ஈகரை தமிழ் களஞ்சியம் |
- குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு
- நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா
- நவீன விக்கிரமாதித்தன்
- புது சாதனை படைத்த மினியன்ஸ்!
- ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க
- பிங்க் மேப் - Bing Maps
- 1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்
- தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
- முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
- பாகுபலி - விமர்சனம் | செய்திகள்
- ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை
- முகநூல் தத்துவங்கள்!
- சமூக வலைத்தளச் செயலிகள் (Social Networking Apps)
- ரமணியின் கவிதைகள்
- இரக்கம் இல்லாதவள்
- கின்னஸ் கிழவி
- சிறந்த கவிதைகள்!!!
- மேஜிக் டம்ளர்!
- அரிய புத்தங்கள்
- வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!
- பில்லா , ரங்கா
- வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!
- வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்
- சிறு குடும்ப நெறி பேணுவோம்!
- என்னவாகும் விண்டோஸ் 7? மற்றும் விண்டோஸ் 8?
- பெருசு
- நடிகர் நாகேஷ் பேட்டி - ஆஸ்திரேலியா வானொலி
- பதினாறாம் நாள்...!! -Mano Red
- விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை!
- 30 வகை குழம்பு
- சம்மதம்
- செயலில் இறங்கு, திறமை வழங்கு – ஓவியக் கவிஞர் அமுதபாரதி
- பெரியோர்களே... தாய்மார்களே !
- போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்
- மரவெட்டியின் வேண்டுதல்
- பாபாவின் பல ரூபங்கள், பல சக்திகள்!
- டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..!
- பரீட்சை - சிறுகதை
- சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?
- கருத்துச் சித்திரம்
- தேசியச் செய்திகள்
- 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகா கோதாவரி புஷ்கரம்: நாளை தொடங்குகிறது
- லாரிக்கு பின்னால் 'டிவி' சாலை பாதுகாப்புக்காம்!
- கண் நீர்அழுத்த நோய் வருவது ஏன்? - Glaucoma
- காதல் vs நட்பு
| குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Posted: 13 Jul 2015 03:39 PM PDT - சென்னை : இன்று நடைபெறும் குருபெயர்ச்சியால் முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிற்கு பிரச்னைகள் ஏற்படும் எனவும், திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குருப்பெயர்ச்சி : எண் கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் ஆயில்ய நட்சத்திரம் கடக ராசியில் இருந்து மகம் நட்சத்திரம் சிம்மராசிக்கு இன்று இரவு பெயர்ச்சி அடைகிறார். ஓராண்டு காலம் நீடிக்கும் குருவால் அரசு மற்றம் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் எனவும், புதிய கூட்டணிகளால் மக்களுக்கு ... |
| நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா Posted: 13 Jul 2015 03:38 PM PDT -- நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக நயன்தாரா கூறினார்.வித்தியாசமான வேடங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டுகிறார். - ஏற்கனவே தெலுங்கில் தயாரான 'ஸ்ரீராமராஜ்ஜியம்' படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்தார். 'பில்லா' படத்தில் அதிரடி வேடத்தில் சண்டை போட்டார். - 'அனாமிகா'வில் தீவிரவாதிகள் தொடர்பில் இருக்கும் கணவனை கொலை செய்பவராக தோன்றினார். தற்போது 'மாயா' என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதில் பேய் பிடித்த பெண்ணாக வருகிறார். - 'நானும் ரவுடிதான்' என்ற படத்திலும் நடிக்கிறார். ... |
| Posted: 13 Jul 2015 03:35 PM PDT தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் , மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி , வேதாளத்தை இறக்கித் தன் தோளில் சுமந்துகொண்டு மயானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். வேதாளம், ஹஹ்ஹா! ஹஹ்ஹா! என்று பலமாகச் சிரித்து ," விக்கிரமா! உன் தளராத முயற்சியைப் பாராட்டுகிறேன்; உனக்கு வழிநடைக் களைப்புத் தெரியாமல் இருக்கக் கதையொன்று சொல்கிறேன்; நன்றாக் கவனித்துக் கேட்பாயாக! கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன்; அதற்கு சரியான பதில் கூறாவிட்டால் , உன் தலை வெடித்து சுக்கு நூறாகச் சிதறிவிடும் !" ... |
| Posted: 13 Jul 2015 02:00 PM PDT ஹாலிவுட் அனிமேஷன் ரசிகர்களின் லிஸ்டில் எப்போதும் இந்த மினியன்களுக்கு தனி இடம் உண்டு. சமீபகாலமாக முகநூல், ட்விட்டர், வாட்ஸப் என பலரும் தங்களது புரொஃபைல் போட்டோக்களாக மினியன்களை பயன் படுத்தத் துவங்கிவிட்டனர்.மேலும் பலரது ரிங் டோன் இந்த மினியன்களின் பானானா பாடல் தான். இந்நிலையில் இந்த மினியன் கேரக்டர்கள் முதல் முதலில் பியர் கோஃபின், இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த 'டிஸ்பிகபிள் மி 1 மற்றும் 2 படங்களின் மூலம் குணச்சித்திர ரோலில் அறிமுகப்படுத்தப்பட்டன. மஞ்சள் வண்ணத்தில் வழைப்பழம் போல் உருவாக்கப்பட்டுள்ள ... |
| ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க Posted: 13 Jul 2015 11:15 AM PDT காதலர்களின் பெயர்களின் வரிசையில் மிகச் சிறந்த இடம் என்றுமே ரோமியோ மற்றும் ஜூலியட்டிற்கு இவ்வுலகினில் உண்டு.இது மொழிபெயர்ப்பு நூல் எனினும் இந்நூலினை படிக்கையில் தமிழ் மொழிக்கே உரித்தான அழகு தமிழில், எளிமையான வார்த்தைகளில் அமுதுதமிழ்ச் சுவை பொங்க பகிர்கிறார், இந்நூலினை அளித்த தாந்தோன்றிக் கவிராயர். இக்கதையில் வரும் நிகழ்வானது, நமது தேசத்திற்கு வெளிய நடக்கும் நிகழ்வினைக் கொண்டது எனினும் இந்நூலினை படிக்கையில் கொஞ்சி விளையாடும் தமிழால் ஒரு வேளை இங்குதான் நடந்தேறி இருக்குமோ என்று நினைக்க வைக்கிறார், ... |
| Posted: 13 Jul 2015 10:56 AM PDT மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடுபொறி தளமான 'பிங்' தேடுதளத்தில் தற்போது மேப் வசதி சேர்க்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இது பரிசோதனைக்கு விடப்பட்டு உள்ளது. இதில் உள்ள பல வசதிகள் கூகுள் மேப்பை போன்றதுதான். அதில் இருந்து வேறுபடும் விதமாக நாம் தேடுவதற்கு தொடர்புடைய, நிறுவனங்கள், விடுதிகள் ஆகியவற்றின் முகவரியும் திரையில் காட்டப்படுகிறது. இன்னும் சில சின்னச்சின்ன மாற்றங்களும் இதில் காணப்படுகின்றன. கூகுள் மேப் வழங்கும் வசதிகளுக்கு எதிராக இது பிரபலம் அடையுமா? என்பதை ... |
| 1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில் Posted: 13 Jul 2015 10:43 AM PDT 1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில் போக்குவரத்து சோதனை திட்டம் அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது. புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என்று சுரங்கப் பாதையிலும், ஆகாயத்திலுமாக உலக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஜப்பானிலும், சீனாவிலும் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் ராட்சத குழாய்களுக்குள் இப்போதுள்ளதைவிட பல மடங்கு வேகத்தில் ரெயில்கள் பயணிக்கும். ஏற்கனவே பல்வேறு அதிவேக பயணத் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி ... |
| தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Posted: 13 Jul 2015 10:32 AM PDT சென்னை : தேசிய அரசியலில் சோனியா, லாலு, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இப்தார் விருந்து கொடுப்பதாக கூறி, ஆளுங்கட்சி நீங்களாக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி அரசியல் நடத்தி வருகின்றனர். இதே போன்று தமிழகத்திலும் இப்தார் விருந்தில் கலந்து கொள்வதாக கூறி தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. கூட்டணிக்கு அச்சாரம் போடுவதற்காகவும் சிலர் இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் திமுக சார்பில் ... |
| முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து Posted: 13 Jul 2015 10:18 AM PDT சென்னை: முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் அனைத்தும், திடீரென ரத்து செய்யப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, கடந்த 4ம் தேதி பதவியேற்றார். அதன்பின், தலைமை செயலகம் வரவில்லை. இன்று அவர், தலைமை செயலகம் வருவார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதனால், தலைமை செயலகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா மற்றும் உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி பேராசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கேற்ற வகையில், முதல்வரை ... |
| பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Posted: 13 Jul 2015 10:13 AM PDT நாம் பார்த்து ரசித்த மன்னர்கதைகளின் புதியவடிவமாய் வந்திருக்கிறது பாகுபலி. இதற்குமுன் பார்த்த படங்களை விடப் பிரமாண்டமாகவே இருக்கிறது என்பதுதான் இதன்பலம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் சகோதர யுத்தத்தின் காரணமாக அரண்மனையை விட்டு காட்டுக்குள் வந்துவிட்ட பிரபாஸ் மீண்டும் அரண்மனைக்குச் சென்றவுடன் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைத்தான் நெஞ்சம் அதிரச் சொல்லியிருக்கிறார்கள். தொடக்கத்திலேயே மிகப்பெரிய அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் காட்சியிலேயே ... |
| ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை Posted: 13 Jul 2015 09:54 AM PDT ஹெல்மெட் நிறுவனங்களிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி வருத்தம் தருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வகை செய்யும் அரசு உத்தரவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவில் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவிட்டமாகக் கூறினார். ஹெல்மெட் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியில் இருந்து 5 கோடி வரை பணம் பெற்றதாக செய்தி வந்துள்ளது என்றும், ஹெல்மெட் நிறுவனங்களிடம் ... |
| Posted: 13 Jul 2015 09:51 AM PDT ![]() |
| சமூக வலைத்தளச் செயலிகள் (Social Networking Apps) Posted: 13 Jul 2015 09:45 AM PDT சாதி, மதம், இனம், நாடு, மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் ஆகிய பாகுபாடுகள் எதுவுமின்றி மனித சமூகத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொண்டு தம் கருத்துகளை முன்வைக்க வாய்ப்புத் தரும் களமே, இணையத்தில் நிலவும் சமூக வலைத்தளம் ஆகும். நாட்டு எல்லைகளைக் கடந்து நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும். கருத்துகளை மட்டுமின்றிப் படங்கள், பாடல்கள், நிகழ்படங்கள் (வீடியோக்கள்) ஆகியவற்றையும் நண்பர்களுடன் மட்டுமின்றி உலகத்தார் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முடியும். ஒத்த கருத்துகள் கொண்ட குழுக்களை அமைத்துக்கொள்ள ... |
| Posted: 13 Jul 2015 09:02 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 13 Jul 2015 08:45 AM PDT அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பாட்டி சொன்ன சொல்லால் என்னைப்பெற்ற தெய்வங்களுக்கு என்நெஞ்சில் ஐம்பது விழுக்காடு ஒதுக்கிவைத்தேன். உடன்பிறந்த ரத்தத்தின் ரத்தங்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் முப்பது விழுக்காடு முடக்கி வைத்தேன். எழுத்தறிவித்த ஆசான்களுக்கும் என் கெழுதகை நண்பர்களுக்கும் பத்து விழுக்காடு பரப்பி வைத்தேன். நான் உய்யும் பொருட்டு உணவு அளிக்கின்ற செய்யும் தொழிலுக்கு ஒன்பது விழுக்காடு ஒதுக்கி வைத்தேன். நேற்றைய தினம் உன்னைக்கண்டு நெஞ்சம் பறிகொடுத்தேன் மீதமிருந்த ... |
| Posted: 13 Jul 2015 08:13 AM PDT கிழவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.இப்பவோ,அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்தது.கிழவியின் பேரன் மாடசாமி, கிழவியின் தலைமாட்டில் கவலையுடன் உட்கார்ந்திருந்தான்.வீட்டின் முன்பாகக் கூட்டம் கூடியிருந்தது. ஊர்ப்பெரியவர்கள் மாடசாமியிடம்,"தம்பி சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடு.இன்னிக்கு ராவுக்குக்கூடத் தாங்காது."-என்று சொன்னார்கள். வைத்தியர் வந்து பார்த்தார்."பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு,நம்ப முடியாது.ஆகவேண்டியதைக் கவனிங்க"-என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஊர்மக்கள்,ஆண்களும், பெண்களுமாக ... |
| Posted: 13 Jul 2015 07:34 AM PDT பிரிந்த நட்புகள் சேராவிட்டாலும், பதிந்த நினைவுகள் ஒரு போதும் இதயத்தில் இருந்து அழிவதில்லை. -------------------------------------------------------------------- நீ விரும்பும் இதயம் உன்னை தவிக்க விட்டு சென்றபோது தான், நீ தவிக்க விட்ட என் இதயத்தின் வலி உனக்கு புரிந்ததாடா? --------------------------------------------------------------------- முகத்தில் சோகமில்லை, கண்களில் கண்ணீரில்லை. ஆனால், இதயம் மட்டும் தனிமையில் பேசி கொண்டே இருக்கிறது ------------------------------------------------------------------- மெழுகாய் ... |
| Posted: 13 Jul 2015 07:24 AM PDT இந்த மேஜிக்கிற்கு தேவையான பொருட்கள்: கண்ணாடி டம்ளர் ஒன்று, தண்ணீர் -ஒரு டம்ளர், ஒரு சிறிய கிண்ணத்தில் சோப்பு தண்ணீர். மேஜிக் செய்யும் முறை: 1. ஒரு கப் தண்ணீரில் சோப்பு கரைசலை கலக்கவும். இப்போது சோப்பு கரைசலைத் தொட்டு ஏதேனும் ஜோக் அல்லது வார்த்தைகளை கண்ணாடி டம்ளரில் எழுதுங்கள். 2. இப்போது டம்ளரை 15 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும். 3.இப்போது உங்கள் நண்பனுக்கு (அ) பார்வையாளர்களுக்கு அந்த டம்ளரில் தண்ணீர் கொடுங்கள். சிறிது நேரத்தில் குளிர் குறைய குறைய நீங்கள் எழுதிய ஜோக் அல்லது வாசகம் ... |
| Posted: 13 Jul 2015 07:09 AM PDT இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும் http://korakkar-sankar.blogspot.co.uk/2015/06/blog-post.html என்றும் அன்புடன் ஜெ.செந்தில்குமார் |
| வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! Posted: 13 Jul 2015 07:06 AM PDT திருச்சி: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று, வாடிக்கையாளர் பதிவு செய்த பொருளுக்கு பதிலாக வெற்று பார்சலை அனுப்பி வைத்த சம்பவம், திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன் லைன் வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கி றது. கிளிக் செய்தால் போதும் அடுத்த சில நாட்களில் வீடுதேடி பொருள் வரும். அலைச்சல் இல்லை என்பதும், வீட்டுக்கே பொருள் வரும் என்பதுதான் பிளஸ். பிலிப்கார்ட் இந்தியா, ஸ்நாப் டீல், அமேசான், ஆஸ்க் மி பசார், அமேசான், ஜாஸ்பர் இன்போடெக், செரியன் ரீடெய்ல் என விதவிதமான ... |
| Posted: 13 Jul 2015 06:57 AM PDT பக்கத்து ஊரில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரமசிவ முதலியார் கிளம்பினார். தன் வீட்டில் வேலை செய்யும் பில்லா, ரங்கா ஆகிய இரண்டு வேலையாட்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டார். முதலியார் ,வீட்டைப் பூட்டும் சமயத்தில் ரங்கா , முதலியாரைப் பார்த்து," ஐயா ! செல்போன், ATM கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டீர்களா? சமயத்தில் உதவும்; கையோடு குடையையும் எடுத்துக் கொள்ளுங்கள் ! மழை வரும்போல இருக்கிறது." என்று சொன்னான். " சரியாகச் சொன்னாய் ரங்கா!" என்று சொல்லிவிட்டு , முதலியார் வீட்டினுள் சென்று ... |
| வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! Posted: 13 Jul 2015 06:48 AM PDT - - மேரேஜூக்கு அப்புறமும் பிசியாக இருக்கிறார் அமலாபால். ஹைக்கூவில் அம்மா கேரக்டர். அட் த சேம் டைம் கேரளாவில் ப்ளஸ் டூ பொண்ணு. விதவிதமான கேரக்டரில் வகுந்தெடுக்கும் அவரை ஷூட்டில் இருந்து கொஞ்சம் மீட்டெடுத்தோம். - பொதுவா கல்யாண வாழ்க்கையை கொஞ்ச நாளைக்கு அனுபவிப்போம் என ஒருசிலர் நடிக்க பிரேக் விடுவார்கள். நீங்க....? - வெயிட்.. வெயிட்.. நான் கல்யாணமான உடனேயே ஷூட்டிங் கிளம்பிடல. நானும் விஜய்யும் வேண்டிய அளவுக்க லைஃபை என்ஜாய் பண்ணி முடிச்சுட்டுதான் நடிக்கலாம்னு போனேன். ... |
| வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Posted: 13 Jul 2015 06:40 AM PDT "ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?" என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை. "அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்" என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன். இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், ... |
| Posted: 13 Jul 2015 06:36 AM PDT பிள்ளைகள் பல பெற்ற பெண்ணை மக்களைப் பெற்ற மகராசியென்றார்! மகராசி என்றால் வளம் பெற்றவளே பல குழந்தை பெற்றால் வளமேது! – குழந்தை பெறும் இயந்திரமாய் பெண் தாயும் சேயும் நோயோடு சமூகத்தில் சிறுகுடும்ப நெறியைத்தான் பரப்ப பெரும்பாடு பட்டு வெற்றி காண்பர் – ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணுமென இரண்டு பெற்றால் இனிமை என்றார் ஆனால் மக்கள் பெருக்கம் குறையவில்லை ஒன்று பெற்றால் ஒளிமயமென்றார் உறுதியாய் – இத்தனை சொல்லி இத்தனை செய்தும் இன்னும் குறையவில்லை மக்கள் பெருக்கம் சாதி மதத்தின் பெயர் சொல்லிங்கு பிள்ளைப்பேற்றை ... |
| என்னவாகும் விண்டோஸ் 7? மற்றும் விண்டோஸ் 8? Posted: 13 Jul 2015 06:33 AM PDT ஜூலை மாத இறுதியில், விண்டோஸ் 10 வர உள்ளது. உடனடியாக அனைவருக்கும் இது கிடைக்காது என்று தற்போதைய தகவல் கூறினாலும், படிப்படியாக அனைத்து விண்டோஸ் பயனாளர்களுக்கும் இது கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. நூறு கோடி பேர் விண்டோஸ் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அனைத்து சாதனங்களுக்கும் கொண்டு செல்லவே அது விரும்பும். அந்நிலையில், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்பாடு எந்த நிலையில் இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது. இன்றைய ... |
| Posted: 13 Jul 2015 06:05 AM PDT நமச்சிவாய முதலியார் ஊரிலே பெரிய மனிதர்.செல்வந்தர்.ஆன்மீகத்தில் பற்றுடையவர்.சிறந்த சிவபக்தர்.செக்கச் சிவந்த மேனி.நெற்றி நிறைய திருநீறு.கழுத்தில் ருத்ராட்சம்.கட்டுக்குடுமி.பஞ்சகட்சம் வைத்து வேட்டி கட்டுவார்.வெளியில் போவதென்றால் மட்டும் கோட்டும் தோளில் அங்கவஸ்திரமும் அணிந்து செல்வார்.அடிக்கடி முருகா! முருகா! என்று அவருடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.சுருக்கமாகச் சொல்வதானால் அவர் ஒரு சிவப்பழம்.சைவ சித்தாந்தம்,ஆகமங்கள்,திருமுறைகள்,திருக் கோயில்கள் பற்றிய விவரங்களை எல்லாம் விரல்நுனியில் வைத்திருப்பார்.இசையிலும் ... |
| நடிகர் நாகேஷ் பேட்டி - ஆஸ்திரேலியா வானொலி Posted: 13 Jul 2015 06:01 AM PDT ஆஸ்திரேலியா தமிழ் முழக்கம் என்ற வானொலியில் கலாநிதி் ஆ.சி.கந்தராசா அவர்கள் நடிகர் நாகேஷ் உடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் கண்ட பேட்டி இது . வானொலியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு நாகேஷிற்கே உரித்தான நகைச்சுவை மட்டுமன்றி சிந்திக்கவும் விட்டிருக்கின்றார். வானொலி: வணக்கம் நாகேஷ் சார் நாகேஷ்: வணக்கம் சார் வானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன? நாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்… இதுமாதிரி நிறையப் ... |
| Posted: 13 Jul 2015 04:44 AM PDT அந்த ஊர்க் காக்காய்கள் எல்லாத்துக்கும் கிடா மீசைக்காரர் இவரை நல்லாவே அடையாளம் தெரியும்...!! அனுபவித்த சோதனைக்கெல்லாம் சனிபகவான் காரணமென யாரோ சொல்ல , அன்று முதல் காக்காய்களை வெறுத்து விரட்ட ஆரம்பித்தவர் இன்னும் நிறுத்தவில்லை..!! காக்காய்களின் அறிவுக்கும் மீசை முகம் எட்டியிருந்தது, அவர் எட்டிப் பார்த்தால் போதும் எட்டி ஓடுமளவு பழகி பிழைத்திருந்தது..!! மீசைக்காரருடைய அம்மா செத்து பதினாறாம் நாள் விசேசம். காக்காய்க்குச் சோறு வைக்க நடந்து வரும் போதே நிலைமை புரிந்தது ஊருக்கு..!! கா ... |
| விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Posted: 13 Jul 2015 04:29 AM PDT விம்பிள்டன் டென்னிசில் ஒரே சீசனில் இந்தியாவை சேர்ந்த 3 பேர் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் பழமையான விம்பிள்டனில் நேற்று முன்தினம் நடந்த மகளில் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை பட்டம் வென்றது. விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்ஷா நிகழ்த்தினார். கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியான்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் இணை 6-1, 6-1, என்ற ... |
| Posted: 13 Jul 2015 04:28 AM PDT மணத்தக்காளி வற்றல் குழம்பு தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, ... |
| Posted: 13 Jul 2015 04:21 AM PDT என் விழிகள் தூது அனுப்பிய காதலுக்கு உன் மவுனம் சொல்லாமல் சொல்லியது சம்மதம்! – ————————– – கருணாகரன் நன்றி- குடும்ப மலர் |
| செயலில் இறங்கு, திறமை வழங்கு – ஓவியக் கவிஞர் அமுதபாரதி Posted: 13 Jul 2015 03:38 AM PDT – நற்செயலில் இறங்கு, திறமை வழங்கு சீக்கிரம் சேரும் பெருமை – அந்த வயலில் நாற்றுகள் நட்ட பிறகுதான் விளையும் பயிரின் வளமை! – நினைத்துக் கொண்டே படுத்திருந்தக்கால் நித்திரை வந்தே தீரும் – அட நினைத்ததை உடனே செய்திட எழுந்தால் நிச்சயம் வெற்றிகள் சேரும்! – எழுதும் பேனா எழுதாவிட்டால் யார்தான் அதனை மதிப்பர் -நன்மை எண்ணும் எண்ணம் எழுத்தாய் ஆனால் யாவரும் கூடித் துதிப்பார் – அறிஞர் கூறும் அளப்பெருஞ்ச் செய்தி அத்தனையும் கற்கண்டு – அவற்றை பேரறிஞர் போலே செயலாய்ச் செய்தால் போற்றி வரும் பூச்செண்டு – செய்யச் ... |
| Posted: 13 Jul 2015 01:39 AM PDT பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றிருப்பார். கருணாநிதிக்கு ஆரூர்தாஸுக்கு முந்தைய இடம் தமிழ்த் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்திருக்கும். ராஜாஜி, சேலத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து பேர் சொல்லும் ஜூனியர்களை வளர்த்திருப்பார். காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசன் மாதிரி இறுதிக் காலம் வரை நடிப்பாக இருந்திருக்கும். சரோஜாதேவி மாதிரி ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒருமுறை ... |
| போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம் Posted: 13 Jul 2015 01:16 AM PDT கோவை: குற்றம் மற்றும் லஞ்சத்தை தடுக்கும் வகையில், போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீசாரின் உடலில், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக 'கேமரா' பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த, ௧ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ௧ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட துவங்கினர்.ஹெல்மெட் ... |
| Posted: 13 Jul 2015 01:09 AM PDT மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான். அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது. உடனே கடவுளிடம் ... |
| பாபாவின் பல ரூபங்கள், பல சக்திகள்! Posted: 12 Jul 2015 11:37 PM PDT ஷிரடி பாபா அஷ்டமகா சக்திகள் பெற்றிருந்த மகான். அவர் பல தெய்வங்களின் வடிவில் பக்தர்கள் சிலருக்குக் காட்சி அளித்தார் என்பதை முன்பு பார்த்தோம். அவர் தெய்வங்களின் ரூபத்தில் மட்டுமல்லாமல் பல வித மனிதர்கள் ரூபத்திலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்குக் காட்சி அளித்திருந்தார். ஒரு முறை நாச்னே என்ற பக்தரின் சகோதரர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நாச்னே தன் அண்ணனின் அறுவை சிகிச்சை நல்ல விதமாக முடிந்து அவர் குணம் அடைய வேண்டும் என்று பாபாவை ஆழ்ந்த பக்தியுடன் வேண்டிக் கொண்டிருந்தார். ... |
| டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Posted: 12 Jul 2015 11:32 PM PDT டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க" படபடப்புடன் ஃபோன் செய்தான், கௌதம். "ஏன்? என்னாச்சு?" என்று கேள்வி கேட்ட டாக்டரிடம், "தெரியல டாக்டர். திடீர்னு மயக்கமாயிட்டாங்க" என்று படபடப்புடன் பொய் சொன்னான். "சரி. நான் ஆம்புலன்ஸ அனுப்பறேன். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் டாக்டர். இவன் கலக்கத்துடனும், படபடப்புடனும் மயங்கிக் கிடந்த மனைவி கீதாவையும், பக்கத்தில் கிடந்த மொபைலையும் பார்த்தான். வேக வேகமாக அதை எடுத்து ஒளித்து வைத்து விட்டான். ஆம்புலன்ஸ் வீட்டிற்கு ... |
| Posted: 12 Jul 2015 11:28 PM PDT இயற்கை எழில் கொஞ்சும் ஊர் நல்லூர். அங்கு பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள். எல்லோரும் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தனர். வயதானதால் அவரால் தன் பண்ணைகளை கவனிக்க முடியவில்லை. எனவே அதை பொறுப்பானவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் தன் காலத்திற்குள்ளேயே சொத்துகள் அழிந்துவிடும் என்று உணர்ந்தார். அதற்காக தன் நான்கு மருமகள்களுக்கும் ஒரு பரீட்சை வைக்க முடிவு செய்தார். மருமகள்கள் நான்கு பேரையும் அழைத்தார். சொத்துக்கான போட்டி என்பதை அவர்களிடம் தெரிவிக்காமல் 'யார் பொறுப்பானவர்' ... |
| சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..? Posted: 12 Jul 2015 11:11 PM PDT உலகச் சந்தைகள் அனைத்தும் கிரீஸ் நாட்டு நிதிச் சிக்கல்கள் காரணமாகச் சரிந்துகொண்டு இருக்கிற வேளையில், தற்போது சீனாவின் பங்குச் சந்தை சரிவுகள் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. ஏனென்றால், உலகின் இரண் டாவது பெரிய பொருளாதார நாடு சீனா. 2007-ம் ஆண்டு 14 சத விகிதமாக இருந்த இதன் ஜிடிபி வளர்ச்சி, 2014-ல் 7.4 சதவிகிதமாகக் (பாதியாக) குறைந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் வெளியாகக்கூடிய ஜிடிபியானது இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் உள்நாட்டு தேவை ... |
| Posted: 12 Jul 2015 11:10 PM PDT ![]() |
| Posted: 12 Jul 2015 11:09 PM PDT பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ... |
| 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகா கோதாவரி புஷ்கரம்: நாளை தொடங்குகிறது Posted: 12 Jul 2015 10:59 PM PDT ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை 'கோதாவரி புஷ்கரம்' விழா நடைபெறுவது உண்டு. தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடக்கும் 'கும்பமேளா' போல ஆந்திராவில் நடக்கும் 'கோதாவரி புஷ்கரம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. 'கோதாவரி புஷ்கரம்' விழாவில் கோதாவரி ஆற்றில் புனித நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் கரைந்து மறைந்து விடும் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கையாகும். இறுதியாக கடந்த 2003–ம் ஆண்டு ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் 'புஷ்கரம் விழா' நடைபெற்றது. அதன்பின் 12 ஆண்டுக்கு பிறகு தற்போது ... |
| லாரிக்கு பின்னால் 'டிவி' சாலை பாதுகாப்புக்காம்! Posted: 12 Jul 2015 09:56 PM PDT லாரிக்கு பின்னால் 'டிவி' சாலை பாதுகாப்புக்காம்! இந்தியாவில் சாலை விபத்துக்களால் இறப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேருக்கு மேல். உலக அளவில், இதை விட பலமடங்கு வாகன விபத்து மரணங்கள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, பல தொழில்நுட்ப நிறுவனங்கள், பலவித கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றன. 'சாம்சங்'கின் சமீபத்திய கண்டுபிடிப்பு, மிக எளிமையான, வித்தியாசமான ஒன்று. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில், நேருக்கு நேர் வாகனங்கள் மோதுவதை தடுக்க உதவும் என்கிறது, இந்த கண்டு பிடிப்பை உருவாக்கிய, சாம்சங்கின் ... |
| கண் நீர்அழுத்த நோய் வருவது ஏன்? - Glaucoma Posted: 12 Jul 2015 09:32 PM PDT பார்வை இழப்புக்குக் கண் புரை நோய், விழித்திரை நோய் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் 'கிளாக்கோமா' (Glaucoma) என்று அழைக்கப்படும் கண் நீர் அழுத்த நோய் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கண் புரையைத் தெரிந்துவைத்திருக்கிற அளவுக்குக் கண் நீர்அழுத்த நோயைப் பற்றி, பலருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை. இந்த நோயின் ஆரம்பத்தில் கண்ணில் வலி இருக்காது என்பதால், பெரும்பாலானோர் இதை ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பார்வை பறிபோனபின்தான் சிகிச்சைக்கு வருகின்றனர். கண் நீர்அழுத்த நோய் என்பது எது? கண்ணுக்குள் ... |
| Posted: 12 Jul 2015 07:38 PM PDT காதல் என்பது காமத்தில் தொடங்கி மரணத்தில் முடியும் நட்பு என்பது உணர்வில் தொடக்கி மரணம்வரை தொடரும் \ என்றும் உங்கள் நட்பினை எதிர்பார்க்கும் நண்பன் உத்திரகுமார் .த |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

