்படும் பூங்கொத்து ! மலர்களைப் பறிப்பதை விரும்பாதவர்கள் விரும்புவதில்லை பூங்கொத்து !

இலை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:09 AM PDT

இலை ! கவிஞர் இரா .இரவி ! மரத்தில் இருக்கும்வரை மரணம் இல்லை ! மரம் விட்டு உதிர்ந்ததும் மரணம் தொடங்கும் ! உதிர்வதுண்டு தானாகவும் உதிர்ப்பதுண்டு காற்றும் ! நிலத்திலும் விழுவதுண்டு நீரிலும் விழுவதுண்டு ! நெருப்பிலும் விழுவதுண்டு நெஞ்சம் கனப்பதுண்டு ! சிலர் பறித்தும் பிரிவதுண்டு சிந்திக்காமலும் பிரிவதுண்டு ! ஆணவத்திலும் பிரிவதுண்டு அன்பின்றிப் பிரிவதுண்டு ! இலை என்ற பெயரும் இனி சருகு என்றாகும் ! உருக்குலைந்து போகும் உரமாகவும் மக்கும் ! பெற்றோருடன் ...

தந்தை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:09 AM PDT

தந்தை ! கவிஞர் இரா .இரவி ! உறவுகளில் உன்னதமானவர் ! உறவுகளுக்காக உழைப்பவர் ! உறக்கம் குறைப்பவர் ! உணர்வில் குன்றானவர் ! பாசத்தில் இமயமானவர் ! பண்பில் சிறந்தவர் ! தன்னலம் மறப்பவர் தன்குடும்ப நலம் காப்பவர் ! ஓடாய் உழைத்துத் தேய்பவர் ! ஒருபோதும் வருந்தாதவர் ! சேயுக்கு சிகரம் தருபவர் ! சிந்தையைச் செதுக்குபவர் ! உயர்ந்திட ஏணியானவர் ! உருகிடும் மெழுகானவர் ! ஒளிர்ந்திட எண்ணையானவர் ! ஒழுக்கம் கற்பித்தவர் ! முன்மாதிரியாக வாழ்பவர் ! முகம் என்றும் வாடாதவர் ...

கட்டாயமாகட்டும் கண்தானம் ! கவிஞர் இரா .இரவி ! .

Posted: 15 Jul 2015 10:07 AM PDT

கட்டாயமாகட்டும் கண்தானம் ! கவிஞர் இரா .இரவி ! . மனிதன் இறந்ததும் எரிக்கிறீர்கள் அல்லது மதவழக்கப்படி மண்ணில் புதைக்கிறீர்கள் தீயுக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை தயவுசெய்து மனிதர்களுக்கு வழங்குங்கள். தானத்தில் சிறந்த்து விழிகள் தானம் தரணி போற்றிடும் தானம் விழிகள் தானம் இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க இனிய ஆசை உள்ளவர்கள் வழங்குங்கள் தானத்தில் மிக எளிதானது கண் தானம் தானம் எழுதித் தந்து விட்டு இறந்தவுடன் உறவினர் தகவல் தந்தால் உடன் வந்து எடுத்துச் செல்வார்கள் கருமணியை ...

இதுவும் கடந்து போகும் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:06 AM PDT

இதுவும் கடந்து போகும் ! கவிஞர் இரா .இரவி ! இன்னலுக்காக வாட வேண்டாம் ! இதுவும் கடந்து போகும் ! கவலையில் கரைய வேண்டாம் ! இதுவும் கடந்து போகும் ! சோகத்தில் சோர வேண்டாம் ! இதுவும் கடந்து போகும் ! எழ்மைக்காக வருந்த வேண்டாம் ! இதுவும் கடந்து போகும் ! வறுமைக்காக வாடிட வேண்டாம் ! இதுவும் கடந்து போகும் ! தோல்விக்கு துவண்டிட வேண்டாம் ! இதுவும் கடந்து போகும் ! விரக்தி வேதனை வேண்டாம் ! இதுவும் கடந்து போகும் ! விடியவில்லை என்று வருந்த வேண்டாம் ! இதுவும் கடந்து ...

பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி

Posted: 15 Jul 2015 10:06 AM PDT

பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி ***** காதல், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் பாடியவர் கற்கண்டுப் பாடல்களை வெண்திரையில் தந்தவர் ! கடவுள் காதலித்து சாக வேண்டும் என்பதை நண்பர் சௌந்தர்ராசனுக்காக வாட வேண்டுமென மாற்றியவர் ! அண்ணனிடம் கடன் கேட்டு மறுத்த நேரத்தில் அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பாடல் வடித்தவர் ! சிறுகூடல்பட்டி என்ற ஊருக்குப் பெருமையை பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர் ! முத்தையா படைத்த பாடல்கள் தமிழ்ச் சொத்தானது சொத்தையான ...

ஹைக்கூ ! ( துளிப்பா ) கவிஞர் இரா .இரவி!

Posted: 15 Jul 2015 10:05 AM PDT

ஹைக்கூ ! ( துளிப்பா ) கவிஞர் இரா .இரவி! பொன்னை விட மேலானது போனால் வராது நேரம் ! தவறு செய்து விட்டு பெயர் சூட்டுகின்றனர் தலைவிதி ! கேட்டு வாங்குவது இழுக்கு தானாக வருவது பெருமை மரியாதை ! முன்னேற்றத்தின் தடைக்கல் பொறாமை ! அன்பின் பகைவன் அறிவைச் சிதைப்பவன் வெறுப்புணர்ச்சி ! அடையாளம் பெரிய மனிதர்களுக்கு அடக்கம் ! கற்றலின் கேட்டல் நன்று அறிஞர்கள் உரை ! சினம் வரும் நேரம் வேண்டும் கவனம் சிறந்தது மவுனம் ! அச்சம் அகற்றி துணிவு தரும் ...

மாசில்லா ம.பொ.சி. வாழ்க! கவிஞர் இரா. இரவி

Posted: 15 Jul 2015 10:04 AM PDT

மாசில்லா ம.பொ.சி. வாழ்க! கவிஞர் இரா. இரவி குப்பத்தில் பிறந்து கோபுரமாக உயர்ந்தவர் கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்! ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயரை தாயன்பால் ஞானம் பெற்று சிவஞானம் என்று மாற்றியவர்! ஏட்டுக்கல்வி படித்தது மூன்றாம் வகுப்பு மட்டும் தான் ஏனைய வாழ்க்கைக் கல்வி எண்பத்தி ஒன்பது வரை! விடுதலைக்காக போராடிய விடுதலைப் போராட்ட வீரர் விடுதலையை உயர்மூச்சாக உணர்த்திக் காட்டியவர்! மீசை மட்டுமன்றி மனசும் பெரிதாகப் பெற்றவர் மட்டற்ற இலக்கிய நூல்கள் பல வடித்தவர்! ...

ஒரு கவிதை என்ன செய்யும்..? கவிஞர் இரா .இரவி

Posted: 15 Jul 2015 10:04 AM PDT

ஒரு கவிதை என்ன செய்யும்..? கவிஞர் இரா .இரவி அநீதியை எதிர்க்கும் நீதிக்கு குரல் தரும் ! அடிமைத்தனம் அகற்றும் அன்பை போதிக்கும் ! அறியாமை இருள் அகற்றும் அறிவை வளர்க்கும் இயற்கை நேசிப்புத் தரும் இசையை ரசிக்க வைக்கும் இதயத்தை இதமாக்கும் இலக்கிய ஆர்வம் பிறக்கும் காதலை நேசிக்கும் வெறுப்பை அகற்றும் விழிப்புணர்வு விதைக்கும் இலக்கியத தாகம் தணிக்கும் . சாதி மத வெறி நீக்கும் சகோதர உணவு வளர்க்கும் ! மனிதநேயம் கற்பிக்கும் மனதை கொள்ளையடிக்கும் ! மொழிப் ...

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:03 AM PDT

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி ! மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாம் ஆற்றிலும் மண்தான் ! வைக்க முடியாது தேங்காய் குருவி தலையில் ! செந்தமிழும் நாப்பழக்கம் தமிங்கிலம் பரவுதலும் நாப்பழக்கம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் தவறு பொன்குடம் உடையுமா ? ஆயிரம் காக்கைக்கு மட்டுமல்ல ஆயிரம் புறாவிற்கும் ஒரு கல் போதும் ! கற்றது கையளவு கல்லாதது உலகளவு தோல்வியுற்ற மாணவன் ! குளித்து விட்டு வந்தான் காணவில்லை கூழ் ! தெரிந்து விடும் நாய் வேசமிட்டு குரைத்தாலும் ...

ஹைக்கூ ( சென்றியு ) துளிப்பா ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 10:00 AM PDT

ஹைக்கூ ( சென்றியு ) துளிப்பா ! கவிஞர் இரா .இரவி ! கற்பிக்கின்றன மலர்ச்சியை மலர்கள் ! மலர்களென மலர்ந்தே இருக்கட்டும் மனித முககங்கள் ! முடியும் என்ற முயற்சியே தொடக்கமாகும் வெற்றிக்கு ! முடியாது என்ற எண்ணமே தொடக்கமாகும் தோல்விக்கு ! விரையமல்ல விவேகம் வாசிப்பு நேரம் ! சுற்றுச்சுழல் கேடு கந்தக பூக்கள் மத்தாப்பூ ! புகை மாசு சிந்தனை மாசு இரண்டும் கேடு ! பலருக்கு பணம் தருகின்றன இல்லாத பேய்கள் ! தூர விலக்கும் துக்கத்தை துணிவு ! உணவு ...

வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்

Posted: 15 Jul 2015 09:59 AM PDT

தலைவரோட ஆசைக்கு அளவே இல்லாமப் போச்சு..! – ஏன் என்னாச்சு? – வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்கிறார்..!! – அம்பை தேவா – ———————————————– – யோகா தின நிகழ்ச்சிக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு..! – ஏன்? – அவர் பாட்டுக்கு பல்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாரே..! – அ.ரியாஸ் – ————————————————- – என்னது…தலைவர் பேசும்போது 'நண்பர் ஒபாமாவே'னு சொல்றாரா..? – ஃபேஸ்புக்லே ஒபாமாவுக்கு ப்ரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பி இருக்கார்ல..! – ஏ.பிரபாகரன் – ————————————————– – கூட்டணி ...

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 09:55 AM PDT

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி ! பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர் சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின் சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர் தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர் தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர் பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர் பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர் இராமமூர்த்தியோடு இணைந்து பொற்காலம் படைத்தவர் இராகத்தில் அழியாத ...

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி

Posted: 15 Jul 2015 09:53 AM PDT

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த குழந்தை குழந்தைகளுக்கு கல்வியோடு உணவும் தந்த தந்தை அன்னையைக் கூட சென்னைக்கு அழைக்காதவர் அரசுப் பணத்தை வீணாக்க விரும்பாதவர் காமராசர் நானிலம் போற்றிட தமிழகத்தில் ஆட்சிப் புரிந்தவர் நேர்மையின் சின்னம் நாணயத்தின் மறுபெயர் காமராசர் கல்விப் புரட்சி பசுமைப் புரட்சி தொழில் புரட்சி புரட்சிகள் பல புரிந்த புரட்சியாளர் காமராசர் அணைகள் பல கட்டி விவசாயிகளை வளர்த்தவர் பாலங்கள் பல கட்டி மக்களைக் ...

மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jul 2015 09:51 AM PDT

மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! உயிர் மேய்ப்பர்கள் உயிர் மீட்பர்கள் மருத்துவர்கள் ! இரவு பகல் பாராது இன்முகமாய் உழைப்பவர்கள் மருத்துவர்கள் ! கத்தியால் அறுத்தும் காப்பார்கள் மருத்துவர்கள் ! ஊசியால் குத்தியும் காப்பார்கள் மருத்துவர்கள் ! பசி துக்கம் தூக்கம் மறந்து பலரின் உயிர் காப்போர் மருத்துவர்கள் ! செவிலியர் துணையுடன் பல்லுயிர் காப்போர் மருத்துவர்கள் ! வாழ்நாளை நீட்டிக்கும் வித்தைக் கற்றவர்கள் மருத்துவர்கள் ! முடிந்தவரை முயன்று மூச்சை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™