Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு!

Posted: 10 Jul 2015 07:08 AM PDT

இந்த உலகில், நாம் அறியாத பல விஷயங்கள் அவ்வப்போது வெளிப்பட்டு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கின்றன. அதிலும், லட்சக்கணக்கில் பரந்து விரிந்திருக்கும் தாவரங்கள், விலங்குகள் பற்றி நாம் அறிந்த விஷயங்களை விட அறியாத தகவல்கள் அதிகம். அந்த வரிசையில், மனிதர்களிடமும், விலங்குகளிடமும் இருப்பதைப் போலவே, தாவரங்களுக்கும் விருப்பும் வெறுப்பும் உண்டு என்கிறார்கள் தாவரவியல் அறிஞர்கள். உதாரணமாக, வெள்ளைப் பூண்டு செடிக்கு அருகில் நடப்படும் ரோஜா செடி மிக நன்றாக வளர்வதுடன், அதன் பூக்களும் பெரிதாக, ...

புதிய கள்ளுண்ணாமை

Posted: 10 Jul 2015 06:57 AM PDT

1 . பிஞ்சுவின் வாயில் மதுவினை ஊற்றுதல் .....பஞ்சமா பாதகம் தான் . 2 . கடைவிரித்தார் வீதியிலே மாணவிகள் போதையிலே .....நெஞ்சம் கொதிக்குதே வெந்து . 3 . போதையின் பாதையில் தள்ளாடும் தாய்நாடே .....வேதனைக்கு மாற்றுண்டோ கூறு . 4 . ஓட்டுகள் வாங்கிடவே ஊற்றிக் கொடுக்கின்ற .....கூட்டத்தை வேரறுப்போம் வா . 5 . படிக்கின்ற பள்ளிக்குப் பக்கம் மதுவின் .....நெடிவீசல் கல்விக்கு ஊறு . 6 . குடிப்பவர்கள் இல்லாமல் செய்கின்ற கட்சியை .....நாடியே ஓட்டளிப்போம் வா . 7 . அறுபட்ட தாலிகள் போதாதா இன்னும் .....தடைசெய்ய ...

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'

Posted: 10 Jul 2015 06:45 AM PDT

2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்' புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த சுமார் ரூ.10,000 கோடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதாக 'ரா' உளவு அமைப்பு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கப் பிரிவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2ஜி ஊழலுடன் தொடர்புடைய நாட்டின் மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2ஜி முறைகேட்டில் தொடர்புடைய லஞ்சப் பணம் பல நாடுகளுக்கும் ...

மௌன மொழி

Posted: 10 Jul 2015 06:31 AM PDT

மௌனம் கூட பேசி கொள்ளும் காதல் வந்தால் ...! ________________________________________________________________________________________________________________________________________                                                  இணையத்தளமாகிய என் மீதா? மனம்  இணைய, மாலை சூட மேட்ரிமோனியாய்  நான்.. ஓடி விளையாட  மறந்த உன் குழந்தைக்கு ஆடம்பர  விளையாட்டு பொருள் நான்.. அம்மா அப்பா இருவர் இருந்தும் உன் குழந்தைக்கு அத்தனையும் நான்.. உன் அலுவலகம் முழுவதும் வியாபித்திருப்பது நான்.. நீ ...

ராமருக்கு உதவிய சாபம் - ஆன்மிக குட்டிக்கதை

Posted: 10 Jul 2015 06:12 AM PDT


-

நன்றி- குமுதம் சிநேகிதி

ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Posted: 10 Jul 2015 06:11 AM PDT

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதைவிட நுண்ணறிவியல் (Micro Science) என்பதுதான் என் முடிவு. இந்த அறிவியலைப் பற்றி தெரியாமல், பஞ்சாங்கத்தில் உள்ள சில அடிப்படை தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டுள்ள அரைகுறை ஜோதிடர் என்றுகூட அழைக்கத் தகுதியற்ற சில பேர்வழிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். ஜோதிடப் பயிற்சி மையம் என்ற பெயரில் சில நபர்கள் தவறான வழியுடன் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களைமட்டும் சொல்லித் தருகின்றனர் நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல, கடந்த 14 ஆண்டுகளாக ஜோதிடத்தை ...

பெண்ணுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம்

Posted: 10 Jul 2015 06:03 AM PDT


-

நன்றி- குமுதம் சிநேகிதி

காதலிக்கு ஆணை.

Posted: 10 Jul 2015 05:16 AM PDT

பேசாதே கண்ணே பேசாதே -நீ பேசும்போது சிந்தும் வாயமுதச் சுவை காண வண்டுகள் உனைச்சுற்றி வட்டமடிக்கின்றன சிரிக்காதே கண்ணே சிரிக்காதே-உன் பற்களைக் கோர்த்து முத்து மாலையாக்கி காசு பார்க்க கள்வர் கூட்டம் இங்கே காத்திருக்கிறது. நடக்காதே கண்ணே நடக்காதே-உன் நடை அழகைக்கண்டு நாணிய அன்னங்கள் உன் நடைக்குத் தடை ஆணை வாங்கத் தருணம் பார்த்திருக்கின்றன. பாடாதே கண்ணே பாடாதே-உன் பாட்டினிமைக் கேட்டுப் பறவை ஜாதிகளும் காட்டு விலங்குகளும் கடல்வாழ் உயிரினமும் நாட்டு மக்களும் மயக்கத்தில் ...

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!

Posted: 10 Jul 2015 05:13 AM PDT

மதமா? மனிதமா? – – வைரமுத்து

Posted: 10 Jul 2015 04:32 AM PDT

அவன் பெயர் ராமன். ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியன். கம்பராமாயணத்தில் தோய்ந்து பாடம் எடுப்பான் என்பதனால் அவனைக் "கம்பராமன்' என்றே அடைமொழி கூட்டி அழைத்துப் பழகிவிட்டது பள்ளி. – அவன் கம்பராமன் என்று அழைக்கப்படுவதில் மண்ணுளிப்பாம்புக்கு இரண்டுபக்கம் தலை இருப்பதுபோல் இருதரப்புக்குமே மகிழ்ச்சிதான். அழைக்கப்பட்ட ராமன் அதைப் பெருமை என்று கருதி மகிழ்ச்சி கொள்கிறான். – அழைக்கிறவர்கள் அதில் தொனிக்கு கேலியில் கள்ளக்காதலைப்போல் ஒரு ரகசிய சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். – இது எழுதப்பட்டுக் ...

வாரம் ஒரு பாசுரம்-சுஜாதா- புதிய மின்நூல்

Posted: 10 Jul 2015 02:40 AM PDT

ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக 'வாரம் ஒரு பாசுரம்' என்ற தொடரை 'அம்பலம்' இணைய இதழிலும் 'கல்கி' வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத் தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திவ்யப் பிரபந்தம் முழுவதற்கும் ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்வதில் ஓரளவுக்கு ஆயாசம் ஏற்பட்டுவிடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது ...

நவீன திருக்குறள்

Posted: 10 Jul 2015 02:09 AM PDT

மதிப்பு
கூட்டப்பட்ட
வரிகள் -
திருக்குறள்

உங்க வீட்டு கிச்சனை பார்த்துட்டுதான் சம்மதம் சொல்லுவாராம்...!!

Posted: 10 Jul 2015 01:29 AM PDT

சரித்திர சிறுகதைகள் - எட்டு ஆசிரியர்களின் சிறு கதை தொகுப்பு மின்னூல் வடிவில் .

Posted: 09 Jul 2015 11:37 PM PDT

அனுமதி - சுஜாதா சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 09 Jul 2015 11:36 PM PDT

http://www.mediafire.com/download/34nnp636h7z7c0k/Sujatha-Anumathi.படப் http://www87.zippyshare.com/v/qW2P5qVS/file.html

கோலிவுட்டுக்கு அடுத்த வில்லி ரெடி.

Posted: 09 Jul 2015 09:30 PM PDT

- - – அஞ்சலி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நாள் முழுவதும் பேஸ்புக்கிலும், சினிமா பார்ப்பதிலும் கழிக்கிறார். அவரிடம் உலகத்தில் பெஸ்ட் மூவிஸ் கலெக்ஷன் வீடியோக்கள் உள்ளதாம். பிரெஞ்ச், ஈரான் படங்களை அதிகம் பார்க்கிறார். "அங்காடி தெரு' படம் மாதிரி யாராவது கதை சொன்னா பாதி சம்பளத்தில் நடிப்பேன் என்கிறார். நடிக்க வந்து ஒன்பது வருஷம் ஆனாலும் "கற்றது தமிழ்', "அங்காடி தெரு', "எங்கேயும் எப்போதும்' என மூன்று படங்கள் தான் பேர் சொல்லும் படம் என்கிறார். தமிழ் நன்றாகப் பேசுகிறார். தற்போது ...

என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா!

Posted: 09 Jul 2015 09:27 PM PDT

- - - ஜீவா – நயன்தாரா நடிக்கும் "திருநாள்' படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. – கிராமத்து இளைஞனாக ஜீவா நடிக்கிறார். நயன் பற்றி பேஸ்புக், டிவிட்டரில் விக்னேஷ்வரனை வைத்த கிழி… கிழி என கிழிக்கிறார்கள் சிலர். – உடன் வடிவேலு காமெடியுடன் நயனை இணைத்து பேஸ்புக் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். – அதனால் நயன் படப்பிடிப்பில் யாருடனும் பேசுவதில்லையாம். – என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா! – ——————–– விஜய்கோபால் கல்கி

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Posted: 09 Jul 2015 08:44 PM PDT

நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ...

ஈச்சங்குலை...!!

Posted: 09 Jul 2015 08:25 PM PDT

புதிர்…!!
*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
*  
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.
*

பென் கிங்ஸ்லி!

Posted: 09 Jul 2015 08:02 PM PDT

- — காந்தியைக் குறித்து ஒரு படம் எடுக்கப்பட்டது. அதில் நடிக்க பென் கிங்ஸ்லி என்ற ஒரு நடிகரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் புது டில்லிக்கு வந்தார். – அவருக்கு ஆடம்பரமான 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் தங்குவதற்கான அறைக்கு அழைத்துச் சென்றனர். – பென் கிங்ஸ்லி உள்ளே நுழைந்தார். அனைத்தையும் பார்வையிட்டார். மிகவும் கவனத்தோடு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பொருட்டு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். – ஆனால், என்ன நடந்தது? – அனைத்தையும் பார்த்த ...

'ஆகஸ்ட் 7' -தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு

Posted: 09 Jul 2015 07:44 PM PDT

புதுடில்லி: ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாளில், நாட்டின் மிகச் சிறந்த கைத்தறி ரகங்களை, உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் கண்காட்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய, கைத்தறித்துறை அமைச்சர், சந்தோஷ் காங்வார் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆகஸ்ட் 7, 1905ம் ஆண்டில், வெள்ளையர்களுக்கு எதிராக, சுதேசி இயக்க அறிவிப்பை, நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், கோல்கட்டா நகரில் வெளியிட்டனர். அதை ...

குழந்தைக்காக ஸ்கூல்ல சேரப்போறோம்! – சிநேகா

Posted: 09 Jul 2015 07:35 PM PDT

- பையனா பொண்ணா? என்ன எதிர்பார்க்குறீங்க? - வழக்கமான செக்கப்தான் பண்ணிக்கிட்டு வர்றேன். ஸ்கேன் செய்து ஆண் குழந்தையா? பெண் குழந்தையானெல்லாம் பார்க்கவில்லை. அதில் விருப்பமும் இல்லை. பையனோ பொண்ணோ எது பிறந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். - பிறக்கப்போகும் குழந்தைக்கு என்னென்ன வாங்கி வச்சிருக்கீங்க? - ஒரு பெரிய லிஸ்ட்டே ரெடியா இருக்கு. இங்க வாங்க வேண்டியது, வெளிநாட்டுல வாங்க வேண்டியதுன்னு ரெண்டு பட்டியல் தயார். நாங்க இப்போ தனிக்குடித்தனம்தான் பண்றோம். மூணாவது மாசத்திலிருந்து என்னோட மாமனார், ...

தமிழக வீரர் லட்சுமணன், தங்கப்பதக்கம் வென்றார்.

Posted: 09 Jul 2015 06:50 PM PDT

சென்னை :
-
சென்னையில் இன்று துவங்கிய
தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்,
5000 மீட்டர் ஓட்டத்தில், தமிழக வீரர் லட்சுமணன்,
தங்கப்பதக்கம் வென்றார்.
-
-----------------------------------


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™