Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஹெல்மெட் இல்லாமல் பிடிபட்டவர்கள் 1.40 லட்சம் பேர்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்: முழு அளவில் அமலாகாததால் நீதிபதி கடும் வேதனை

Posted:

சென்னை : 'தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகனங்களில், 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற, 1.44 லட்சம் பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 'விபத்துக்கள் அதிகரிக்கும் போது, 'ஹெல்மெட்' அணியாமல் செல்வதை, வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது' என, நீதிபதி கிருபாகரன் கடும் வேதனையுடன் கூறினார்.

'இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்களை முடக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த மாதம் உத்தரவிட்டது. அதைத் ...

பாகிஸ்தானிலிருந்து வெளியே வந்திடிச்சு 'பூனைக்குட்டி': காஷ்மீர் மீது தான் ஒட்டுமொத்த குறியும்: இந்தியாவுடன் பேச முடியாது என 'அந்தர் பல்டி!'

Posted:

இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு குறித்த விசாரணையை விரைவுபடுத்துவதாக அறிவித்த பாக்., அரசு, நான்கே நாட்களில், தன் நிலையை மாற்றி, 'காஷ்மீர் பிரச்னையை ஒதுக்கி விட்டு, இந்தியாவுடன் எந்த பேச்சும் நடத்த முடியாது' என, பல்டி அடித்துள்ளது. கடந்த வாரம், ரஷ்யாவின், உபா நகரில் நடந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியும், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்தனர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து, இருவரும் விரிவாக பேச்சு நடத்தினர்.

விசாரணை:
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகள், ...

சம்பளம், படிகள் ரொம்ப 'கம்மியாம்': 2 மடங்காக்க எம்.பி.,க்கள் கோரிக்கை

Posted:

புதுடில்லி : பிற காமன்வெல்த் நாடுகளில் இருப்பதை விட, தங்களுக்கு மிக குறைவான சம்பளம் தரப்படுவதாக, எம்.பி.,க்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

ஒருமனதாக...
இதுகுறித்து, பார்லி., வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:எம்.பி.,க்கள் சம்பளம் தொடர்பாக அமைக்கப்பட்ட, பார்லி., குழுவில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள், நேற்றைய கூட்டத்தின் போது, சம்பளத்தை இரு மடங்காக உயர்த்துவது; படிகளை உயர்த்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகள் விஷயத்தில், ஒருமனதாக ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவ்விஷயம் தொடர்பாக, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் பேச ...

'கேரளாவுடன் இன்னும் பேசலயே நீங்க...?'

Posted:

'ஆய்வறிக்கை தயார் நிலையில் உள்ளதால், பம்பா-, அச்சன் கோவில்-, வைப்பாறு இணைப்புத் திட்டத்தை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து, கேரள அரசுடன் பேச்சு நடத்தி உரிய முறையில் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு முன்வர வேண்டும்' என, தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து, அனைத்து மாநிலங்களின் பொதுப்பணித் துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:நதிநீர் இணைப்பு குறித்து நடைபெற்ற, முதல் ஆலோசனைக் ...

கொட்டை பாக்கு விலையை பதிலாக கூறுவதா? அமைச்சருக்கு கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை : 'மின் வாரியத்தின் மெகா ஊழல் புகாருக்கு பதிலளிக்காமல், கொட்டை பாக்கின் விலையை, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலாக கூறுவதா' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:மின் வாரியத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மெகா ஊழல் நடந்திருப்பதாக, அந்த வாரியத்தில், பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு அலுவலர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியிருக்கிறது.அந்த குற்றச்சாட்டுகளுக்கு, முதல்வர், மக்கள் மன்றத்தின் முன் விளக்கம் அளிக்க முன்வருவது தான் முறை என, குறிப்பிட்டிருந்தேன்.மின் வாரிய மெகா ஊழல் ...

கவர்னரிடம் காங்., - பா.ம.க., கொடுத்த மனு எங்கே?

Posted:

தமிழகத்தில், அரசு துறைகள் பலவற்றில் ஊழல் நடந்துள்ளதாகவும், அவற்றை விசாரிக்க வலியுறுத்தியும், காங்., மற்றும் பா.ம.க., சார்பில், கவர்னரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளதாக, கவர்னர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.ஆனால், 'அதுபோன்ற மனுக்கள் எதுவும் வரவில்லை' என, அரசு சார்பு செயலர் கூறியுள்ளார். அதனால், மனுக்கள் எங்கே போனது என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், மின் துறை, உயர்கல்வித் துறை, ஆவின், நெடுஞ்சாலைத் துறை, கனிமவளத் துறை உட்பட, 25 துறைகளில், ஊழல் நடந்திருப்பதாக, காங்., குற்றம் சாட்டியது. இதுதொடர்பான ஆதாரங்களை ...

'ரப்பர் ஸ்டாம்ப்'பாக இருக்க மாட்டேன்! விஜயகாந்த்,

Posted:

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறுகையில், சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஐந்து மாதங்கள் ஆகின்றன. ஆனாலும், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடக்கவில்லை. இதுகுறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றன. அதைப் பற்றி எல்லாம், ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படுவதில்லை.தாங்கள் நினைக்கும்போது, சபையை கூட்டுவதும், விவாதிப்பதுமாக உள்ளனர். இது தான், ஜனநாயக நடைமுறையை, அவர்கள் பின்பற்றும் பாங்கு.தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் நானே. ஆனாலும், நான் ஒரு, 'ரப்பர் ஸ்டாம்ப்'பாக இருக்க வேண்டும் என, ஆளும் கட்சியினர் ...

குண்டு எறியும் வீரர் மோடி மீது 'குண்டு': பதக்கங்கள் இருக்கின்றன; பைசா இல்லை!

Posted:

சென்னை: ''கடந்த, 36 நாட்களில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று விட்டேன். ஆனால், அரசு எனக்கு, ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இவ்வளவு ஏன்... சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற பின், குறைந்த பட்சம் ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை,'' என, குண்டு எறிதல் வீரர் இந்திரஜித், மத்திய அரசை, கடுமையாக விமர்சித்துள்ளார்.அரியானாவைச் சேர்ந்த இந்திரஜித், சென்னையில் நடந்த, மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில், குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்று, புதிய சாதனை படைத்தார். இது, இந்த ஆண்டு அவர் வெல்லும் எட்டாவது தங்கப் பதக்கம். இதன் மூலம், பிரேசில் தலைநகர், ...

தேனியில் ரூ.பல கோடி மணல் மோசடி

Posted:

தேனி : தேனி மாவட்டத்தில் நடைபெறும் அரசு கட்டுமான பணிகளுக்கு உள்ளூரில் உள்ள நீர்நிலைகளில் இருந்து அனுமதியின்றி, மணல் எடுத்து விட்டு திருச்சியில் இருந்து வாங்கியதாக பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மணல் குவாரிகள் செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகள் சார்பாக பல நுாறு கோடி ரூபாய்க்கு மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடந்துள்ளன. தேனி மாவட்டத்திற்குள் எங்குமே மணல் குவாரிகள் செயல்படாததால், திருச்சியில் இருந்து காவிரி மணல் கொண்டு வருவதற்கு தகுந்தபடி பணிகளுக்கான ...

ஹெலிகாப்டரிலிருந்து தாக்கும் 'ஹெலினா' ஏவுகணை வெற்றி

Posted:

ஜோத்பூர் : இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, 7 கி.மீ., துாரம் பாய்ந்து இலக்கை அழிக்கவல்ல ஏவுகணை, முதல் முறையாக, ஹெலிகாப்டரிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.இதுகுறித்து, பாதுகாப்பு துறை வட்டாரங் கள், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கவச வாகனங்களை தாக்கி அழிக்கவல்ல, 'நாக்' ஏவுகணையின் புது வடிவமான, 'ஹெலினா,' டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, ஹெலிகாப்டரிலிருந்து ஏவ முடியும்; 7 கி.மீ., துாரம் வரை பாய்ந்து சென்று இலக்கை அழிக்கும். ஏழு கி.மீ., ...

முலாயம் மீது புகார் கூறிய ஐ.பி.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட்

Posted:

புதுடில்லி: உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் கோபத்துக்கு ஆளானதால், பாலியல் பலாத்கார வழக்கு போடப்பட்ட, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி அமிதாப் தாக்கூர், தன் மீதான புகார் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், பணியில் இருந்து தவறியதற்காக அமிதாப் தாக்கூரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.உ.பி., மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் ஐ.ஜி., அந்தஸ்து பெற்ற போலீஸ் அதிகாரி, அமிதாப் தாக்கூர். சமூக சேவகரான, இவரது மனைவி நுாதன் தாக்கூர், மாநில ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™