Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சட்டசபை நிகழ்ச்சி ஒளிபரப்ப எவ்வளவு செலவாகும்?

Posted:

சென்னை: 'நிதி நெருக்கடி காரணமாக, சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்ப செய்வதற்கான சாத்தியக்கூறு கள், குறைவாகவே உள்ளன' என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

லோக் சத்தா கட்சியின், மாநில தலைவர், ஜெகதீஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், 'தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை, நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, 'பார்லிமென்டின் இரு சபைகளிலும், நிகழ்ச்சிகள் ...

சென்னைக்கு வருமா 'ரோப் வே கார்' போக்குவரத்து?

Posted:

கோல்கட்டா: கோல்கட்டா நகர போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, 'ரோப் வே கார்'

போக்குவரத்து விரைவில் அறிமுகமாக உள்ளது. இது போன்ற முறை, தமிழக நகரங்களுக்கும் வந்தால், நன்றாக இருக்கும். கோல்கட்டா நகர சாலைகள், போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனவை. அதற்கு தீர்வாக, ரோப் வே கார் எனப்படும், உயரமான இரும்பு துாண்களில்இணைக்கப்பட்டுள்ள இரும்பு கயிற்றில் தொங்கியபடி செல்லும் பெட்டிகளை கொண்ட முறை அறிமுகமாக உள்ளது. 'கர்வோ' என்ற நிறுவனம், கோல்கட்டா நகர வீதிகளில், ரோப் வே கார் போக்குவரத்தை அமைக்க முன்வந்து, அதற்கான அனுமதி கோரி, மாநில அரசிடம் விண்ணப்பித்து உள்ளது. அனுமதி ...

நேருவை முஸ்லிமாக காட்ட மத்திய அரசு முயற்சி?

Posted:

புதுடில்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவை, முஸ்லிம் என காட்டும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டது என்றும், அந்த முயற்சியை, 'விக்கிபீடியா' இணையதளத்தின் ஆசிரியர்கள் முறியடித்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்கிபீடியா இணைய தளத்தில், எந்த தகவல் குறித்தும் விளக்கமான தகவல்களை பெற முடியும். அதுபோல, அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை, யார் வேண்டுமானாலும் மாற்றியமைக்க முடியும். விக்கிபீடியா இணைய தளத்தில், பண்டித ஜவகர்லால் நேரு பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், நேரு பற்றிய சில தகவல்கள், கடந்த மாதம், 26ல், மத்திய அரசின் கம்ப்யூட்டர் முகவரி ...

லலித் மோடி விவகாரத்தை 'கோட்டை' விட்டதா காங்கிரஸ்?

Posted:

லலித் மோடியை மையமாக வைத்து கிளம்பிய அரசியல் நெருக்கடியை, சரிவர கையாளத் தெரியாமல் கோட்டை விட்டுவிட்டதாக, காங்கிரசுக்குள் குரல்கள் எழுந்துள்ளன. இதன்மூலம், பா.ஜ.,வுக்கு எதிரான யுத்தத்தில், ஏறத்தாழ தோல்வியை தழுவும் நிலைக்கு, தள்ளப்பட்டு

விட்டதாக, அக்கட்சிக்குள் குமுறல்கள் கேட்க துவங்கி உள்ளன.
இதுகுறித்து, நேற்று டில்லியில், காங்., மேலிடத்தின், தகவலறிந்த உயர் வட்டாரங்கள்
கூறியதாவது:லலித் மோடிக்கு, விசா ஆவணங்கள் கிடைக்க, சுஷ்மா உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு தான், துவக்கப்புள்ளி. இதை, காங்., கையிலெடுத்து, பா.ஜ.,வுக்கு எதிரான ...

ரூ.360 கோடி பேரம் பேசினாரா வருண்?

Posted:

புதுடில்லி: லலித் மோடிக்கு இந்தியாவில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, காங்., தலைவர் சோனியா, 360 கோடி ரூபாய் கேட்டதாகவும், இதுகுறித்து, பா.ஜ., - எம்.பி., வருண் பேரம் பேசியதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. லலித் மோடி கூறியுள்ள இந்த தகவலை, வருண்மறுத்துள்ளார்.

லண்டனுக்கு தப்பினார்:
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி களின் கமிஷனராக இருந்தவர் லலித் மோடி. சட்டவிரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத் துறையின் விசாரணையை சந்திக்க பயந்து, லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர், அங்கிருந்து போர்ச்சுகல் செல்வதற்கு, ...

பிரதமர் மோடியின் கனவு திட்டம் 'டிஜிட்டல் இந்தியா' அறிமுகம் : கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் சாதனை முயற்சி

Posted:

புதுடில்லி: இணையதள வசதியுள்ள கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தி, அரசிடம் இருந்து பொதுமக்கள் சான்றிதழ்கள் மற்றும் தகவல்களை எளிதாக பெறும், அதுபோன்றே, அரசின் திட்டங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் போன்றவற்றை

இந்த சாதனங்கள் மூலம், பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.
திட்டம் இது தான்!
* அதிவேக இணைய இணைப்பு, மொபைலில் இணையத்தை இணைப்பது, இ- - கவர்னென்ஸ் முறையில் அரசு திட்டங்கள் செயல்படுவது, அரசின் தகவல்கள் அனைத்தும், மின்னணு ...

பலாத்கார வழக்கில் சமரசம் கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி : 'பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன், பலாத்கார குற்றவாளியை சமரசம் செய்து கொள்ள உத்தரவிடக் கூடாது; அவ்வாறு உத்தரவிடுவது, சட்ட விரோதம் மட்டுமின்றி, பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கும் கூட' என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பி.தேவதாஸ், பலாத்கார வழக்கு ஒன்றை சமீபத்தில் விசாரித்த போது, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமரசம் செய்து கொள்ளச் சொல்லி, பலாத்கார குற்றவாளிக்கு ஜாமின் வழங்கினார்; இதற்கு பலதரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. ...

மாணவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி: முதல்வர் ஜெ., பேச்சு

Posted:

சென்னை: பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதல் இடம் பெற்ற, 21 மாணவ, மாணவியருக்கு, 10.50 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அப்போது, உங்களை வாழ்த்துவதில், மகிழ்ச்சி அடைகிறேன் என பேசினார்.
ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு, மாநில அளவில், முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு, காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அத்துடன், அவர்களின் மேற்படிப்புக்கான செலவையும், தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.
மேலும், அரசு குழந்தைகள் இல்லம், தன்னார்வ ...

'ஜெ., கருத்து சிரிப்பு, எரிச்சல் தருகிறது': கருணாநிதி கருத்து

Posted:

சென்னை: 'ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி, 2016ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம்' என, ஜெயலலிதா, தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போது, எரிச்சலும், சிரிப்பும் தான் மாறி மாறி வருகிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:இடைத்தேர்தல் முடிவுகளும், பொதுத்தேர்தல் முடிவுகளும் அடிப்படையிலேயே வித்தியாசமானவை; எனவே, அவற்றை ஒப்பிட முடியாது.அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்து, அமைச்சர்களை அல்லும், பகலும் தெருவிலே ஓட விட்டு, பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாம், 'துஷ்டனைக் கண்டால் துார விலகு' ...

90 சதவீதம் பேர் 'ஹெல்மெட்' அணிந்ததால் போலீசார் பெருமிதம்: தட்டுப்பாடு நிலவுவதால் கெடுபிடியை தள்ளிப்போட முடிவு

Posted:

தமிழகம் முழுவதும், நேற்று முதல் அமல்படுத்தப்பட்ட, 'ஹெல்மெட் கட்டாயம்' உத்தரவுக்கு, இருசக்கர வாகன ஓட்டிகள் அமோக ஆதரவு அளித்து உள்ளனர். மாநிலம் முழுவதும், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து சென்றதால், உயர் நீதிமன்ற உத்தரவு வெற்றி அடைந்துள்ளது என, போலீசார் பெருமிதம் அடைந்தனர்.

'இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம். இந்த உத்தரவு, ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், 'இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து ...

நாடு முழுவதும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு திட்டம்.

Posted:

புதுடில்லி: நாடெங்கிலும் உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நாடா தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சுகாதார மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாநாட்டில் பேசிய அவர், நாட்டில் உள்ள 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தை அடுத்த 1.5 ஆண்டுக்குள் 95 சதவிகிதம் அளவிற்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இதற்கு குறைந்த செலவிலான, திறன் மிக்க மருந்துகள் உற்பத்தி அவசியம். திட்டம் வெற்றியடைய தனியார் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™