Tamil News | Online Tamil News |
- ரயிலை நிறுத்திவிட்டு காய்கறி வாங்கிய ஓட்டுனர்
- ரயில் நிலையங்களில் 1 ரூபாய்க்கு குடிநீர்
- பாக்., செல்ல பிரதமர் நரேந்திர மோடி சம்மதம்: நவாஸ் ஷெரீபின் அழைப்பை ஏற்றார்
- அ.தி.மு.க.,வுக்கு சோனியா அழைப்பு
- சென்னை வழியே ரூ.5,000 கோடி 'ஹவாலா' முறைகேடு
- 'வியாபம்' முறைகேடு தொடர்ந்து ம.பி.,யில் மேலும் ஒரு 'மெகா' ஊழல்
- விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி., ராக்கெட்: 'இஸ்ரோ'வின் புதிய சாதனை
- 'டார்னியர்' விமான உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு: *32 நாள் தேடுதல் பணிக்கு வெற்றி
- அங்கீகாரமற்ற பள்ளிகள் விஷயத்தில் மெட்ரிக் இயக்குனரகம் மவுனம்: அனுமதி பெறாமல் அட்டகாசமாக செயல்படும் 2,000 பள்ளிகள்
- பா.ஜ., - நிதிஷ் கட்சி 'போஸ்டர் யுத்தம்!'
- மது அருந்தி வகுப்பறைக்குள் வாந்தி 3 மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை
| ரயிலை நிறுத்திவிட்டு காய்கறி வாங்கிய ஓட்டுனர் Posted: உன்னாவ்:லெவல் கிராசிங்கில் சிக்னல் கிடைத்த பின்னும், ரயிலை நிறுத்திய ஓட்டுனர், அப்பகுதியில் உள்ள சந்தையில், காய்கறிகள் வாங்கிய சம்பவம், பயணிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.சமாஜ்வாதி கட்சி யைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி, உ.பி.,யில் நடக்கிறது.கடந்த 9ம் தேதி, இரவு 8:45 மணிக்கு, லக்னோவில் இருந்து கான்பூர் சென்று கொண்டிருந்த, ஆக்ரா கென்ட் ரயில், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள, கங்காகாட் லெவல் கிராசிங்கில் நிறுத்தப்பட்டது. ரயிலுக்கு சிக்னல் கிடைத்த பின்னும், ரயில் கிளம்பவில்லை. காரணம், இன்ஜினை விட்டு கீழே இறங்கிய ஓட்டுனர், ... |
| ரயில் நிலையங்களில் 1 ரூபாய்க்கு குடிநீர் Posted: ரயில் நிலையங்களில், 1 ரூபாய்க்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வசதியை, விரைவில் செயல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.ரயில் நிலையங்களில், 'ரயில் குடிநீர்' கிடைக்கிறது. ஒரு லிட்டர் பாட்டில் விலை, 15 ரூபாய். எனினும், குறைந்த விலைக்கு குடிநீர் வழங்க, ரயில்வே வாரியம் முடிவு செய்தது. அதன்படி முக்கிய ரயில் நிலையங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் மூலம் குறைந்த விலையில் குடிநீர் வழங்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 10 ரூபாய்க்கு, காலி ... |
| பாக்., செல்ல பிரதமர் நரேந்திர மோடி சம்மதம்: நவாஸ் ஷெரீபின் அழைப்பை ஏற்றார் Posted: உபா: ரஷ்யாவின் உபா நகரில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் நேற்று சந்தித்து பேசிய போது, 'மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது' உட்பட, பல முக்கிய முடிவுகளை எடுத்தனர். மேலும், 'பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும், 'சார்க்' மாநாட்டில் பங்கேற்க, எங்கள் நாட்டிற்கு வர வேண்டும்' என, நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை, பிரதமர் மோடிஏற்றுக் கொண்டார்; பாகிஸ்தான் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார்.மத்திய ஆசிய நாடுகளுக்கு, ஏழு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, ... |
| அ.தி.மு.க.,வுக்கு சோனியா அழைப்பு Posted: தனது இல்லத்தில் நடைபெறவுள்ள, இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க வரும்படி, அ.தி.மு.க.,வுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். இதை ஏற்று, அ.தி.மு.க., சார்பில் ஒரு பிரதிநிதியை, முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. |
| சென்னை வழியே ரூ.5,000 கோடி 'ஹவாலா' முறைகேடு Posted: ஆமதாபாத் : சென்னை வழியாக, துபாய், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு, 5,000 கோடி ரூபாய் முறைகேடாக அனுப்பி வைக்கப்பட்டு, பதுக்கப்பட்டுள்ளதாக, அமலாக்க இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது. |
| 'வியாபம்' முறைகேடு தொடர்ந்து ம.பி.,யில் மேலும் ஒரு 'மெகா' ஊழல் Posted: போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த, 'வியாபம்' முறைகேடு தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது, தனியார் பல் மருத்துவக் கல்லுாரி யின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு (டி.எம்.ஏ.டி.,) ஊழலும் விஸ்வரூபமெடுக்கத் துவங்கியுள்ளது. இந்த தேர்வு மூலம் தனியார் கல்லுாரி கள் மற்றும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டில், கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஊழலில் தொடர்புடைய நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிடப் ... |
| விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி., ராக்கெட்: 'இஸ்ரோ'வின் புதிய சாதனை Posted: சென்னை: வர்த்தக ரீதியாக செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்தும் விஷயத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' நேற்று புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. 'பி.எஸ்.எல்.வி., சி -- 28' ராக்கெட் மூலம், பிரிட்டன் மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்கள் நேற்று இரவு, 9:58 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.'ஆன்டிரிக்ஸ்' நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி, இஸ்ரோ நிறுவனம், வர்த்தக ரீதியாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன்படி, பி.எஸ்.எல்.வி., சி - 28 ராக்கெட், சென்னையை அடுத்த, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று இரவு, 9:58 ... |
| 'டார்னியர்' விமான உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு: *32 நாள் தேடுதல் பணிக்கு வெற்றி Posted: ஒரு மாதத்துக்கு முன், காணாமல் போன, கடலோர பாதுகாப்பு படையின், 'டார்னியர்' விமான உதிரிபாகங்கள், 32 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், நேற்று மதியம், பிச்சாவரம் கடற்கரையில் இருந்து, 29 கி.மீ., தொலைவில் கண்டு எடுக்கப்பட்டன. விமானத்தின் கறுப்பு பெட்டி, ஓரிரு தினங்களில், பெங்களூரு அனுப்பி வைக்கப்பட உள்ளது.பாதுகாப்பு துறை உத்தரவுபடி, தேசிய கடலியல் தொழில் நுட்ப நிறுவனமான, 'நியாட்' அமைப்பின் கப்பல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நவீன ரக, 'ஒலிம்பிக் கேன்யான்' கப்பல், மாயமான விமானத்தை தேடும் வேட்டையில், ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான் ... |
| Posted: தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மவுனம் சாதித்து வருகிறது.தமிழகத்தில், 5,000 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையின், மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது; அதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. நிரந்தர அங்கீகாரம்: நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் மற்றும் விதிமுறைகளை ... |
| பா.ஜ., - நிதிஷ் கட்சி 'போஸ்டர் யுத்தம்!' Posted: பாட்னா:சட்டசபை தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத, பீகார் மாநிலத்தில், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், ஆட்சியை கைப்பற்றத் துடிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே, 'போஸ்டர் யுத்தம்' துவங்கியுள்ளது. |
| மது அருந்தி வகுப்பறைக்குள் வாந்தி 3 மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை Posted: பல்லாவரம்: அனகாபுத்துாரில், மது அருந்திவிட்டு வகுப்பறைக்குள் வாந்தி எடுத்த, பிளஸ் 2 மாணவர்கள் மூன்று பேரை, போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்துாரில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பிளஸ் 2 படிக்கும் மூன்று மாணவர்கள், மது அருந்தி வகுப்பறைக்கு வந்தனர். அதில், ஒரு மாணவன் வகுப்பறையிலேயே வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் அறிவுரை கூறியும், அவர்கள் மதிக்கவில்லை என, தெரிகிறது. இதையடுத்து, சங்கர்நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் மாணவர்களை காவல் நிலையத்துக்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 11,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |