Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விமானம் தேடும் பணி நிறைவடைந்தது கடலில் மனித எலும்புகள் கிடைத்தன

Posted:

சென்னை ''கடலில் விழுந்த, 'டார்னியர்' ரக விமானம், வெடித்துச் சிதறி இருக்கலாம்; அது விழுந்த இடத்தில் நடந்து வந்த, 'ஆபரேஷன் தலாஷ்' என்ற, தேடுதல் பணியில், சில மனித எலும்புகள் கிடைத்துள்ளன. தேடுதல் பணி நிறைவடைந்தது,'' என, கடலோர காவல்படை (கிழக்கு பிராந்தியம்) ஐ.ஜி., - எஸ்.பி.சர்மா கூறினார்.சென்னையில் நேற்று அவர் கூறியதாவது:'டார்னியர்' ரக விமானம், கடைசியாக பிச்சாவரம் அருகே, 10 ஆயிரம் அடி உயரத்தில், பறந்து கொண்டு இருந்தது. அது, திடீரென, 5,000 அடி உயரத்துக்கு, தாழ்வாக பறந்துள்ளது தெரிய வந்துள்ளது.அதனால், அது வெடித்து சிதறி இருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தின், 90 சதவீத ...

சென்னை, ராஜஸ்தான் அணிகள் ."அவுட்': 2 ஆண்டுகள் பங்கேற்க சுப்ரீம் கோர்ட் தடை

Posted:

புதுடில்லி: ஐ.பி.எல்., என அழைக்கப்படும், பிரீமியர் கிரிக்கெட் தொடரில் அரங்கேறிய சூதாட்டம் உறுதியானது. இது தொடர்பான தீர்ப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. சென்னை அணியின் உரிமையாளரான, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகன், குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான, ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு, ஆயுள் கால தடை விதிக்கப்பட்டது.கடந்த, 2008ல், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில், உள்ளூர் பிரீமியர், 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் ...

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா?

Posted:

பிரீமியர் தொடரில் வெற்றிகரமான அணி சென்னை. 2010, 2011ல், சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, 2008, 2012, 2013, 2015ல், பைனலுக்கு முன்னேறியது. இதேபோல, 2008ல் கோப்பை வென்றது ராஜஸ்தான். இந்த அணிகள் இல்லாமல், 2016 பிரீமியர் தொடர் நடக்குமா என, சந்தேகமாக உள்ளது. அப்படியே நடந்தாலும், தொடருக்கு போதிய வரவேற்பு இருக்காது.ஏனெனில், ஆறு அணிகள் பங்கேற்கும் பட்சத்தில், போட்டி எண்ணிக்கை குறையும். மற்ற அணி உரிமையாளர்கள், 'டிவி' ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு வருமானம் குறையும் என்பதால் இதை ஏற்க மாட்டார்கள்.இதனால், கூடுதலாக இரு அணிகளை சேர்க்க, பி.சி.சி.ஐ., முன் வரும் என தெரிகிறது. இதற்கான விலை, 633 கோடி ரூபாயாக ...

அரசியலில் எதிரும் புதிரும்: வழக்கில் மட்டும் ஒற்றுமை

Posted:

புதுடில்லி: அரசியலில் எதிரெதிர் கருத்துகளை கொண்டிருந்தாலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன்சாமியும், 'இந்திய தண்டனைச் சட்டம், 499 மற்றும் 500 ஆகிய இரு பிரிவுகளை நீக்க வேண்டும்' என்பதில் ஒற்றுமையாக உள்ளனர்.சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் இருவரும் நேற்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், 'அரசியலில், பொது மேடையில், பிரசார கூட்டங்களில் பேசியதற்கு எல்லாம், கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து, தண்டனைக்கு உள்ளாக்குவது சரியல்ல. அத்தகைய நடைமுறை, பேச்சுரிமைக்கு எதிரானது' என, ஒரே குரலில் ...

'10 ரூபாய் கொடுங்க ப்ளீஸ்...!'

Posted:

புதுடில்லி: ''கட்சி நடத்த பணம் இல்லை; அதனால், மக்கள் அனைவரும், தலா, 10 ரூபாய் நன்கொடை கொடுக்க வேண்டும்,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 'ஊழலை முற்றிலும் ஒழிப்போம்; அரசு இயந்திரத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுப்போம்' என்ற கோஷத்துடன் ஆட்சியில் அமர்ந்த ஆம் ஆத்மி அரசு, ஆரம்பத்திலேயே சறுக்கியது. பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் போன்ற மூத்த தலைவர்களை, அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியில் இருந்து நீக்கினார்; மின் கட்டணத்தை ...

பழிவாங்குவது அழகல்ல சார்!

Posted:

லக்னோ : சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு எதிராக புகார் அளித்த, போலீஸ் அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதற்கு, எதிர்க்கட்சி கள் கண்டனம் தெரிவித்து உள்ளன. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் தலைவரும், முதல்வரின் தந்தையுமான, முலாயம் சிங் யாதவ் மீது, அமிதாப் தாகூர் என்ற போலீஸ் அதிகாரி, சமீபத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துஇருந்தார். அதில், உ.பி., அமைச்சர் ஒருவருக்கு எதிரான, ஊழல் வழக்கு விசாரணையை கைவிடாவிட்டால், கடும் விளைவு களை சந்திக்க நேரிடும் என, முலாயம் சிங், தன்னை மிரட்டியதாக தெரிவித்திருந்தார். ...

கோதாவரி நதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலி

Posted:

ராஜமுந்திரி: ஆந்திராவின் ராஜமுந்திரி நகரின், கோதாவரி நதியில், கோட்டகும்மம் புஷ்கரகாட்டில் நேற்று விமரிசையாக துவங்கிய, 'மகாபுஷ்கரம்' எனப்படும், புனித நீராடல் சடங்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடிய நிலையில், திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 13 பெண்கள் உட்பட, 29 பேர் இறந்தனர். இதனால், அந்த நிகழ்ச்சியில் சோகம் ஏற்பட்டது.தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திராவின் ராஜமுந்திரி நகரில், மகாபுஷ்கரத்திற்கான ஏற்பாடுகள், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவே, பல தடவை, ராஜமுந்திரி ...

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா!

Posted:

சென்னை: பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், 87, சென்னை மருத்துவமனையில், நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரையுலகத்தினர் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்; இறுதி சடங்கு இன்று நடக்கிறது.தமிழ் திரைப்பட வரலாற்றில், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திய, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன், வயோதிக பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் சளித் தொந்தரவால், ஜூன், 14ம் தேதி, சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ...

பா.ஜ., ராஜா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; பின்னணியில் 'பகீர்'

Posted:

காரைக்குடி: பா.ஜ., தேசிய செயலர் ராஜா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதன் பின்னணியில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சுப்ரமணியபுரம், 9வது தெருவில், எச்.ராஜா வீடு உள்ளது. அவருக்கு, ஏற்கனவே அச்சுறுத்தல் இருப்பதால், வீட்டிற்கு, 24 மணிநேரமும், 'ஷிப்ட்' முறையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராஜா, சென்னையில் வசிப்பதால், அவரது தம்பி பாஸ்கர் குடும்பத்தினர், காரைக்குடி வீட்டில் வசிக்கின்றனர்.

பெரும் பரபரப்பு:
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, டூ - வீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள், வீட்டின் ...

டி.ஆர்.பி., பெயரில் வசூல் வேட்டை

Posted:

அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ?,??? பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பி., பெயரால், இடைத்தரகர்கள் வசூலில் இறங்கியுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.கடந்த, 2012 நிலவரப்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த, உதவிப் பேராசிரியர் பணிக்கு, 1,093 பேரை நியமிக்க, 2013ல் டி.ஆர்.பி., சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வானோரின் முடிவுகள், கடந்த ஏப்ரலில் வெளியாயின. ஆனால், பணி நியமன ஆணை வழங்குவது தொடர்ந்து தாமதமாகிறது. இதனால், உதவிப் பேராசிரியராக தேர்வானோர், கடந்த வாரம், ...

'அரசின் மது கொள்கையில் தலையிட முடியாது'

Posted:

சென்னை : 'டாஸ்மாக்'குகள் மற்றும் பார்களில், மதுபானங்கள் விற்க வகை செய்யும் விதிகளை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.இந்திய மக்கள் மன்றத் தின் நிறுவன தலைவர் வாராகி, தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள், 2003ல் கொண்டு வரப்பட்டன. இந்த விதிகளால், ஆதிதிராவிட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த விதிகள், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை; சட்டவிரோதமானவை. எனவே, விதிகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ...

ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கொடூரம்

Posted:

பாக்தாத்: ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தினர், சிரியா, ஈராக் நாடுகளின் பகுதி களை ஆக்கிரமித்து, அங்குள்ள பிற பிரிவினரை கொன்று குவித்து வருகின்றனர். தங்களிடம் சிக்கிய ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைகளை வெட்டுவது வழக்கம்.இந்நிலையில் ஈராக்கின் தியாலா மாகாண பாதுகாப்பு கமிட்டி தலைவர், சாதிக் எல் - உசேனி, நேற்று கூறியதாவது:ஐ.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்தவரை கொன்ற நபரை, கடந்த வாரம், பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். சில நாட்களுக்கு முன், அந்த நபரின் குழந்தையை, வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான பயிற்சிக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர். அந்த குழந்தையைச் சுற்றி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™