Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி - பிரபாஸ்

Posted:

இந்திய சினிமாவின் பிரமாண்ட படமாய் உருவாகி வௌிவந்திருக்கும் பாகுபலி படம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாகுபலி படத்தின் தமிழ் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிம் பேசிய பிரபாஸ்....

எல்லோருக்கும் ரொம்ப நன்றி. தமிழ் ...

பஜ்ரங்கி பைஜான் : அமீருக்காக சிறப்புக்காட்சி

Posted:

சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள "பஜ்ரங்கி பைஜான்" படம், நடிகர் அமீர் கானிற்காக, சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான், கரீனா கபூர், நவாஜூதீன் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள பஜ்ரங்கி பைஜான் படம், நேற்று உலகெங்கும் வெளியானது. படம் வசூலிலும் வெற்றி பெற்றுள்ளது. ...

எனக்கு ஒரு பிரச்னை என்றால் விஷால் வந்து நிற்பார் - விஷ்ணு விஷால் பேட்டி!

Posted:

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. தொடர்ந்து நீர்ப்பறவை படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அவர் நடிப்பில் வௌிவந்த முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை போன்ற படங்கள் ஹிட் அடித்து உள்ளன. இதனால் உற்சாகத்தில் இருக்கும் விஷ்ணு, தொடர்ந்து நல்ல நல்ல ...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அடுத்து அஜித்....

Posted:

என்னை அறிந்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு, அஜித்குமார், தற்போது சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்திலான படத்தில் நடித்து வருகிறார்.

சென்னையில் துவங்கிய இப்படத்தின் சூட்டிங், அடுத்த கட்ட படப்பிடிப்பு இத்தாலிக்கும் நடைபெற்ற நிலையில், இறுதி்கட்ட படப்பிடிப்பு, கோல்கட்டாவில் விரைவில் துவங்க உள்ளது. ...

சின்னத்திரை - பெரிய திரை பனிப்போர் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தெருக்கூத்தை நாடகங்கள் காலி பண்ணியது. நாடகத்தை சினிமா காலி பண்ணியது. சினிமாவை தொலைக்காட்சிகள் காலி பண்ணிவிடுமோ என்று பயந்த காலங்கள் ஒன்று உண்டு. அந்த அளவிற்கு தொலைக்காட்சியின் வீச்சு இருந்தது. பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் புற்றுநோய் உள்ளிருந்து உயிரைக் குடிப்பதுபோல் சின்னத்திரை சினிமாவை செல்லரித்து நிற்கிறது ...

மாமனார் ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் தனுஷ்!

Posted:

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தனுஷ், தனக்கென ஒரு ஸ்டைலை பிடித்து அதிலேயே பயணித்து இன்று ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார். தான் ரஜினியின் மருமகன் என்றாலும் அதை எங்கேயும் வௌிக்காட்டி கொள்ளாதவர். அவரை மாமனார் என்று பார்ப்பதை விட தானும் ஒரு ரஜினி ரசிகன் என்று காட்டி கொள்பவர். ...

மெட்ரோ ரயிலில் த்ரிஷா ஜாலி ரைடு

Posted:

சென்னை நகரின் புதிய அடையாளமாக மாறியுள்ள மெட்ரோ ரயிலில், பயணம் செய்யும் ஆசை, நமக்கு தான் இருக்கிறதென்றால், நடிகை த்ரிஷாவையும் அந்த ஆசை விட்டுவைக்கவில்லை. காலைநேரத்திலேயே, மெட்ரோ ரயிலில் பயணம் செய்து தனது ஆசையை த்ரிஷா நிறைவேற்றியுள்ளார்.

நடிகை த்ரிஷா, ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரயிலில் பயணித்தார். ...

சீரியல்களை கைவிட ஆஷா சரத் முடிவு

Posted:

பாபநாசம் படத்தின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருப்பவர் ஆஷா சரத். கண்டிப்பான, திமிரான போலீஸ் அதிகாரி, மகனுக்காக ஏங்கும் அம்மா என இரண்டு டைமன்ஷன்களிலும் மிரள வைத்தார். மலையாள த்ரிஷ்யமும், தமிழ் பாபநாசமும் அவரை திரைப்பட நட்சத்திரமாக உயர்த்தி இருக்கிறது.

40 வயதுக்கு மேலும் ஒரு பெண்ணால் சினிமாவில் ...

எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்

Posted:

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சமீபத்தில் மறைந்தார். அவர் கடைசியாக இசை அமைத்த பாடல்கள் வி.சி.குகநாதன் இயக்குவதாக இருந்த இது எம்.ஜி.ஆர் இல்லம் என்ற படத்திற்காகத்தான். இந்தப் படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க திட்டமிடப்பட்டது. படத்திற்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையும் போடப்பட்டது. அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்து கொண்டு ...

கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் கண்ணீர் அஞ்சலி

Posted:

வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் கருணாகரன். குறுகிய காலத்திலேயே ஆடாம ஜெயிப்போமடா படத்தில் ஹீரோவாக நடித்தார். ரஜினியுடன் லிங்காவில் நடித்தார். தற்போது ராதாமோகன் இயக்கி வரும் உப்பு கருவாடு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கண்ணீர் அஞ்சலி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ...

முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'மாரி' குழுவினர்...!

Posted:

தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள 'மாரி' படம் நேற்று வெளியானது. வேறு எந்தப் படமும் போட்டியில் இல்லாத சூழ்நிலையில் நேற்று இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் நடித்த ஒரு படத்திற்கு இந்த அளவிற்கு ஓபனிங் இருந்தது ஆச்சரியம்தான் என்கிறார்கள். இந்த ...

அனுஷ்கா இரண்டு வேடங்களில் அசத்தும் இஞ்சி இடுப்பழகி

Posted:

பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்காவின் பட வரிசை பெருகி வருகிறது. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இஞ்சி இடுப்பழகி படம் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படமாகும். படப்பிடிப்பு முற்றிலும் முடிந்ததை தொடர்ந்து திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

எடை குறைப்பு பற்றிய கதையான இஞ்சி இடுப்பழகி படத்தில் ...

அமிதாப் நடிக்கும் 102 நாட் அவுட்

Posted:

உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாக உள்ள 102 நாக் அவுட் படத்தில், அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆல் இஸ் வெல் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள இயக்குநர் உமேஷ் சுக்லா, இதற்கு அடுத்ததாக, 102 நாட் அவுட் படத்தை இயக்க உள்ளார். படத்தின் கதை தயாராகி விட்டதாகவும், அமிதாப் பச்சன், பரேஷ் ரவல் இப்படத்தில் ...

பான்டோம் டிரைலர் ரிலீஸ்

Posted:

கபீர் கான் இயக்கத்தில், சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடித்துள்ள "பான்டோம்" படத்தின் டிரைலர், இம்மாதம் 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூசைன் ஜெய்தி எழுதிய மும்பை அவென்சர்ஸ் நாவலை அடிப்படையாகக்கொண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் சர்வதேச பயங்கரவாதம் குறித்து, பான்டோம் படத்தில் ...

விபுல் ஷா இயக்கத்தில் சயீப் அலி கான்

Posted:

விபுல் ஷா இயக்கத்திலான படத்தில், சயீப் அலி கான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "ஐ கோ டூ ஸ்லீப்" என்ற நாவலை தழுவி, அதே பெயரில் வெளியான ஹாலிவுட் படத்தை, ஹிந்தியில், விபுல் ஷா ரீமேக் செய்ய உள்ளார். பூஷன் குமார் தயாரிப்பிலான இந்த படத்தில், சயீப் அலிகான் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

ஹாலிவுட் பாணியில் அர்ஜூனை இயக்கும் அருண் வைத்தியநாதன்!

Posted:

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதனின் அடுத்த படம் அர்ஜுன் நடிக்க கப்பல் படத்தை தயாரித்த ஐ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிறது. அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம் ஹாலிவுட் படங்களின் தர வரிசையில் தயார் ஆகிறது.

பெயரிடப்படாத இந்தப் படத்தை பற்றி பேசிய இயக்குனர் அருண் வைத்தியநாதன், என் ...

ரன்வீர் நட்பு : அதிருப்தியில் பிபாஷா குடும்பம்

Posted:

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, "அலோன்" படத்தில், கரன் சிங் குரோவர் உடன் இணைந்து நடித்தார். பின் அவர்கள் குறித்து பல்வேறு வகையில் கிசுகிசுக்கள் வெளியாயின. அப்போது அவர்கள் அதை மறுத்திருந்த போதிலும், அவர்களது நட்பு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து விடுமுறையை கழித்து வந்தனர். அப்போது எடுத்துக்கொண்ட ...

'மாரி' முதல் நாள் வசூல் எப்படி ?

Posted:

தனுஷ் நடித்துள்ள படத்திற்கும் இப்படிப்பட்ட ஒரு வரவேற்பா என 'மாரி' படத்தின் முதல் நாள் வசூல் ஆச்சரியப்படவே வைத்திருக்கிறது. படம் வெளியாகியுள்ள ஒவ்வொரு திரையரங்கிலும் அவரது ரசிகர்கள் பேனர்களை வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். 'வாலு' படம் நேற்று திட்டமிட்டபடி வெளிவராத நிலையில் எந்த ஒரு போட்டியுமே இல்லாமல் தனியாளாக ...

பிரமாண்டமாக நடைபெறும் ஸ்ரீமந்துடு பட பாடல்கள் வெளியீடு!

Posted:

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாயகனாக நடித்துள்ள ஸ்ரீமந்துடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று(ஜூலை 18) பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தில் நடக்கும் இவ்விழாவில் மகேஷ் பாபு , ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட படக்குழுவினருடன் பல டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். தயாரிபளர்கள் ரவி சங்கர், நவீன், மோகன் ஆகியோர் இணைந்து ...

குயின் படம் பிரான்ஸ் நாட்டில் ரிலீஸ்

Posted:

விகாஸ் பால் இயக்கத்தில், கங்கனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படம், பிரான்ஸ் நாட்டில், செப்டம்பர் மாதம் திரையிடப்பட உள்ளது. இந்த செய்தியை, இயக்குநர் விகாஸ் பால் உறுதி செய்துள்ளார். பாலிவுட் படங்களுக்கு, வெளிநாடுகளில் உள்ள வரவேற்பை பொருத்து, முதற்கட்டமாக, பிரீமியர் ஷோ திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™