Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கத்தி முனையில் 15 பவுன் நகை கொள்ளை

Posted: 15 Jul 2015 01:20 PM PDT

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கத்தி முன்னையில், 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அருகே பள்ளி மாணவருக்கு டெங்கு காய்ச்சல் ?

Posted: 15 Jul 2015 01:20 PM PDT

கொடைக்கானல் அருகே பள்ளி மாணவருக்கு டெங்கு காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்கார வழக்கு: கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

Posted: 15 Jul 2015 01:19 PM PDT

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கூலித் தொழிலாளிக்கு, திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தீயில் கருகி பெண் சாவு

Posted: 15 Jul 2015 01:19 PM PDT

பழனியருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தார்.

தேமுதிக பேச்சாளருக்கு பிடி ஆணை

Posted: 15 Jul 2015 01:18 PM PDT

தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், தேமுதிக தலைமை நிலைய பேச்சாளர் வளர்பிறை சோழனுக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருசநாடு அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

Posted: 15 Jul 2015 01:17 PM PDT

வருசநாடு அருகே நாய்கள் கடித்து புள்ளி மான் புதன்கிழமை உயிரிழந்தது.

துப்பாக்கியை காட்டி மிரட்டல்: இலங்கை அகதி கைது

Posted: 15 Jul 2015 01:17 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே டீகடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இலங்கை அகதியை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 15 Jul 2015 01:16 PM PDT

திண்டுக்கல்லில் காமராஜரின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, காங்கிரஸ், த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கூடலூரில் சந்தனக் கட்டை கடத்தல்: 2 பேர் கைது

Posted: 15 Jul 2015 01:16 PM PDT

கூடலூரில் சந்தனக் கட்டை கடத்தி வந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா

Posted: 15 Jul 2015 01:15 PM PDT

பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திரு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புதன்கிழமை அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தேனி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 15 Jul 2015 01:15 PM PDT

தேனியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் முதல் போக சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

Posted: 15 Jul 2015 01:14 PM PDT

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் முதல் போக சாகுபடிக்காக புதன்கிழமை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Posted: 15 Jul 2015 01:13 PM PDT

திண்டுக்கல் பேகம்பூர் ஜமாத்தார்கள் சார்பில், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தக்காளிபேட்டையில் எரிக்கப்படும் குப்பைகள்: சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம்

Posted: 15 Jul 2015 01:13 PM PDT

ஆண்டிபட்டி தக்காளிபேட்டையில் கூடைகள், பெட்டிகள் போன்றவை அப்பகுதியிலேயே எரிக்கப்படுவதால், பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஆப்ரேஷன் முஸ்கான் மூலம் 14 நாள்களில் 120 குழந்தைகள் மீட்பு: ரயில்வே எஸ்பி தகவல்

Posted: 15 Jul 2015 01:12 PM PDT

ஆப்ரேஷன் முஸ்கான் திட்டத்தின் மூலம், கடந்த 14 நாள்களில் 120 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தென் மண்டல (திருச்சி) ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆனி விஜயா தெரிவித்தார்.

கொடைக்கானலில் கிராமப் பெண்கள் முன்னேற்ற கருத்தரங்கு

Posted: 15 Jul 2015 01:06 PM PDT

கொடைக்கானலில் கிராமப் பெண்கள் முன்னேற்றம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சரணாகதி அடைந்த கிரீஸ் பிரதமர்

Posted: 15 Jul 2015 01:01 PM PDT

கிரீஸ் நாட்டுக்கும், யூரோ நாணயத்தைப் பொதுவாகப் பயன்படுத்தும் யூரோ கூட்டமைப்புக்கும் இடையே பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில்

மெல்லச் சாகும் கல்வி சார்ந்த அறம்

Posted: 15 Jul 2015 01:00 PM PDT

தமிழ்நாட்டில் உயர் கல்வி, ஆராய்ச்சி ஆகியவை எத்தகைய சீரழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பது குறித்து பத்திரிகைகளில்

விலக வேண்டும் பி.சி.சி.ஐ.!

Posted: 15 Jul 2015 12:59 PM PDT

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் 2 ஆண்டுகளுக்குத் தடை

பழனி மலைக்கோயில் துணை ஆணையருக்கு பதவி உயர்வு

Posted: 15 Jul 2015 12:54 PM PDT

பழனி மலைக்கோயில் துணை ஆணையராக பணியாற்றிய ராஜமாணிக்கம் செவ்வாய்க்கிழமை முதல் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக  பொறுப்பேற்றுக் கொண்டார்.

கழிவு மண் கொட்டுவதை கண்டித்து லாரிகள் சிறை பிடிப்பு

Posted: 15 Jul 2015 12:53 PM PDT

குடியிருப்புப் பகுதியில் உள்ள குளத்தில், கழிவு மண் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர்.

அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Posted: 15 Jul 2015 12:53 PM PDT

போடியில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு  சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் தேசிய சதுரங்கப் போட்டிகள்

Posted: 15 Jul 2015 12:52 PM PDT

புதுச்சேரி சதுரங்கச் சங்கம் சார்பில் 11 வயதுக்கு உள்பட்டோருக்கான 29-வது தேசிய சதுரங்கப் போட்டி

மண்டல அளவிலான ஆணழகன் போட்டி: கோவை மாவட்டம் சாம்பியன்

Posted: 15 Jul 2015 12:52 PM PDT

பழனியில் நடைபெற்ற தமிழக முதல்வர் கோப்பைக்கான ஆணழகன் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை மாவட்டம் கைப்பற்றியது.

எம்.சி.சி., முருகப்பா 89- ஆவது தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி: இன்று தொடக்கம்

Posted: 15 Jul 2015 12:52 PM PDT

எம்.சி.சி. ("மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்'), முருகப்பா 89-ஆவது தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி ஜூலை 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி

ஆண்டிபட்டி அரசு மகளிர் ஐடிஐயில் மாணவிகள் சேர்க்கை

Posted: 15 Jul 2015 12:51 PM PDT

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டம், பொது மற்றும் தனியார் கட்டமைப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராஜ் குந்த்ரா

Posted: 15 Jul 2015 12:49 PM PDT

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டப் புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் செயல்பாடுகளில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளவரும்,

சீன தைபே கிராண்ட் பிரீ பாட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த், சமீர்  2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

Posted: 15 Jul 2015 12:48 PM PDT

தைவானின் தைபே நகரில் நடைபெறும் சீன தைபே கிராண்ட் பிரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் ரத்து: பிசிசிஐ அதிரடி

Posted: 15 Jul 2015 12:47 PM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளுக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் அதனை உடனடியாக ரத்து செய்வதாக

ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது

Posted: 15 Jul 2015 12:45 PM PDT

ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்ததுக்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை என

இந்தியா, ஜப்பானுக்கு நன்மை

Posted: 15 Jul 2015 12:44 PM PDT

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமலாக்கப்பட்டால், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடையால் வர்த்தகரீதியாக பாதிக்கப்பட்டுள்ள

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: அபாயகரமான ஒப்பந்தம்

Posted: 15 Jul 2015 12:43 PM PDT

"ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், அபாயகரமானது' என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள

சீனா: பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இந்தியர் உள்பட 20 வெளிநாட்டவர் கைது

Posted: 15 Jul 2015 12:41 PM PDT

சீனாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இந்தியர் உள்ளிட்ட 20 வெளிநாட்டவர்களை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

Posted: 15 Jul 2015 12:40 PM PDT

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

மண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி

Posted: 15 Jul 2015 12:39 PM PDT

மண் இல்லாமல் பயிர் வளருமா என்று நம்மில் பலரும் கேள்வி எழுப்புவர். ஆனால் மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை

மருந்து கூர்க்கன் - மகத்தான லாபம்!

Posted: 15 Jul 2015 12:38 PM PDT

மூலிகை பயிரை வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம். குறுகிய கால மருந்துப் பயிர்களில் மருந்து கூர்க்கன் அல்லது கூர்க்கன் கிழங்கு

ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை குறையும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Posted: 15 Jul 2015 12:36 PM PDT

""வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறையும். இதனால் இந்தியா பயனடையும்''

ஆசாராம் மீதான பாலியல் வழக்கு: முக்கிய சாட்சிக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: 15 Jul 2015 12:36 PM PDT

சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கில், முக்கிய சாட்சியான அரவிந்த் பஜ்பைக்கு துப்பாக்கி ஏந்திய

நரோடா பாட்டியா கலவர வழக்கு: விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற அமர்வு விலகல்

Posted: 15 Jul 2015 12:35 PM PDT

நரோடா பாட்டியா கலவர வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக குஜராத் உயர் நீதிமன்ற அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.

மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை அறைந்த பெண் யார்? கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

Posted: 15 Jul 2015 12:34 PM PDT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த வெளிநாட்டுப் பெண்ணின் அடையாளத்தை

நக்ஸல்களால் கடத்தப்பட்ட 4 காவலர்கள் கொலை

Posted: 15 Jul 2015 12:33 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை பாரபட்சமாக நடத்துகிறது கேரள அரசு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

Posted: 15 Jul 2015 12:33 PM PDT

கேரளத்தை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்

குஜராத் ரத யாத்திரை: பாதுகாப்பு பணியில் 20,000 போலீஸார்

Posted: 15 Jul 2015 12:32 PM PDT

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள 138-வது ஜெகந்நாதர் ரத யாத்திரையின்போது

ம.பி. தேர்வு வாரிய முறைகேடு; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: காங்கிரஸ்

Posted: 15 Jul 2015 12:31 PM PDT

மத்தியப்பிரதேச தொழில் தேர்வு வாரிய முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரிடம் இருந்து ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன்

வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் சாத்வி பிராச்சி

Posted: 15 Jul 2015 12:30 PM PDT

குற்றம்சாட்டப்படுபவரும், பாஜக எம்.பியுமான சாத்வி பிராச்சி, வெளிநாடு செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

பிகார் தேர்தல்: அதிகாரிகள் ஆய்வு

Posted: 15 Jul 2015 12:29 PM PDT

பிகார் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பண்பலை வானொலி ஏலம்: சன் டிவி குழுமத்தின் விண்ணப்பங்களை நிராகரித்தது மத்திய அரசு

Posted: 15 Jul 2015 12:28 PM PDT

பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க கலாநிதி மாறன் தலைமையிலான சன் தொலைக்காட்சி குழுமத்தின்

நாகர்கோவில்

Posted: 15 Jul 2015 12:28 PM PDT

காயல்பட்டினத்தில் 1,500 ஏழைகளுக்கு அரிசி அளிப்பு

Posted: 15 Jul 2015 12:27 PM PDT

ரமலான் மாதத்தை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில், ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டது.

கல்லூரியில் விளையாட்டு மைதானங்கள் திறப்பு

Posted: 15 Jul 2015 12:27 PM PDT

கோவில்பட்டி சுபா நகரில் உள்ள உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 விளையாட்டு மைதானங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் பேரணி

Posted: 15 Jul 2015 12:26 PM PDT

கோவில்பட்டியில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை பள்ளி மாணவர், மாணவிகளின் பேரணி நடைபெற்றது.

உலகின் மனிதவளம் மிக்க தலைநகராக இந்தியா உருவாக வேண்டும்: பிரதமர் மோடி

Posted: 15 Jul 2015 12:26 PM PDT

""சர்வதேச உற்பத்தித் தொழிற்சாலையாக சீனா உருவாகி இருப்பதைப் போன்று, உலகின் மனித வளம் மிக்க தலைநகராக இந்தியா உருவாக

திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 15 Jul 2015 12:24 PM PDT

திருச்செந்தூரில் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

20இல் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2015 12:24 PM PDT

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இம்மாதம் 20 ஆம் தேதி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்த மாட்டோம்: மம்தா பானர்ஜி

Posted: 15 Jul 2015 12:24 PM PDT

நிலங்களை கட்டாயப்படுத்தி மேற்கு வங்க அரசு கையகப்படுத்தாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 15 Jul 2015 12:23 PM PDT

சாத்தான்குளத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் புதன்கிழமை காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

யாகூப் மேமனுக்கு மாத இறுதியில் தூக்கு?

Posted: 15 Jul 2015 12:23 PM PDT

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு இந்த மாத இறுதியில் தூக்குத் தண்டனை

குரங்கணி கோயில் விழாவில் இருதரப்பினர் மோதல்: 4 பேர் கைது

Posted: 15 Jul 2015 12:22 PM PDT

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் புதன்கிழமை இரவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை ஆழ்வார்திருநகரி போலீஸார் கைது செய்தனர்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 15 Jul 2015 12:22 PM PDT

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அவதூறு சட்டப் பிரிவுகளை நீக்கக் கோரி ராகுல் காந்தி, கேஜரிவால் தரப்பு வாதம்

Posted: 15 Jul 2015 12:22 PM PDT

அவதூறு வழக்கு தொடுக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500 ஆகிய பிரிவுகளை நீக்கக் கோரி

கோவில்பட்டியில் ஸ்ரீ மகா சதசண்டி யாகம்

Posted: 15 Jul 2015 12:21 PM PDT

கோவில்பட்டி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் 3 நாள்கள் ஸ்ரீமகாசத சண்டி யாகம் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் குண்டுவீச்சு: இந்தியப் பெண் பலி

Posted: 15 Jul 2015 12:21 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்தியக் கிராமங்கள் மீது

தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

Posted: 15 Jul 2015 12:21 PM PDT

தூத்துக்குடியில் பள்ளி மாணவர், மாணவிகள் பயன்பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

நிலம் கையக மசோதாவை எதிர்த்து அக்.2-இல் ஹசாரே உண்ணாவிரதம்

Posted: 15 Jul 2015 12:20 PM PDT

மத்திய அரசின் நிலம் கையக மசோதாவை எதிர்த்தும், முன்னாள் ராணுவத்தினரின் "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' தொடர்பான

மத்திய அரசின் உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட பரிசீலனை: வெங்கய்ய நாயுடு

Posted: 15 Jul 2015 12:19 PM PDT

மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது குறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டு சென்று,

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை

Posted: 15 Jul 2015 12:18 PM PDT

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரியில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலை அளிப்பு

Posted: 15 Jul 2015 12:18 PM PDT

ஆறுமுகனேரி காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கப்பட்டன.

கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 15 Jul 2015 12:17 PM PDT

கோவில்பட்டியில் பெருந்தலைவர் காமராஜரின் 113-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அரசுக் கல்லூரிகளில் புதிதாக ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள்: பணி நியமன உத்தரவுகளை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

Posted: 15 Jul 2015 12:17 PM PDT

அரசுக் கல்லூரிகளுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து ஆறு உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை

Posted: 15 Jul 2015 12:17 PM PDT

கோவில் பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீவைகுண்டத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Posted: 15 Jul 2015 12:16 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு செய்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

Posted: 15 Jul 2015 12:16 PM PDT

காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் 27ஆம் நாள் இரவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவில் திரளான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

குமரியில் காமராஜர் பிறந்த தினக் கொண்டாட்டம்

Posted: 15 Jul 2015 12:15 PM PDT

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 113 ஆவது பிறந்த தினத்தையொட்டி, கன்னியாகுமரி காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஐ.டி.ஐ.யில் சேர காலக்கெடு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 15 Jul 2015 12:15 PM PDT

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) நிகழ் கல்வியாண்டில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி இடம்  அமைக்கப்படும் விதம்: அரசு உத்தரவு

Posted: 15 Jul 2015 12:14 PM PDT

பேருந்து நிலையங்கள் - பணிமனைகளில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி இடம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்று

குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம்: பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

Posted: 15 Jul 2015 12:13 PM PDT

கன்னியாகுமரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடதுசாரி ஜனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும்: என்.சங்கரய்யா

Posted: 15 Jul 2015 12:13 PM PDT

வகுப்பு வாத சக்திகளை எதிர்க்க இடதுசாரி ஜனநாய முன்னணியை உருவாக்கும் முயற்சியில் வெற்றிபெற வேண்டும் என,

"ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்'

Posted: 15 Jul 2015 12:12 PM PDT

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

களியக்காவிளையில் திமுக சார்பில் இப்தார் விருந்து

Posted: 15 Jul 2015 12:12 PM PDT

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் களியக்காவிளையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதாணுமாலய மும்மூர்த்தி அந்தாதி நூல் வெளியீடு

Posted: 15 Jul 2015 12:11 PM PDT

குமரி மாவட்ட செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் சுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய மும்மூர்த்தி அந்தாதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி, மயக்கம்

Posted: 15 Jul 2015 12:11 PM PDT

சேலத்தில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவியர் 18 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வேன் கவிழ்ந்து 6 பெண்கள் சாவு; 8 பேர் காயம்

Posted: 15 Jul 2015 12:10 PM PDT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை இரவு பட்டாசு ஆலை வேன் கவிழ்ந்து, தீப்பிடித்ததில் 6 பெண்கள் உயிரிழந்தனர்.

வட்டாட்சியர் பொறுப்பேற்பு

Posted: 15 Jul 2015 12:10 PM PDT

அரக்கோணம் வட்டாட்சியராக எம்.பானுமதி புதன்கிழமை பொறுப்பேற்றார். ஏற்கெனவே இங்கு இருந்த கோ.மோகன் ராணிப்பேட்டை கோட்ட வருவாய் அலுவலரின் நேர்

ரமலான் பண்டிகை: முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி

Posted: 15 Jul 2015 12:09 PM PDT

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி, புத்தாடைகளை ஆற்காடு எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் புதன்கிழமை வழங்கினார்.

மதுரை அருகே குடிசையில் தூங்கிய ஒரே குடும்பத்தினர் 4 பேர் எரித்துக் கொலை

Posted: 15 Jul 2015 12:09 PM PDT

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விவசாயத் தோட்டத்தில் உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச்

பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2015 12:09 PM PDT

நிலச் சீர்த்திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுவதைக் கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சியினர் அரக்கோணத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் அருகே துணிப்பை கடையில் தீ

Posted: 15 Jul 2015 12:09 PM PDT

நாகர்கோவில் அருகே வணிக வளாகத்தில் அமைந்துள்ள துணிப்பை கடையில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஏராளமான துணிப்பைகள் எரிந்து சாம்பலாயின.

115 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 15 Jul 2015 12:09 PM PDT

ஆம்பூர் கலவரத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 132 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் 115 பேரின் ஜாமீன் மனுவை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி

கொல்லங்கோடு: தீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 15 Jul 2015 12:08 PM PDT

கொல்லங்கோடு அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

பெண்ணை தாக்கியதாக இருவர் கைது

Posted: 15 Jul 2015 12:07 PM PDT

பளுகல் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு

Posted: 15 Jul 2015 12:07 PM PDT

தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக எஸ்.கார்மேகம் புதன்கிழமை பொறுப்பேற்றார்.

வள்ளம் கவிழ்ந்து மீனவர் காயம்

Posted: 15 Jul 2015 12:07 PM PDT

கன்னியாகுமரி அருகே கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் காயமடைந்தார்.

குழித்துறை அருகே ஒரே நாளில் 4 வீடுகளில் திருடர்கள் கைவரிசை

Posted: 15 Jul 2015 12:06 PM PDT

குழித்துறை அருகே ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதில், இரு வீடுகளில் மட்டும் 14 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

டிராக்டரை விடுவிக்க ரூ.20,000 லஞ்சம்: விஏஓ கைது

Posted: 15 Jul 2015 12:06 PM PDT

ராணிப்பேட்டை அருகே டிராக்டரை விடுவிக்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted: 15 Jul 2015 12:06 PM PDT

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு இயக்கங்கள் சார்பில் வேலூரில் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

Posted: 15 Jul 2015 12:06 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.

நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு புதிய உத்தரவு

Posted: 15 Jul 2015 12:05 PM PDT

நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தக்கலை வட்டாரப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள்

Posted: 15 Jul 2015 12:05 PM PDT

தக்கலை பகுதிகளில் அரசு, தனியார் பள்ளிகளில் காமராஜரின்  பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலப் பணிகள் நிறைவேற்றம்

Posted: 15 Jul 2015 12:05 PM PDT

திமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்களுக்கான எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டன என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்

குமரன்குடி பகுதியில் ஜூலை 16 மின்தடை

Posted: 15 Jul 2015 12:04 PM PDT

திருவட்டாறு பகுதியில் மின் பராமரிப்பு காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 16) மின் தடை செய்யப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™