Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நெஞ்சை உலுக்கும் திக்ரித் படுகொலை வீடியோ

Posted:

பாக்தாத்: ஈராக்கின் திக்ரித் நகரில், 1,700க்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவை, ஐ.எஸ்., வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, 2014 ஜூன் மாதம், திக்ரித் அருகே உள்ள ஸ்பீச்சர் ராணுவ முகாமை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அப்போது ஷியா பிரிவைச் சேர்ந்த, 1,700 ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
சதாம் மாளிகை அருகே...:
அவர்களை, முன்னாள் அதிபர் சதாம் உசேன் மாளிகை அருகே, வெவ்வேறு இடங்களில், பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று புதைத்தனர்.இது தொடர்பான, நெஞ்சைப் பதற வைக்கும், 22 நிமிட வீடியோ காட்சியை ஐ.எஸ்., நேற்று ...

சென்னையில் அமையுமா சுப்ரீம்கோர்ட் கிளை? பொதுநல மனு மூன்று நீதிபதிகள் முன் இன்று விசாரணை

Posted:

புதுடில்லி:'சுப்ரீம் கோர்ட் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமை யிலான மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.'சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளையை அமைக்க வேண்டும்' என தென் மாநில மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆராய்ந்த சட்டத் துறை 'சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்கலாம்' என பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் பார்லிமென்ட் குழுவும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்நிலையில் ...

பொருளாதார நிலை குறித்து அருண் ஜெட்லி திருப்தி: 8 - 10 சதவீத வளர்ச்சி எட்டப்படும் என்கிறார்

Posted:

புதுடில்லி : ''மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார நிலை, கடந்த நிதியாண்டில் சிறப்பாக அமைந்திருந்தது போல, நடப்பு நிதியாண்டிலும் இருக்கும்; 8 சதவீத வளர்ச்சி கட்டாயம் ஏற்படும். வரும் நிதியாண்டுகளில், 8 - 10 சதவீத பொருளாதார வளர்ச்சி கட்டாயம் ஏற்படும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார்.'நபார்டு' எனப்படும், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாடு வங்கியின் நிறுவன நாளை முன்னிட்டு, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:

மழை கடவுள்கள் ...

போதையில் பாடமெடுத்த ஆசிரியர்: பெற்றோரை அதிர வைத்த வீடியோ

Posted:

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில், பள்ளிக்கு குடித்து விட்டு வந்ததோடு, சாராயம் பற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியரால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

எழுதுமாறு...:
சத்தீஸ்கர் மாநிலம், கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சிவ்பரண். இவர், கடந்த 10ம் தேதி, குடித்து விட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அத்துடன், 'டாரு' (சாராயம்), 'பீயோ' (குடியுங்கள்) என, வகுப்பறையில் இருந்த கரும்பலகையில் எழுதி, அந்த வார்த்தைகளை பலமுறை எழுதுமாறு மாணவர்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை உள்ளூர் பத்திரிகை நிருபர் வீடியோ படம் எடுத்துள்ளார். ...

பா.ஜ., மாநில முதல்வர்களுக்கு எதிர்க்கட்சிகள் குறி!

Posted:

புதுடில்லி: வரும் 21ம் தேதி துவங்க உள்ள, பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் போது, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

மல்லுக்கு...:
பார்லி., கூட்டத்தொடரின் போது, மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவது வழக்கம். மாறாக, வரும் 21ம் தேதி துவங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடரின் போது, பா.ஜ.,வைச் சேர்ந்த, ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் ஆகியோரை, ராஜினாமா செய்ய வலியுறுத்தி, ...

மந்திரிக்கு 'சல்யூட்' அடிக்காத அதிகாரி

Posted:

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா வந்தபோது, கூடுதல் டி.ஜி.பி., இருக்கையிலிருந்து எழுந்திருக்காமல், பிடிவாதமாக அமர்ந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருச்சூரில், நேற்று முன்தினம், போலீஸ் அகாடமி விழாவில் கலந்து கொள்ள, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, மேடைக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் எழுந்து நின்று, அமைச்சருக்கு, 'சல்யூட்' அடித்தனர். ஆனால், இருக்கையில் அமர்ந்திருந்த கூடுதல் டி.ஜி.பி., ரிஷிராஜ் சிங், எழுந்திருக்காமல் பெண் போலீசாரின் அணிவகுப்பை பார்த்தவண்ணம் இருந்தார். அமைச்சர் ...

விசாரணைக்கு ஒத்துழைக்காத பாக்., பயங்கரவாதி லக்வி

Posted:

புதுடில்லி: மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ரகுமான் லக்வி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக பாக்., அரசு தெரிவித்துள்ளது. கடந்த, 2008ல், பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள், மும்பை யின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார், அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உட்பட, 166 பேர் இறந்தனர். இந்த வழக்கின் விசாரணை மும்பையில் நடக்கிறது. இந்த பயங்கர வாத தாக்குதலுக்கான சதித் திட்டம் பாகிஸ்தானில் தீட்டப்பட்டது என்பதால், பாகிஸ்தானிலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு மூளையாக விளங்கிய, லஷ்கர் ...

முலாயம் மீது புகார் தெரிவித்த அதிகாரி மீது கற்பழிப்பு வழக்கு

Posted:

லக்னோ: 'உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் என்னை மிரட்டுகிறார்' என, நேற்று முன்தினம் வெளிப்படையாக புகார் தெரிவித்த, ஐ.பி.எஸ்., அதிகாரி அமிதாப் தாக்குர் மீது நேற்று, பழிவாங்கும் நடவடிக்கையாக, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யில், மூத்த போலீஸ் அதிகாரியாக இருப்பவர், அமிதாப் தாக்குர். இவருக்கு நேற்று முன்தினம் மாலையில், முலாயம் சிங் யாதவ் போன் செய்துள்ளார்.'ஜஸ்ரானா மற்றும் பெரோசாபாத்தில், நீ அடிபட்டது மறந்து போனதா... உன் போக்கை ...

புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித்தது

Posted:

புதுடில்லி: புயலால் அதிகம் பாதிக்கப்படும் நான்கு மாநிலங்களின் பட்டியலில், தமிழகமும் இடம்பிடித்துள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில், வானிலை குறித்த ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாட்டின் கடலோரத்தில், 13 மாநிலங்கள் அமைந்துள்ளன. புயல் உருவாகும்போதெல்லாம், இந்த மாநிலங்கள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆந்திராவின் நெல்லுார், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களும், ஒடிசாவில், பாலாசூர், கேந்திரபிரபா, பத்ராக், ஜகிட்சிங்பூர் ஆகிய மாவட்டங்களும், மேற்கு ...

சமூக வலைதளத்தில் இணைந்தார் விஜயகாந்த்

Posted:

தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர், சமூக வலைதளங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பற்றி, உடனுக்குடன் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். இதை, கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆவலுடன் பார்த்து, தங்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், 'பேஸ்புக்' என, அழைக்கப்படும், சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். இந்த வலைதளத்தில், 'vijayakanthdmdkparty' என்ற பெயரில், தன் கருத்துக்களை அவர் வெளியிட துவங்கியுள்ளார். ...

போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்: கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து கண்காணிப்பு

Posted:

கோவை: குற்றம் மற்றும் லஞ்சத்தை தடுக்கும் வகையில், போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீசாரின் உடலில், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக 'கேமரா' பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த, ௧ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ௧ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட துவங்கினர்.ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் ...

ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் விஷமிகளால் முடக்கம்

Posted:

புதுடில்லி: 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான, விசேஷ இணையதளமான, 'ஆன்ட்ரிக்ஸ்' விஷமிகளால் நேற்று சிறிது நேரம் முடக்கப்பட்டது.

வெற்றிகரமாக...:
மூன்று நாட்களுக்கு முன், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, ஐந்து பிரிட்டன் செயற்கைக் கோள்கள் உட்பட, 10 செயற்கைக்கோள்களை சுமந்து, வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்ற, பி.எஸ். எல்.வி., ராக்கெட்டின் பெருமையை பொறுத்துக் கொள்ளாத யாரோ, இந்த நாசக்கார வேலையை செய்துள்ளனர். ஆன்ட்ரிக்ஸ் இணைய தளத்தில் இருந்த பக்கங்களுக்குப் பதிலாக, சம்பந்தமே இல்லாத ஆங்கில எழுத்துகள், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™