Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விவசாயி வீட்டில் 11 பவுன் நகை, பணம் திருட்டு

Posted: 01 Jul 2015 01:31 PM PDT

சாத்தான்குளம் அருகே விவசாயியின் வீட்டில்  11 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தலைக்கவசம் அணியாமல் சென்ற 75 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Posted: 01 Jul 2015 01:30 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்ற 75 பேரின் இருசக்கர வாகனங்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

திருவட்டாறை மையமாகக் கொண்டு புதிய வட்டாட்சியர் அலுவலகம்

Posted: 01 Jul 2015 01:30 PM PDT

திருவட்டாறை மையமாகக் கொண்டு  புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஜே. புஷ்பலீலா ஆல்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டாய தலைக்கவசம்: போக்குவரத்து அலுவலர்கள் சோதனை

Posted: 01 Jul 2015 01:29 PM PDT

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு புதன்கிழமை(ஜூலை 1)முதல் அமலுக்கு வந்ததையடுத்து, புதன்கிழமை காலை முதலே போலீஸார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலானோர் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்தில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது

Posted: 01 Jul 2015 01:28 PM PDT

குமரி மாவட்டத்தில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியுள்ளதையடுத்து, இப்பழங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

குலசேகரம்-திற்பரப்பு-பேச்சிப்பாறை-குலசேகரம் தடத்தில் வட்டப் பேருந்துகள் இயக்கப்படுமா?

Posted: 01 Jul 2015 01:27 PM PDT

குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவி மற்றும் பேச்சிப்பாறையை இணைத்து வட்டப் பேருந்துகள் இயக்க பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க அரசு மானியம்

Posted: 01 Jul 2015 01:24 PM PDT

மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க தமிழக அரசு வழங்கி வரும் மானியத்தால் குமரி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குறுமத்தூர் கூட்டுறவு சங்கத்தில் சான்றிதழ் வழங்குவதில் தேக்கநிலை

Posted: 01 Jul 2015 01:23 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருமான, இருப்பிட, சாதிச் சான்றுகளுக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை பெறாததையடுத்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி குளங்களில் மீன்பிடிப்போர் மீது நடவடிக்கை

Posted: 01 Jul 2015 01:23 PM PDT

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி குளங்களில் மீன்பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேரூர் தென்குமரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இடதுசாரிகள் செய்த தவறு!

Posted: 01 Jul 2015 01:22 PM PDT

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்பது அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் பதவி விலகிய நாளிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒவ்வோர் அரசியல் கட்சியும் நாங்கள் போட்டியிடவில்லை

குமாரகோவில் அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் கிரிவலம்

Posted: 01 Jul 2015 01:22 PM PDT

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு வேல்முருகன் சேவா சங்க பக்தர்கள் புதன்கிழமை கிரிவலம் வந்தனர்.

நாளை நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு மேளா

Posted: 01 Jul 2015 01:21 PM PDT

தேசிய நுண்ணீர் பாசனத் திட்டம், மானாவாரிப் பகுதி வளர்ச்சித் திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பம் பெறும் மேளா வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடைபெறவுள்ளது.

குமரி மாவட்டத்தில் 670 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 01 Jul 2015 01:21 PM PDT

குமரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 670 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதிய தங்க முதலீட்டுத் திட்டம்...

Posted: 01 Jul 2015 01:21 PM PDT

உலகிலேயே தங்கம் அதிகமாக வாங்குவது இந்தியாவில்தான். ஆண்டுக்கு சராசரியாக 850 முதல் 900 டன் வரையிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி

திருக்குறள் விரைவு ரயில் நாளை ரத்து

Posted: 01 Jul 2015 01:20 PM PDT

கன்னியாகுமரியிலிருந்து நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி உண்ணாமலைக்கடையில் உண்ணாவிரதம்

Posted: 01 Jul 2015 01:20 PM PDT

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்தின் ஆயிரமாவது நாளையொட்டி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

குமரி குறளறிஞருக்கு "திருக்குறள் செம்மல்' பட்டம்

Posted: 01 Jul 2015 01:19 PM PDT

குமரி மாவட்ட திருக்குறள் ஆய்வு மைய நிறுவனர் தலைவர் திருக்குறள் கேசவசுப்பையாவுக்கு "திருக்குறள் செம்மல்' பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தென்தாமரைகுளத்தில் திமுக பொதுக்கூட்டம்

Posted: 01 Jul 2015 01:18 PM PDT

கன்னியாகுமரியையடுத்த தென்தாமரைகுளத்தில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலர் என்.தாமரைபாரதி தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியச் செயலர் கிருஷ்ணசுவாமி, வடக்கு ஒன்றியச் செயலர் மதியழகன், நிர்வாகிகள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, டி.சி.மகேஷ், ஆல்வின் ஜெயசிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். இதில், மாவட்டச் செயலர் என்.சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின் உள்ளிட்டோர் பேசினர்.  முருகன் வரவேற்றார். ஜான் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

வடசேரி மீன் சந்தை கட்டுமானபணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 01 Jul 2015 01:18 PM PDT

நாகர்கோவில் வடசேரி மீன்சந்தையில் புதிய கடைகளுக்கான கட்டுமானப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

மீண்டும் சிறுதானிய உணவுகள்

Posted: 01 Jul 2015 01:18 PM PDT

கால மாற்றத்துக்கேற்ப நமது வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. உணவாகட்டும், உடையாகட்டும், அன்றாட வாழ்க்கை நடைமுறையாகட்டும்

திருத்தங்கல்

Posted: 01 Jul 2015 01:17 PM PDT

அரசுப் பேருந்து-மினி லாரி மோதல்: 5 பேர் படுகாயம்

Posted: 01 Jul 2015 01:17 PM PDT

திருப்புவனம் அருகே அரசுப் பேருந்தும்,  செங்கல் சூளை மினி லாரியும் செவ்வாய்க்கிழமை இரவு மோதிக் கொண்டதில், அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய மரக்கட்டைகள்: மீனவர்கள் கோரிக்கை

Posted: 01 Jul 2015 01:16 PM PDT

தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் புதன்கிழமை 2 மரக்கட்டைகள் கரை ஒதுங்கியதால், அப்பகுதி மீனவர்கள் மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

Posted: 01 Jul 2015 01:15 PM PDT

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

கானாடுகாத்தான் பகுதியில் ஜூலை 02 மின்தடை

Posted: 01 Jul 2015 01:14 PM PDT

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (ஜூலை 2) மின்தடை ஏற்படும்.

ராமநாதபுரத்தில் ரத்த தான விழிப்புணர்வுப் பேரணி

Posted: 01 Jul 2015 01:14 PM PDT

ராமநாதபுரத்தில் ரத்த தான தின விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

சீனப் பிரதமருக்கு மோடி வாழ்த்து

Posted: 01 Jul 2015 01:12 PM PDT

சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் 60-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மகளிர் கிரிக்கெட்: இரண்டாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி

Posted: 01 Jul 2015 01:11 PM PDT

இந்தியா உடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.

தலித் அமைப்புகளுக்கு ராமகோபாலன் கேள்வி

Posted: 01 Jul 2015 01:11 PM PDT

ஆம்பூர் வன்முறை சம்பவம் பிரச்னையில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பவித்ரா குறித்து தலித் இயக்கத் தலைவர்கள் குரல் கொடுக்கத் தயங்குவது ஏன் என்று இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் கேள்வி எழுப்பினார்.

டிஎஸ்பி தங்கவேலு ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு

Posted: 01 Jul 2015 01:10 PM PDT

செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் கைதாகி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமீன் மனு 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆம்பூர் வன்முறைச் சம்பவம் : 7 பேர் கைது

Posted: 01 Jul 2015 01:10 PM PDT

ஆம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். ஆம்பூரில் ஜூன் 27-ம் தேதி நடந்த வன்முறை சம்பந்தமாக பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பையாஸ்

திறமை அடிப்படையில் வீரர்களுக்கு ஊக்கத்தொகை : பிசிசிஐ திட்டம்

Posted: 01 Jul 2015 01:10 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையில் மாற்றம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கைது

Posted: 01 Jul 2015 01:10 PM PDT

குடியாத்தம் அருகே விபத்துக்குள்ளான பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். குடியாத்தம் கோபாலபுரத்தைச் சேர்ந்த ஆர்.ஜி. சம்பத்(53), கல்லப்பாடியை அடுத்த முதலியார் ஏரி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார்.

ஆம்பூர் விசாரணைக் கைதி இறப்பு: சிபிசிஐடி விசாரணை விரைவில் தொடக்கம்

Posted: 01 Jul 2015 01:10 PM PDT

காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷமில் அஹமத் இறப்பு குறித்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, அதற்கான நடவடிக்கையை சிபிசிஐடி போலீஸார் ஓரிரு தினங்களில் மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

பராகுவேயை பந்தாடியது ஆர்ஜென்டினா: இறுதிப் போட்டியில் சிலி அணியுடன் மோதல்

Posted: 01 Jul 2015 01:10 PM PDT

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் பராகுவே அணியைப் பந்தாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்ஜென்டினா.

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கைது

Posted: 01 Jul 2015 01:09 PM PDT

குடியாத்தம் அருகே விபத்துக்குள்ளான பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். குடியாத்தம் கோபாலபுரத்தைச் சேர்ந்த ஆர்.ஜி. சம்பத் (53), கல்லப்பாடியை அடுத்த முதலியார் ஏரி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார்.

ஆம்பூர் வன்முறை: வணிகர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

Posted: 01 Jul 2015 01:08 PM PDT

ஆம்பூரில் அண்மையில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம். தேவராஜ், மாநிலத் துணைத் தலைவர் ஆர். தெய்வசிகாமணி ஆகியோர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

Posted: 01 Jul 2015 01:08 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

மகளிர் ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா - இத்தாலி இன்று மோதல்

Posted: 01 Jul 2015 01:07 PM PDT

பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, இத்தாலியை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.

குடிநீர் கோரி சாலை மறியல்

Posted: 01 Jul 2015 01:07 PM PDT

குடிநீர் கோரி கொரட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயானம் செல்ல பாதை வசதி கோரி மறியல்

Posted: 01 Jul 2015 01:07 PM PDT

மயானம் செல்ல பாதை வசதி செய்துதரக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மூன்றாவது சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா

Posted: 01 Jul 2015 01:07 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், ஷரபோவா ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்னா

Posted: 01 Jul 2015 01:06 PM PDT

அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி, வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் வி.சி.மோட்டூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

பிடிஓவுக்கு பிரிவுபசாரம்

Posted: 01 Jul 2015 01:06 PM PDT

ஆற்காடு வட்டார வளரச்சி அலுவலராக (பி.டி.ஓ) பணியாற்றி பணி நிறைவு பெற்ற ப.முருகனுக்கு பிரிவுபசார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெல் குடியிருப்பு வளாகம் வழியாகச் செல்ல அனுமதி கோரி உண்ணாவிரத முயற்சி

Posted: 01 Jul 2015 01:06 PM PDT

ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகம் வழியாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் செல்ல பாதை கோரி புளியந்தாங்கல் கிராம மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பள்ளி மாணவர்கள் புதன்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இளைஞர் கொலை: தாய், மகன் கைது

Posted: 01 Jul 2015 01:06 PM PDT

கந்திலி அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற வழக்கில் தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: இறுதிச் சுற்றில் அமெரிக்கா

Posted: 01 Jul 2015 01:06 PM PDT

மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அமெரிக்க அணி முன்னேறியுள்ளது.

இனியாவது அரசு எங்களுக்கு உதவ வேண்டும்: ஜுவாலா கட்டா

Posted: 01 Jul 2015 01:05 PM PDT

இனியாவது அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்று கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில்

பெல் குடியிருப்பு வளாகம் வழியாகச் செல்ல அனுமதி கோரி உண்ணாவிரத முயற்சி

Posted: 01 Jul 2015 01:05 PM PDT

ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகம் வழியாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் செல்ல பாதை கோரி புளியந்தாங்கல் கிராம மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பள்ளி மாணவர்கள் புதன்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தலைக்கவசம் அணிந்து வந்தோருக்கு பாராட்டு

Posted: 01 Jul 2015 01:05 PM PDT

வேலூர் நகரில் புதன்கிழமை இரு சக்கர வாகனங்களில் சென்ற பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து சென்றனர்.

மாதனூரில் வாகனங்களுக்கு அதிக சுங்க வரி வசூல்

Posted: 01 Jul 2015 01:05 PM PDT

மாதனூரில் ஊராட்சி மன்றம் சார்பில் சுங்க வரி முறைகேடாக அதிகமாக வசூலிக்கப்படுவதாக பொதுமக்களும், வணிகர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

மத்திய உளவுப் பிரிவு போலீஸார் ஆம்பூரில் ரகசிய விசாரணை

Posted: 01 Jul 2015 01:04 PM PDT

ஆம்பூரில் நடந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய உளவுப் பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 01 Jul 2015 01:04 PM PDT

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வாணியம்பாடியில் நடைபெற்றது.

மாற்றுப் பயிர் சாகுபடியில் வருமானத்தை அள்ளித் தரும் கனகாம்பரம்

Posted: 01 Jul 2015 01:04 PM PDT

மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரும் பயிர்களில் ஒன்றாக கனகாம்பரம் திகழ்கிறது.

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2015 01:04 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ஆறுதல்

Posted: 01 Jul 2015 01:04 PM PDT

குடியாத்தம் அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கும், உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் எம்எல்ஏ செ.கு. தமிழரசன் புதன்கிழமை ஆறுதல் கூறினார்.

சிறுபான்மையினரைப் புறக்கணித்துவிட்டு நாட்டை முன்னேற்ற முடியாது

Posted: 01 Jul 2015 01:03 PM PDT

சிறுபான்மையின மக்களைப் புறக்கணித்து விட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல முடியாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Posted: 01 Jul 2015 01:03 PM PDT

மேல்விஷாரத்தில் அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி, நகராட்சி அலுவலகத்தைப் பொது மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

பாரத ஸ்டேட் வங்கி மூலம் முதியோர் உதவித் தொகை

Posted: 01 Jul 2015 01:02 PM PDT

ஆற்காடு நகராட்சி 21-ஆவது வார்டில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் முதியோர் உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சார்பில் ஷூ தயாரிக்கும் அலகு தொடக்கம்

Posted: 01 Jul 2015 01:02 PM PDT

ஆம்பூர் நகராட்சி சார்பில் ஷூ தயாரிக்கும் அலகு புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆம்பூர் நகராட்சி சுவர்ண ஜெயந்தி சஹாரி ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமையில் உள்ள

பள்ளிக்கு நாப்கின் அழிக்கும் இயந்திரம்

Posted: 01 Jul 2015 01:02 PM PDT

ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பில், நாப்கின் அழிக்கும் இயந்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

ஆம்பூரில் துணிக் கடை மீதுகல்வீச்சு

Posted: 01 Jul 2015 01:01 PM PDT

ஆம்பூரில் ஜவுளிக்கடை மீது ஒருநபர் புதன்கிழமை கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

Posted: 01 Jul 2015 01:01 PM PDT

சீரான குடிநீர் விநியோகம் கோரி, காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தப்பூர் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

"சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நிலை தொடர்கிறது'

Posted: 01 Jul 2015 01:01 PM PDT

ஆம்பூரில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் ஜெய்னூல் ஆப்தின் கூறினார்.

நியாய விலைக் கடைகளுக்கு பொருள்களை ஒரே நகர்வில் அனுப்பிவைக்க வலியுறுத்தல்

Posted: 01 Jul 2015 01:00 PM PDT

கூட்டுறவு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் பொது விநியோகப் பொருள்கள் அனைத்தையும் 100 சதவீதம் ஒரே நகர்வில் அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு நியாய விலைக் கடைத் தொழிலாளர்கள் முன்னேற்றசி சங்கம் வலியுறுத்தியது.

மண் பரிசோதனையால் அதிக மகசூல் பெறலாம்

Posted: 01 Jul 2015 01:00 PM PDT

மண் பரிசோதனை செய்து அதன்படி விளைநிலங்களுக்கு உரமிட்டு அதிக மகசூல் பெறலாம்.  இதுகுறித்து மேற்கு ஆரணி

பொருளாதார நெருக்கடி: கிரீஸ் பிரதமர் புதிய சமரசத் திட்டம்

Posted: 01 Jul 2015 12:58 PM PDT

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸ், பன்னாட்டு நிதியத்திடமிருந்து பெற்ற கடன் தொகையை கெடுவுக்குள்

பாகிஸ்தானுக்கான அல்-காய்தா தலைவர் சுட்டுக் கொலை

Posted: 01 Jul 2015 12:57 PM PDT

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் அந்த நாட்டுக்கான அல்-காய்தா அமைப்பின்

இந்தோனேசிய ராணுவ விமான விபத்து: சாவு எண்ணிக்கை 142-ஆக உயர்வு

Posted: 01 Jul 2015 12:57 PM PDT

இந்தோனேசியாவில் விமானப் படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் சாவு

Posted: 01 Jul 2015 12:56 PM PDT

யேமனின் இரண்டாவது பெரிய நகரான ஏடனைக் கைப்பற்ற, ஹூதி கிளர்ச்சியாளர்கள் புதன்கிழமை நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதலில் 60 எகிப்து வீரர்கள் பலி

Posted: 01 Jul 2015 12:55 PM PDT

எகிப்தில் பல்வேறு ராணுவச் சாவடிகளில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் புதன்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்களில்

தீவிர அரசியலுக்குத் திரும்புவேன்: ராஜபட்ச

Posted: 01 Jul 2015 12:54 PM PDT

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தான் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவதாக அந்நாட்டின்

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

Posted: 01 Jul 2015 12:53 PM PDT

திருவாடானை தாலுகா, ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சிக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நகைக் கடை உரிமையாளர் கடத்தப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது

Posted: 01 Jul 2015 12:52 PM PDT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

நேரில் ஆஜராவதில் இருந்து லக்விக்கு விலக்கு: பாகிஸ்தான் நீதிமன்றம்

Posted: 01 Jul 2015 12:52 PM PDT

மும்பைத் தாக்குதல் சதியில் முக்கியப் பங்காற்றிய ஜகியுர் ரஹ்மான் லக்வி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து

பெண் குழந்தையைக் கைவிட்ட பெற்றோருக்கு 5 ஆண்டுகள் சிறை

Posted: 01 Jul 2015 12:51 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில்,பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை கைவிட்ட பெற்றோருக்கு மாவட்ட நீதிமன்றம்

சோனியா, ராகுல் நாடு திரும்பினர்

Posted: 01 Jul 2015 12:50 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் வெளிநாட்டு பயணத்தை

5 குடிசை வீடுகள் தீப்பிடித்து சேதம்

Posted: 01 Jul 2015 12:49 PM PDT

ராமநாதபுரத்தில் மின்கசிவு காரணமாக, 5 குடிசை வீடுகள் புதன்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தலைக்கவச சோதனை

Posted: 01 Jul 2015 12:49 PM PDT

தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றவர்களை புதன்கிழமை போலீஸார் பிடித்து, அபராதம் விதித்தனர்.

பள்ளி இயக்குநர் கொலை வழக்கில் 6 பேர் கைது

Posted: 01 Jul 2015 12:49 PM PDT

பிகார் மாநிலத்தில் பள்ளி இயக்குநர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சம்ஸ்கிருதப் பள்ளிகளுக்கு உருது ஆசிரியர்கள்: ராஜஸ்தானில் சர்ச்சை

Posted: 01 Jul 2015 12:48 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் உருது பாடம் கற்பிக்கும் 40-க்கும் மேற்பட்ட ஆசியர்களை சம்ஸ்கிருதப் பள்ளிகளில் அந்த

என் மீதான குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை

Posted: 01 Jul 2015 12:47 PM PDT

"என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை' என்று மகாராஷ்டிர மாநில மகளிர்,

கணவன் வேலைக்குச் செல்லாததால் மனைவி தற்கொலை

Posted: 01 Jul 2015 12:46 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள காவனூரில் கணவர் வேலைக்குச் செல்லாததால், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

Posted: 01 Jul 2015 12:46 PM PDT

வர்த்தகத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான தடையை மேலும் ஒர் ஆண்டுக்கு

பிரிட்டன் தூதருடனான சுஷ்மாவின் சந்திப்பு விவரங்களை வெளியிட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 01 Jul 2015 12:46 PM PDT

லலித் மோடிக்கு நுழைவுஇசைவு கிடைக்க உதவியது தொடர்பாக பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் பெவனை வெளியுறவுத் துறை அமைச்சர்

சிவகங்கை நகர்நல மையத்தில் திருட்டு முயற்சி

Posted: 01 Jul 2015 12:45 PM PDT

சிவகங்கை நகராட்சியின் நகர்நல மையத்துக்குள் செவ்வாய்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராவை அட்டைப்பெட்டியால் மறைத்துவிட்டு, பீரோக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்குடியில் தொழில் திறன் வேலைவாய்ப்புப் பயிற்சி தொடக்க விழா

Posted: 01 Jul 2015 12:44 PM PDT

புதிய சிறப்பு வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், காரைக்குடியில் நடப்பாண்டுக்கான தொழிற் திறன் மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

"சார்க்' செயற்கைக்கோள் திட்டம்: பாகிஸ்தானின் உதவி நிராகரிப்பு

Posted: 01 Jul 2015 12:44 PM PDT

"சார்க்' செயற்கைக்கோள் திட்டத்தில் பாகிஸ்தானின் உதவியை இந்தியா நிராகரித்தது.  தொலைத்தொடர்பு,

பாலியல் பலாத்கார வழக்குகளில் சமரசத்துக்கு இடமில்லை: உச்ச நீதிமன்றம்

Posted: 01 Jul 2015 12:43 PM PDT

"பாலியல் பலாத்கார வழக்குகளில் மென்மையான அணுகுமுறை கூடாது; மேலும், இந்த வழக்குகளில் சமரசத்துக்கோ,

காமன்கோட்டை அரசுப் பள்ளியில் சதுரங்கப் போட்டி

Posted: 01 Jul 2015 12:42 PM PDT

பரமக்குடி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

அமர்நாத் யாத்திரை தொடங்கியது

Posted: 01 Jul 2015 12:42 PM PDT

பலத்த பாதுகாப்புக்கிடையே, அமர்நாத் புனித யாத்திரை புதன்கிழமை தொடங்கியது.  இதுதொடர்பாக

கட்சி பிரமுகர் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Posted: 01 Jul 2015 12:42 PM PDT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்திலுள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கே. கிருஷ்ணன். இவர், அந்தமானில் தொழில் செய்து வந்தார். எனவே, அந்தமானில் திமுக அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

தேமுதிக நகராட்சி உறுப்பினரின் கணவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூ. ஆணையரிடம் புகார்

Posted: 01 Jul 2015 12:41 PM PDT

சிவகங்கையில் சாலையோரம் இட்லி கடை நடத்தி வருபவரிடம் பணம் கேட்டு தேமுதிக கவுன்சிலரின் கணவர் மிரட்டுவதாக, நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கில் 35 பேரை விடுவித்தது செல்லாது: மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 01 Jul 2015 12:41 PM PDT

"தமிழகக் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க நவீன ஆயுதக் கப்பல் வழக்கில் தொடர்புடைய 35 பேரை

ஏர்வாடியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

Posted: 01 Jul 2015 12:40 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு குற்றவாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

தேசிய இணையவழி வேளாண் சந்தை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 01 Jul 2015 12:40 PM PDT

தேசிய இணையவழி வேளாண் சந்தையை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

Posted: 01 Jul 2015 12:40 PM PDT

சிவகங்கை நேரு பஜாரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் 61 ஆம் ஆண்டு பூக்கரக பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய விஏஓ சான்று அவசியம்

Posted: 01 Jul 2015 12:39 PM PDT

தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திட, கிராம நிர்வாக அலுவலரால் சான்றளிக்கப்பட்ட விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) து. இளங்கோ தெரிவித்துள்ளார்.

அமித் ஷா ஜூலை 15-ல் தமிழகம் வர வாய்ப்பு: தமிழிசை

Posted: 01 Jul 2015 12:39 PM PDT

பாஜகவினருடன் ஆலோசனை நடத்துவதற்காக கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா வரும் ஜூலை 15-ஆம் தேதி தமிழகம் வருவதற்கு வாய்ப்பு

தோப்பில் யானைக் கூட்டம் புகுந்து மரங்கள் சேதம்

Posted: 01 Jul 2015 12:39 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தோப்புகளுக்குள் யானைகள் புகுந்து மரங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™